2017 ரமளான் (30) – நிலமெல்லாம் இரத்தம் –தலை கால் புரியாமல் எழுதும் எழுத்தாளர் பாரா

நிலமெல்லாம் இரத்தத்திற்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

முன்னுரை: 

குர்-ஆனையும் படிக்காமல், ஹதீஸ்களையும் தொடாதவன் ”எனக்கு இஸ்லாம் தெரியும், நான் விளக்குகிறேன்” என்று சொன்னால், அவனிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், ஏனென்றால் அவன் நிச்சயம்  “தெளிவாக குழப்புவான்”. பாரா அவர்களின் 21வது அத்தியாயம் இந்த குழப்பத்திற்கு சிகரம் போன்றது. ”முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்றுச் சொல்வார்கள், அது போல, பாரா அவர்கள் இஸ்லாம் பற்றிய அறியாமையை விடாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பதித்திருக்கிறார். பாரா அவர்களுக்கு பசுமரத்தாணி போல இஸ்லாமிய குழப்பம் பதிந்துவிட்டிருக்கிறது போல தெரிகிறது. 

இந்த கட்டுரையில், நிலமெல்லாம் இரத்தம், 21வது அத்தியாயத்தில் பாரா அவர்கள் எழுதிய சில வரிகளை ஆய்வு செய்வோம்.

1) முஹம்மதை ஒப்புக்குத்தான் அவர்கள் இறைத்தூதராக ஏற்றார்கள்

பாரா அவர்கள் எழுதியது:

நூல்: நிலமெல்லாம் இரத்தம்

அத்தியாயம் 21: இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்

முஸ்லிம்களுக்கு முதலில் யூதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது புரியவில்லை. பிறகு, அவர்கள் முகம்மதை ஒரு இறைத்தூதராக மனப்பூர்வமாக ஏற்கவில்லை; ஒப்புக்குத்தான் அவரது அறிக்கையை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியவந்தபோது, உடனடியாக யூத உறவைக் கத்திரித்துவிட விரும்பினார்கள்.

உமர் எழுதியது:

யூதர்கள் மட்டுமல்ல, மதினாவில் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அரேபியாவில் வாழ்ந்த அரபு பழங்குடியின தலைவர்கள் அனைவரும், முஹம்மது ஒரு இறைத்தூதர் என்று வெறும் ஒப்புக்குத்தான் ஏற்றுக்கொண்டார்கள். முஹம்மதுவை ஏற்கவில்லையென்றால் தலை சீவப்படுமே! போர் நடக்குமே! பலமுள்ளவன் சண்டையிடுவான், பலவீனன் என்ன செய்வான்? 

ராமன் ஆண்டால் என்ன! ராவணன் ஆண்டால் என்ன! தலை தப்பினால் போதும் என்று பலர் இஸ்லாமை அன்று ஏற்றனர். முடியாது என்று அடம் பிடித்தவர்கள், வாழ்க்கையை சீக்கிரமாக முடித்துக்கொண்டு, மண்ணுக்கடியில் அடம்பிடிக்காமல் தூங்கிவிட்டார்கள். 

ஆண்டுகள் கடந்தன, முஹம்மது மரித்துவிட்டார் என்று அக்குறுநில மன்னர்கள் அல்லது குழுத்தலைவர்கள் அறிந்தவுடன், துள்ளிக்குதித்தார்கள். இனி, நாம் சுதந்திரமாக வாழலாம், மதினாவில் இருக்கும் இஸ்லாமிய ஆட்சிக்கு கப்பம் கட்டத்தேவையில்லையென்றுச் சொல்லி மகிழ்ந்தார்கள்.  முஹம்மது இறைத்தூதர் அல்லவா? இஸ்லாமிய ஆட்சியை அவமதிப்பது, கப்பம் கட்டமாட்டேன் என்றுச் சொல்வது, முஹம்மதுவை அவமதிப்பது ஆகாதா! என்று அவர்களின் மனசாட்சி சண்டையிடவில்லை. அன்று மனசாட்சியை கேட்டா நீ இஸ்லாமை ஏற்றாய்? இல்லையே, உயிருக்கு பயந்தல்லவா இஸ்லாமை ஏற்றாய், முஹம்மதுவிற்கு கப்பம் கட்டினாய். இதோ, அவர் மரித்துவிட்டார், தலையே போய்விட்டது, யார் வாலுக்கு பயப்படுவான் என்று அவர்கள் நினைத்தார்கள்.

முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த, அபூ பக்கர் சும்மா விடுவாரா? அபூ பக்கர் முஹம்மதுவின் “வால்” இல்லை, அவர் முஹம்மதுவின் “வாள்” ஆவார்.  புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ”ரித்தா போர்கள்” என்ற பெயரில் இரண்டாண்டுகள், அம்மன்னர்களோடு போரிட்டார், மறுபடியும் தன் கட்டுப்பாட்டுக்குள் (அதாவது இஸ்லாமுக்குள்) கொண்டுவந்தார். அக்குறுநில மன்னர்களின் நிலை கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தவன் கதையாக மாறிவிட்டது.

பயப்படவைத்து மார்க்கத்தில் இணைத்தால், மனிதன் ஒப்புக்குத்தான் நம்புவான், மனதிலே கலர் கலராக திட்டித்தீர்ப்பான். அராஜகம் என்றுமே ஜெயிக்காது. 

