Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 3: அஹதுக்கு எண்களும், பன்மையும், பெண்மையும் உண்டு!

இந்த தொடருக்கான முந்தைய கட்டுரைகளும் பதில்களும்:

  1. நம் கேள்வி: அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"
  2. பீஜே அவர்களின் பதில்: கிருஸ்துவர்களின் அஹத் ஒரு ஆய்வு கட்டுரைக்கு பிஜே யின் பதில் | நேரலை | 05/07/2021 | PJ
  3. பீஜே அவர்களுக்கு நம்முடைய பரிசு: Answering PJ: ஆயிரத்தில் ஒருவன் அல்லாஹ்(அஹத்) - 2: பீஜே அவர்களின் ஒரு வீடியோ பதிலுக்கு ஒரு ஆயிரம் பரிசு

இந்த கட்டுரையில், பீஜே அவர்களின் மேற்கண்ட வீடியோ பதிலில் அவர் கொடுத்த பதில் மற்றும் கேள்விகளை சுருக்கமாக கீழே காணலாம். அதனைத் தொடர்ந்து நம்முடைய பதிலைக் காண்போம்.

பீஜே அவர்களின் பதில் மற்றும் கேள்விகளின் சுருக்கம்:

பீஜே அவர்கள் பதில் சொல்லும் போது, முதல் 15 நிமிடங்கள் நம் கட்டுரையை விளக்குகிறார், அதைப் பற்றி அறிமுகம் தருகின்றார், அதன் பிறகு ஒரு மணிநேரம் பதில் தருகின்றார். அவர் முன்வைத்த கேள்விகள், விளக்கங்களை சுருக்கமாக கீழே கொடுத்துள்ளேன்

வகை 1: அஹது, வாஹிது மற்றும் எண்கள்

1. எண்களை எண்ணுவதற்கு பயன்படுத்துகின்ற வார்த்தை வாஹித் (ஒன்று, இரண்டு, மூன்று. . .) ஆகும்.

2. அரபி மொழி பயன்பாட்டில், இலக்கியங்களில்,அரபி நூல்களில், அரபி பேச்சு வழக்கத்தில் 10 வரை எண்ணுங்கள் என்று கேட்டால், 1(வாஹித்) , 2, 3 .. 10 வரை எண்ணுவான்,  ஆயிரம் வரையும் எண்ணுவான். ஆனால், அஹது எங்கும் வராது. அஹதுக்கு இரண்டு, மூன்று . . . என்று சொல்வது கிடையாது.

3. அஹதுக்கு இருமை சொல்லுங்கள் பார்ப்போம்? அஹதுக்கு இருமை இல்லை, அஹது மட்டும் தான் இருக்கின்றது. அஹதுக்கு இரண்டு, மூன்று என்று எண்கள் வராது.

வகை 2: அஹது ஏன் அல்லாஹ்விற்கு மட்டுமே அரபியர்கள் பயன்படுத்துகிறார்கள்?

4. அரபி மொழியில் அஹது வார்த்தையை வைத்திருக்கிறான் என்றால், எது மட்டும் உலகத்தில் ஒன்றே  ஒன்று இருக்கின்றதோ, அதற்கு மட்டும் தான் அஹது, அதனால் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஹது வார்த்தையை அரபி மக்கள் பயன்படுத்தமாட்டார்கள்.

5. அல்லாஹு அஹது என்று சொல்லலாம், இஸ்மாயில் அஹது, இப்ராஹிம் அஹது என்று அரபியில் சொல்லமாட்டார்கள்.

6. அல்லாஹ் ஜோடியாக எல்லாவற்றையும் படைத்துவிட்டான், எது ஒன்று மட்டும் இருக்கிறதோ, அது தான் அஹது, இதனால் அல்லாஹ்விற்கு மட்டுமே அஹது பயன்படுத்த இயலும்.

7. அரபி அகராதியில் 'எது ஒன்று மட்டும் தான் இருக்குமோ' அதற்கு தான் அஹது பயன்படுத்தவேண்டும் என்று உள்ளது.

