பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159): ஈஸா குர்ஆன் பதில்
(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" புத்தகத்திற்கு மறுப்பு)
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தின் நான்காவது பகுதியில், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, அல்லாஹ் ஆள் மாறாட்டம் செய்து இயேசுவை எடுத்துக்கொண்டார் என்று எழுதுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார், மரித்தார், மறுபடியும் உயிரோடு எழுந்தார் என்று பைபிள் சொல்வதும், கிறிஸ்தவர்கள் நம்புவதும் தவறானதாகும், குர்ஆன் சொல்வது தான் சரியானது என்று பிஜே சொல்கிறார். இதற்கு குர்ஆன் 4:155 – 159 வசனங்களை ஆதாரமாக காட்டுகிறார்.
பிஜே அவர்கள் புத்தகத்திலிருந்து:
இயேசுவைப் பற்றி
அவரை (இயேசுவை) அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் (கர்த்தர்) தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் (கர்த்தர்) மிகைத்தவராகவும் ஞானமுடையோராகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (இயேசு, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார். (அல்குர்ஆன் 4:155-159)
குர்ஆன் சொல்லும் இந்நிகழ்ச்சியில் அனேக பிரச்சனைகள் உள்ளது. மட்டுமல்ல, இது குர்ஆனுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இப்படி இயேசுவின் சிலுவை நிகழ்ச்சியை அல்லாஹ் மாற்றி சொல்வதினால், அல்லாஹ் எதிர் காலத்தைப் பற்றி ஞானமில்லாதவராக தென்படுகிறார், மற்றும் இயேசுவின் சீடர்களை ஏமாற்றியவராக மாறுகிறார். இதுவே, அவருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்துக்கொள்ள கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்.
பிஜே அவர்களின் இந்த வசனங்களுக்கு மறுப்பாக கீழ் கண்ட கட்டுரையை முன்வைக்கிறேன் .
தமிழில்: "ஏமாற்றும் இறைவன் திறமையில்லா மஸீஹா"
இக்கட்டுரையின் ஆசிரியருக்கு நான் மெயில் அனுப்பி, அனுமதி பெற்று, அவரது ஆங்கில கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
பி.ஜே அவர்களுக்கு இக்கட்டுரையை நான் பதிலாக முன் வைப்பதால், இக்கட்டுரை சம்மந்தப்பட்ட பிஜே அவர்களது எல்லா கேள்விகளுக்கும் முடிந்த அளவிற்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆன் அளித்த இதர பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.
முஸ்லீம்களுக்கு வேண்டுகோள்: என் அருமை தமிழ் முஸ்லீம்களே, நான் ஒரு பதில் எழுதினால், அது யாருக்காக எழுதப்படுமோ அவர்கள் தான் பதில் அளிக்கவேண்டும் என்பதில்லை. குர்ஆனை நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் பதில் அளிக்கலாம், முடிந்தால்.
கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள்: என் அருமை கிறிஸ்தவர்களே, பிஜே அவர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள், உங்களில் பலரும் அதில் பங்கு பெற்று கேள்விகள் கேட்டு இருப்பீர்கள். இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், இக்கட்டுரையை குறைந்தது பத்து பேருக்காவது அனுப்புங்கள் . ஈஸா குர்ஆன் தளத்தையும், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தையும் அறிமுகம் செய்யுங்கள். ஒரு வேளை நீங்கள் பிஜே அவர்களிடம் கேள்விகள் கேட்டு, அவர் பதில் அளிந்து இருப்பாரானால், அதை (கேள்வியும், பிஜே அவர்கள் அளித்த பதிலும்) எனக்கு இந்த மெயில் விலாசத்திற்கு ( isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com ) அனுப்புங்கள். நான் என் கருத்தை அல்லது பதிலை எழுத முயற்சி செய்வேன். இது கிறிஸ்தவர்கள் இஸ்லாமை இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
ஈஸா குர்ஆனின் இதர இஸ்லாம் கட்டுரைகளையும், இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தள கிறிஸ்தவ கட்டுரைகளுக்கு ஈஸா குர்ஆன் அளித்த பதில்களை(மறுப்புக்களை)யும் படிக்க இங்கு சொடுக்கவும்.