101 காரணங்கள் 
முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்?

பாகம் 10

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7பாகம் 8, பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும். இந்த பத்தாம் பாகத்தில் 91வது காரணத்திலிருந்து 101வது காரணம் வரை காண்போம்.

91. தோராவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

பைபிளின் ஐந்தாகமங்களை அதாவது தோராவை அல்லாஹ் தான் இறக்கினான் என்று முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். தோராவை உறுதிப்படுத்தவே குர்-ஆன் இறக்கப்பட்டது என்றும் குர்-ஆன் கூறுகின்றது. ஆனால், அதே தோராவை முஹம்மது அவமதித்துள்ளார், அதாவது தோராவின் கட்டளைகளை மீறி நடந்துள்ளார். மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகளையும், இன்னும் இதர கட்டளைகளையும் மீறியுள்ளார். உதாரணத்திற்கு, ஒட்டகத்தின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது என்று தோரா யூதர்களுக்கு கட்டளையிடுகிறது. அதே தோராவை பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லும் முஹம்மது ஒட்டகத்தின் மாமிசம் சாப்பிட அனுமதி கொடுத்துள்ளார். பெண் அடிமைகளை திருமணம் புரிந்து அவர்களை சட்டப்படி மனைவியாக்கிக் கொள்ள தோரா போதிக்கும்போது, அடிமைப்பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாமல், அவர்களோடு விபச்சாரம் புரிய முஹம்மது அனுமதித்தார். தோராவின் படி ஓய்வு நாள் சனிக்கிழமையாகும், இதனை மாற்றி முஹம்மது வெள்ளிக்கிழமை என்று மாற்றினார். இது போல தோராவின் கட்டளைகளை அவர் மீறி நடந்துள்ளார். எனவே, கிறிஸ்தவர்களின் பார்வையில், தோராவின் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [91]

92. வரலாறு புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களுக்கு அடுத்தபடியாக பல சரித்திர புத்தகங்கள் வருகின்றன. இஸ்ரவேல் நாட்டின் வரலாறு கூறும் இந்நூல்களிலிருந்து அனேக விவரங்களை முஹம்மது எடுத்து, அவைகளை மாற்றி தன் குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறியுள்ளார். முக்கியமாக, தாவீது சாலொமோன் போன்றவர்கள் பற்றி அனேக விவரங்களை தாறுமாறாக மாற்றி கூறியுள்ளார். மேலும் சாலொமோன் பற்றி முஹம்மது கூறியுள்ள விவரங்கள் கண்டனத்திற்கு உரியது. சாலொமோன் ஜின்களிடம் வேலை வாங்கினார், எறும்புகள் பேசுவது அவருக்கு கேட்கும், என்று பல விஞ்ஞான தவறுகளைச் செய்துள்ளார். மொத்தத்தில், ஒரு கிறிஸ்தவர் குர்-ஆனையும், முஹம்மதுவின் போதனைகளையும் கூர்ந்து படிப்பாரானால், பழைய ஏற்பாட்டின் நூல்களை எப்படி முஹம்மது மீறியிருக்கிறார் என்பதை அறிந்துக்கொள்வார். ஏழாம் நூற்றாண்டில் வந்த முஹம்மது, கி.மு. காலத்தில் இருந்த விவரங்களை மாற்றிச் சொல்லியுள்ளார், இது கண்டனத்திற்கு  உரியது, எனவே, கிறிஸ்தவர்கள் இவரை குற்றவாளியாக தீர்ப்பார்களே தவிர, இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மிகப்பெரிய பாவத்திற்கு ஆளாகமாட்டார்கள் [92]

