அன்பு இஸ்லாமியர்களே, நான் ஏன் கிறிஸ்தவனானேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும்

ஆசிரியர்: வாலித்

அறிமுகம்

இன்று, உலகத்தில் பாதி ஜனத்தொகை தங்களை இஸ்லாமியர்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இந்த இரண்டு மார்க்கங்களும் தனக்கென்று ஒரு தனி வேத புத்தகத்தை கொண்டுள்ளது, மற்றும் ஒரு நாள் வரும் அன்று நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு முன்பாக நியாயந்தீர்ப்பதற்கு நிற்கப்படுவோம் என்றும் இம்மார்க்கங்கள் கூறுகின்றன. மேலும், தங்கள் மார்க்கத்தில் தான் இறைவன் அனுப்பிய உண்மையான செய்தி உள்ளது, அல்லது தங்கள் மார்க்கம் தான் உண்மையான மார்க்கம் என்று இவைகள் சொல்லிக்கொள்கின்றன. இன்று நம்மிடம் காணப்படும் பைபிள் தன்னுடைய மூலத் தன்மையிலிருந்து மாறிவிட்டது, அதாவது திருத்தப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் வாதிக்கிறார்கள். ஆனால், இறைவன் தன்னுடைய வார்த்தையாகிய பைபிளை ஒரு நாளும் கெடுக்கப்பட இடம் தரமாட்டார் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். நாம் இறைவனின் சத்தியத்தை நம்புகிறோமா இல்லையா என்பதைப் பொருத்து நம்முடைய நித்தியம் (சொர்க்கம் அல்லது நரகம்) எது என்பதை இறைவனுடைய தீர்ப்பு முடிவு செய்யும். இஸ்லாமின் வாதத்தின் படி, சொர்க்கத்திற்குச் செல்லும் வழி இவ்விதமாக அறிக்கையிடுவதினால் கிட்டும் என்றுச் சொல்கிறது அதாவது "அல்லாஹ்வைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை, முஹம்மது மனித இனத்துக்கு அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் " என்று அறிக்கையிடுவதின் மூலம் சொர்க்கம் செல்லமுடியும் என்றுச் சொல்கிறது. கிறிஸ்தவத்தின் படி, ஒரு மனிதன் இறைவனின் செயலாகிய இயேசுக் கிறிஸ்து சிலுவையில் மரித்து தனக்காக சம்பாதித்துக் கொடுத்த விமோசனத்தை/விடுதலையை நம்புவது தான் ஒரே வழி என்று கிறிஸ்தவம் சொல்கிறது.

இந்த இரண்டு தெரிவுகளில், நிச்சயமாக ஒன்று சரியானது, மற்றொன்று தவறானதாகும் (இரண்டும் சரியானதாக இருக்க வாய்ப்பு இல்லை). இவைகளில் சரியான தெரிவு நம்மை நித்திய வாழ்விற்குள் (சொர்க்கத்திற்குள்) அழைத்துச் செல்லும், மற்றும் தவறான தெரிவு நம்மை நித்திய அழிவிற்குள் அழைத்துச் செல்லும் (நரகம்). இவைகளில் எதனை நீங்கள் தெரிந்தெடுக்கப்போகிறீர்கள்? நான் ஏன் 'கிறிஸ்தவத்தை' தெரிந்தெடுத்தேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன். என்னைப் பொருத்தமட்டில், கிறிஸ்தவமே நம்மை பரலோகில் சேர்க்கும் உண்மையான மார்க்கமாக உள்ளது.

இந்த இரண்டு வழிகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை அறியவேண்டுமென்றால், ஒருவர் அதிக நேரத்தை பயன்படுத்தி, இவ்விரண்டு மார்க்கங்கள் கொடுக்கும் ஆதாரங்களை அறிந்துக்கொள்ளவேண்டும். குர்ஆன் இவ்விதமாக அறிக்கையிடுகின்றது: "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (குர்ஆன் 2:111). இதே போல, பைபிள் இவ்விதமாக அறிக்கையிடுகின்றது: “உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார் (ஏசாயா 41:21) .” இந்த இரண்டு வகையான அறிக்கைகளை மதிக்கும் வண்ணமாக, மற்றும் இவர்களின் கட்டளையின்படியும், நான் இவைகளை விஞ்ஞான அளவுகோலுடன் ஆராய முற்படுகிறேன்.

என் வாழ்க்கையிலே அனேக ஆண்டுகள் குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு படிப்பதற்கு ஒதுக்கினேன். பைபிள் திருத்தப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டிற்கு தேவையான ஆதாரங்களை தேடுவதில் செலவழித்தேன். இந்த நீண்ட ஆய்வின் பலன் மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. இந்த கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள், நான் சேகரித்த சரித்திர, தீர்க்கதரிசன மற்றும் விஞ்ஞான ஆதராங்களை காணும் போது, அவர்களின் அறிவு விரிவடையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஒப்பிடல் ஆய்வில், பைபிள் மற்றும் குர்ஆனில் காணப்படும் அனேக தலைப்புகள் அலசப்பட்டது, அதாவது, பல தலைப்புக்களில், நிகழ்வுகளில், இவ்விரு வேதங்களில் காணப்படும் மனிதர்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. உதாரணத்திற்கு,"இஸ்லாமில் அமைதி மற்றும் போர்", "பைபிள் மற்றும் குர்ஆனில் விஞ்ஞானம்", இஸ்ரவேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள், குர்ஆனில் காணப்படும் தீர்க்கதரிசனங்கள், பைபிள் பற்றிய சரித்திர, தொல்பொருள், தீர்க்கதரிசன மற்றும் கையெழுத்துப் பிரதி ஆதாரங்கள் என்னென்ன? இதுபோன்ற அனேக தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த புத்தகத்தை எழுதுவதற்கான என் நோக்கம் என்னவென்றால், கிறிஸ்தவத்தை இஸ்லாமியர்கள் எப்படி கண்ணோக்குகிறார்கள்? என்பதை காட்டி மேலும், கிறிஸ்தவமே உண்மையான ஒரே மார்க்கம் என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை இஸ்லாமியர்களுக்கு காட்டுவதே என் நோக்கமாகும் .

நான் ஒரு இஸ்லாமியனாக வளர்க்கப்பட்டேன், 18 ஆண்டுகள் பரிசுத்த பூமியில் (எருசலேமில்) வாழ்ந்தேன், மற்றும் குர்ஆனை சுவாசித்தேன், இஸ்லாமிய பாதையில் நடந்தேன் மற்றும் குர்ஆனை படித்து அதன் பாதையில் வாழ்ந்தேன்.

இறைவனின் உண்மை வார்த்தையை தேடும் வாசகர்கள் தங்கள் மனதில் எந்த வித கலங்கமும் இல்லாமல் இக்கட்டுரைகளை படிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இறைவன் தன்னுடைய வார்த்தையை நாம் அனைவரும் சரியான வகையில் புரிந்துக்கொள்ள நம் மனதை திறப்பானாக. இவ்வார்த்தைகளை அசை போடும் உங்களோடு இறைவன் இருப்பாராக. அவர் ஒருவருக்கே நாம் நம்மை சமர்பிக்கிறோம், அவர் ஒருவருக்கே எல்ல புகழும் உரித்தாகுக.

 [பொருள் அட்டவணை செல்ல] [அடுத்த அத்தியாயம் செல்ல]

ஆங்கில மூலம்: Dear Muslim, let me tell you why I believed