குர்‍ஆன் 3:183 - அல்லாஹ்வின் அறியாமை – யூதர்களின் நபித்துவ‌ சோதனையில் தோல்வியுற்ற முஹம்மது

முஹம்மது யூதர்களோடு புரிந்த சில வாதங்களை குர்ஆன் பதிவு செய்கிறது. முஹம்மது ஒரு நபி என்பதை யூதர்கள் நம்ப மறுத்தார்கள் பல நேரங்களில் அவரிடமிருந்து சில அற்புதங்களை எதிர்பார்த்தார்கள். முஹம்மது அற்புதம் செய்யாதபோது அவரை நபி என்று ஏற்க மறுத்தார்கள். அவர் கொண்டு வந்த குர்‍ஆனை இறைவசனம் என்று நம்பவில்லை.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை இப்பொழுது காண்போம்.

குர்‍ஆன் 3:183ஐ படிப்போம்.

3:183. மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

இந்த வசனத்தில் யூதர்களிடம் அல்லாஹ் ஒரு வாக்குறுதியை வாங்கினான் அல்லது ஒரு கட்டளையை கொடுத்தான் என்று யூதர்கள் கூறுவதாக வருகிறது. அதாவது ஒரு நபியை நீங்கள் (யூதர்கள்) இறைதூதராக நம்ப வேண்டுமென்றால் அவர் அற்புதம் செய்ய வேண்டும் அதிலும் முக்கியமாக ஒரு பலியை (குர்பானியை) வானத்திலிருந்து வருகின்ற நெருப்பு சுட்டெரிக்கும் படியான அற்புதம் அவர் செய்ய வேண்டும். அப்போதுதான் அவரை நீங்கள் இறைதூதராக நம்பவேண்டும் என்று அல்லாஹ் கூறியதாக யூதர்கள் இவ்வசனத்தில் சொல்கிறார்கள். 

முஹம்மது ஜான் தமிழாக்கம் இந்த விளக்கத்தை சரியாக சொல்லாவிட்டாலும்  IFT மொழியாக்கம் ஓரளவுக்கு சரியாக இதனை மொழியாக்கம் செய்துள்ளது.

3:183. “(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?”  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

இந்த மொழியாக்கத்தில் “(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம்” என்று குறிப்பிடுவது எதை என்றால், இறைத்தூதர் “வானத்திலிருந்து அற்புதமாக‌ நெருப்பைக் கொண்டுவந்து”  அந்த ஆடு/மாடு பலியை எரிக்கவேண்டும். 

இந்த வசனத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி குர்‍ஆனில் எங்கு உள்ளது? அந்த நபி யார்? என்று நாம் தேடிப் பார்க்கும் போது நமக்கு அது கிடைக்காது. இதைப்பற்றி அறிய வேண்டுமென்றால் யூதர்களின் பழைய ஏற்பாட்டில் தான் தேடிப்பார்க்க வேண்டும் இதைப்பற்றி தான் குர்ஆனும் இங்கு கூறுகிறது.

பைபிளிலிருந்து சில சான்றுகள்:

வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து ப‌லிகளை எரிக்கும் அற்புதம் பற்றிய சில விபரங்களை பைபிளிலிருந்து இப்பொழுது பார்ப்போம், அதன்பிறகு குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வு செய்வோம்.

பழைய ஏற்பாட்டின் படி பல நேரங்களில் தீர்க்கதரிசிகளின் மற்றும் நியாயாதிபதிகளின், அரசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அல்லது அவர்களுக்காக‌ வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தது உண்மை தான்.

பார்க்க‌: 

  1. லேவியராகமம் 9:23-24 (Leviticus)
  2. நியாயாதிபதிகள் 6:20-2 (Judges)
  3. 1 நாளாகமம் 21:26 ( 1 Chronicles)
  4. 2 நாளாகமம் 7:1-3 (2 Chronicles)
  5. 1 ராஜாக்கள் 18 (1 Kings)