இதைப் பற்றி கீழ்கண்ட கட்டுரையில் தெளிவாக எழுதியுள்ளேன்:

2) யூத இயேசுவையே ஏற்காதவர்கள் அரேபிய முகம்மதை எப்படி மனப்பூர்வமாக ஏற்பார்கள்?

பாரா அவர்கள் எழுதியது:

யூத குலத்திலேயே பிறந்து, யூதர்களின் மரபு மீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி கண்டித்த முந்தைய இறைத்தூதரான இயேசுவையே ஏற்காதவர்கள் அவர்கள். முகம்மதை எப்படி மனப்பூர்வமாக ஏற்பார்கள்? தவிரவும் யூதர்களுக்குத் தம்மைப்பற்றிய உயர்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. யூத இனத்தைக் காட்டிலும் சிறந்த இனம் வேறொன்று இல்லை என்பதில் அவர்களுக்கு இரண்டாவது அபிப்பிராயமே கிடையாது. ஆகவே, ஓர் அரேபியரை இறைத்தூதராகவோ, அரபு மொழியில் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த குர்ஆனை ஒரு வேதமாகவோ ஏற்பதில் அவர்களுக்கு நிறையச் சங்கடங்கள் இருந்தன

உமர் எழுதியது:

யார் ஒரு நபியாக இருக்கமுடியும்? என்பதில் யூதர்கள் தெளிவாக இருந்தார்கள். யூதர்களிடம் பழைய ஏற்பாடு (தனக்) இருந்தது. அவர்கள் பல தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை படித்தறிந்தவர்கள். முஹம்மது தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொன்னவுடன், அவரை சோதித்துப்பார்க்க எண்ணினார்கள். அவர்கள் வைத்த அனைத்து பரிட்சைகளிலும் அவர் தோற்றார்.

முஹம்மது, மோசேயைப் போல அற்புதங்கள் செய்யவில்லை. பலதார திருமணங்களை ஆதரித்தது மட்டுமல்லாமல், வைப்பாட்டிகளையும் வைத்துக்கொண்டு இருந்தார். அடிமைப் பெண்களை முஸ்லிம்கள் கற்பழிக்க அனுமதி கொடுத்தார். பழைய ஏற்பாட்டு நபிகளோடு ஒப்பிடும் போது, முஹம்மது பலவகைகளில் முரண்படுகிறார். முஹம்மதுவை ஒரு நபி என்று ஏற்கவேண்டிய எந்த ஒரு காரணத்தையும் படித்த பக்தியுள்ள யூதர்கள் காணவில்லை.  எனவே, அவரை ஏற்கவோ, குர்-ஆனை வேதம் என்று கருதவோ அவர்களுக்கு நியாயமான காரணங்கள் தென்படவில்லை. 

முஹம்மதுவின் விஷயத்தில் கிறிஸ்தவர்களின் நிலை இன்னும் கூறிய வாள் போன்றது. இதர நபிகளோடு மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனைகளோடும் ஒப்பிட்டுப்பார்த்தார்கள். முஹம்மதுவிற்கு டெபாஸிட்டும் கிடைக்கவில்லை, எனவே இன்றும் அவரை கிறிஸ்தவர்கள் நபி என்று ஒப்புக்கொள்ளாததற்கு நியாயமான, அறிவுபூர்வமான காரணங்கள் உள்ளன.

3) பாராவின் சரித்திர பிசகு ”அப்போது” என்ற வார்த்தை  பிரயோகம்

பாரா அவர்கள் எழுதியது:

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம், அச்சம். இஸ்லாத்தின் வீச்சு குறித்த அச்சம். பெரும்பாலான அரேபிய சமூகமும், ஏராளமான கிறிஸ்துவர்களும் "உமக்கே நாம் ஆட்செய்தோம்" என்று குழுக் குழுவாக இஸ்லாத்தில் இணைந்துகொண்டிருந்ததால் விளைந்த அச்சம். ஏற்கெனவே கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களையே மீட்க இயலாத நிலையில், மிச்சமிருக்கும் யூத சமூகத்தினர் எங்கே இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்களோ என்கிற கலவரம்.

அப்போது பெரும்பாலும் பிரசாரம் மூலம்தான் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்தது. புனிதப்பயணமாக உலகெங்கிலுமிருந்து சவூதி அரேபியாவுக்கு வரும் மக்களிடையே முஸ்லிம்கள் பிரசங்கம் நிகழ்த்துவார்கள். குறைஷியரின் வன்முறைகளுக்கு இடையிலும் பிரசாரப் பேச்சுகள் நிற்காது.

உமர் எழுதியது:

பாரா அவர்களே, நீங்கள் நன்றாக குழம்பியிருக்கிறீர்கள். மேற்கண்ட உங்களுடைய வரிகளில் ”இஸ்லாம்  பற்றிய படிப்படியான விவரங்கள் உங்களுக்கு புரியவில்லை” என்று தெளிவாகத் தெரிகிறது. இஸ்லாமின் தலை எது, கால் எது என்று உங்களுக்கு புரியவில்லை. 

