கெய்ரோ 1924 குர்‍ஆன், மூல அரபு குர்‍ஆன்களாகிய தாஷ்கண்ட் & இஸ்தான்புல் கையெழுத்துப் பிரதிகளோடு சரிபார்க்கப்படாமல் வெளியிடப்பட்டதா?

(நாம் படித்துக்கொண்டு இருக்கும் குர்‍ஆன் நம்பகமானதா?)

கேள்வியை மாற்றிக் கேட்கிறேன்.  1924ம் ஆண்டு கெய்ரோவில் வெளியிட்ட குர்‍ஆனை, "பழமையான கையெழுத்து குர்‍ஆன்களாக" கருதப்படுகின்ற தாஷ்கண்ட் மற்றும் இஸ்தான்புல் குர்‍ஆனோடு ஒப்பிட்டு, அதன்படி தரப்படுத்தினார்களா?

1924ம் ஆண்டு எகிப்து வெளியிட்ட குர்‍ஆன், அல்லது சௌதி அரசு 1985ம் ஆண்டிலிருந்து அச்சடித்து உலகெங்கிலும் அனுப்புகின்ற குர்‍ஆன்கள், அல்லது இன்று 95% உலக முஸ்லிம்களின் வீட்டில் உள்ள குர்‍ஆன்கள் அனைத்தும், 'குர்‍ஆனின் மூலப் பிரதிகளாக கருதப்படுகின்ற இஸ்தான்புல், மற்றும் தாஷ்கண்ட் பிரதிகளோடு' ஒப்பிட்டு, தரப்படுத்தப்பட்டு பிரிண்ட் செய்யப்படவில்லை, என்பது தான் உண்மை.

முஸ்லிம்களின் நம்பிக்கையும், சந்தேக கேள்விகளும்: 

 1. இது எப்படி உண்மையாகும்? உலகில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் படித்துக்கொண்டு இருக்கும் 1924ம் ஆண்டு வெளியிடப்பட்ட குர்‍ஆன், மூல அரபி குர்‍ஆன்களோடு சரிபார்க்கப்படாதவைகளா?
 2. எங்கள் இமாம்களும், அறிஞர்களும், நம் கையில் இருக்கும் குர்‍ஆன், புள்ளிக்கு புள்ளி, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை, இஸ்தான்புல் மற்றும் சமர்கண்ட் குர்‍ஆன்களோடு சரியாக இருக்கிறது என்றுச் சொல்வதெல்லாம் பொய்களா?
 3. உலக முஸ்லிம்கள் அனைவரும் படிக்கும் குர்‍ஆன் மூலத்தோடு சரி பார்க்கப்படாத புத்தகமா?
 4. ஏன் எகிப்து, 1924ல் இப்படிப்பட்ட ஒரு பெரிய தவறைச் செய்தது? அவர்களுக்கு மூல குர்‍ஆன்கள் இருப்பது தெரியாதா?
 5. ஒரு தவறான சரி பார்க்கப்படாத குர்‍ஆனை எகிப்து அரசு எப்படி பிரிண்ட் செய்யலாம்,  அல்லாஹ் அவர்களை மன்னிப்பானா?
 6. இதே தவறை, சௌதி அரசாங்கம், 1985ம் ஆண்டிலிருந்து, பல கோடிகளை செலவு செய்து, அச்சகம் அமைத்து, உலகெங்கிலும் அனுப்பிக்கொண்டு இருக்கிறதே, இவர்களுக்காகவாவது ஞானமில்லையா?

ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால், மேற்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு பதில்களைத் தேடியிருப்பேன்.

சான்றுகள் ஏதாவது உண்டா?

நாம் அனைவரும் படிக்கும் குர்‍ஆன், மிகவும் பழமையானதாக கருதப்படும் மூல குர்‍ஆன்களோடு சரி பார்க்கப்படாமல் பிரிண்ட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன சான்றை நீங்கள் கொடுக்கிறீர்கள்? என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்பலாம்.

இவ்வளவு பெரிய விஷயத்தை சான்றுகள் இல்லாமல், முன்வைக்கமுடியுமா? நான் என்ன முஸ்லிமா! சான்றுகள் கொடுக்காமல் பொய்களை அள்ளி வீசுவதற்கு, இதோ சான்றுகள்.