மேலும் யூதர்களிடம் பைபிளின் தேவன் ஒரு தீர்க்கதரிசியை எப்படி பரிசோதித்துப் பார்ப்பது அல்லது அடையாளம் கண்டு கொள்வது என்பது குறித்தும் நிபந்தனைகளை கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இறைத்தூதரை கண்டுபிடிப்பதற்கு நிச்சயமாக வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தால் தான் நீங்கள் "அவரை நபி என்று நம்ப வேண்டும்" என்ற ஒரு நிபந்தனையை அவர் கொடுக்கவில்லை. தீர்க்கதரிசி என்பவர்கள் அற்புதங்கள் செய்ய வேண்டும் அவர்கள் தீர்க்கதரிசனங்கள் சொன்னால் அவைகள் நிறைவேற வேண்டும் போன்ற நிபந்தனைகளை சொல்லி இருக்கின்றார். ஆனால் வானத்திலிருந்து அக்கினி வந்து பலிகளை எரித்தால் தான், இந்த ஒரு அற்புதத்தை செய்தால் தான் “அவரை தீர்க்கதரிசி என்று நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்ற கட்டளையை தேவன் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் போது (1 ராஜாக்கள் 18வது அத்தியாயம்) எலியா தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து பலிகளை எரித்துக் காட்டி யெகோவா தேவன் தான் மெய்யான தேவன் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். ஆனால் இந்த அற்புதத்தையே ஒவ்வொரு தீர்க்கதரிசியும் செய்து நிரூபிக்க வேண்டும் என்ற கட்டளை மட்டும் பழைய ஏற்பாட்டில் இல்லை.

குர்‍ஆன் 3:183ன் படி யார் பொய் சொன்னார்கள்?

இந்த வசனத்தில் யூதர்கள் சொல்வது போன்று ஒரு உடன்படிக்கையை தேவன் யூதர்களோடு செய்யாதபோது, இந்த வசனத்தின்படி யார் உண்மை சொல்கிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள்?

  • யூதர்கள் சொல்வது பொய்யா? அல்லது 
  • அறியாமையில் இந்த வசனம் பொய் சொல்கிறதா? அதாவது குர்ஆன் ஆக்கியோன் யூதர்கள் சொல்லாத ஒன்றை யூதர்கள் சொல்வது போன்று குர்‍ஆனில் இந்த வசனத்தில் கூறியுள்ளானா?

முஹம்மது ஒரு பொய் நபி:

யூதர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, இந்த வசனத்தில் இவ்விவரங்களை முஹம்மது சேர்த்து இருந்தால், அவர் ஒரு பொய் நபி என்று உறுதியாகின்றது.

யூதர்கள் பொய் சொல்லியிருந்தால்!?

ஒருவேளை பழைய ஏற்பாட்டில் தேவன் சொல்லாத ஒன்றை சொன்னதாக யூதர்கள் பொய் சொல்லியிருந்தால், முஹம்மதுவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதாவது பழைய ஏற்பாட்டில் தேவன் இப்படிப்பட்ட கட்டளையை கொடுக்கவில்லை ஆனால் நீங்கள் அவர் மீது பொய் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்காட்டி தன்னுடைய இறைத்தூது உண்மை என்பதை அவர் உறுதிப்படுத்தி இருந்திருக்கலாம், இதன் மூலமாக தான் ஒரு நபி என்று அவர் நிரூபித்து இருந்திருக்கலாம்.

ஆனால் மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் படி இப்படி அல்லாஹ் செய்யவில்லை முகம்மதுவும் செய்யவில்லை! இதன் அர்த்தம் என்ன?  அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் முந்தைய வேதம் பற்றிய அறிவு இல்லை என்பதுதானே! உண்மையாகவே யெகோவா தேவன் தான் "அல்லாஹ்" என்பது உண்மையானால், யூதர்களின் இந்த பொய்யை அவர் கண்டுபிடித்து இருந்திருப்பாரே? யூதர்கள் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஒப்புக் கொண்டு பதில் சொல்வது தான் இவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. இதுதான் வஹியா? இதுதான் இறைவேதமா?

அல்லாஹ் உண்மையான இறைவனாக இருந்திருந்தால், இப்படிப்பட்ட சூழலில் அல்லாஹ் என்ன செய்து இருந்திருக்க வேண்டும்? யூதர்கள் ஒரு தவறான விஷயத்தை சொன்னபோது அல்லாஹ் கீழ்கண்ட விதமாக வசனத்தை இறக்கியிருந்திருக்கவேண்டும்.