93. ஜபூர் (சங்கீதம்) அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

தாவீதுக்கு ஜபூர் என்ற வேதம் கொடுக்கப்பட்டதாக முஹம்மது குர்-ஆனில் கூறுகிறார். பழைய ஏற்பாட்டில் இருக்கும் சங்கீதம் என்ற புத்தகத்தைத் தான்  ஜபூர் என்று அழைக்கிறது குர்-ஆன். இந்த புத்தகம் முழுக்க முழுக்க ஒரு பாடல் புத்தகமாகும். பல இசைக்கருவிகளை இசைத்து கர்த்தரை துதித்து பாடப்பட்ட பாடல்கள் இதில் உண்டு, இன்னும் வெற்றிகளின் போதும், தோல்விகளின் போதும் துக்கத்தின் போதும் தாவீது பாடிய பாடல்களும் இதில் உண்டு. ஆனால், முஹம்மது இசைக் கருவிகளை இசைப்பது தடுக்கப்பட்டது, அல்லது பாவம் என்றுச் சொல்கிறார். பைபிளின் தேவன் இசையை பாவம் என்றுச் சொல்லவில்லை. இசையை நல்ல  காரியத்திற்காக பயன்படுத்துவதில் தவறில்லை.  இன்னும் பல விஷயங்களில் முஹம்மது ஜபூர் என்னும் சங்கீத நூலை மீறி நடந்துள்ளார். சங்கீதத்தில் 119ம் அதிகாரம், தேவனின் வேதம் பற்றி அனேக முக்கியமான விஷயங்களைக் கூறுகிறது, தேவனுடைய வார்த்தைகளை உயர்த்திப்பேசுகிறது. ஆனால்,முஹம்மது அவைகளைப் பின்பற்றாமல், இன்னொரு புதிய வேதம் என்றுச் சொல்லி, குர்-ஆனைக் கொண்டுவந்து ஜபூருக்கு எதிரான அனேக கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் எப்படி தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? தேவன் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் என்றும் (சங்கீதம் 68:5), தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்கீதம் 103:13) என்று ஜபூர் தேவனை தகப்பன் என்று கூறுகிறது. ஆனால், இறைவன் தகப்பன் ஆகமுடியாது என்று முஹம்மது கூறியுள்ளார். சங்கீத நூலுக்கு எதிராக போதித்த முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பமுடியாது. [93]

94. தீர்க்கதரிசன புத்தகங்களின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.

பழைய ஏற்பாட்டில் உள்ள அனேக தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குர்-ஆனில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளின் மத்தியில் நாங்கள் வித்தியாசத்தைக் காட்டக்கூடாது என்றும், முந்தைய தீர்க்கதரிசிகள் கூட முஹம்மது போதித்தையே போதித்தார்கள் என்றும் குர்-ஆன் சொல்கிறது. ஆனால், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களை நாம் காணும் போது, அவர்கள் இஸ்ரவேல் மக்களை தேவனிடத்திற்கு திருப்பினார்கள், தேவன் அவர்களோடு செய்து இருந்த உடன்படிக்கையின் பக்கம் அவர்களை திருப்பினார்கள். ஆனால் முஹம்மதுவோ, மக்களை ஒரு புதிய இறைவனின் பக்கம், அதுவும் மக்காவினர் வணங்கிய தெய்வமாகிய அல்லாஹ்வின்  பக்கம் திருப்பினார். முஹம்மது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போல் மக்களை நடத்தவில்லை, போதிக்கவில்லை. மேலும்,  தீர்க்கதரிசன புத்தகங்கள் தேவனை தகப்பனாக சித்தரிக்கிறது, இஸ்ரவேல் மக்களை பிள்ளைகளாக சித்தரிக்கிறது. ஆனால், முஹம்மதுவோ தன் இறைவன் ஒரு எஜமானன் என்றும், மக்கள் அடிமைகள் என்றும் போதித்தார். பைபிளின் தீர்க்கதரிசன புத்தகங்களுக்கு எதிராக போதித்த, மக்களை வழிகெடுத்த முஹம்மதுவை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? இரண்டாவதாக, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் தங்கள் போதனைக்கு கீழ்படியாத மக்கள் மீது கோபம் கொண்டு, ஒரு தனிப்படையை அமைத்துக்கொண்டு போர் தொடுக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பழி வாங்கவில்லை. ஆனால், முஹம்மதுவோ தன்னை எதிர்த்த தனிப்பட்ட மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு ஆதாரம் தேவையா?[94].

