யோவான் 14:16ல் சொல்லப்பட்டது ஆவியானவரா அல்லது முகமதுவா?

முன்னுரை: எப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் "முகமதுவை" புதியஏற்பாட்டில் (பைபிளில்) கண்டுபிடிக்க நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம், இயேசு தன்னுடைய சீடர்களுக்கு "வேறொரு தேற்றரவாளன்" வருவார் என்றுச் சொன்ன வசனத்தை குறிப்பிடுவார்கள்(யோவான் 14:16).

இயேசு "முகமது" வருவார் என்றுச் சொன்னதாக குர்-ஆனில் ஒரு வசனம் வருகிறது.

குர்-ஆன் 61:6

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் ' அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.

கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள்:

இயேசு சொன்ன "தேற்றரவாளன்" முகமது தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். "அஹமத்" என்பதின் பொருள் "புகழ்ச்சிக்குறியவர்" (The Praised One) என்பதாகும். இந்த பொருள் கொண்ட கிரேக்க வார்த்தை "Periklytos" என்பதாகும். கிரேக்க மொழி புதிய ஏற்பாட்டின் மூலமொழியாகும்.

ஆனால் பைபிளில் இயேசு சொன்னது "அஹமத்" Periklytos இல்லை, மாறாக "தேற்றரவாளன்" Parakletos என்பதாகும். ( "Periklytos" இல்லை, Parakletos ஆகும்.)

யோவான் 14:16

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை (Parakletos) அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

"Periklytos" என்ற வார்த்தையை கிறிஸ்தவர்கள் "Parakletos" என்ற வார்த்தையை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். ஆனால் அவர்களால் இதற்கு ஒரு ஆதாரத்தையும் காட்டமுடியாது.

1. நம்மிடம் இப்போது இஸ்லாமிற்கு முன்பு அழுதப்பட்ட பைபிளின் பல ஆயிர பிரதிகள் உள்ளன. அவற்றில் எந்த ஒரு பிரதியிலும் "Periklytos" என்ற வார்த்தை வருவதில்லை.

2. அப்படி யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் மாற்றியிருந்தால், மக்கா அல்லது மதினாவில் உள்ளவர்கள் மட்டுமே மாற்றியிருக்கமுடியும் ( இவர்களுக்கு மட்டும் தான் முகமது பற்றித் தெரியும்). அப்படியானால் இவர்களுடைய பிரதிகள் எங்கே? இந்த வார்த்தையுள்ள ஒரு பிரதியாவது (7ம் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்ட)காட்டமுடியுமா? (மாற்றத்திற்கு முன்பு, மாற்றத்திற்கு பின்பு உள்ள பிரதிகள்)

3. முகமது மட்டும் தான் படிப்பறிவு இல்லாதவர், மற்ற சஹாபாக்களில் சிலபேர் படித்தவர்களாக இருப்பார்கள். அப்படி இல்லாமல் இருந்தாலும், யூதர்களிடம் உள்ள பிரதிகளை தேடி கண்டுபிடித்து அதை படிப்பவர்களிடம் காட்டி, முகமதுவோ அல்லது சஹாபாக்களோ குர்-ஆன் 61:6 வசனத்தை நிருபித்துயிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை, காரணம் குர்-ஆன் 61:6 ல் சொல்லப்பட்டது போல இயேசு சொல்லவில்லை என்பது தான்.

சில புத்திசாலி முஸ்லீம்கள்:

சில புத்திசாலி முஸ்லீம்கள் Perakletos என்ற வார்த்தை தான் சரியான வார்த்தை என்று ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால், "தேற்றரவாளன்" என்று இயேசு சொன்னது, முகமதுவைப்பற்றித் தான் என்றுச் சொல்கிறார்கள். அப்படியானால், "தேற்றரவாளன்" என்பது "முகமது" தானா என்பதை நாம் இங்கே காண்போம்.

"தேற்றரவாளன்" பற்றி வரும் பைபிளின் வசனங்களைப் பார்ப்போம்.

யோவான் 14:16,17

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

யோவான் 15:26

பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 16:7

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

இந்த எல்லா வசனங்களும் யோவான் சுவிசேஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த எல்லா வசனங்களும் இயேசு தம்முடைய சீடர்களுக்குச் சொன்னது. இவைகளை நாம் பார்க்கும் போது இயேசு சொன்ன "தேற்றரவாளன்" முகமது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும்.