8. சில சொற்கள் அதன் எதிர்மறையின் பொருளிலிருந்து சரியான அர்த்தம் விளங்கப்படும் என்ற அரபி பழமொழி உள்ளது.

9. எந்த புத்தகத்திலும், அரபியில் பேசும் போதும், ஒரு பொருளைக் காட்டி, உதாரணத்திற்கு கம்பியூட்டர் மௌஸைக் காட்டி, “வாஹிது மௌஸ்” (இது ஒரு மௌஸ்) என்று சொல்லலாம், ஆனால் “அஹது மௌஸ்” என்று சொல்லமுடியாது, இது தவறு. 

10. வாஹித், அஹது பற்றி அரபியர்கள்  விளங்கியும் வைத்திருந்தார்கள், இஸ்லாமிய வரலாற்றில் ஆதாரம் உள்ளது.  

11. பிலால் நிகழ்ச்சி ஒரு உதாரணம் ஆகும்,  அவர் துன்புறுத்தப்படும் போது “அஹதுன் அஹத்” என்றார்,  வாஹிது என்றுச் சொல்லவில்லை. அன்று பிலால் இதே அர்த‌த்தில் சொன்னார், மற்றவர்களும் அதே அர்தத்தில் புரிந்துக்கொண்டார்கள்.

12. ஒரு மொழியின் அர்த்தம் அந்த மொழிக்காரர்கள் எப்படி புரிந்துக் கொண்டுள்ளார்களோ, அதை வைத்து தான் பார்க்கவேண்டும். அக்கால மக்கள் அஹது என்ற வார்த்தையை எதற்கு பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்கவேண்டும். 

13. முஹம்மது அஹது என்று அல்லாஹ்வைப் பற்றி சொன்ன போது, “அல்லாஹ் பலரில் ஒருவர்” என்று இவர் சொல்கிறாரே என்று புரிந்துக்கொண்டு ஏன் அவரை ஆதரிக்கவில்லை? அம்மக்கள் ஏன் அவரை எதிர்த்தார்கள்?

14. அரபி மொழியில் அஹது வார்த்தையை உடன்பாடு சொல்லாக பயன்படுத்தவே மாட்டார்கள்.

15. கிறிஸ்தவர்கள் எடுத்துக்காட்டும் வசனங்களில், அஹத் வார்த்தையோடு சேர்த்து வேறு வார்த்தையும் சொல்வார்கள். அப்போது தான் வாஹித் அர்த்தம் வரும், இது ஒருவகை.  அஹது வார்த்தைகளின் வாக்கிய அமைப்பில் எதிர்மறையாக இருப்பது இன்னொரு வகையாகும். மேலும்  அஹது கேள்வியாகவும் வரும் (இன்னொரு வகை).

16. கேள்வி: கிறிஸ்தவர்கள் 112:1 மாதிரி உள்ள வசனத்தை உதாரணம் காட்டவேண்டும், ஆனால் அவர்களால் காட்டமுடியாது. 

17. மக்கா மக்கள் கூட "லாத், உஸ்ஸா" போன்ற‌ தங்கள் 360 விக்கிர சாமிகளுக்கும் அஹது என்று சொல்லவில்லையே! ஏன்? அல்லாஹ் மட்டும் தான் "அஹத்".

வகை 3: இதர சான்றுகள் மற்றும் விளக்கங்கள்

18. கேள்வி:  முஹம்மது “அல்லாஹ் பலரில் ஒருவர் என்ற போதனையில் இருந்தாரா?” என்று கிறிஸ்தவர்கள் விளக்கவேண்டும்? ஒரு வார்த்தையை எடுத்து பொருள் சொல்லக்கூடாது.