95. யோவான் ஸ்நானகனின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

யோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆன் விவரிக்கிறது, இவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் அங்கீகரிக்கிறது. அல்லாஹ்விடமிருந்து வந்த வார்த்தையை மெய்ப்பிப்பவராக யோவான் இருக்கிறார் என்று குர்-ஆன் சொல்கிறது. இதே யோவான் ஸ்நானகன் இயேசுவைப் பற்றி சாட்சி பகருகிறார். தன்னை விட மேன்மையுள்ளவர் இயேசு என்றும் சாட்சி கூறினார். இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகன் சொன்ன சாட்சிகளில் மிகவும் முக்கியமானது, இயேசுவைப் பார்த்து “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று சாட்சி கூறினார். ஆனால் முஹம்மது இதனை மறுக்கிறார். முஹம்மது, யோவான் ஸ்நானகனுக்கு எதிராக போதித்தார். எனவே, யோவானின் சாட்சியின் படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். கிறிஸ்தவர்கள் யோவானின் சாட்சியை நம்புகிறார்கள், முஹம்மதுவின் பொய் மூட்டைகளை நம்புவதில்லை. எனவே முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று முத்திரையிட்டு, இஸ்லாமை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கிறார்கள். [95]

96. இயேசுவின் படி (இன்ஜிலின் படி) முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

கிறிஸ்தவத்தின் ஆணிவேர் இயேசுக் கிறிஸ்து. இஸ்லாமின் அஸ்திபாரம் முஹம்மது. இயேசுவின் போதனையும், தன்னுடைய போதனையும் ஒன்று தான் என்று முஹம்மது கூறினார். இயேசுவும் இஸ்லாமைத் தான் போதித்தார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இயேசுவின் போதனைகளை நாம் நற்செய்தி நூல்களில் காணும் போதும், அவைகளை குர்-ஆனின் போதனைகளோடும், முஹம்மதுவின் போதனைகளோடும் ஒப்பிடும் போதும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருக்கும் தூரத்தைப் போன்று மிகப்பெரிய வித்தியாசத்தை காணமுடியும். இயேசு போதித்த ஒவ்வொரு விஷயத்திலும் முஹம்மது வித்தியாசப்படுகிறார். இயேசுவின் தெய்வீகத்தன்மையை முஹம்மது மறுக்கிறார். மக்கள் உயர்ந்த தரத்தோடு வாழவேண்டும் என்று இயேசு வரையறைத்துச் சென்றார், ஆனால், முஹம்மது இயேசுவைப் பின்பற்றாமல்,  மக்களின் வாழ்க்கைத் தரத்தை தரைமட்டமாக்கிவிட்டார். அன்புடனும் சமாதானத்துடனும் மக்கள் வாழ இயேசு கற்றுக்கொடுத்தார், ஆனால், வெறுப்புணர்வுடனும் வெறியுடனும் மக்கள் வாழ முஹம்மது வழி காட்டினார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம் என்று இயேசு போதித்தார், ஆனால், முஹம்மதுவோ, அடிமைகளை கற்பழிக்க, அவர்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி அளித்தார். இப்படி இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இயேசுவை தெய்வமாக தொழுதுக்கொள்ளும் கிறிஸ்தவர்கள், முஹம்மதுவை ஒரு போதும் நபி என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கிறிஸ்தவர்கள் இயேசுவை தெய்வமாக மட்டுமல்ல, உயிர் நண்பராகவும், சகோதரராகவும் நினைத்து நேசிக்கிறார்கள். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் முஹம்மது சபித்தார் மேலும் அவர்களை குற்றப்படுத்தினார். இயேசு அறிவித்தது போல, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.[96]

