குர்‍ஆன் 6:101 - சாலைகளுக்கு மனைவியில்லாமல் மகன் இருக்கமுடியும், ஆனால் அல்லாஹ்விற்கு மனைவியில்லாமல் மகன் இருக்கமுடியாது!

(மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)

இது ஒரு சுருக்கமான கட்டுரை. உலகையும் அதில் உள்ளவைகளையும் படைத்த அல்லாஹ்வினால் ஒரு மகனை மனைவியில்லாமல் படைக்கமுடியவில்லை. அப்படி தனக்கு ஒரு மகன் இருக்கவேண்டுமென்றால், நிச்சயமாக மனைவி இருந்தே ஆகவேண்டும் என்று சொல்கின்றான் அல்லாஹ்.

குர்‍ஆன் 6:101 படிப்போம்

முஹம்மது ஜான் தமிழாக்கம்

6:101 அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்

6:101. முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கின்றான். அன்றி, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். 

IFT - தமிழாக்கம்

6:101. வானங்களையும் பூமியையும், முன்மாதிரியின்றிப் படைத்தவன் அவனே! அவனுக்கு மனைவியே இல்லாதபோது குழந்தை எப்படி இருக்க முடியும்? அவனே ஒவ்வொன்றையும் படைத்திருக்கின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

சவூதி தமிழாக்கம்

6:101. முன் மாதிரியின்றியே வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன், அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளையிருக்க முடியும்? இன்னும், ஒவ்வொரு பொருளையும் அவனே படைத்திருக்கின்றான், அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

பீஜே தமிழாக்கம்

6:101. (அவன்) வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

Khalifa Translation

6:101 The Initiator of the heavens and the earth. How can He have a son, when He never had a mate? He created all things, and He is fully aware of all things. 

Pickthall Translation

6:101  The Originator of the heavens and the earth! How can He have a child, when there is for Him no consort, when He created all things and is Aware of all things? 

முன்மாதிரி எதுவும் இன்றி, உலகை படைத்த அல்லாஹ்விற்கு, மனைவி இல்லாமல் மகன் இருக்கமுடியாது என்பது ஆச்சரியம் தான்.

இந்த குர்‍ஆனின் வசனத்தை நன்கு அறிந்த முஸ்லிம்கள், "இயேசு இறைகுமாரன்" என்றுச் சொல்லும் போது, அவர்கள் உடனே 'இது எப்படி சாத்தியம், இறைவனுக்கு மனைவி இல்லாத போது, எப்படி மகன் இருக்கமுடியும்?' என்று கேள்வி கேட்கிறார்கள்.

மகன் என்றால், உண்மையில் கணவன் மனைவி இணையும் போது பிறப்பது தான் மகன்/மகள் என்று இவர்கள் தவறாக கருதுகிறார்கள். ஆனால், குர்‍ஆனே பல இடங்களில், சாலைகளுக்கு மகன்கள் இருக்கிறார்கள் என்கிறது, புத்தகங்களுக்கும் தாய் இருக்கிறாள் என்றுச் சொல்கிறது. இதுமட்டுமல்ல, நகரங்களுக்கே தாய் இருக்கிறாள் என்றுச் சொல்கிறது.

  • சாலைகளுக்கு மகன் இருந்தால், சாலைகளின் தாய் யார்?
  • புத்தகங்களுக்கு தாய் இருக்கிறாள் என்றால், தந்தை யார்?
  • நகரங்களின் தாய் என்று ஒரு பெண் இருந்தால், அந்த நகரத்தைப் பெற்றெடுக்க, அந்த பெண்ணொடு தாம்பத்தியம் நடத்திய அந்த தந்தை யார்? 

போன்ற கேள்விகள் எழுகின்றதல்லவா?