யூதர்களே நான் உங்களிடம் இப்படிப்பட்ட வாக்குறுதியை ஒருபோதும் செய்யவில்லை, உங்கள் முன்னோர்களிடமும் செய்யவில்லை. இதை நம்பாதவர்கள் முந்தைய வேதத்தை படித்து பார்த்துக் கொள்ளட்டும். ஒரு இறைத்தூதரை உண்மையான‌ இறைத்தூதர் என்று கண்டுபிடிப்பதற்கு அற்புதங்கள் வேண்டும் என்று சொன்னேனே தவிர, வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்து ஒரு குர்‍பானியை/பலியை எரிக்க வேண்டும் என்ற அற்புதத்தை கண்டிப்பாக செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை, எனவே நீங்கள் பொய் சொல்கிறீர்கள். முஹம்மதுவே! இவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்.

முஹம்மதுவின் தர்மசங்கட நிலை:

முஹம்மது தம்மை நபி என்று சொல்லிக் கொண்ட நாள் முதல் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மூலமாக பல எதிர்ப்புகளுக்கு அவர் ஆளானார். தம்மை ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் யூதர்கள் ஒருபடி மேலே சென்று மூஸாவை போன்று மற்ற தீர்க்கதரிசிகளை போன்று நீர் அற்புதம் செய்தால்தான் நாம் நம்புவோம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு முறையும் அவரால் அற்புதம் செய்ய முடியவில்லை. 

ஒரு பக்கம் முந்தைய வேதங்களில் குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசிகளை போன்று தாமும் ஒரு தீர்க்கதரிசி தான் என்று சொல்லிக்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் செய்து காட்டியது போன்று ஒரு அற்புதமும் இவரால் செய்ய முடியவில்லை. இதனால் அவரை நபியென்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

  • முஹம்மதுவிடம் அற்புதங்களை எதிர்ப்பார்த்த யூத கிறிஸ்தவர்கள்: பார்க்க குர்‍ஆன் 2:118, 6:37, 10:20, 11:12, 13:7, 13:27, 20:133, 29:50

நம்முடைய இறைத்தூதரால் அற்புதம் செய்து காட்ட முடியாது, ஏனென்றால் அவர் ஒரு எச்சரிக்கை செய்பவர் மட்டும்தான் என்ற ஒரு பதிலை அல்லாஹ் கூறினான். அதேபோன்று இன்னொரு பதிலையும் அல்லாஹ் கூறினான் அதாவது ஒருவேளை அவர் அற்புதம் செய்து காட்டினாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பது தான் அது.  

  • பார்க்க: குர்‍ஆன் 2:145, 17:59, 28:48, 37:14-15

இப்போது நாம் ஆய்வு செய்து கொண்டு இருக்கும் வசனமும் இந்த இரண்டாம் வகை பதிலை சார்ந்ததுதான்.  அதாவது முந்தைய நபிமார்களுக்கு அவர்கள் கேட்டுக் கொண்டபடி வானத்திலிருந்து அக்கினி கொண்டு வந்து பலியை எரிக்க செய்தாலும் அதன் பிறகும் யூதர்களாகிய நீங்கள் அதை நம்பவில்லை, அவர்களை கொலையும் செய்தீர்கள். ஆகையால் இப்பொழுது நான் அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தை முஹம்மது மூலமாக செய்ய முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் சுருக்கமாகும்.

குர்‍ஆன் 3:183ஐ படிப்போம்.

3:183. மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும். (முஹம்மது ஜான் தமிழாக்கம்).

குர்‍ஆன் 3:183 வசனத்தின் இரண்டாவது பிரச்சனை:

யூதர்கள் முஹம்மதுவை ஏமாற்றுவதற்கு பொய்களைச் சொல்லி அற்புதங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல், அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறது இந்த வசனம். இது முதலாவது பிரச்சனை, இரண்டாவது பிரச்சனை என்னவென்றால்,  முந்தைய வேதங்களில் எந்த தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை கொண்டுவந்து குர்பானியை எரிக்கச் செய்து தன்னுடைய நபித்துவத்தை நிருபித்தார்? இந்த அற்புதம் செய்த எந்த நபியை யூதர்கள் கொலை செய்தார்கள், இந்த நபியுடைய பெயர் என்ன? இவ்விரண்டு கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் உண்டா, இல்லை? குறைந்தபட்சம் பைபிளில் இவ்விரண்டு கேள்விகளுக்கு பதில் உண்டா என்று தேடி பார்த்தால், அங்கேயும் பதில் கிடைப்பதில்லை -  இது தான் குர்‍ஆனின் இந்த வசனத்தில் உள்ள தீர்க்கமுடியாத பிரச்சனை!