சான்று 1: சமர்கண்ட் குர்‍ஆனோடு 1924ம் ஆண்டு வெளியான கெய்ரோ குர்‍ஆனின் ஒப்பீடுதல்:

கீழ்கண்ட கட்டுரையில், சமர்கண்ட் மூல பிரதிகளோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை (அதாவது உங்கள் கைகளில் இருக்கும் குர்‍ஆனை ) ஒப்பிட்டு, அவைகளில் உள்ள எழுத்துப்பிழைகள், எழுத்து வித்தியாசங்கள் மற்றும் வார்த்தை வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளன‌, மனவலிமையுள்ள முஸ்லிம்கள் அவைகளை சொடுக்கி படிக்கலாம்.

தமிழ் வீடியோ: இதைப் பற்றிய தமிழ் வீடியோவை இங்கு பார்க்கலாம்

1924ம் ஆண்டின் குர்‍ஆனை, மூல புரதிகளோடு ஒப்பிட்டு, அதன் படி பிரிண்ட் செய்திருந்தால், இத்தனை வித்தியாசங்களை, தவறுகளை அவைகள் கொண்டு இருக்குமா?

சான்று 2: முஸ்லிம்களே அங்கீகரித்த ஆய்வுக் கட்டுரைகள்:

குர்‍ஆன்12-21 (quran12-21.org) என்ற தளத்தில், கி.பி. 12ம் நூற்றாண்டிலிருந்து, இன்றுவரை அதாவது 21ம் நூற்றாண்டு வரை, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளில் முதன் முதலாக, பிரிண்ட் செய்த, மொழியாக்கம் செய்த, குர்‍ஆன்கள் பற்றிய ஆய்வுகள் கொடுத்துள்ளார்கள்.

தள மூல தொடுப்பு: https://quran12-21.org/en 

கி.பி. 1550 முதல், 1924 வரையில், பல மொழிகளில் ஐரோப்பிய கண்டத்தில்  மொழியாக்கம் செய்யப்பட்ட குர்‍ஆன் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

 1. Introductory note to the Cairo edition (1924)
 2. Introductory note to Muhammad Hamidullah’s French translation, as revised by Fode Soriba Camara, Mohamed Ahmed Lo and Ahmad Mouhammad al-Amine al-Chinquity, at the initiative of the King Fahd Complex (2000)
 3. Introductory note to Régis Blachère’s French translation (1957).
 4. Introductory note to George Sale’s English translation (1734)
 5. Introductory note to the Russian translation (1716)
 6. Introductory note to André Du Ryer’s French translation (1647)
 7. Introductory note to Giovanni Castrodardo’s Italian translation, as published by Andrea Arrivabene (1547)
 8. Introductory note to Robert of Ketton’s Latin translation (1143), as edited by Theodor Bibliander (1550). 
 9. Introductory note to Tafsīr al-Ğalālayn (15th century)

தமிழில்:

 1. அரபி பிரிண்ட் கெய்ரோ குர்‍ஆன் 1924
 2. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 2000
 3. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 1957
 4. ஆங்கில குர்‍ஆன் மொழியாக்கம் 1734
 5. ரஷ்ஷிய குர்‍ஆன் மொழியாக்கம் 1716
 6. பிரென்சு குர்‍ஆன் மொழியாக்கம் 1647
 7. இத்தாலிய குர்‍ஆன் மொழியாக்கம் 1547
 8. லத்தீன் குர்‍ஆன் மொழியாக்கம் 1550
 9. ஜலலைன் தஃப்ஸீர் அறிமுகம் - 15வது நூற்றாண்டு

மேற்கண்ட ஒவ்வொரு மொழியாக்கத்தைப் பற்றிய அடிப்படை விவரங்கள் அந்தந்த தொடுப்புக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் கெய்ரோ 1924ம் ஆண்டு குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை படிக்கும் போது, கீழ்கண்ட விவரங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கும், இந்த விவரங்களை முஸ்லிம் ஆய்வாளர்களே எழுதியுள்ளார்கள் என்பது தான் ஆச்சரியத்தின் ஆழம்:

Quote:

The Cairo Edition (1924)

"However, it is worth noting that the variations observed in this case do not have any real impact on the meaning of the text. As for the Quranic script (rasm), the variant readings (qirā'āt) and the counting of the verses (fawāṣil), the commission consulted Quranic science treatises. In particular, they used the works of Abū ʿAmr al-Dānī (d. 444/1053) and his disciple Abū Dāwūd Ibn Naǧāḥ (d. 496/1103). In contrast, the more ancient codices of the Qur'ān, called maṣāḥif in Arabic, and which are preserved in Muslim countries such as Egypt, Syria and Turkey were ignored. Neglecting those maṣāḥif is somehow unfortunate because recent studies show interesting disparities between what these Quranic treatises of science say about the manuscripts, and what the codices at our disposal actually contain. One can notably find in the latter extra-canonic reading variants that preceded the period when the Quranic corpus was standardized."

