ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?

(எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது.. தமிழும் அதிகமாக தெரியாது... ஆனால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எப்படி பதில் தரவேண்டும் என்பது மட்டும் ஓரளவிற்கு தெரியும்…..) 

ஜாவித் கீழ்கண்ட கேள்வியை கேட்கிறார், அதாவது "I AM" என்ற ஆங்கில வார்த்தைக்கு "இருக்கிறேன்" என்று தமிழில் எந்த அகராதியில் (Dictionary) இருக்கிறது? என்று கேட்கிறார். 

இக்கேள்விக்கு பதிலாக, ஒரு சிறிய பின்னூட்டமிடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால், ஒரு சிறிய கட்டுரையாக மாறிவிட்டதால்.. கட்டுரையாக பதிக்கவேண்டி வந்தது...

Jawid said: 

/….உமர் அண்ணா, "I am" ன்னு சொன்ன "இருக்கிறவன்" என்ற அர்த்தம் எந்த "dictionary"ல கண்டு புடிச்சிங்க கொஞ்சம் சொல்றிங்களா, என்னால் கண்டு புடிக்க முடியளா... -ஜாவித் / 

இப்போது ஜாவித் அவர்கள் எனக்கு சில விவரங்களுக்கு பதில் தரவேண்டும், அப்போது தான் ஆங்கிலத்தில் "I am " என்ற வார்த்தைக்கு "இருக்கிறேன்" என்ற தமிழ் அர்த்தம் எப்படி வரும் என்பது விளங்கும். 

உதாரணத்திற்கு, குர்‍ஆன் வசனம் 2:186 கீழ்கண்டவாறு தமிழில் உள்ளது,

2:186 (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், ……. 

இதே வசனம் ஆங்கிலத்தில்:

Quran Translation Pickthall: And when My servants question thee concerning Me, then surely I am nigh. .. 

Quran Translation Shakir: And when My servants ask you concerning Me, then surely I am very near; … 

Quran Translation Sher Ali: And when MY servants ask thee about ME, say `I am near. …

தமிழில் "நான் சமீபமாக இருக்கிறேன்" என்ற சொற்றொடர், ஆங்கிலத்தில் "I am nigh.", " I am very near ", " I am near " என்று பல மொழிப்பெயர்ப்பாளர்கள் மொழிப்பெயர்த்துள்ளார்கள். 

ஜாவித் அவர்கள் எனக்கு இப்போது இந்த வசனத்தில், தமிழில் "இருக்கிறேன்" என்ற வார்த்தைக்கு சமமான ஆங்கில வார்த்தை என்ன என்பதை தெரியப்படுத்தவேண்டும். 

Quran Translation Pickthall: "I am nigh" - இந்த இருவார்த்தைகளின் அர்த்தம் "நான் பக்கத்தில்" என்பதாகும். இதனை இப்படியே தமிழில் கூறினால் பொருள் சரியா அல்லது "நான் பக்கத்தில் இருக்கிறேன்" என்று கூறினால் பொருள் சரியா? ஆனால், "இருக்கிறேன்" என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. அப்படியானால், "இருக்கிறேன்" என்ற வார்த்தை "I am" என்ற வார்த்தையில் ஒளிந்துள்ளதா அல்லது "Nigh" என்ற வார்த்தையில் ஒளிந்துள்ளதா? ஜாவித கண்டுபிடித்து தருவாரா? 

இதே போலத்தான் " Quran Translation Shakir " மற்றும் " Quran Translation Sher Ali " குர்‍ஆன் மொழியாக்கமும் சொல்கிறது. இதிலும் "இருக்கிறேன்" என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. இதற்கு ஜாவித் பதில் சொல்வாரா? 

இதேபோல, குர்‍ஆன் 7:21 ம் வசனத்தை பாருங்கள்:

7:21 "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான். 

Pickthall: And he swore unto them (saying): Lo! I am a sincere adviser unto you.

Shakir: And he swore to them both: Most surely I am a sincere adviser to you.

Sher Ali: And he swore to them, saying, `Surely I am a sincere counsellor unto you.'