19. கேள்வி: எபிரேய மொழியிலிருந்து முஹம்மது ஏகாத் வார்த்தையை காப்பி அடித்தார் என்ற குற்றச்சாட்டு தவறானது. ஏனென்றால், மக்காவில் அப்போது யாரும் யுதர்கள் இல்லை, ஒருவர் இருந்தார் அவரும் சீக்கிரமாக மரித்துவிட்டார். முஹம்மது மக்காவில் யூதர்களை அறிந்திருந்தார் என்பது சான்றுகள் இல்லாத வாதமாகும்.

20. குர்‍ஆன் ஒரு தெளிவான அரபி மொழியாகும், ஏகாத் வார்த்தையை எபிரேயத்திலிருந்து காப்பி அடித்திருந்தால், மக்கா மக்கள் கேள்வி கேட்டுயிருந்திருப்பார்கள்.

21. கேள்வி: “என்னை வாஹித்” என்றும்,”உன்னை வாஹித்” என்றும் சொல்லலாம், “அல்லாஹ்வை அஹத்” என்று மட்டும் தான் சொல்லமுடியும். 14 நூற்றாண்டுகளாக அஹதை அரபியர்கள் யாருக்காவது பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்? அல்லாஹ்விற்கு மட்டும் தான், அது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அரபி மொழியியல் சம்மந்தப்பட்ட கேள்வி பதில்களாக இருப்பதினால், வாசகர்களுக்கு சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, பீஜே அவர்களின் 75 நிமிட வீடியோ பதிலிலிருந்து மேற்கண்ட சுருக்கத்தை நான்  கொடுத்துள்ளேன். அவர் ஒரே விவரத்தை பல முறை சொன்னதை நான் ஒரே பாயிண்டில் சேர்த்துள்ளேன். வாசகர்கள் அவரது பதிலை வீடியோவில் பார்த்து மேற்கண்டவைகளோடு அதனை சரி பார்த்துக்கொள்ளலாம். 

இப்படி சுருக்கமாக அவரது பதிலை கொடுத்துவிட்டு, அதன் பிறகு அவர் சொன்ன விவரங்கள் ஒவ்வொன்றிற்கும் பதிலை கொடுத்தால், வாசகர்களுக்கு சரியாக இவ்விளக்கங்கள் புரியும்.

பீஜே அவர்களின் மேற்கண்ட 21 விளக்கங்களை நான் மூன்று வகையாக பிரித்து பதில் கொடுக்கவுள்ளேன்.  இதனால்  இவ்விவரங்களில் உள்ள ஆழமான கருத்துக்கள் வாசகர்களுக்கு சுலபமாக புரியும்.

  • வகை 1: அஹது, வாஹிது மற்றும் எண்கள்
  • வகை 2: அஹது ஏன் அல்லாஹ்விற்கு மட்டுமே அரபியர்கள் பயன்படுத்துகிறார்கள்?
  • வகை 3: இதர சான்றுகள் மற்றும் விளக்கங்கள்

இந்த கட்டுரையில் "வகை 1: அஹது, வாஹிது மற்றும் எண்கள்" என்ற தலைப்பில் உள்ள பீஜே அவர்களின் விளக்கங்கள் மூன்றுக்கு  பதில்களைக் காண்போம்.

வகை 1: அஹது, வாஹிது மற்றும் எண்கள்

பீஜே அவர்களின் பதில்:

1. எண்களை எண்ணுவதற்கு பயன்படுத்துகின்ற வார்த்தை வாஹித் (ஒன்று, இரண்டு, மூன்று. . .) ஆகும்.

2. அரபி மொழி பயன்பாட்டில், இலக்கியங்களில்,அரபி நூல்களில், அரபி பேச்சு வழக்கத்தில் 10 வரை எண்ணுங்கள் என்று கேட்டால், 1(வாஹித்), 2, 3 .. 10 வரை எண்ணுவான்,  ஆயிரம் வரையும் எண்ணுவான். ஆனால், அஹது எங்கும் வராது. அஹதுக்கு இரண்டு, மூன்று . . . என்று சொல்வது கிடையாது.