97.  அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம், ஆதித் திருச்சபையின் ஆரம்பத்தையும், சபையின் வளர்ச்சியையும் அப்போஸ்தலர்களின் ஊழியத்தையும் தெளிவாக விவரிக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் என்றும் இப்புத்தகத்தைச் சொல்லலாம். இயேசு தன் அப்போஸ்தலர்களின் மூலமாக அற்புத அடையாளங்களை நடப்பித்து, தன் தெய்வீகத்தன்மையை நிருபித்தார். ஆனால், முஹம்மதுவோ, இவைகள் அனைத்தையும் மறுத்தார், இவைகள் பொய்யானவைகள் என்றுச் சொல்லி, ஒரு புதிய கள்ளப் போதனையை கொண்டுவந்தார். அப்போஸ்தலர் நடபடிகளின் படி முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார், கிறிஸ்துவிற்கு எதிரியாவார். அப்போஸ்தலவர்களின் ஊழியத்தை மறுதலித்த இவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக கருதமுடியும்? அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் அத்தியாயமே இஸ்லாம் ஒரு கள்ளபோதமுள்ள மார்க்கம் என்று முத்திரை போடுகின்றது, முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச் சொல்கிறது. இயேசு உயிர்தெழுந்துவிட்டப் பின்பு, சீடர்களுக்கு ஊழிய கட்டளைகளைக் கொடுத்து, அதன் பின்பு சீடர்களின் கண்களுக்கு முன்பாக மறுபடியும் வானத்திற்குச் சென்றதை இந்த அத்தியாயத்தில் காணமுடியும். இந்த ஒரே அத்தியாயம் இஸ்லாமின் அஸ்திபாரத்தை இடித்து தரைமட்டமாக்குகிறது. முழு புத்தகத்தை படிக்கும் போது, பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுக் கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் எப்படி செயல்பட்டு திருச்சபையை நிறுவினார்கள் என்பதை காணமுடியும். எனவே, அப்போஸ்தலர் நடபடிகளின் படி, முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் திடநம்பிக்கையோடுச் சொல்வார்கள்.[97]

98. இயேசுவின் சீடர் போதுருவின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

இயேசுவின் பிரதான சீடர் அப்போஸ்தலர் பேதுரு ஆவார். முன்றரை ஆண்டுகள் இயேசுவோடு இருந்து, அவருடைய உள்வட்ட முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர் இவர். இவர் திருச்சபைக்கு கடிதங்கள் எழுதும் போது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அனேக முக்கியமான விஷயங்களை எழுதியுள்ளார். இவரது இரண்டு கடிதங்களும் இஸ்லாமுக்கு மரண அடியை கொடுக்கிறது, முஹம்மது ஒரு கள்ள நபி என்று அடித்துச் சொல்கிறது. இஸ்லாமின் முகத்தில் கரியை பூசுகிறது 1 பேதுரு  மற்றும் 2 பேதுரு கடிதங்கள். பேதுரு தன் கடிதங்களில் “இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார்” என்றும், ”குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டோம்” என்றும் கூறுகிறார். மேலும் இயேசு “உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து” என்றுச் சொல்லி இயேசுவின் தெய்வீகத்தை பறைசாற்றுகிறார். பேதுரு “அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்;” என்றுச் சொல்லி, குர்-ஆனை மண்ணைக் கவ்வ வைத்தார். இன்னும் “தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது” என்று எழுதி, இயேசுவின் வல்லமையை வெளிப்படுத்தினார். முஹம்மதுவைப் போல கட்டுக்கதைகளை சொல்பவர்கள் நாங்கள் அல்ல என்பதை தெளிவாக விளக்குகிறார் பேதுரு. தேவனின் சத்தத்தை நாங்கள் கேட்டோம் என்று சாட்சி சொல்கிறார். முடிவாக, முஹம்மது போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகள் வருவார்கள், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்றுச் சொல்லி எச்சரிக்கிறார். இப்படிப்பட்ட அப்போஸ்தலர்களின் போதனைகளை கேட்டு, அவைகளை பின் பற்றும் கிறிஸ்தவர்கள் ஒரு காலத்திலும் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று நம்பமாட்டார்கள்.[98]