பைபிளின்படி வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து பலிகளை எரித்த நிகழ்ச்சிகள் பற்றிய‌ கீழ்கண்ட வசனங்களில் எந்த ஒரு இடத்திலும் அப்படிப்பட்ட நபியை யூதர்கள் கொன்றதாக சரித்திரம் இல்லை, அப்படி என்றால் யாரைப் பற்றி குர்‍ஆன் பேசுகின்றது?

குர்‍ஆன் குறிப்பிடுவது  லேவியராகமம் 9:23-24 நிகழ்ச்சியையா?

இந்த வசனத்தின்படி மோசேயும் ஆரோனும் ஏற்கனவே இறைவனின் தூதர்களாக இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு வழிநடத்திக் கொண்டு வந்தார்கள். இவர்கள் கர்த்தருக்கு பலியிட்ட போது கர்த்தர் அக்கினியினால் அந்த பலியை அங்கீகரித்தார். இங்கு அவர்கள் தங்கள் நபித்துவத்தை நிரூபிக்கும் படி அக்கினி அற்புதம் செய்யவில்லை. மேலும் மோசேயையும் ஆரோனையும் யூதர்கள்  கொல்ல‌வில்லை ஆகையால் குர்‍ஆன் 3:183 சொல்வது இந்த நிகழ்ச்சியை அல்ல.

குர்‍ஆன் குறிப்பிடுவது  நியாயாதிபதிகள் 6:20-24 நிகழ்ச்சியையா?

இவ்வசனங்களில் கர்த்தருடைய தூதன் கிதியோன் என்ற ஒரு நபருக்கு காணப்பட்டு அவர் கொடுத்த பலியை அக்கினியினால் எரித்தார் மற்றும் அங்கீகரித்தார். இதுவும் குர்‍ஆன் சொல்லு வசனத்திற்கு பொருந்தவில்லை.  இந்த இடத்திலும் கிதியோன் தாம் ஒரு தீர்க்கதரிசி என்று மற்றவருக்கு நிரூபிக்கும் படி இந்த அற்புதம் நடைபெறவில்லை யூதர்கள் மேலும் கிதியோனை கொல்லவும் இல்லை.

குர்‍ஆன் குறிப்பிடுவது  1 நாளாகமம் 21:26 நிகழ்ச்சியையா?

இவ்வசனங்களில் தாவீது கர்த்தருக்கு பலியிட்ட போது கர்த்தர் அக்கினியினால் அந்த பலியை அங்கீகரித்தார் மேலும் எந்த இடத்திலும் தாவீது தம்மை ஒரு தீர்க்கதரிசி என்று நிரூபிப்பதற்காக இந்த அற்புதம் செய்யப்படவில்லை, அதுமாத்திரமல்ல யூதர்கள் தாவீதை கொல்லவுமில்லை. யூதர்களின் மிகப்பெரிய சிறந்த நபராக தாவீது இருக்கிறார், எனவே, குர்ஆன் சொல்லும் வசனம் நிச்சயமாக இதுவாக இருக்காது. 

குர்‍ஆன் குறிப்பிடுவது  2 நாளாகமம் 7:1-3  நிகழ்ச்சியையா?

இவ்வசனங்கள் சாலமோன் ராஜா தேவாலயம் கட்டி அங்கு பலியிட்டபோது கர்த்தருடைய அக்கினி வந்து அதனை சுட்டெரித்த நிகழ்ச்சியை குறிக்கிறது. இதுவும் குரான் சொல்லும் வசனத்திற்கு எந்த ஒரு வகையிலும் ஏற்றதாக இல்லை. சாலமோன் ராஜாவை யூதர்கள் கொல்லவுமில்லை.

குர்‍ஆன் குறிப்பிடுவது  2 ராஜாக்கள் 18  நிகழ்ச்சியையா?