3. அஹதுக்கு இருமை சொல்லுங்கள் பார்ப்போம்? அஹதுக்கு இருமை இல்லை, அஹது மட்டும் தான் இருக்கின்றது. அஹதுக்கு இரண்டு, மூன்று என்று எண்கள் வராது.

பீஜே அவர்கள் தம்முடைய பதிலில் 'வாஹித்' என்பது அரபியில் "ஒன்று, இரண்டு.. " என்ற எண்ணிக்கைக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்று பல முறை கூறினார். ஆனால், "அஹத்" என்ற வார்த்தை எண்களுக்கு பயன்படுத்துவது கிடையாது என்றார்.

அரபியில் 1 லிருந்து 10 வரையுள்ள எண்களை கீழ்கண்ட அட்டவணையில் கொடுத்துள்ளேன்.  ஆனால், இந்த எண்களில் அஹத் என்ற வார்த்தை வருவதில்லை. 

இதை மட்டும் பீஜே அவர்கள் சொல்லியிருந்தால் விட்டுவிடலாம், ஆனால், அவர் "அஹத்" என்ற வார்த்தை 1 லிருந்து 1000 எண்ணினாலும் சரி, அதில் அஹத் வருவதில்லை என்று கூறினார்.

பீஜே அவர்கள் சொன்னது உண்மையா? என்று சிறிது தேடிப்பார்க்கும் போது, அவர் சொன்னது சுத்தப்பொய் என்று தெரியவந்ததுள்ளது. அதாவது, அரபி எண்கள் 1-10 வரையுள்ள உச்சரிப்புக்களில் "அஹத்" வருவதில்லை, ஆனால், "11" என்ற எண்ணுக்கு அரபியில் எப்படி உச்சரிப்பு செய்வார்கள்? 11ஐ எப்படி அரபியில் கூறுவார்கள்? கீழ்கண்ட அட்டவணையை பாருங்கள்.

அரபியில் 11க்கு "அஹத அஷர்" என்று உச்சரிப்பார்கள், இதன்படி அஹத் எண்களில் வந்துள்ளது. வெறும் 11 மட்டுமல்ல, 111, 211, 311 என்று அனைத்து எண்களுக்கும் "அஹத்" வருகின்றது என்பதை கவனியுங்கள்.

உங்களுக்கு சந்தேகமிருந்தால், கூகுளில் 11க்கு அரபியில் எப்படி உச்சரிப்பார்கள் என்று தேடிப்பாருங்கள். உங்கள் வசதிக்காக, கூகுள் ட்ரான்ஸ்லேட்டின் (Google Translate) இரண்டு தொடுப்புக்களை கீழே கொடுத்துள்ளேன், அவைகளை சொடுக்கிப் பாருங்கள். மேலும், அரபி பற்றிய எண்கள் பற்றிய பள்ளி புத்தகங்களிலும், மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஏன் பீஜே அவர்கள் அஹத் என்பது எண்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று பொய் கூறினார்? இதற்கான பதிலை அவரிடம் கேட்கவேண்டும்.  

குர்‍ஆனை அரபியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தவருக்கு 11 என்ற அரபி உச்சரிப்பில் அஹத் என்ற வார்த்தை வரும் என்றுத் தெரியாதா? இவர் எப்படி வாசகர்களிடம் பொய்யைச் சொல்வார்?

இந்த பதினொரு என்ற எண்ணும் குர்‍ஆனில் 12:4ல் ஒருமுறை வருகிறது, அதனையும் இங்கு அரபி மூலத்துடன் தருகிறேன்.  பச்சையில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை கவனிக்கவும் (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

பீஜே தமிழாக்கம்:

குர்‍ஆன் 12:4. "என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்)  கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்'' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

பீஜே அவர்கள் தம் தமிழாக்கத்திலும், “அஹத அஷர” என்ற வார்த்தைகளை "பதினோரு" என்று தமிழாக்கம் செய்துள்ளார். இது இவரைப் பொருத்தமட்டில் எண் இல்லையா?