99. இயேசுவின் சீடர் யோவானின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

இயேசுவின் முக்கிய சீடர்களில் யோவான் என்பவரும் ஒருவர். இவர் இயேசுவோடு இருந்தவர், அவரோடு மூன்றரை ஆண்டுகள் நெருங்கி வாழ்ந்தவர். இவரது கடிதங்களை நாம் பார்க்கும் போது, முஹம்மது ஒரு கள்ள நபி என்பது நிருபனமாகிவிடும். அதாவது முஹம்மது இயேசுவைப் பற்றி எவைகளையெல்லாம் மறுக்கிறாரோ, அவைகளையெல்லாம் இவர் தொட்டுப்பேசுகிறார். கடைசியாக, முஹம்மதுவைப்போல கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்கிறார். யோவான் இயேசுவை “ஆதிமுதல் இருந்தவர், ஜீவ வார்த்தை” என்று கூறுகிறார். தேவனை பிதா என்றும், இயேசுவை குமாரன் என்றும் அழைக்கிறார். மேலும் “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்றுச் சொல்லி சிலுவை மரணத்தை சுட்டிக்காட்டுகிறார். இந்த வார்த்தைகள் குர்-ஆனின் அஸ்திபாரத்தை தகர்த்துவிடுகின்றது. முஹம்மதுவின் போதனைகள் பொய் என்று அடித்துச் சொல்கிறது.  இயேசு “சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்” என்றுச் சொல்கிறார்.

மேலும், “இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.” என்று யோவான் சொல்வதைப் பார்த்தால், இது எதிர் காலத்தில் வரவிருக்கும் கள்ள  போதனைச் செய்த முஹம்மதுவைப் பற்றிய தீர்க்கதரிசனம் போல இருக்கிறது. இதுமட்டுமா, தீய ஆவிகளை அறிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறார், “உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்”.  இதன் அடிப்படையில் நாம் முஹம்மதுவை சோதித்தால், அவருக்கு குர்-ஆனை போதித்த ஆவி, தேவனால் உண்டானது அல்ல என்பதை நாம் அறியலாம்.

உலக மக்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றுச் சொல்கிறார். இது முஹம்மதுவின் போதனைக்கு எதிரானதாகும்.  இன்னும் அனேக விஷயங்களை யோவான் கூறியிருக்கின்றார். இவைகளை படிக்கும் கிறிஸ்தவர்கள் முஹம்மதுவைப் பார்த்து, இவர் கள்ளத்தீர்க்கதரிசி என்றுச் சொல்வதில் எந்த தவறேதுமில்லை. முஹம்மதுவை மறுதலிப்பவன் தான் உண்மை கிறிஸ்தவன், குமாரனை உடையவனே ஜீவனை உடையவன்.[99]

100. அப்போஸ்தலர் பவுலடியாரின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்

யூதரல்லாத மக்களின் மத்தியில் கர்த்தரால் வல்லமையாய்  பயன்படுத்தப்பட்ட அப்போஸ்தலர்களில் பவுலடியாரும் ஒருவர். இவர் அனேக கடிதங்களை சபைகளுக்கு எழுதியுள்ளார். இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி, இயேசுவின் இதர சீடர்கள் கூறியது போன்று எழுதியுள்ளார். ஆதித்திருச்சபையின் தூண்களாக எண்ணப்பட்ட பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு போன்ற அப்போஸ்தலர்களை சந்தித்து, யூதரல்லாத மக்களின் மத்தியில் ஊழியம் செய்து, அனேக சபைகளை ஸ்தாபித்தவர் இவர். பரிசுத்த ஆவியானவர் இவரைக் கொண்டு அனேக எழுதிய கடிதங்களை எழுதவைத்தார். அப்போஸ்தலர் பவுலடியாரின் கடிதங்களை படித்த ஒரு கிறிஸ்தவர் முஹம்மதுவை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று கூறுவார்.. கிறிஸ்துவிற்கு எதிராகவும், பைபிளுக்கு எதிராகவும் போதித்த முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? பைபிளின் அனைத்து புத்தகங்களின் சாராம்சம் இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த இரட்சிப்பு பற்றி பேசுகின்றது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் முஹம்மது கள்ள மார்க்கத்தை போதித்த, கள்ளத் தீர்க்கதரிசியாக தீர்க்கப்படுகின்றார். [100]

101. வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார்.