மேற்கண்ட முதல் பத்தியில் பாரா அவர்கள், யூதர்களின் அச்சம் பற்றி பேசுகிறார். யூதர்கள் இவரை நபி என்று ஏன் ஏற்கவில்லையென்றுச் சொல்கிறார். மக்கள் குழுக்குழுவாக இஸ்லாமில் இணைகிறார்கள் என்றுச் சொல்கிறார். இந்த வர்ணனை எதைக் காட்டுகிறது – முஹம்மதுவின் மதினாவின் வாழ்க்கையைக் காட்டுகிறது, அதாவது கி.பி. 622 லிருந்து 632ம் காலக்கட்டத்தைக் காட்டுகிறது (மதினாவின் காலம்). இது முஹம்மதுவின் வாழ்க்கையின் இரண்டாம் பாகம். இதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டாவது பத்தியில், பாரா அவர்கள், முஹம்மதுவின் முதல் பாகத்தைப் பற்றி பேசுகிறார். இஸ்லாம் பிரச்சாரம் மூலம் பரவிக்கொண்டு இருந்தது, பல நாடுகளிலிருந்து மக்காவிற்கு புனித யாத்திரையாக மக்கள் வருவார்கள், குறைஷிகள் வன்முறைகளில் ஈடுபடுவார்கள். இருந்தபோதிலும், முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்தார்கள் என்று எழுதுகிறார். இது கி.பி. 610 லிருந்து 622 வரையிலான காலக்கட்டமாகும் (மக்காவின் காலம்).

மக்காவின் காலக்கட்டத்தில் முஹம்மதுவிற்கு குறைஷிகளிலிருந்து தான் அதிக தொல்லைகள் வந்தன, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு அவ்வளவு அதிகம் இல்லை.  அதிக அளவு யூதர்களை முஹம்மது சந்தித்தது, மதினாவில் தான்.

பாராவின் மிகப்பெரிய பிழை, அவருக்கு இஸ்லாமின் காலவரிசை சரியாகத் தெரியவில்லை என்பதாகும். வெறும் வாய்ப்பேச்சாக இருந்த இஸ்லாம் மதினா வந்த பிறகு வாள்பேச்சாக மாறிவிட்டது. இங்கு தான் யூதர்களை அவர் சந்திக்கிறார், பிரச்சனை முத்துகிறது, யூதர்கள் இவர் நபி என்று நம்ப மறுக்கிறார்கள், முஸ்லிம்களின் கிப்லா மாற்றமடைகிறது. யூதர்களின் புனிதஸ்தலமான ஜெருசலேமை நோக்கி தொழுதுக்கொண்டு, அவர்களை எப்படி தாக்கிப்பேசமுடியும், அவர்களை எப்படி ஒழித்துக்கட்டமுடியும். ஆகையால், யூதர்களுக்கு எதிராக முஹம்மது போர்க்கொடி தூக்கிய முதல் நிகழ்ச்சி கிப்லா மாற்றமாகும். 

பாரா அவர்களே! மேற்கண்ட இரண்டாவது பத்தியில் “அப்போது” என்று தொடங்கியது, மிகப்பெரிய சரித்திர பிழையாகும். 

முதல்பத்தியில்  கிபி 622-632வரையிலான காலம் பற்றி பேசிவிட்டு, ”அப்போது” என்று தொடங்கி இரண்டாம் பத்தியில் “கிபி 610-622வரையிலான” காலம் பற்றி பேசியது, தவறானதாகும்.

அப்போது , பெரும்பாலும் பிரசாரம் மூலம்தான் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்தது.”

பிரச்சாரம் மூலமாக இஸ்லாம் பரப்பப்பட்டது மக்காவின் காலத்தில், மதினாவின் காலத்தில், பெரும்பாலும், ”போர்கள்” மூலமாகத்தான் இஸ்லாம் பரவியது. மதினாவின் 10 ஆண்டுகளில் 52க்கும் அதிகமான போர்களை முஹம்மது நடத்திக்காட்டினார் என்பதிலிருந்து அறிந்துக்கொள்ளலாம். 

உங்கள் தொடர்களை படிக்கும் வாசகர்களை ஏமாற்றியுள்ளீர்கள். இஸ்லாத்தில் குழுக்குழுவாக மக்கள் இணைந்தபோது, பிரச்சாரங்களினால் தான் இஸ்லாம் பரப்பட்டது என்று வாசகர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்று தவறாக நீங்கள் மனப்பால் குடித்தீர்கள். நாங்கெல்லாம், அந்த பாலில் டீ போட்டு குடிக்கிறவங்க, எங்களிடம் உங்கள் மாயவலையை வீசாதீர்கள்.

”அப்போது” என்ற ஒரு வார்த்தையினால், உண்மை சரித்திரத்தை தலைக்கீழாக மாற்றி எழுத முயலாதீர்கள் “எப்போதும்” அது உங்களுக்கு பிரச்சனையே!

4) அவரை ஒருமுறை சந்தித்துவிட்ட யாரும்

பாரா அவர்கள் எழுதியது:

அவரை ஒருமுறை சந்தித்துவிட்ட யாரும் இஸ்லாத்தில் இணையாதோராக இருந்ததாகச் சரித்திரமில்லை

உமர் எழுதியது:

இதனை தமாஷுக்காகத் தானே எழுதினீர்கள்? 

