பீஜேவிற்கு பதில்: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1(முன்னுரை)

திரு பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இது தான் பைபிள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் பைபிளை தாக்கி அனேக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை நாம் தொடர் கட்டுரைகளாக காணப்போகிறோம். இவர், "இயேசு இறைமகனா?" என்ற இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதற்கு சில பதில்களை நாம் அளித்துள்ளோம், ஆனால், அவைகளுக்கு அவர் மறுப்போ அல்லது பதிலோ அளிக்கவில்லை. 

குறைந்த பட்சம் இந்த "இது தான் பைபிள்" என்ற புத்தகத்திற்கு தமிழ் கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில்களுக்காகவது அவர் மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இந்த தொடர் பதில்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உண்மை என்ன என்பது விளங்க ஆரம்பிக்கும். என்னிடமுள்ள பதிப்பு, "இது தான் பைபிள்" ஒன்பதாம் பதிப்பாகும், இது ஜனவரி 2010ல் வெளியானது. 

நூலின் பெயர்: இது தான் பைபிள்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு, ஜனவரி 2010

வெளியீடு: நபிலா பதிப்பகம்.


பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - பாகம் 1 (முன்னுரை)

இந்த கட்டுரையில் பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தின் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களை பார்ப்போம்.

பீஜே அவர்கள் எழுதியது: 

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்... 

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புன்படுத்துவதோ என் நோகக்ம் அன்று. (பக்கம் 2-3)

கிறிஸ்தவன் (உம‌ர்) எழுதியது:

முந்தினவரும் பிந்தினவருமாகிய கர்த்தரின் ஈடு இணையற்ற பெயரில் உங்களுக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

பீஜே அவர்களே, உங்களின் இந்த புத்தகத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை. தமிழ் கிறிஸ்தவர்களின் சமீப கால முன்னேற்றம் மற்றும் தமிழ் எழுத்து உலகில் கிறிஸ்தவர்கள் காட்டும் ஆர்வம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் எழுதும் மறுப்புக்கள் உங்களை ஆச்சரியப்பட வைப்பதற்கோ அல்லது புண்படுத்துவதற்கோ அல்ல, மாறாக, உங்கள் கண்கள் தெளிவாக்கப்படவேண்டும் என்றும், அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, பைபிள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை கேட்டு எந்த வகையில் உங்களுக்கு பதில்களைத் தரலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்குமே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆக, தமிழ் பேசும் முஸ்லிம்களை புண்படுத்துவது எங்கள் நோக்கமன்று, இதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

பல விஷயங்களில் உங்களுக்கும் முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, சரியாகச் சொன்னீர்கள். 

முஸ்லிம்கள் மற்றும் உங்களைப் போல உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மறுப்புக்களை எழுதுகின்றோம். இந்த மறுப்புக்கள் எழுதும் வேளையில், தேவையான இடத்தில் குர்‍ஆன் பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும் மற்றும் விவரங்களையும் நாங்கள் குறிப்பிடுவோம். நீங்களும் உண்மையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்படி எழுதுகிறோம். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும் நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நன்றாக நீங்கள் அறிவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

ஆம் பீஜே அவர்களே. கர்த்தரின் முன்னிலையில் (அல்லாஹ்வின் முன்னிலையில் அல்ல) நாம் அனைவரும் அந்நாளில் நிற்போம். நம்முடைய இவ்வுலக நம்பிக்கை (விசுவாசம்) மற்றும் நடத்தைகள் மீது ஆதாரப்பட்டு அந்நாளின் நியாயந்தீர்ப்பு இருக்கும். 

