முகமதுவின் பாலியல் பலம்

(Muhammad's Sexual Prowess)

பாலியல் (செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர் (Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி (ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).

இந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும்? கவனிக்கவும் - அந்த காலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை - இந்த வயதினரால் கூட இது முடியாத காரியமாக இருக்கும் - தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர் அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்த பாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு இல்லை இது முகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.

இந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று விளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:

ஆயிஷா (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhari பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .

முகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்த ஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை - முதலில் நாம் மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா?

கவனிக்கவும் - மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவி மூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்று வலியுறுத்துகிறது.

முகமது பற்றியும், மற்றும் அவர் எப்படி இந்த சூன்யத்திற்கு கீழ் ஆட்கொள்ளப்பட்டார் என்பதை பற்றியும் விளக்கமாக அறிய கீழ் கண்ட அகராதி தொடுப்பில் சென்று படிக்கவும்: Muhammad and Satan.

தான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில் ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில் உடலுறவு (sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளை வழங்குகிறது. பார்க்கவும்: Muhammad, Islam, and Sex.

இதன் விளைவுகள்:

இந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய விவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும் மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், 'ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான" ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும், மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

இதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்வி எழும்புகிறது: இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை?

இறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே முஸ்லீம்கள் தங்கள் நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்று சொல்லப்படுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ?

முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. மேலும் பலரும் ஏற்றுக்கொள்ளுகிறபடி 'காபிரியேல் தூதன் வந்தார், வெளிப்பாடு அவர் மூலம் கொண்டுவரப்பட்டது" என்பதெல்லாம் ஒரு புத்திமாறாட்டமுள்ள மனதின் படைப்புகளா! உண்மைக்குப் பதிலாக மாயைகளாக இருந்தவைகளா? (If it is established that Muhammad's illusions are narrated as facts in the hadiths, this also raises doubts in regard to the Qur'an. What if some or all of the alleged "visitations of the angel Gabriel" and the "revelations that were brought down" by him were creations of an unstable mind, and have really been an illusion instead of a fact?)

ஜோசன் கட்ஜ் 

ஆங்கில மூலம்: Muhammad's Sexual Prowess


முஹம்மது பற்றிய இதர கட்டுரைகள்

முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்