மக்காவில் முஹம்மது 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சாரம் செய்தார், வெறும் சொற்ப எண்ணிக்கையில் தான் மக்கள் இஸ்லாமை ஏற்றார்கள். மதினாவிற்கு அவர் இடம் பெயர்ந்த பிறகு தான், வாள் கையில் எடுத்த பிறகு தான் மக்கள் குழுக்குழுவாக அச்சத்தின் காரணமாக சேர்ந்தார்கள். இது தான் சரித்திரம் பாரா அவர்களே, நீங்கள் எழுதியது வெறும் எழுத்துத்திறமை.

5) யானைகள் மறுபுறம் அணிவகுத்திருந்தன! முஹம்மதுவிடம் ஏதைய்யா யானை?

பாரா அவர்கள் எழுதியது:

காரணம், முகம்மதுவின் பின்னால் அணிவகுத்திருந்த அந்தப் படை, பத்ருப்போரில் பங்குபெற்றதைப் போல முந்நூற்றுப் பதின்மூன்று பேர் கொண்ட படை அல்ல. மாறாக, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்திருந்தனர் முஸ்லிம் ராணுவ வீரர்கள். அவர்களது ஒட்டகப்பிரிவு ஒரு சாலையை அடைத்து நிறைத்திருந்தது. யானைகள் மறுபுறம் அணிவகுத்திருந்தன. வீரர்களின் வாள்களில் நட்சத்திரங்கள் மின்னின. வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்தவர்களைப் போல் அவர்களின் முகங்களில் அமைதியும் உறுதியும் ததும்பின.

உமர் எழுதியது:

அருமை எழுத்தாளர் பாரா அவர்களே, இஸ்லாமிய சரித்திர நூல்களை கரைத்து ஃபில்டர் காபி போட்டு குடித்தவரே! முஹம்மதுவின் இராணுவத்தில்  யானைப்படை இல்லையென்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வரிகளை எழுதும் போது, இந்திய அரசர்களின் போர்கள் பற்றிய ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, அதன் வர்ணனைகளை ஏழாம் நூற்றாண்டுக்கு கொண்டுச்சென்று எழுதிவிட்டீர்களா?

பாலைவனங்களில் ஒட்டகங்களைப் போன்று யானைகளை அவ்வளவு சுலபமாக வளர்க்கமுடியாது.

[ஒருவேளை இராணுவத்தில் சிலருக்கு யானைக்கால் இருந்திருக்கலாம், நீங்கள் இதனை குறிப்பிடவில்லையே! யாரோ ஒரு சரித்திர ஆசிரியர், வீரர்களின் கால்களை குனிந்துப் பார்த்து, யானைக்காலைப் பார்த்து,  யானைப்படை என்று எழுதிவிட்டார் போல் தெரிகிறது. அந்த சரித்திரத்தை நீங்கள் படித்திருந்திருக்கவேண்டும்].

பாரா அவர்களே, நீங்கள் குர்-ஆனில் இந்த வசனத்தை தனியாக படித்துவிட்டு எழுதவில்லையே! இந்த கதை வேறு. 

குர்-ஆன் 105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

குர்-ஆனில் யானை என்ற வார்த்தை ஒரே முறை தான் வருகிறது என்று நினைக்கிறேன், அதுவும் இங்கு தான். 

6) முகம்மது ஓர் உத்தரவை இட்டிருந்தார். யாரையும் கொல்லாதீர்கள்

பாரா அவர்கள் எழுதியது:

வெற்றிக்களிப்புடன் க"அபாவுக்குள் நுழைந்த முஸ்லிம் ராணுவ வீரர்களுக்கு முகம்மது ஓர் உத்தரவை இட்டிருந்தார். யாரையும் கொல்லாதீர்கள். யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். யாரையும் கைது செய்யவும் வேண்டாம்.

உலக சரித்திரத்தில் இன்றுவரை இதற்கு நிகரானதொரு சம்பவம் எந்த தேசத்திலும், எந்தப் போர்க்களத்திலும் நடந்ததில்லை. தோல்வியுற்ற மெக்கா ராணுவத்தினர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொல்லப்படவில்லை. மாறாக, "உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றீர்கள். மனிதர்களுக்கு இடையில் இதுகாறும் இருந்துவந்த அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்பையும் காலடியில் இட்டு நசுக்கிவிடுவோம்" என்று சொன்னார் முகம்மது நபி.

உமர் எழுதியது:

பாரா அவர்களே, நீங்கள் என்னை ரொம்ப படுத்துறீங்க, தாங்க முடியலே!

வாசகர்கள் கூர்ந்து பாராவின் வரிகளை கவனிக்கவேண்டும். 

முஹம்மது இப்படி சொன்னாராம்:

  • யாரையும் கொல்லாதீர்கள். 
  • யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். 
  • யாரையும் கைது செய்யவும் வேண்டாம்.

மக்காவினருக்கு முஹம்மது அப்படியே மன்னிப்பை வாரி வழங்கிவிட்டாராம். ஒருவரையும் கொல்லவில்லையாம், இது சரித்திரமாம். இவர் படித்தது என்ன சரித்திரமோ? பொய்யை உண்மையென்று இவருக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

உமரே! மக்காவின் வெற்றிக்கு பிறகு, முஹம்மதுவின் கட்டளையின் பேரில் கொலைகள் நடந்தன என்று, நீ என்ன ஆதாரங்களைக் காட்டப்போகிறாய்?  என்று என்னிடம் யாரோ கேட்பது போல என் காதுகளில் தொணிக்கிறது. இதோ பதில் தயாராக இருக்கிறது, அதுவும் பாரா அவர்கள் படித்த ரஹீக் புத்தகத்திலிருந்தே வருகிறது.