அந்த நாளின் நியாயத்தீர்ப்பில் நாம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு (இதனை கிறிஸ்தவர்கள் வழக்கப்படி „இரட்சிப்பின் நிச்சயம்" என்றுச் சொல்வார்கள்). அந்த நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது. நாம் மரித்த பிறகு நமக்கு மோட்சத்தை கொடுப்பது அல்லது மறுப்பது அந்த இறைவனின் அப்போதைய விருப்பம் போன்ற கோட்பாடு எங்களுக்கு இல்லை. இந்த உலகிலேயே எங்களுக்கு 100% இரட்சிப்பின் நிச்சயம் உண்டு. இதனால் தான் நாங்கள் உங்களுக்கு மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கிறோம், வாழ் நாள் எல்லாம் பயத்தோடும், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் அளிப்பானா இல்லையா? என்ற சந்தேகத்தோடும் வாழாமல் இருக்கும்படியான ஒரு வழியை இயேசு திறந்து வைத்துச் சென்றுள்ளார். அந்த இடுக்கமான வாசல் வழியாக செல்ல உங்களுக்கு விருப்பமா?

பீஜே அவர்கள் எழுதியது: 

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தறவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுளளோம்.

கிறிஸ்தவன் எழுதியது: 

உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த இஸ்லாமிய அறிஞருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாங்கள் இஸ்லாம் பற்றி தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் அனேகம் உண்டு, அதே நேரத்தில் பைபிள் பற்றியும் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களும் உண்டு. நித்திய ஜீவனை அடைய உலக மக்களுக்கு பைபிள் போதும், குர்‍ஆன் அதற்கு உதவாது என்பதை இந்த உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் மறுப்பை கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே அனேக இஸ்லாமியர்கள் அறிந்துக்கொள்வார்கள். எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் பரிசுத்த வேதம் எங்களை பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடையச் செய்யும், இதில் அணு அளவேனும் சந்தேகமில்லை. 

பீஜே அவர்களே உங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் கொண்டுள்ள அன்பினிமித்தம் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், "உங்கள் குர்‍ஆனும், உங்கள் முஹம்மது மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாளில் உங்களை வெற்றியடையச் செய்யாது, உங்களுக்கு சொர்க்கத்தை அளிக்காது என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்". 

எங்கள் மத குருமார்கள் எங்களை தவறான வழியில் இழுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். இது முழுக்க் முழுக்க மிகப் பெரிய பொய்யாகும். பைபிள் என்பது உலகத்தை படைத்த இறைவனால் எங்களுடைய வழிகாட்டுதலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். இது மட்டுமல்ல, எங்களை வழி கெடுக்க எந்த ஒரு மத குருவாலும் முடியாது ஏனென்றால், நாங்கள் எங்கள் வேதத்தை எங்கள் தாய் மொழியில் படிக்கிறோம். உங்களைப் போன்று குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்ற "தவறான" கோட்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ சபையிலாவது "நீங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிளை படித்தால் தான், நன்மை" என்று எந்த ஒரு போதகரும் சொல்வதில்லை, இப்படிச் சொன்னால் அது முட்டாள் தனம். இப்படிபட்ட ஒரு கோட்பாட்டை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். 

குர்‍ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதமல்ல, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல என்ற உண்மையை நாங்கள் சில ஆண்டுகளாக ஆதாரங்களோடு எழுதி வருகிறோம். அதே வரிசையில் உங்கள் இந்த புத்தகத்திற்கு நாங்கள் தரவிருக்கும் மறுப்புகள் "உண்மை எது பொய் எது" என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வழி வகுக்கும். எனவே, நீங்கள் சொன்ன அதே பைபிளைக் கொண்டு "நீங்கள் சொல்வது பொய், உங்கள் குற்றச்சாட்டுக்கள் பொய்" என்பதை நாங்கள் நிருபிக்கப்போகிறோம், மட்டுமல்ல, குர்‍ஆன் ஒரு வேதமல்ல என்பதும் இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

பீஜே அவர்கள் எழுதியது: 

எழுதியவன் யார்? என்பதைப் புறக்கணித்துவிட்டுக் காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது: 

