தவறான கோட்பாடுகளை, மதங்களை நாம் ஏன் படிக்க வேண்டும்?

(Why Study False Ideas?)

நாம் பைபிளை மட்டுமே படிக்கவேண்டும், வேறு எந்த தவறான கோட்பாடுகளையும், மதங்களையும் படிக்கவே கூடாது -  இன்று பரவலாகவும் இலவசமாகவும் கொடுக்கப்படும் அறிவுரை இது தான்.

கள்ள ரூபாய் நோட்டுக்களை கண்டுபிடிக்க, நாம் எதை கவனிக்கிறோம்? நல்ல நோட்டுக்களை வைத்து தானே கள்ள நோட்டுக்களை அடையாளம் காணுகிறோம், இது போலவே பைபிளை படித்தால் போதும், கள்ள உபதேசங்களையும், கோட்பாடுகளையும் கற்கவேண்டிய அவசியமில்லை என்று ஆலோசனை கூறுவார்கள். எனவே, கிறிஸ்தவர்களுக்கு சார்பியல்வாதம் (relativism), ஓரினச்சேர்க்கை(homosexuality) மற்றும் இஸ்லாம்(Islam) போன்றவைகள் பற்றிய பொது அறிவை கற்றுக்கொடுக்கக்கூடாது, வெறும் பைபிள் பற்றிக் கற்றுக்கொடுத்தால் போதுமானது என்று சிலர் ஆலோசனை கூறுவர்.

கிறிஸ்தவர்கள் பைபிள் மற்றும் கிறிஸ்தவ இறையியல் பற்றிய புரிதலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், தவறான கோட்பாடுகள், பிற மதங்கள் அல்லது சுவிசேஷத்திற்கு எதிராக எழும்பும் கோட்பாடுகளை படிப்பதன் முக்கியத்துவத்தை இது குறைக்காது. இரண்டையும் நாம் கற்கவேண்டும்.

உண்மையில், இதர தவறான கோட்பாடுகளை, மதங்களை ஏன் கிறிஸ்தவர்கள் கற்கவேண்டும், குறைந்தபட்சம் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு நான்கு காரணங்களை சுருக்கமாக காண்போம்.

காரணம் 1: கிறிஸ்துவின் பிரதிநிதியாக (Ambassador for Christ) இருப்பதற்கு, இது ஒரு இன்றியமையாத திறமையாகும்

நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவராக இருந்தால், நீங்கள் அவரின் பிரதிநிதியாக, தூதுவராக  இருக்கிறீர்கள் என்று பொருள் (2 கொரி. 5:20). நீங்கள் அவரை 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்று பொருள். நம்பகமுள்ள தூதுவர்கள் அறிவு, ஞானம் மற்றும் நன்னடத்தை ஆகிய மூன்று துறைகளில் திறமையானவர்களாக இருப்பார்கள், இருக்கவேண்டும் கூட‌. முதல் திறமை "அறிவு" என்பதாகும், அதாவது "எது சத்தியம்" என்பதை அறிந்து இருப்பதோடு மட்டுமல்லாமல், "எது பொய்யானது, தவறானது" என்பதையும் அடையாளம் கண்டுக்கொள்ளவும் தெரிந்து இருக்கவேண்டும்.

உதாரணம்: ஒரு இந்திய வெளியுறவுத் தூதுவர், ஈரான் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யச் செல்லும்போது, இந்திய வெளியுறவுக் கொள்கைகளையும் அவர் நன்கு அறிந்திருக்கவேண்டும், அதே நேரத்தில் 'ஈரான் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளையும் நன்கு தெரிந்திருக்கவேண்டும்'.

ஒருவெளை நம் தூதருக்கு, ஈரானிய வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய அறிவு குறைவாக இருந்தால், அந்நாட்டுடன் ஒப்பந்தங்கள் செய்யும் போது, அது ஆபத்தில் கொண்டுபோய் விடும். நம் நாட்டின் வெளியுவுறவுக் கொள்கைகளுக்கு  எதிரான முடிவுடுகளை தம்மை அறியாமல், அவர் எடுத்துவிடுவார். ராஜ தந்திரம் என்பது ஒரு அறிவு சார்ந்த நிலையாகும். ஈரானிய தூதர்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்கமுடியாது, அவர்களின் கொள்கைகளை நன்கு அறிந்திருந்தால் தான் சரியான முடிவுகளை எடுக்கமுடியும், நம் நாட்டுக்கு பயன்படும் ஒப்பந்தங்களில் கையெழுத்து போடமுடியும். 

