விசுவாச தற்காப்பு ஊழியம் செய்பவர்களுக்கு உதவும் நீதிமொழிகள்

(Proverbs for Apologists)

நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள சில வசனங்கள்,  விசுவாச தற்காப்பு ஊழியம் செய்யும்போது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அவைகளை பற்றி நான் அநேக முறை தியானித்து உள்ளேன். ”மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்(15:1)” என்ற வசனத்தை உதாரணமாகச் சொல்லலாம். இந்த வசனத்தில் சொல்லியபடி செய்தால் நம்முடைய உரையாடல்கள் அதிக பயனுள்ளதாக இருக்கும். 

நான் அதிகமாக பேச நினைக்கும் போதெல்லாம், இன்னொரு வசனத்தை ஞாபகப்படுத்திக் கொள்வேன், அதாவது, “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் (10:19)” என்ற வசனம் தான் அது.

சில நேரங்களில் என்னோடு பேசுபவர் ஒரு குறிப்பிட்ட தலைப்பை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அறிய, சில கேள்விகளைக் கேட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருப்பேன். இப்படி மற்றவர்களின் பேச்சுக்கள் மூலம் கிடைக்கும் ஞானத்தை தேடும் படி, இன்னொரு வசனம் என்னை உற்சாகப்படுத்தும்.

”மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்(18:2)”

இவ்வசனத்தை இன்னொரு பொது தமிழாக்கத்தில் படித்தால், அதன் பொருள் தெளிவாக புரியும்:

”மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதை அறிவற்றவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் தம் சொந்த எண்ணங்களைச் சொல்வதையே விரும்புகின்றனர். (18:2)”

நான் நீதிமொழிகள் புத்தகத்தை படிக்கும் போது, இப்படிப்பட்ட சில வசனங்களை குறித்துக்கொண்டேன். அவைகளை இப்பொழுது உங்களுக்கு தருகிறேன்.

இவ்வசனங்களை மிகவும் நிதானமாக படியுங்கள், தியானம் செய்யுங்கள், மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள் மற்றும் அவைகள் உங்களை செதுக்க விட்டுக்கொடுங்கள்.

ஞானத்தையும் அறிவையும் தேடுதல்:

(Seek Knowledge and Wisdom):

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். (3:3-4)

பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! (16:16)

மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! (15:23)

இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும். (27:17 – ERV-Tamil Translation)

புத்திகூர்மையான ஆலோசனை:

(Tactical Advice):

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். (15:1)

இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும். (16:21b)

நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். (25:15)

சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். (10:19)

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான். (17:28)

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். (26:4–5)

4 இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய். 5 ஆனால் ஒரு முட்டாள் ஒரு மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலையே கூறவேண்டும். இல்லையெனில் அவன் தன்னை ஞானியாக நினைத்துக்கொள்வான். (ERV-Tamil Translation)

எச்சரிக்கைகள்:

Warnings:

வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. (25:8)

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். (22:24–25)

ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை. (29:9)

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான். (23:9)

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. (27:22)

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான். (18:17)

உன் செய்கைகளை சொற்களை கவனி:

Watch Your Character:

மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். (18:2)

காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும். (18:13)

அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. (16:18)

அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. (11:2)

பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். (29:8)

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (15:18)

அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. (24:29)

ஆசிரியர்:  எமி கே ஹால் (Amy K. Hall)

ஆங்கில மூலம்: https://www.str.org/blog/proverbs-apologists


STR கட்டுரைகள் பக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்