உண்மையை அறிந்துக்கொள்ள விரும்புகிறவர்கள், "யார் எழுதினான்? அவன் முகவரி என்ன? அவன் பெயர் என்ன?" போன்ற விவரங்களை கேட்காமல், "அவன் சொன்னதில் உண்மை உண்டா? அவன் ஆதாரங்களை முன்வைக்கின்றானா?" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ந்தால் சத்தியம் எது அசத்தியம் எது என்பது விளங்கும். ஆனால், இன்றைய தமிழ் இஸ்லாமியர்களின் நிலை எப்படி உள்ளது என்றால் (பீஜே அவர்களே உங்கள் நிலையும் கூட), 'பெயரைச் சொன்னால் மட்டுமே, முகவரியை கொடுத்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம். அவன் எழுதியதில் உண்மை இருந்தாலும், ஆதாரங்கள் இருந்தாலும் அதனை நாங்கள் பார்க்கமாட்டோம் படிக்கமாட்டோம்' என்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

பீஜே அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், "கர்த்தரின் போதனைக்கு முரணாக எங்கள் மதகுருக்கள் போதிக்கவில்லை, ஆனால், அதே கர்த்தரின் போதனைக்கு விரோதமாகவும், முரணாகவும், போதித்தவர் உங்கள் முஹம்மதுவும், அவரது அடிச்சுவடியில் நடந்துக்கொண்டு இருக்கும் உங்களைப்போல இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுமேயாவார்கள்". 

இன்று கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், "உங்களைப் போல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும், மத நல்லிணக்கனம் என்ற போர்வையில், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற போர்வையில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் குடிக்கும் பாலில் (மக்களின் மனதில்) கலக்கும் இஸ்லாமிய போதனையை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும்". 

எங்களுக்கு எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது இருக்கும் அந்த அளவு கடந்த மரியாதை என்பது, அவர் எந்த அளவு பைபிளுக்கு சார்ந்து போதிக்கிறார் என்பதை பொறுத்து இருக்கும். எந்த ஒரு கிறிஸ்தவ போதகராவது, பைபிளுக்கு எதிராக எதையாவது போதித்தால் நாங்கள் அவரை ஒதுக்கிவிடுவோம், எங்களை யாரும் கட்டுப்படுத்தமுடியாது, நாங்கள் சுதந்திர பறவைகள். நீங்கள் உங்கள் முஹம்மது மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதை எங்களுக்கு இல்லை. தவறு செய்தால் நீ நபியாக இருந்தாலும் சரி தவறு தவறு தான் , அதே நேரத்தில் நன்மை செய்து, கர்த்தருக்கு ஊழியம் செய்தால், "கர்த்தரின் ஊழியர்" என்ற மரியாதை நிச்சயம் உண்டு. (இந்த மரியாதை பட்டியலில், மக்களை ஏமாற்றும் ஊழியர், கொள்ளையடிக்கும் ஊழியர் வரமாட்டார்). 

ஆக, பீஜே அவர்களே, எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது நீங்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் சவாலை நான் ஏற்கிறேன், உங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை அல்லது மறுப்பை தருகிறேன். பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் எடுத்த முடிவு மீது உங்களுக்கு முழு நிச்சயம் இருந்தால், நான் எழுதப்போகும் பதில்களை படியுங்கள், ஆதாரங்களை சரிபாருங்கள், என் வரிகள் பற்றிய உங்கள் மறுப்பை எழுதுங்கள், எங்கள் ஆதாரங்களையும், உங்கள் ஆதாரங்களையும் மக்கள் படிக்கும்படி மக்களின் முன்னிலையில்கொண்டு வாருங்கள். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக எங்கள் முடிவிற்கு நீங்கள் வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பீஜே அவர்கள் எழுதியது: 

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

கிறிஸ்தவன் எழுதியது: 