இதே போன்று, கிறிஸ்துவின் தூதர்களாகிய நாம், நம் தேவனின் திட்டம் மற்றும் இறையியலை அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவைகளுக்கு எதிராக எழுப்பப்படும் உலகின் தவறான கருத்துக்களையும், கோட்பாடுகளையும், மத நம்பிக்கைகளையும் அறிந்திருக்க வேண்டும்.

நல்ல ரூபாய் நோட்டுக்களின் அடையாளங்களை சரியாக புரிந்துக் கொள்ளும் அதே நேரத்தில், கள்ள நோட்டுக்களின் அடையாளங்களையும் சரியாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும். இவ்விரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை புரிந்துக்கொள்ளவேண்டும்

காரணம் 2: மக்கள் நற்செய்தியை நிராகரிப்பதைத் தடுக்க இது உதவுகிறது

பிரஸ்பைடேரியன் அறிஞர் ஜே. கிரெஷாம் மச்சென் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

மக்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள மிகப்பெரிய தடைகளாக "தவறான கோட்பாடுகளும் மதங்களும்' உள்ளன. ஒரு சீர்திருத்தவாதியின் உற்சாகத்துடன் நாம் அனலாக பிரசங்கிக்கலாம், ஆனால் இங்கேயும் அங்கேயுமாக ஓரிருவர் மட்டுமே சுவிசேஷத்தை ஏற்கின்றனர். இதற்கு காரணம் என்ன? கள்ள உபதேசங்கள், பொய்யான கோட்பாடுகள் மற்றும் மதங்கள் தான். இவைகள் தான் மக்கள் நற்செய்தியை ஏற்ற தடுக்கின்றன.

Presbyterian scholar J. Gresham Machen wrote,

False ideas are the greatest obstacles to the reception of the gospel. We may preach with all the fervor of a reformer and yet succeed only in winning a straggler here and there, if we permit the whole collective thought of the nation or of the world to be controlled by ideas which…prevent Christianity from being regarded as anything more than a harmless delusion.

மேலே கண்ட அறிஞரின் எச்சரிப்பு இதுதான்: தவறான கருத்துக்களை கோட்பாடுகளை ஏற்காதீர்கள் என்பதாகும். இல்லையெனில் அந்த பொய்யான கோட்பாடுகள் மக்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும். சுவிசேஷத்தை மேலும் அனேக இடங்களில் கொண்டு போக நாம் விரும்பினால், இப்படிப்பட்ட தவறான கோட்பாடுகளை நன்கு அறிந்துக்கொண்டு, அவைகளுக்கு சரியான பதில்களை கொடுக்க கற்றுக்கொண்டால் தான் முடியும்.

காரணம் 3: தவறான கோட்பாடுகளை / மதங்களை படிக்க பைபிள் நமக்குக் கட்டளையிடுகிறது 

தவறான கோட்பாடுகளை/உபதேசங்களை தெரிந்துக்கொள்வதில் நமக்கு இரண்டு பயன்கள் உள்ளன. முதலாவதாக, தவறான உபதேசங்களை நாம் அடையாளப்படுத்துவதினால், நாம் விழிப்புடன் இருந்து அவைகளிடமிருந்து தப்பிக்கலாம்.

பவுலடியார், கொலோசெ பட்டணத்து விசுவாசிகளிடம் கீழ்கண்ட வார்த்தைகளைச் சொல்லி எச்சரிக்கின்றார்:

கொலோசெயர் 2:8. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.

ஒரு கள்ள உபதேசத்தையோ, மார்க்கத்தையோ நாம் சரியாக அடையாளம் காண‌வில்லையென்றால், அது நம்மை கவர்ந்திழுத்து, அதற்கு அடிமையாக்கிவிடும் ஆபத்து உள்ளது. இதற்கு தீர்வு என்ன? நம் விசுவாசிகளை 'கள்ள உபதேசங்கள் மற்றும் மார்க்கங்கள்' பற்றிய விழிப்புணர்வை ஊட்டி, அவர்கள் எச்சரிக்கையாக இருக்க தயார் நிலையில் வைப்பது தான்.கள்ள உபதேசங்களை அறிந்துக்கொள்ளும்படி பைபிள் நமக்குக் கட்டளையிடுவதற்கு இரண்டாவது  காரணம், அவைகளை நாம் அழிக்கவேண்டும் என்பதற்காக ஆகும். "அழிக்கவேண்டும்" என்ற வார்த்தை கேட்பதற்கு மிகவும் தவறாக தெரிந்தாலும், பைபிள் அதனைத் தான் சொல்கிறது.

பவுலடியார் சொல்வது  போன்று, நம்முடைய போர் ஆயுதங்கள், உலகம் பயன்படுத்தும் துப்பாக்கிகள், ஏவுகனைகள் போன்றவைகளாக இல்லாமல், அவைகள் ஆவிக்குரியவைகளாக இருக்கின்றன.