பைபிளின் கடைசி புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம். இது பைபிளின் முத்திரையாக இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு பின்பு ஒரு புதிய வெளிப்பாடு தேவையில்லை, ஒரு புதிய தீர்க்கதரிசி தேவையில்லை. இந்த புத்தகம் இஸ்லாம் போன்ற கள்ள மார்க்கத்திற்கு சாவுமணி அடிக்கிறது. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் அனைத்திற்கும் இது பதில் தருகிறது. இயேசு இராஜாதி இராஜாவாகவும், சர்வ வல்லமையுள்ளவராகவும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகவும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறவாராகவும், ஆதியும் அந்தமுமானவராகவும் இந்த புத்தகத்தில் காணப்படுகிறார். மேலும், உலக முடிவின் போது, எல்லா மக்களையும், முக்கியமாக முஹம்மதுவையும் நியாயந்தீர்க்கப்போகிறவராகவும் இயேசு காணப்படுகிறார். இந்த புத்தகத்தை படிக்கும் கிறிஸ்தவர் முஹம்மதுவை  ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ளவே மாட்டார். இனி ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வரும் தீர்க்கதரிசி தேவையில்லை என்று இப்புத்தகம் அடித்துச் சொல்கிறது. இஸ்லாமியர்கள் எவ்வளவு கூக்குரல் போட்டு, சத்தமாக முஹம்மதுவை நபி என்றுச் சொன்னாலும், இந்த ஒரு புத்தகம், அவர்களின் சத்தத்தை அமைதியாக்கி விடுகின்றது. ஒரு மனிதன் இந்த புத்தகத்தை படித்துவிட்டு, முஹம்மதுவை ஒரு தீர்கக்தரிசி என்றுச் சொல்லமாட்டான், அப்படி ஒருவன் சொல்வானானால், அவனுக்கு பைத்தியம் பிடித்து இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கத்தரிசி என்றுச் சொல்கிறார்கள், இது உண்மையும், எல்லா அங்கீகரிப்பிற்கு ஏற்றதுமாயிருக்கிறது. [101]

முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் நம்புவதற்கு இன்னும் அனேக காரணங்கள் உண்டு, அவைகளை அடுத்த பதிவில் காண்போம். இதோடு 101 காரணங்கள் முடிவடைகின்றது. 

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் “முஹம்மது ஜான்” குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[91] லேவி 11:1-4, உபாகமம் 14:7, குர்-ஆன் 22:36, 6:144 & ஸஹீஹ் புகாரி 982, 1551 & 1712

லேவி 11:1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், 3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறது மானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 4 ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

குர்-ஆன் 22:36 & 6:144

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

6:144. இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கடடளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

ஸஹீஹ் புகாரி 982, 1551 & 1712

982. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர். Volume :1 Book :13

1551. அனஸ்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.  நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள். Volume :2 Book :25

1712. அனஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள். Volume :2 Book :25

[92] முக்கிய குர்-ஆன் வசனங்கள்:  21:79-82, 27:15-45, 34:10-19, 38:20-39

பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளை மாற்றி பதிவு செய்த குர்-அன் வசனங்கள்:

1. தாவீதும் வழக்காளிகளும்: 38:21-25

2. மலைகளை தாவீதுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டது 21:79

3. மலைகளையும், பறவைகளையும் அல்லாஹ்வை துதிக்க ஒன்று சேர்த்த தாவீது: 34:10, 38:18-19