பத்து பேர்களுக்கு அதிகமானவர்கள் கொல்லப்படவேண்டும் என்று முஹம்மது கட்டளையிட்டுள்ளார். அவர்களில் ஆறுபேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மீதியுள்ளவர்களுக்கு முஸ்லிம்களில் சிலர் சிபாரிசு செய்தபடியினால், அவர்கள் இஸ்லாமை ஏற்றபடியினால், உயிர் தப்பினார்கள். இந்த விவரங்களை ரஹீக் புத்தகத்திலிருந்து இங்கு தருகிறேன், தொடுப்பையும் கொடுத்துள்ளேன் படித்துக்கொள்ளுங்கள்.

பாரா அவர்களே, நான் முன்னமே சொன்னது போல, ரஹீக் உங்களை புரட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை. 

நூல்: ரஹீக், பக்கம் 452, 453

தலைப்பு: பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

தொடுப்புக்கள்: 

பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்

நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்மா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு அல் அஸ்வத், 7, 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா’ எனும் அடிமை. இப்பெண்ணிடம்தான் ஹாதிப் அனுப்பிய ராணுவ இரகசிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களைப் பற்றியுள்ள குறிப்புகள் அடுத்து வருகின்றன.

அப்துல்லாஹ் இப்னு ஸஅதை உஸ்மான் (ரழி) அழைத்து வந்து சிபாரிசு செய்ய நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர் உயிர் பாதுகாக்கப்பட்டது. இவர் இதற்கு முன் ஒருமுறை இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்து மதீனா வந்திருந்தார். சில காலங்கள் அங்கு தங்கிய பின் இஸ்லாமை விட்டு வெளியேறி மக்கா வந்துவிட்டார். இவர் நபியின் அவையில் தான் இப்போது முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால், தங்களது தோழர்களில் யாராவது ஒருவர் அவரை கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) இருந்ததால் அவரது இஸ்லாமை ஏற்க தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவரது இஸ்லாமை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். அப்துல் உஜ்ஜா இப்னு கத்தல் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். நபித்தோழர் ஒருவர் நபியிடம் வந்து “என்ன செய்வது?” என்று கேட்டார். “அவனைக் கொன்று விடவேண்டியதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவர் அவனைக் கொன்று விட்டார்.

மகீஸ் இப்னு சபாபா- இவன் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தான். ஓர் அன்சாரித் தோழரை கொன்றுவிட்டு மதம் மாறி முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை நுபைலா இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்பவர் கொன்றொழித்தார்.

ஹாரிஸ் இப்னு நுஃபைல்- இவன் மக்காவில் நபியவர்களை அதிகம் துன்புறுத்திக் கொண்டிருந்தான். இவனை அலீ (ரழி) கொன்றார்கள்.

ஹப்பார் இப்னு அஸ்வத்- இவர்தான் நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா சென்றபோது வழிமறித்து தனது ஈட்டியால் குத்தினார் இதனால் அவர்கள் அமர்ந்திருந்த (கஜாவா) ஒட்டகத் தொட்டியிலிருந்து கீழே விழுந்தார்கள் அவர்களது வயிற்றில் காயமேற்பட்டு கரு கலைந்துவிட்டது. இவர் மக்கா வெற்றியின் போது அங்கிருந்து தப்பி ஓடினார் பின்பு சில காலம் கழித்து இஸ்லாமை ஏற்றார்.

மற்ற இப்னு கத்லுடைய இரு அடிமைப் பாடகிகளில் ஒருத்தி கொலையுண்டாள். மற்றவள் முஸ்லிம் ஒருவரால் அடைக்கலம் தரப்பட்டு பின்னர் இஸ்லாமை ஏற்றார். அவ்வாறே ‘சாரா’ என்ற அடிமைப் பெண்ணும் அடைக்கலமாகி இஸ்லாமைத் தழுவினார்.

அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: ஹாரிஸ் இப்னு துலாத்தில் அல்குஸாயீ என்பவனையும் கொல்லும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே, அவனை அலீ (ரழி) கொன்றொழித்தார்கள் என அபூ மஃஷக் (ரழி) கூறுகிறார்.

பிரபல கவிஞர் கஅப் இப்னு ஜுஹைரையும் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால், இவர் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்து இஸ்லாமை ஏற்று தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார். இவரைப் பற்றிய விரிவான செய்தி பின்னால் வரவிருக்கின்றது.