1. இயேசு சொன்ன எல்லா வசனங்களையும் பார்த்தால், ஒரு உண்மை புரியும், இதில் அவர் ஒரு மனிதனைப் பற்றிச் சொல்லவில்லை, மாறாக ஒரு "ஆவி அல்லது ஆத்துமா" அல்லது "ரூஹுல் குதுஸி" வைப்பற்றிப் பேசுகிறார். முகமது மனிதனாவார், ஒரு ஆத்துமா இல்லை.

2. யோவான் 14:16 வசனத்தின் படி, "என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கும்" என்று இயேசு சொல்கிறார். ஆனால் முகமது கி.பி. 632ல் மரித்தார், அவருடைய கல்லரையும் மதினாவில் உள்ளது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவோடு இருந்ததுபோல (குர்-ஆன் 2:87, 2:253 "ரூஹுல் குதுஸி" என்னும் பரிசுத்த ஆத்மா), ஒவ்வொரு விசுவாசி கூடவும் மரிக்கும் வரைக்கும் இருப்பார்.

3. யோவான் 14:17ன் படி, "அவர் உங்களுடனே வாசம்பண்ணி(வாழ்ந்து) உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்" என்று இயேசு சொல்கிறார். இதன்படி, ரூஹுல் குதுஸியானவர் (பரிசுத்த ஆத்துமாயானவர்) இயேசுவின் சீடர்களோடு:

1) வாழ்ந்து இருக்கிறார் (இயேசுவோடு ரூஹுல் குதுஸி இருப்பதால், சீடர்கள் இயேசுவோடு வாழ்ந்ததால்)

2) சீடர்களுக்குள்ளே இருக்கிறார்

3) சீடர்கள் அவரை அறிந்தும் இருக்கிறார்கள்

இப்படியிருக்க 500 ஆண்டுகளுக்குபின் வந்த முகமது எப்படி சீடர்களோடு வாழ்ந்துயிருக்கமுடியும். 

4.தான் சென்றபிறகு தேற்றரவாளன் வருவார், அதற்காக காத்துயிருங்கள் என்று சீடர்களுக்கு இயேசு கட்டளையிடுகிறார் (அப்போஸ்தலர் 1:4,5), அவர் சொன்னதுபோலவே 10 நாட்களுக்கு பின்பு "பரிசுத்த ஆவியானவர்" சீடர்களிடத்தில் இறங்குகிறார் (அப்போஸ்தலர் 2:1-4). இந்த நிகழ்ச்சி முகமதுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது. முகமது வந்தபிறகு அல்ல. தேற்றரவாளனுக்காக சீடர்கள் 500 ஆண்டுகள் காத்துயிருக்கவில்லை. இப்படியிருக்க "தேற்றரவாளன்" என்பது முகமதுவிற்கு எப்படி பொருந்தும். சிந்தியுங்கள்.

அப்போஸ்தலர் 1:4,5 மற்றும் 2:1-4

அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.

அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

கடைசியாக "தேற்றரவாளன்" என்பவர் "முகமது" அல்ல என்பதும், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இஸ்லாமியர்களால் காட்டமுடியாது என்பதும் நாம் புரிந்துக்கொள்ளலாம்.

சிந்திக்க சில கேள்விகள்:

1) பைபிளை திருத்தி எழுதிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் இஸ்லாமியர்கள், ஏன் குர்-ஆனை, முகமதுவை தீர்க்கதரிசி (நபி) என்று நிருபிக்க பைபிளை (மாற்றப்பட்டதாகச் சொல்லும் புத்தகத்தை) ஆதாரமாக காட்டுகிறார்கள்?

2) முகமது காலத்தில்கூட யூதர்கள் மேசியா( இயேசு) இன்னும் வரவில்லை என்று நம்பி, அவருக்காக எதிர்பார்த்தார்கள். கிறிஸ்தவர்கள் இன்னும் ஒரு தீர்க்கதரிசிக்காக காத்துயிருந்தால், ஏன் அவர்கள் முகமதுவை தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு பதிலாக ஏன் அவர்கள் தங்கள் வேதங்களை மாற்றி எழுதவேண்டும்?

மூலம்: isakoran.blogspot.in/2007/07/1416.html

உமரின் இதர கட்டுரைகள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்