இந்த வசனங்களில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி எலியா என்ற தீர்க்கதரிசி பற்றியது. இவர் கர்த்தருடைய தீர்க்கதரிசியாக நின்று கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சவால் விட்டு, பலியிட்டபோது  வானத்திலிருந்து அக்கினி வந்து பலியை பட்சித்தது. எலியா கர்த்தருடைய‌ தீர்க்கதரிசி என்று நிரூபணமானது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேற்கண்ட குர்ஆன் வசனம் சொல்லியதாக நாம் கணக்கில் எடுத்தாலும், இதுவும் பொருந்துவதாக இல்லை, ஏனென்றால் இந்த எலியா தீர்க்கதரிசியை யூதர்கள் கொலை செய்ய முயற்சி எடுக்கவும் இல்லை. 

எசபேல் என்ற ராணி இவரை கொல்வதற்கு முயற்சி எடுத்தாள், ஆனால் அவள் யூத பெண் அல்ல. அவள் வெற்றி பெறவில்லை. ஆகையால் குர்ஆன் யூதர்களைப் பார்த்து வானத்திலிருந்து அக்கினியை கொண்டு வந்து அற்புதம் செய்த நபரை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று சொல்லுகின்ற வசனம் அல்லது நிகழ்ச்சி பழைய ஏற்பாட்டிலும் எங்கும் இல்லை என்பது இவைகளின் மூலமாக நிரூபணமாகிறது

அப்படியானால், குர்‍ஆன் 3:183 ல் நடந்தது என்ன?

குர்ஆன் 3:183 வசனம் சொல்வது போன்று பழைய ஏற்பாட்டில் எங்குமில்லை. அப்படியானால் இந்த வசனத்தின்படி நடந்த நிகழ்ச்சி என்ன?

இதன் சுருக்கத்தை இங்கு தருகிறேன்:

1. யூதர்கள் அற்புதங்கள் செய்து காட்டுங்கள் என்று சொன்னார்கள், ஆனால் தம்மால் செய்ய முடியாது என்று முஹம்மது கூறிவிட்டார்.

2. எந்த ஒரு அற்புதமும் செய்ய முடியாத நிலையில் முஹம்மது இருந்தபோது, முஹம்மதுவின் நபித்துவத்தை சோதிப்பதற்காக, யூதர்கள் ஒரு யுக்தியை கையாண்டார்கள். அதாவது தங்களிடம் அல்லாஹ் “வானத்திலிருந்து நெருப்பை கொண்டு வந்து அற்புதம் நிகழ்த்துபவரை மட்டுமே நீங்கள் நபி என்று நம்பவேண்டும் என்று” ஒரு உடன்படிக்கை செய்தான், என்ற பொய்யை சொல்லியுள்ளார்கள். அல்லாஹ் இதனை மறுக்கவில்லை.

3. உண்மையாகவே முஹம்மது ஒரு நபியாக இருந்திருந்தால் அல்லாஹ் என்பவர் முந்தைய வேதங்களையும் கொடுத்தவராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? யூதர்களைப் பார்த்து  நீங்கள் சொல்வது பொய், இப்படிப்பட்ட உடன்படிக்கை செய்யப்படவில்லை முந்தைய வேதங்களைப் படித்து பாருங்கள் என்று சொல்லி அப்போழுதே அவர்களின் மூக்கை அறுத்து இருந்திருக்கலாம், ஆனால் இப்படி அல்லாஹ் செய்யவில்லை.

4. இப்படி செய்வதை விட்டுவிட்டு யூதர்களின் மாயத்தில் மாட்டிக்கொண்டு, தம்முடைய அரைகுறை ஞானத்தோடு “ஆமாம் இப்படி உடன்படிக்கை செய்தது உண்மைதான் ஆனால் அப்படி அனுப்பப்பட்ட நபிகளையும் நீங்கள் கொலை செய்தீர்கள்” என்று அல்லாஹ் குர்ஆனில் பதில் தருகிறார்.