II கொரிந்தியர் 10: 3. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. 

4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.

5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

ஐந்தாவது வசனத்தை கூர்ந்து கவனிக்கவும். ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும், ஊழியரும் செய்யவேண்டிய ஊழியத்தின் ஒரு பகுதி: "தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" என்பது தான்.

எவைகள் கள்ள உபதேசங்கள், கள்ள மார்க்கங்கள் என்று நாம் கண்டுபிடிக்கமுடியாவிட்டால், அவைகளை எப்படி நிர்மூலமாக்கமுடியும்?

காரணம் 4: தவறான கருத்துக்களைப் படித்து, அவைகளை எதிர்க்கொள்வதில் பவுலடியாரே நம் மாதிரி

அப்போஸ்தலர் பவுலடியார் அவிசுவாசிகளுடன் செய்த உரையாடல்களை கவனிக்கும் போது, அவர் கள்ள உபதேசங்களையும், அவர்களின் மத கோட்பாடுகளையும் நன்கு கற்றுள்ளார் என்பதை கவனிக்கமுடியும்.

ஒரு முறை ஒரு குறிப்பிட்ட மக்களிடம் உரையாடுவதற்கு முன்பு, "அவர்கள் அறியாத கடவுள் யார்" என்று அவர் விளக்கினார்.  அவர்களின் அறிஞர்கள் கூறியதை அறிந்துக்கொண்டு, பவுலடியார் பேசினார்.

அப்போஸ்தலர் 17:28. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பவுலடியார், அவர்களின் தத்துவஞானிகளையும் அவர்களின் கருத்துக்களையும் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் அளவிற்கு அவர்களின் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார் என்பதை கவனியுங்கள். அந்த ஏதேன் மக்கள் அவர்களின் தத்துவஞானிகளை நம்புகிறார்கள் என்பதை பவுலடியார் அறிந்திருந்தார், எனவே அவர்களை மேற்கோள் காட்டினார். தனது பார்வையாளர்களின் தவறான கருத்துக்களை படிப்பதன் மூலம், தன் செய்திக்கு வலுவூட்டமுடியும் என்பதை பவுலடியார் அறிந்திருந்திருதார்.

முடிவுரை:

இதுவரை தவறான கோட்பாடுகளை, மதங்களை நாம் ஏன் அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு சில காரணங்களை முன்வைத்தேன்.

இப்படி நான் எழுதினேன் என்பதற்காக, ஒரு 'ஐந்து வயது சிறுவனிடம் சென்று அவனுக்கு சார்பியல்வாதம் அல்லது இஸ்லாத்தை கற்பிக்க வேண்டும்" என்று நான் சொல்லவில்லை.

முதலாவதாக, நாம் நம் சபை விசுவாசிகளை தேவவார்த்தையில் தேறினவர்களாக மாற்றவேண்டும், கிறிஸ்தவ இறையியல் ம‌ற்றும் கிறிஸ்தவத்தின் அடிப்படையை மிகவும் ஆழமாகவும், அழகாகவும் கற்றுக்கொடுக்கவேண்டும். பரிசுத்த வேதாகமத்திற்கே முதலிடம் நாம் கொடுக்கவேண்டும் என்பதை மனதில் வைக்கவும். எந்த தேவன் தம் வார்த்தைகளால் இவ்வுலகை படைத்தாரோ, நம் ஒவ்வொரு உயிரணுவில் 'தம் மீது நாம் தாகம் கொள்ளவேண்டும்' என்ற வேட்கையை கொடுத்தாரோ, அவரே தான் பரிசுத்த பைபிளையும் நமக்கு கொடுத்திருக்கிறார், நம் முன்னுரிமை எப்போதும் பைபிளாகவே இருக்கவேண்டும். நம் மக்களின் வயதுக்கு  ஏற்ப முதலாவது பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவத்தை விதைக்கவேண்டும், அதன் பிறகு, தேவனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கள்ள உபதேசங்களை அவர்கள் அடையாளம் கண்டுக்கொள்ள கற்றுக்கொடுக்கவேண்டும், கிறிஸ்தவ போதகர்களே, இதே பாணியில் புதிய விசுவாசிகளையும் நாம் பயிற்றுவிக்கவேண்டும்.

முதலில், சத்தியத்தை (பைபிளை) கற்பிக்கவேண்டும். பின்னர், கள்ள உபதேசங்களை / மதங்களை அடையாளம் காண‌ கற்றுக்கொடுக்கவேண்டும்.

ஆங்கில மூலம்: https://www.str.org/w/why-study-false-ideas-?inheritRedirect=true


ஆலன் ஸ்லெமன் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்