மேலேயுள்ள வசனத்தில் "இருக்கிறேன்" என்ற வார்த்தை எங்கே வருகிறது? 

  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "I am" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா? 
  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "sincere" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா? 
  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "adviser" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா? 
  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "to you" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா? 

இதேபோல, குர்‍ஆன் 7:158 ம் வசனத்தை பாருங்கள்:

7:158 (நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; ….." 

Pickthall: Say (O Muhammad): O mankind! Lo! I am the messenger of Allah to you all…… 

Shakir: Say: O people! surely I am the Apostle of Allah to you all, …. 

Sher Ali: Say, `O mankind, truly I am a Messenger to you all from ALLAH …

மேலேயுள்ள வசனத்தில் "இருக்கிறேன்" என்ற வார்த்தை எங்கே வருகிறது? 

  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "I am" என்ற ஆங்கில வார்த்தையில் உள்ளதா?
  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "the messenger/the Apostle" என்ற ஆங்கில வார்த்தைகளில் உள்ளதா?
  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "to you" என்ற ஆங்கில வார்த்தைகளில் உள்ளதா? 
  • "இருக்கிறேன்" என்ற வார்த்தை "all" என்ற ஆங்கில வார்த்தைகளில் உள்ளதா? …. 

கடைசியாக இன்னொரு உதாரணம்: குர்‍ஆன் 26:167 (தமிழ்), 26:168 (ஆங்கிலம்):

  • 26:167 அவர் கூறினார்; "நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்
  • Pickthall: He said: I am in truth of those who hate your conduct.
  • Shakir: He said: Surely I am of those who utterly abhor your doing:
  • Sher Ali: He said, `Certainly I hate your conduct.'

மேலேயுள்ள மொழியாக்கத்தில் ஷேர் அலியின் (Sher Ali) மொழியாக்கத்தை பார்ப்போம். இந்த வார்த்தைகளில், "Certainly I hate your conduct" - "இருக்கிறேன்" என்பது எங்குள்ளது? 

  • Certainly – நிச்சயமாக
  • I – நான்
  • Hate – வெறுப்பு
  • Your – உங்கள்
  • Conduct – செயல்கள்

மேற்கண்ட வார்த்தைகளில் "இருக்கிறேன்" என்ற வார்த்தை/அர்த்தம் எந்த வார்த்தையோடு சம்மந்தப்பட்டுள்ளது? 

கடைசியாக ஒரு பொதுவான உதாரணத்தை காட்டவிரும்புகிறேன்: 

Examples: 

  • I am a rich man - நான் செல்வந்தனாக இருக்கிறேன். 
  • I was a rich man - நான் செல்வந்தனாக இருந்தேன். 
  • I will be a rich man - நான் செல்வந்தனாக இருப்பேன். 

மேற்கண்ட எடுத்துக்காட்டில் "இருக்கிறேன்" என்பது எந்த வார்த்தையுடன் சேர்ந்துள்ளது என்று இப்போதாவது, ஜாவித் அவர்களுக்கோ அல்லது ஏ. சையத் அலி அவர்களுக்கோ தெரிகிறதா? இந்த எடுத்துக்காட்டிலும் அவர்களுக்கு தெரியவில்லையானால், வேறு எந்த அகராதியிலும் அவர்களால் கண்டுபிடிக்கமுடியாது. 

References:

தமிழ் குர்‍ஆன் முஹம்மது ஜான் டிரஸ்ட் மொழியாக்கம், ஆங்கில குர்‍ஆன் மொழியாக்கம் "http://www.quranbrowser.org/" தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

ஜாவித் அவர்களே... சையத் அலி அவர்களே...."இருக்கிறேன்" எங்கே "இருக்கிறது" என்று உங்களுக்கு இப்போது தெரிந்து "இருக்கிறதா"?

மூலம்: http://isakoran.blogspot.in/2011/03/i-am-or-i.html

ஜியாவிற்கு பதில்கள்

உமரின் இதர கட்டுரைகள்