பீஜே அவர்களே, நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் ஒரு உண்மையைச் சொல்கிறேன் "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகவே இருக்கவே முடியாது, இதற்கு ஒரு கடுகளவும் வாய்ப்பில்லை". ஆனால், பைபிள் இறைவனின் வேதமாகும், இதனை கொஞ்ச கொஞ்சமாக நான் என் மறுப்புக்களில் விளக்குவேன், இதனை என் கட்டுரைகளை படிக்கும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்தவரோ அதனை அவர் அறிந்துக்கொள்வார்". உங்கள் வரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் தளத்தில் என் மறுப்புக்களின் தொடுப்பை கொடுப்பீர்களா? " நீங்கள் முன்வைத்த வாதங்கள் சரியானவை தான்" என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், என் தொடுப்புக்களை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு மறுப்போ அல்லது பதிலோ எழுதுவீர்களா? இணைய வாசகர்கள் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், அவைகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதில்களையும் படிக்க உதவுவீர்களா? அப்படி உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது: 

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும் நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன். 

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, இந்த விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்கள், தோற்றுப்போனவர்கள், சத்தியத்தில் நிலை நிற்காதவர்கள். ஏனென்றால், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதினீர்கள், அதற்கு நான் சில பதில்களைக் கொடுத்துள்ளேன். இதுவரை என் பதில் கட்டுரையை குறிப்பிட்டு, அவைகளுக்கு தகுந்த பதிலை கொடுத்துள்ளீர்களா? (எனக்கு தெரிந்தவை நீங்கள் என் மறுப்புக்களுக்கு பதிலை தரவில்லை, என் கண்களில் படாமல் இருந்தால், உடனே அவைகளை எனக்கு தெரிவிக்கவும்). 

குறைந்த பட்சம் இந்த உங்களின் புத்தகத்திற்கு நான் அளிக்கும் மறுப்புக்களை உங்கள் தளத்தில் பதித்து மறுப்பு எழுதுவீர்களா? 

உங்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்ப்பது: 

1) எங்கள் மறுப்பு கட்டுரையின் தொடுப்பை உங்கள் தளத்தில் தாருங்கள் (ஏனென்றால், நீங்கள் எழுதிய புத்தகத்திற்கு தான் நாங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம், மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அல்ல, எனவே பொறுப்பு உங்களுக்கு உண்டு).

2) தொடுப்பை கொடுத்து, உங்கள் மறுப்பையும் எழுதுங்கள் அல்லது வீடியோவில் பேசியாவது பதியுங்கள். 

இப்படி செய்வதை விட்டுவிட்டு, நேரடியாக உமர் வந்தால் தான் நான் பதில் தருவேன் என்ற வாதத்தை மட்டும் முன் வைக்கவேண்டாம். இப்படி நீங்கள் செய்தால், மக்கள் உங்களிடம் இப்படியாக கேட்பார்கள் "பின் எந்த தைரியத்தில் நீங்கள் மட்டும் கிறிஸ்தவத்திற்கு எதிராக புத்தகத்தை வெளியிடுகிறீர்கள்? எழுத்து வடியில் உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள்?". 

நீங்கள் உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாக்கு கொடுத்துள்ளீர்கள், அதனை நிறைவேற்ற தவறவேண்டாம். 

கடைசியாக பீஜே அவர்களே, நீங்களும், இதர இஸ்லாமியர்களும் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவலும் கூட, முக்கியமாக என்னுடைய ஆவல், ஏனென்றால், நானும் ஒரு இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால், என் ஜனங்கள் (இஸ்லாமியர்கள்) மீது எனக்குள்ள அக்கரையே இந்த எழுத்து ஊழியத்தை நான் கையில் எடுக்க காரணமாக உள்ளது. 

உங்களை என் அடுத்த மறுப்பில் சந்திக்கும் வரை... 

அன்புடன் 

தமிழ் கிறிஸ்தவன்(உமர்)


பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்களில் சில‌: 

1. இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1 

2. பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

3. உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

4. ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

5. பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

6. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

7. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

8. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

9. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)

மூலம்: http://isakoran.blogspot.in/2011/10/answering-pj-1.html

பீஜேவிற்கு மறுப்புக்கள்

உமரின் மறுப்புக்கள்/கட்டுரைகள்