ஒருவேளை ஒரு வாதத்திற்காக‌ பீஜே அவர்கள் சொல்வதைப்போன்று அஹத் என்ற வார்த்தை அரபி மொழியில் எண்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தாலும் (மேற்கண்ட பட்டியலின் படி பீஜே அவர்கள் பொய் சொல்லியுள்ளார்), அது நம்முடைய வாதங்களுக்கு சான்றாக ஆதரவாக இருக்குமே ஒழிய, இவருடைய பதிலுக்கு எப்படி பயன்படும்? எங்களுடைய வாதத்தின் படி, அஹத் என்பது "ஒன்று" அல்ல, “அனேகரில் ஒன்று” என்பது தானே! மேலும் எங்களுடைய கேள்வியில் நாங்கள் எங்கேயாவது "அஹத் என்றால் அரபி மொழியில் எண்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றுச்  சொன்னோமா? இல்லையே! நாங்கள் முன்வைக்காத கேள்விக்கு, இவர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். தம்முடைய அணிக்கு எதிராக ஏன் இவர் கோல் போடுகின்றார்?  இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த பதிலும் பொய்யானது. 

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், அஹத் என்ற வார்த்தை அரபி மொழியில் எண்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்று பீஜே அவர்கள் சொன்னது, பொய்யாகும். அரபி தெரிந்த முஸ்லிம்களே இவரிடம் "ஏன் எங்களிடம் பொய் சொன்னீர்" என்று கேட்கவேண்டும். மேலும், குர்‍ஆனிலிருந்தும், அரபி எண் உச்சரிப்புக்களிலிருந்தும், அஹது என்ற வார்த்தை எண்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பல சான்றுகளைக் கொண்டு மேலே விளக்கியுள்ளோம்.  11க்கும், 111க்கும், 211க்கும், . . அஹது என்ற வார்த்தையை அரபி மொழியில் ஏன் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற ஆய்வை பீஜே அவர்கள் செய்து முஸ்லிம்களுக்கு பதில் சொல்லட்டும். 

பீஜே அவர்களின் அடுத்த பதிலுக்குச் செல்வோம்.

பீஜே அவர்களின் பதில்:

3. அஹதுக்கு இருமை சொல்லுங்கள் பார்ப்போம்? அஹதுக்கு இருமை இல்லை, அஹது மட்டும் தான் இருக்கின்றது. அஹதுக்கு இரண்டு, மூன்று என்று எண்கள் வராது.

அரபியில் சில வார்த்தைகளுக்கு ஒருமை, இருமை(இரண்டு), பன்மை(இரண்டுக்கு மேல்) உள்ளது.  பீஜே அவர்களின் பதிலின் படி, அஹது என்ற வார்த்தைக்கு அரபி மொழியில் "இருமை (Dual)  இல்லை ", "பன்மை (Plural) இல்லை”.

இது உண்மையா?

அஹத் என்ற அரபி வார்த்தைக்கு இருமையும் (Dual), பன்மையும்(Plural), அவ்வளவு ஏன் பெண்மையும் (Feminine  - பெண்பால்) உள்ளது. இவைகளை பீஜே அறிவாரா? நிச்சயம் அறிவார்! இவைகளை அறியாமலா அவர் அரபியிலிருந்து குர்‍ஆனை தமிழாக்கம் செய்திருக்கிறார்.

  1. அஹத் (أَحَد ) = ஆண்பால் ஒருமை
  2. அஹ்தைன்(أَحَدَيْن) = ஆண்பால் இருமை
  3. ஆஹாத் (آحَاد) = ஆண்பால் பன்மை
  4. இஹ்தா (إِحْدَى) = பெண் பால் ஒருமை

 

விக்கிபீடியா

Noun

أَحَد • (ʾaḥad) m (plural آحَاد‎ (ʾāḥād), feminine إِحْدَى‎ (ʾiḥdā))

one

‏أَحَدٌ وَعِشْرُونَ‎‎ ― ʾaḥadun wa-ʿišrūna ― twenty-one (literally, “one and twenty”)