இவ்வாறே ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொலை செய்த வஹ்ஷியையும் கொன்றுவிட கட்டளையிடப்பட்டது. பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் மன்னிக்கப்பட்டது. அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவும் கொலைப் பட்டியலில் இருந்தார். அவரும் இஸ்லாமை ஏற்றதால் மன்னிக்கப்பட்டார். இப்னு கதலின் அடிமைப் பெண் அர்னப் என்பவளும் கொலையுண்டாள் என இமாம் ஹாகிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். கொலையுண்டவர்களில் உம்மு ஸஅத் என்பவரும் உண்டு என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இந்த கணக்கின்படி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இங்கு கூறப்பட்ட அர்னப், உம்மு ஸஅத் இருவரும் இப்னு கத்தலின் இரண்டு பாடகிகளாக இருக்கலாம். அவ்விருவருடைய பெயர்கள் அல்லது புனைப் பெயர்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கலாம். (இப்னு ஹஜர் (ரஹ்) கூற்று முடிவுற்றது.) (ஃபத்ஹுல் பாரி)

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்

பாரா அவர்களே, உங்களுக்கு ஒரு அபாயத்தை இங்கு குறிப்பிடவேண்டும், உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.

முஹம்மது அன்று மக்காவை பிடித்ததுபோல, இந்தியாவையும் பிடித்தால், என்ன நடக்கும் தெரியுமா? ரஹீக் புத்தகத்தின் கீழ்கண்ட அத்தியாயத்தை படித்துப்பாருங்கள். மக்காவை பிடித்த பிறகு, தன்னுடைய பரம எதிரிகளை கொன்று விட்டபிறகு (மேற்கண்டவைகளை படிக்கவும்), மக்காவை சுற்றியுள்ள ஒவ்வொரு பகுதிக்கும், ஊருக்கும் சென்று அனைத்து “சிலைகளையும்” அழிக்கும் படி கட்டளையிட்டார். புரியவில்லையா? முஹம்மது மக்காவில் கால் வைத்தது போல இந்தியாவில் நுழைந்தால், இந்திய மண்ணில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள சிலைகள் உடைக்கப்படும், சின்ன கோயில்களிலிருந்து பெரிய கோயில்கள் வரை அனைத்தும் நாசமாக்கப்படும். இதனை நம்பமுடியவில்லையல்லவா? ரஹீக் சொல்லும் விவரங்களை படித்து ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நான் வெறும் சில வரிகளை இங்கு பதிக்கிறேன், அனைத்து விவரங்களையும் படிக்க தொடுப்புக்களை சொடுக்கவும்:

மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள் & படைப் பிரிவுகளும் குழுக்களும்

மேலும், இஸ்லாமிய அழைப்புப் பணிக்காகவும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிலைகளை உடைத்தெறிவதற்காகவும் தோழர்களின் குழுக்களை அனுப்பினார்கள் அவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. நபியவர்களின் அறிவிப்பாளர், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் வீடுகளிலுள்ள சிலைகளை உடைத்தெறிய வேண்டும்” என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.

1) ‘நக்லா’ என்ற இடத்தில் ‘உஜ்ஜா’ என்ற சிலை இருந்தது.. . . நபி (ஸல்) காலித் இப்னு வலீதை முப்பது வீரர்களுடன் அந்தச் சிலைiயை உடைத்தெறிய அனுப்பினார்கள். அதை உடைத்து வந்த காலிதிடம் “ஏதாவது அங்கு கண்டீர்களா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் “நான் எதையும் காணவில்லை” என்றார். “அப்படியானால் நீ அதனைச் சரியாக உடைக்கவில்லை. திரும்பச் சென்று அதனை உடைத்து வா!” என்று அனுப்பி வைத்தார்கள்.

2) மக்காவின் வட கிழக்கே 150 கி.மீ. தொலைவில் ‘ருஹாத்’ என்னுமிடத்தில் ஹுதைல் கிளையினர் வணங்கும் ‘சுவா’ என்ற சிலை இருந்தது. அதனை உடைக்கும்படி இதே ரமழான் மாதத்தில் அம்ர் இப்னு ஆஸை நபி (ஸல்) அனுப்பினார்கள். . . .

3) ‘குதைத்’ என்ற ஊரருகே ‘முஷல்லல்’ என்ற இடத்தில் ‘மனாத்’ எனும் சிலை இருந்தது. . . .

4) இதுவே மக்கா வெற்றியின் சுருக்கமான வரலாறு. இப்போர் முஸ்லிம்களுக்கு நிரந்தர வெற்றியை நிர்ணயித்தது மட்டுமல்ல இம்மாபெரும் போராட்டம் இறைநிராகரிப்புடைய கோட்டையை சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கியது. அரபு தீபகற்பத்தில் இறைநிராகரிப்பின் வாடையே வீசாமல் அழித்தொழித்து விட்டது. முழு அரபுலகமே முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர்களின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. . .

7) சவூதி அரேபியா, ஈராக், ஈரான், லிபியா, சிரியா, பாலஸ்தீன் எப்போது சுயமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது?

பாரா அவர்கள் எழுதியது:

அலையலையாக வந்து அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். சவூதி அரேபியா, ஈராக், ஈரான், லிபியா, சிரியா, பாலஸ்தீன் என்று ஒவ்வொரு தேசமாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டது.