4. பறவைகளின் மொழியையும், இதர எல்லாவற்றையும் அறிந்திருந்த சாலொமோன்:  27:16

5. காற்றுக்கு சாலொமோன் கட்டளைக் கொடுத்தல்: 21:81, 34:12, 38:36

6. சாத்தான்களை ஆண்டுக்கொண்ட சாலொமோன்:  21:82, 34:12-13, 38:37-39

7. சாலொமோன் காலத்தில் சோதிக்கப்பட்ட மலக்குகள் (தூதர்கள்):  2:102-103

8. பறவைகளை பரிசீலனை செய்த சாலொமோன்:  27:17,20-21

9. ஷேபா அரசியின் செய்தியை ஹூது ஹூது பறவை கொண்டு வந்து சேர்த்தல்:  27:22-26

10.  ஹூது ஹூது பறவையை சாலொமோன் தூதாக அனுப்புதல்:  27:27-28

11. எறும்புகளின் பேச்சும் சாலொமோனும்:  27:18-19

12. சாலொமோனின் மரணம்: 34:14

[93] குர்-ஆன் 4:163, 17:55, 21:105 & ஸஹீஹ் புகாரி எண் 5590

4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர்(என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

17:55. உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.

21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

ஸஹீஹ் புகாரி எண் 5590

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)  நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74

[94] குர்-ஆன் 2:136, 3:3, 4:136 & ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.

3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.

ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு” என அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.

"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்” பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.

அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

[95] குர்-ஆன் 3:39, யோவான் 1:6-8, 15, 29, 30

3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.

யோவான்  1:6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச்சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

[96] மத்தேயு அத்தியாயங்கள் 5,6,7 & குர்-ஆன் 5:18 & ஸஹீஹ் முஸ்லிம் 4371 & ஸஹீஹ் புகாரி எண் 1330, 3462 & 5899

குர்ஆன் 5:18

யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.

ஸஹீஹ் முஸ்லிம் 4371

4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :39

ஸஹீஹ் புகாரி எண் 1330

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.

பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன். Volume :2 Book :23

ஸஹீஹ் புகாரி 3462 & 5899

3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :4 Book :60

5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77

[97] அப் நடபடிகள் 1: 4-11 வசனங்கள்

அப் 1:4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.

5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.

10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:

11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

[98] 1 பேதுரு 1:4, 18-20; 2:24-25; 3:22; 2 பேதுரு 1:16-18, 2:1,2

1 பேதுரு

4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,

19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.

20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

1 பேதுரு 2

2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

2:25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்

1 பேதுரு 3

22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 1

16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

2 பேதுரு 2

1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

[99] 1 யோவான் 1:1-3, 7; 2:2, 22: 3:1; 4:1-3, 8-9, 14; & 2 யோவான் 1:7,10 

1 யோவான்

1:1 ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

1:2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

1:7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

3:1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

4:2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.

4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

4:14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.

2 யோவான்

1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

1:10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

[100] ரோமர் 1:5; 5:8,9;6:23; 8:15,16; 14:9

ரோமர் 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

8:15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.

8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

14: 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

அடிக்குறிப்புக்கள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக, ரோமருக்கு எழுதிய நிருபத்திலிருந்து மட்டுமே ஒரு சில வசனங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. 

[101] வெளிப்படுத்தின விசேஷம் 1:8, 3:14, 5:5, 5:6,7,8,13,14, 19:11-13, 22:13

இயேசு சர்வவல்லமையுள்ள கர்த்தர்:

1:8 இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.

இயேசு, சிருஷ்டிக்கு முந்தினவர்

3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

இயேசு, பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மேசியா

5: 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

இயேசு, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

5:6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

5:7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.

5:14 அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

இயேசு, தொழுகைக்கு பாத்திரர்

5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:

இயேசு, இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்

19:11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

19:12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

கிறிஸ்து, ஆரம்பமும் முடிவுமாக இருப்பவர்

22: 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

உமரின் இதர கட்டுரைகள்