‏إِحْدَى وَعِشْرُونَ‎‎ ― ʾiḥdā wa-ʿišrūna ― twenty-one (literally, “one and twenty”)

‏أَحَدَ عَشَرَ‎‎ ― ʾaḥada ʿašara ― eleven

‏إِحْدَى عَشْرَةَ‎‎ ― ʾiḥdā ʿašrata ― eleven

Source

Noun

إِحْدَى • (ʾiḥdā) f

1. female equivalent of أَحَد‎ (ʾaḥad)

Source

இதைப் பற்றிய ஒரு பட்டியலே இந்த தொடுப்பில் உள்ளது, இதில் "Declension of numeral أَحَد (ʾaḥad)" என்ற பகுதியை சொடுக்கி பார்க்கவும். இன்னும் வேறு பல அகராதிகளிலிருந்தும் பல உதாரணங்கள் கிடைக்கின்றன.

அஹதுக்கு பெண்மையும் உள்ளது - (இஹ்தா) 11 இடங்களில் குர்‍ஆனில் வருகின்றது

பீஜே பதில் அளிக்கும் போது அஹது என்றால், அஹது தான், இதற்கு இருமை, பன்மையெல்லாம் கிடையாது என்றார், ஆனால், பன்மையோடு கூட அஹதுக்கு பெண்பாலும் உள்ளது என்பதை குர்‍ஆனிலிருந்தே நிருபிக்கமுடியும்.

அஹத் என்ற வார்த்தையின் பெண்பால் வார்த்தை (இஹ்தா) 11 இடங்களில் குர்‍ஆனில் வருகின்றது.

அஹத் என்ற வார்த்தை அரபி மொழியிலேயே தனியாக அல்லாஹ்விற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று பீஜே கூறினால், இப்போது இவ்வார்த்தைக்கு பெண்பாலும் உள்ளதே, அப்படியென்றால், "அஹத் என்றால் அல்லாஹ், இஹ்தா என்றால் அல்லியா? (அல்லாஹ்வின் பெண்பாலா?)". முஸ்லிம் வாசகர்கள் கோபம் கொள்ளவேண்டாம், அதற்கு பதிலாக உங்கள் அறிஞர்களின் பதில்கள் பற்றி சிந்திக்கவும்.

இதுவரை பார்த்த விவரங்களின் படி, அஹத் என்ற வார்த்தைக்கு "பன்மை சொல்லுங்கள்" என்ற சவால் விட்ட பீஜே அவர்கள் பேச்சு வழக்கில் சவாலை அள்ளிவீசிவிட்டார் என்று நினைப்பதா? அல்லது தெரிந்துக்கொண்டே முஸ்லிம்களிடமும் மற்றவர்களிடமும் பொய் கூறினார் என்று நினைப்பதா?

முடிவுரை:

அஹத் என்ற வார்த்தையை எண்களுக்கு பயன்படுத்தமாட்டார்கள் என்று பீஜே அவர்கள் கூறியது ஒரு பொய் என்பதை மேலே கண்டோம். மேலும் தகுந்த‌ சான்றுகளோடு அஹத் என்ற வார்த்தைக்கு, இருமை உண்டு, பன்மை உண்டு, பெண்பாலும் உண்டு என்பதை நிருபித்திருக்கிறோம், இதற்கு பீஜெ அவர்களின் பதில் என்ன?

பீஜே அவர்களின் இதர வாதங்களுக்கு, அடுத்த தொடரில் பதில்களை/மறுப்புக்களைக் காண்போம். அடுத்த பதில் பொதுவான வாசகர்களுக்கு சுவாரசியமாகவும், பீஜே அவர்களுக்கு அதிர்ச்சியாகவும், முஸ்லிம்களுக்கு குழப்பமாகவும் இருக்கும்.

தேதி: ஜூலை 13, 2021


பீஜே மறுப்புக் கட்டுரைகள்

உமரின் பக்கம்