உமர் எழுதியது:

பாரா அவர்களே! எழுத்தாளர்களின் வரிகளில் சில நேரங்களில் ஆங்காங்கே சில பொய்கள் தெரியும், அதுவும் நாம் தேடிப்பார்த்தால் கிடைக்கும். அறியாமையினாலோ, அல்லது தெரிந்தோ சிலர் சில பொய்களை தங்கள் எழுத்துக்களில் புகுத்திவிடுவார்கள். ஆனால், உங்களுடைய வரிகளில், உண்மைகள் எங்கே இருக்கிறன என்று பொய்களின் மத்தியில்  தேடவேண்டியதாகிவிட்டது. ஆனால், உங்களின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு உண்மை வாக்கியம் மட்டும் எனக்கு பளிச்சென்று தெரிகிறது, அதனை கீழே கொடுத்துள்ளேன்:

”நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 பெப்ரவரி, 2005”

அதுவும் இணையத்தில் பதித்துள்ள தொடர்களில் மட்டுமே! இவ்வரியும் உங்கள் வரியில்லை, அந்த பிளாக்கரில் பதித்தவரின் வரியாகும். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

முஹம்மதுவின் காலத்தில் ”சவூதி அரேபியா” இல்லையே! வெறும் அரேபியா தான் இருந்தது. அதனையும் முஹம்மது போர்கள் புரிந்து தான் வெற்றிக்கொண்டார். 

அது எப்படி, இந்த நாடுகள் தானாக வந்து இஸ்லாமுடன் இணைந்துவிட்டன? இந்நாட்டு மன்னர்களுக்கு என்ன பைத்தியமா?  தானாக வந்து முஹம்மதுவுடன் இணைவதற்கு?  

பாரா அவர்களே, நீங்கள் சொல்வது போல, இந்த நாடுகள் அனைத்தும் தானாக வந்து இஸ்லாமோடு இணையவில்லை. முஹம்மதுவிற்கு பிறகு போர்களைத் தொடுத்து, முஸ்லிம் கலிஃபாக்கள் ரத்த ஆறு ஓடவைத்து  வென்றுள்ளார்கள். 

நான் இப்படி கேட்கிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம், பாரா அவர்களே! நீங்கள் ”பொய்களைச் சொல்லிதான் பிழைப்பு நடத்தனுமா?” 

விக்கீபீடியா தொடுப்புக்கள்:

8) கலிஃபா அபூ பக்கர் ஊரிலுள்ள அத்தனை பேரின் ஆடுகளிலும் பால் கறந்து கொடுத்துவிட்டு வந்தவர்

பாரா அவர்கள் எழுதியது:

உண்மையில் ஒரு சக்ரவர்த்திக்கு நேரெதிரான துறவு மனப்பான்மை கொண்டவர் அவர். பரம சாது. அதைவிடப் பரம எளிமைவாதி. தானென்ற அகங்காரம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதனால், கலீஃபாவான பிறகும் ஒரு வயதான மூதாட்டியின் வீட்டுக்குத் தினசரி சென்று வீட்டுவேலைகளைச் செய்து வைத்துவிட்டு, ஊரிலுள்ள அத்தனை பேரின் ஆடுகளிலும் பால் கறந்து கொடுத்துவிட்டு வந்தவர்.

உமர் எழுதியது:

என்னய்யா இது!  

ஒரு அரசனாக முடிசூட்டிக்கொண்ட பிறகு கூட, அபூ பக்கர் ” ஊரிலுள்ள அத்தனை பேரின் ஆடுகளிலும் பால் கறந்து கொடுத்துவிட்டு” வந்தாரா?

அபூ பக்கர் என்ன ஆட்டுக்கார வேலனா? 

ஏதோ ஒரு பேச்சுக்காக, ஒரு முறை ஒரு குடிமகனின் ஆட்டைபிடித்து, பால் கறந்து கொடுத்து இருந்திருப்பார், அபூ பக்கர் கலிஃபா. அதற்காக, அவர் ஆட்சியில் இருந்த 2 ஆண்டுகள், இப்படி செய்தார் என்றுச் சொல்வது, கொஞ்சம் இல்லை, அதிகமாகவே அதிகம். பாரா அவர்களே, உங்களுக்கு பதில் கொடுப்பதற்குள் என் அகராதியில் உள்ள அனைத்து வார்த்தைகளும் பத்தாதுபோல் இருக்கிறது. இன்னும் புதிய வார்த்தைகளை நான் கற்றுக்கொண்டால் தான், உங்களுக்கு பதில் கொடுக்கமுடியும் போல் இருக்கிறது.

உங்களுடைய வாதம் அறிவுக்கு பொருந்துகிறதா?  

மதினாவில் 10000 ஆடுகள் இருந்தால், அபூ பக்கர் கலிஃபா, ஒவ்வொரு வீடாகச் சென்று, பாலை கறந்து கொடுத்துவிட்டு வந்தார் என்றுச் சொல்வது, முட்டாள்தனமாகத் தெரியவில்லை? ஒரு நாளுக்குள் ஒரு மனிதன் 10000 ஆடுகளிலிருந்து பாலை கறந்து கொடுக்கமுடியுமா? 1000 ஆடுகளாக இருந்தாலும் இது சாத்தியமா? இது ஒரு அரசனுக்குத் தேவையா?

அபூ பக்கர் ஊரிலுள்ள ஆடுகளிலிருந்து பாலை கறந்து கொடுத்துவிட்டு, அதன் பிறகு ரித்தா போர்களைச் செய்ய புறப்படுவாரா?

