இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறதா?
”இஸ்லாம் பெண்களை ஆண்களுக்கு சமமாக நடத்துகிறது” என்று மக்கள் அடிக்கடி சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் மனதுக்கு சங்கடமாக இருக்கும். 9/11 தீவிரவாத செயல் நடந்துமுடிந்த ஒரு மாதத்திற்குள், ”ஆர்ஃபா வின்ஃப்ரே” தம்முடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜோர்டானின் 'குயீன் ரானியா' (Queen Rania) என்பவரை அழைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசும் போது குயீன் ரானியா அவர்கள் ‘பெண்களை ஆண்களுக்கு சமமாக இஸ்லாம் பார்க்கிறது, எனவே, பெண்களின் உரிமைகள் அனைத்தும் இஸ்லாமினால் பாதுகாக்கப்படுகிறது’ என்று கூறினார்கள்.
குயீன் ரானியா, ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தும் அவர்களுக்கு முழு உரிமைகள் இருக்கலாம், ஆனால், அவ்வுரிமைகள் அனைத்தும் அவருக்கு இஸ்லாமினால் கிடைத்தவைகள் அல்ல என்பதை கவனிக்கவேண்டும்.
முஸ்லிம்களின் புனித நூல், குர்-ஆன் ‘கீழ்படியாத மனைவிகளை கணவர்மார்கள் அடிப்பதை ஆதரிக்கிறது’.
குர்-ஆன் 4:34
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
அரபி மூல மொழி வசனத்தில் ‘இலேசாக’ என்ற வாசகம் இல்லை என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும். (மொழியாக்கம் செய்தவர்கள், சுயமாக அடைப்பிற்குள் இப்படிப்பட்ட வாசகங்களை சொறுகி குர்-ஆனை காப்பாற்ற முயலுகின்றார்கள்.)
அதே குர்-ஆன் ஒரு முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் (குர்-ஆன் 4:3) என்று போதனை செய்கிறது. ஆனால், பெண்கள் மட்டும் ஒரே திருமணம் தான் செய்துக்கொள்ளவேண்டும், மேலும் சொத்துக்களில் கூட, ஆணுக்கு கிடைக்கின்ற பாகத்தில் பாதி மட்டுமே பெண்களுக்கு கிடைக்கிறது (குர்-ஆன் 4:176). இன்னும் குர்-ஆன் போதிக்கும் இதர வசனங்களை கவனித்தால், இஸ்லாம் பெண்களை ஆண்களைவிட கீழானவர்களாக பாவிப்பதை பார்க்கமுடியும்.
இஸ்லாம் பெண்களை ஆண்களை விட கீழானவர்களாக பார்க்கிறது என்பதை, முஸ்லிம்களின் வாழ்க்கையை கவனித்தால் புரியும். இவ்வசனங்களின் உண்மையான பொருளை புரிந்துக்கொண்டு தான் முஸ்லிம் ஆண்கள் நடந்துக்கொள்கிறார்கள்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு மசூதியின் இமாம், முஹம்மத் கமல் முஸ்தஃபா (Mohamed Kamal Mustafa) என்பவர், தான் எழுதிய புத்தகத்தில், ‘மனைவிகளின் உடல்களில் வடுக்கள் விழாதபடி எப்படி அடிக்கலாம்’ என்று விவரிக்கிறார். அவரின் அறிவுரையின் படி, ஒரு மெல்லியதான கட்டை அல்லது தடியை எடுத்துக்கொண்டு, மனைவிகளின் கைகளிலும், கால்களிலும் அடிக்கவேண்டும், இப்படி செய்தால் அவர்களின் உடலில் வடுக்களோ, அடித்த இடங்களில் அடையாளங்களோ காணப்படாது என்பதாகும்.
இஸ்லாமிய நபி முஹம்மதுவே ஒரு டஜன் பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அவரது மனைவிகளில் ஒரு மனைவியின் குறைந்தபட்ச வயது ஆறு ஆகும். குர்-ஆன் முஹம்மதுவிற்கு மட்டும் ஒரு விதிவிலக்கை அளித்துள்ளது (குர்-ஆன் 33:50), அதாவது முஹம்மது மட்டும் நான்கிற்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்ற விதிவிலக்காகும். இந்த விஷயத்தில் குர்-ஆன் மிகவும் தெளிவாக, ‘இந்த விதிவிலக்கு முஹம்மதுவிற்கு மட்டும் தான், இதர முஸ்லிம்களுக்கு அல்ல’ என்றுச் சொல்கிறது.
மேலும், ஒரு மத சார்புள்ள இஸ்லாமிய நாட்டின் பொது சட்டங்களையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற வாழ்க்கை முறைகளையும் கவனித்துப் பார்த்தால், உண்மை விளங்கும். அதாவது, இப்படிப்பட்ட இஸ்லாமிய நாடுகளில், பெண்கள் ஒரு உயிரற்ற பொருட்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை.
கடைசியாக, குயீன் ரானியா அவர்கள் ஆண்களுக்கு நிகராக அனுபவித்துக்கொண்டு இருக்கும் உரிமைகளுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ”இஸ்லாமிய சமுதாயங்களில் ஆண்களுக்கு இருப்பது போன்று, சமமான உரிமைகளை முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் தருகின்றது” என்ற பொய்யை அவர் உலகிற்குச் சொல்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Source: http://www.str.org/blog/does-islam-view-women-equal-men
Author: Alan Shlemon - A speaker for Stand to Reason
To know about the Author, visit: www.str.org/training/speakers/alan-shlemon
Translation: Answering Islam Tamil Team