5. நம் மேலே பைபிளிலிருந்து பார்த்தபடி யூதர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கை இல்லை என்பதும் தெரியும். இப்படிப்பட்ட அற்புதம் செய்தவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை அதாவது அவர்களின் முன்னோர்கள் கொலை செய்யவும் இல்லை என்பதும் தெரியும். இதிலிருந்து என்ன நிரூபணம் ஆனது என்று சொன்னால், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதும் குர்ஆன் இறைவேதம் இல்லை என்பதும் இவர்களுக்கு சரியாக புரிந்து விட்டது. அதனால் தான் அவர்கள் கடைசி வரை அவரை நபி என்று ஏற்றுக் கொள்ளவே இல்லை. இப்படி யூதர்கள் வைத்த ஒவ்வொரு சோதனையிலும் முஹம்மது தோற்றுக் கொண்டே இருந்தார் என்பதுதான் உண்மை. இதனால் தான், யூதர்கள் அரேபிய பூமியில் இருக்கக்கூடாது என்று விரும்பி, அவர்களை நாடு கடத்தினார்.

முடிவுரை: இது வரை பார்த்த விவரங்கள் நமக்கு எதைக் காட்டுகின்றது? குர்‍ஆன் 3:183ம் வசனம், ஒரு சரித்திர பிழையைச் செய்துள்ளது. யூதர்களின் மாயவலையில் அல்லாஹ் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளான். இதனை புரிந்துக்கொள்ளாத முஹம்மது, இல்லாத ஊருக்கு டிக்கெட் வாங்கி பயணித்துள்ளார்.

முஹம்மது ஒரு இறைத்தூதர் என்பதற்கு, முஹம்மதுவைத் தவிர வேறு யாருமே சாட்சியில்லை. ஜிப்ரீல் தூதன் முஹம்மதுவை சந்தித்ததற்கு அவரைத் தவிர வேறு யாருமே சாட்சியில்லை. முஹம்மதுவின் சொந்த மக்கா மக்களும், யூத கிறிஸ்தவர்களும் நம்பும் படி, எந்த ஒரு அற்புதத்தையும் முஹம்மது செய்யவில்லை. முஹம்மது அற்புதங்கள் செய்யமாட்டார் என்று அல்லாஹ் அடித்துச் சொல்லியுள்ளான். முந்தைய நபிமார்கள் மூலமாக இறைவன் பல அற்புதங்கள் செய்து, தம்முடைய நபிகளின் நம்பகத்தன்மையை நிருபித்தார். ஆனால், முஹம்மதுவின் நம்பகத்தன்மையை நிருபிக்க, அல்லாஹ் எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை, அதனை விரும்பவும் இல்லை.

படித்தவர்களும், அறிவுடையோர்களும் இப்போது  என்ன முடிவு எடுக்க முடியும்? முஹம்மது ஒரு மெய்யான நபி அல்ல, அவர் கொண்டு வந்த புத்தகம் வேதமல்ல, அற்புதங்கள் செய்யாத அல்லாஹ் இறைவன் அல்ல என்று தான் முடிவு எடுக்கமுடியும்! 

இன்று நாம் காணும் போலிச்சாமியார்கள், பாபாக்கள் வரிசையில் முஹம்மதுவையும் தான் வைக்கமுடியும்! நித்தியானந்தா குறைந்த பட்சம் மேஜிக்காவது செய்து, தனக்கு தெய்வீகசக்தி உள்ளது என்றுச் சொல்லிக்கொள்கிறார். முஹம்மது உண்மையான நபியாக இருந்திருந்தால், அல்லாஹ் உண்மையான தெய்வமாக இருந்திருந்தால், ஒரே ஒரு அற்புதம் செய்து, மக்கா மக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைத்து மக்களின் வாய்களை அடைத்திருந்திருக்கலாம், அதனை அவர் செய்யவில்லை, இதனால் மக்கள அவரை நம்பவில்லை.

முஹம்மதுவிற்கு ஆள்பலமும், பணபலமும் கிடைத்தபிறகு, வாளைக் காட்டி மக்களை பயமுறுத்தி முஸ்லீம்களாக மாற்றினார், இதனை மறுப்பவர்கள், ஹிஜ்ரிக்கு பிறகு இஸ்லாமின் சரித்திரத்தை இஸ்லாமிய நூல்களிலிருந்தே படித்துக்கொள்ளட்டும், ஆய்வு செய்யட்டும்.

ஆக, குர்‍ஆன் 3:183 ஒரு வஹியா? அல்லது வலியா? என்ற கேள்வி எழுப்பினால், 'குர்‍ஆன் ஒரு வலிதான், வஹி அல்ல' என்பது புலனாகும்.

தேதி: 22nd Nov 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்