பாரா அவர்களே, நிலாவுலே ஆயா வடசுட்ட கதையைவிட கேவலமாக உள்ளதைய்யா உங்கள் வரிகள். கொஞ்சம் சிந்திக்கணும் பாரா அவர்களே! சாமி எதுக்கு நமக்கு மூளையை கொடுத்திருக்கிறது, சிந்திப்பதற்கு! மூளையை பயன்படுத்த கத்துக்கணும். 

பக்தி முத்திப்போன முஸ்லிம்களோடு நட்பு கொண்டால், இப்படித்தான் எழுதத்தோணும்.

9) உமர் ராஜாங்க ரீதியில் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு

பாரா அவர்கள் எழுதியது:

இறக்கும் தறுவாயில், அபூபக்கரே தமக்குப்பின் உமர்தான் கலீஃபாவாக வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதனால், கி.பி. 634-ல் உமர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ராஜாங்க ரீதியில் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான மதப்பிரசாரங்கள், குர் ஆனை உலகறியச் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முகம்மது நபியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவரது பொன்மொழிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ளுதல் போன்ற பல காரியங்கள் உமரின் காலத்தில்தான் ஆரம்பமாயின.

ஜெருசலேத்தில் கால்வைத்த முதல் இஸ்லாமியச் சக்ரவர்த்தி உமர்தான். அது கி.பி. 638-ம் ஆண்டு நடந்தது.

உமர் எழுதியது:

நான் அடிக்கடி கண்ட ஒரு உண்மை என்னவென்றால், “முஸ்லிம்கள் தங்களை பெரிய அறிவாளிகளாக காட்ட படாத பாடு படுவார்கள், ஆனால், கடைசியில் மாட்டிக்கொள்வார்கள், அது போலத்தான் பாரா அவர்களும்”.

தம்முடைய தொடரின் ஆரம்ப முதல், இஸ்லாமை அமைதி மார்க்க, முஹம்மது நல்லவரு, வல்லவரு என்று எழுதிக்கொண்டே இருப்பார். கலிஃபாக்களும் அமைதிவாதிகள் என்று அடிக்கிக்கொண்டே போவார், ஆனால் கடைசியில் “ராஜாங்க ரீதியில் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு” என்று எழுதி மொத்தமாக கோட்டையைவிட்டுவிடுவார்.

அது எப்படி ஒரு அமைதி மார்க்கம் தன் இராஜ்ஜியத்தை விஸ்தரிக்க போர்களைச் செய்யலாம்? 

• படையெப்புக்களில் மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற அடிப்படை புத்தி இல்லையா இவர்களுக்கு?

• இஸ்லாமிய கலிஃபாவாகிய உமர், வேற்று நாட்டவர் மீது போர் தொடுத்து, அவர்களின் இராணுவத்தை கொன்றுப்போட்டு, அந்நாட்டின் பெண்களை விதவைகளாக்கி, பிள்ளைகளை அநாதைகளாக்கி, பெண்களை அடிமைகளாக விற்று, கற்பழித்து, குர்-ஆனின் படி, அப்பெண்களை தங்கள் வலக்கரத்துக்கு சொந்தங்களாக மாற்றி, கணவன் மனைவிகளை பிரித்து, கணவர்களின் முன்பு, மனைவிகளை கற்பழித்து, அப்பாக்களின் முன்பு மகள்களை கற்பழித்துவிட்டு, நாட்டை பிடித்த பிறகு, அங்குள்ளவர்களுக்கு இஸ்லாமை போதித்தால், என்ன நடக்கும்?

• இது தான் “இஸ்லாமிய சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு” இல்லையா?

இது தான் இஸ்லாம் என்ற மார்க்கம் கற்றுக்கொடுக்கும் பாடமா? வேற்று நாட்டு மக்களின் பிணங்களின் மீது இஸ்லாம் கட்டப்படவேண்டுமா? பிணங்களைக் கொத்திச் சாப்பிடும் கழுகுகளைப் போல கலிஃபாக்கள் செய்வது நியாயமா? இப்படியா அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்?

முடிவுரை:

இந்த கட்டுரையில், பாரா அவர்களின் 21வது அத்தியாயத்தை தூர்வாரினேன். இன்னும் தூர்வாரவேண்டிய அத்தியாயங்கள் அனேகம் உண்டு. 

இதுவரை படித்த உங்கள் உள்ளங்களில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன? யார் இந்த உமர்? ஏன் இவ்வளவு கடினமாக எழுதுகிறான் என்று திட்டத்தோன்றுகிறதா? திட்டுங்கள், ஆனால் நான் சொன்ன விவரங்களில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறது என்று உணர்ந்தால், நீங்கள் சுயமாக ஆய்வு செய்துப் பாருங்கள். உண்மையை நீங்கள் அறிவீர்கள், அந்த உண்மையே உங்களை விடுதலையாக்கும்.

அடுத்த கட்டுரையில் சந்திப்போம். . . அது வரை அபூ பக்கர் அரசரால் எப்படி ஒரே நாளில் ஊரிலிருக்கும் எல்லா ஆடுகளிலிருந்தும் பால் கறக்கமுடிந்தது என்று சிந்தித்துப் பாருங்கள்.


2016-2017 ரமளான் தொடர் கட்டுரைகள்

ரமளான் தொடர் கட்டுரைகள் (2012 - 2017)

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்