வழிப்போக்கர்கள் = பாதைகளின் மகன்கள் = இப்னுஸ் ஸபீல்

குர்‍ஆன் வசனங்கள்: 2:177, 2:215, 4:36, 8:41, 9:60, 17:26, 6:38 & 59:7

நீண்ட பயணங்கள் செய்பவர்கள், வழிப்போக்கர்களை குறிக்க குர்‍ஆன் 'சாலை/பாதைகளின் மகன்கள்' என்ற வழக்கச் சொல்லாடலை பயன்படுத்துகிறது.

புத்தகங்களின் தாய் - உம்முல் கிதாப் & நகரங்களின் தாய் - உம்முல் குரா

குர்‍ஆன் வசனங்கள்: 13:39, 43:4, 6:92

புத்தகங்களுக்கெல்லாம் தாய் 'குர்‍ஆன்' என்றும், நகரங்களுக்கெல்லாம் தாய் 'மக்கா நகரம்' என்றுச் சொல்லி, குர்‍ஆன் மற்றும் மக்காவின் மேன்மையை உயர்த்தும்படி குர்‍ஆன் இப்படிப்பட்ட சொல்லாடல்களை பயன்படுத்தியுள்ளது. அவைகளின் தொன்மையையும் முக்கியத்துவத்தையும் நச்சென்று புரியவைக்க இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறது.

ஒரு முக்கியமான விவரத்தை சொல்லும்போது, உலக மனிதர்களின் உறவுகளை சம்மந்தப்படுத்தி, ஒப்பிட்டுச் சொல்லும் போது, அவ்விஷயத்தின் முக்கியத்துவம் நமக்கு சரியாக புரியும், இதற்காகத் தான் இப்படி சொல்லப்படுகின்றதே தவிர, உண்மையாகவே கணவன் மனைவியை கூட்டுறவில் இவர்கள் பிறந்தவர்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது.

தேசப்பிதா மகாத்மா காந்தி:

நம் தேசப்பிதா மகாத்மா காந்தி ஆவார், பாகிஸ்தானின் தேசப்பிதா முஹம்மது அலி ஜின்னா ஆவார், இதன் விளக்கத்தை  இன்னும் அதிகமாக விவரிக்கவேண்டுமா? என்ன? 

எந்த இந்தியனாவது, 'காந்தி அவர்களை எப்படி தேசப்பிதா என்று சொல்வீர்கள், அவர் நம் இந்திய பெண்கள் அனைவருக்கும் கணவரா?' என்று கேள்வி எழுப்பினால், 'பாவம் இவர், இவரை சீக்கிரமாக மருத்துவ மனைக்கு அனுப்புங்கள்' என்று சொல்வார்கள். 

நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் என்றுச் சொன்னால், 'உடல் சம்மந்தமான தகப்பன் உறவு இங்கு குறிப்பிடவில்லை', அதற்கும் மேலாக, ஒரு தகப்பன் எப்படி தன் குடும்பத்திற்காக தன் முழு மூச்சுடன் உழைப்பாரோ, அது போல இந்த நபர் உழைத்தார் என்று பொருள்பட கூறப்படுகிறதே தவிர, வேறு வகையில் அல்ல என்பதை நாம் அறிவோம்.

இதே போலத்தான், 'இயேசு இறைக்குமாரன்' என்று சொல்லும் போது, இறைவனுடைய தன்மையுடையவர், மேன்மையுடையவர் என்று பொருள்கொள்ளவேண்டும் இதைத் தான் கிறிஸ்தவ இறையியலும் சொல்கிறது. ஆனால், அறியாமையில் இருக்கும் முஸ்லிம்கள் இதனை புரிந்துக்கொள்வதில்லை!  இறைவனுக்கு மனைவி இல்லாமல் இருக்க அவனுக்கு எப்படி மகன் இருக்கமுடியும் என்று குர்‍ஆன் 6:101 சொல்வது போன்று முட்டாள்தனமாக கேட்கிறார்கள்.

தேதி:  2nd Oct 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்