இருப்பினும், இங்கு காணப்படும் வித்தியாசங்கள், வசனங்களின் அர்த்தத்தை மாற்றுவதில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.  குர்‍ஆனின் எழுத்துக்கள் (rasm), குர்‍ஆனின் பலவகையான வாசிப்பு முறைகள் (qirā'āt), குர்‍ஆன் வசன எண்ணிக்கைகள் (fawāṣil) பற்றிய விவரங்களை, இந்த குழு குர்‍ஆன் சம்மந்தப்பட்ட‌ பல நூல்களை ஆய்வு செய்துள்ளது. முக்கியமாக, இந்த குழு அபு அம்ர் அத்தானி(இறப்பு. ஹிஜ்ரி 444/கி.பி 1053) மற்றும் அவரது சீடர் அபு தாவூத் இப்னு நகஹ் (இறப்பு. ஹி. 496/கி.பி 1103) ஆகியோரின் புத்தகங்களை பயன்படுத்தினர். மாறாக, இந்த குர்‍ஆன் குழு எகிப்து, சிரியா மற்றும் துருக்கி போன்ற முஸ்லீம் நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வரும், குர்‍ஆனின் மிகவும் பழமையான அரபு கையெழுத்துப் பிரதிகளை (மஸாஹிஃப்) புறக்கணித்தார்கள். இப்படி அவர்கள் பழமையான குர்‍ஆன் பிரதிகளோடு சரி பார்க்காதது ஒரு துரதிர்ஷ்டமான  செயலாகும். ஏனென்றால், சமீப காலமாக இந்த அரபு கையெழுத்துப் பிரதிகள் மீது செய்யப்பட்ட ஆய்வுகளின் படி, கெய்ரோ குர்‍ஆனுக்கும், கையெழுத்துப் பிரதிகளுக்கும் இடையே பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. கெய்ரோ குர்‍ஆனில் பல மாற்றங்கள்/வித்தியாசங்கள் காணப்படுகின்றன, முக்கியமாக‌ கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுபவைகளே பழமையானதாக உள்ளன.

. . .

To sum up, the interpretation of the Qur'ān and the observed differences in its translations implies a study of the nature of the Quranic corpus and the variants on which it was based. The major problem with the Cairo edition lies in the absence of references to manuscripts: consulting them would have probably allowed us to obtain a text elaborated in a specific period of time, and thus to assess to what extent it is faithful or not to a certain reality of the corpus we have at our disposal. 

முடிவுரையாக சொல்வதானால், மூல குர்‍ஆனுக்கும், அதன் பிறகு உண்டான‌ குர்‍ஆன் ஓதும் முறைகளில் (கிராத்துக்களில்) உள்ள வித்தியாசங்களின் வெளிப்பாடு தான், குர்‍ஆனின் மொழியாக்கங்களில் காணப்படும் வித்தியாசங்கள் ஆகும். கெய்ரோ குர்‍ஆனின் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், "எந்த இடத்திலும், எந்த ஒரு மூல அரபு கையெழுத்துப் பிரதிகள் பற்றிய குறிப்புகளை அது சான்றுகளாக‌ கொடுக்கவில்லை". ஒருவேளை, இப்படிப்பட்ட மூல கையெழுத்துப் பிரதிகளின் குறிப்புக்கள் கெய்ரோ குர்‍ஆனில் கொடுத்திருந்தால், அவைகளின் மூலமாக, குர்‍ஆனின் சரியான பின்னணி/காலங்கள்/அர்த்தங்கள் பற்றி அறிந்துக்கொள்ள‌ வாய்ப்பு கிடைத்திருக்கும், மேலும், அவ்வசனங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சான்று கிடைத்து,  அவைகளை ஏற்றுக்கொள்ளலாமா, இல்லையா என்ற முடிவுக்கு வரலாம்.

மேலேயுள்ள விவரங்களை சரியாக கூர்ந்து படித்துப் பாருங்கள், முக்கியமாக ஆங்கிலத்தில் படியுங்கள், உண்மை புரியும். 

மேற்கண்ட இரண்டு பத்திகளின் சுருக்கம்:

 • கெய்ரோ குர்‍ஆன் தயாரிக்கும் போது, மூல அரபு குர்‍ஆன் பிரதிகளை சரிபார்க்காதது துரதிர்ஷ்டமானது. அவர்கள் மூல பிரதிகளை புறக்கணித்தார்கள்.
 • கெய்ரோ குர்‍ஆனின் மிகப்பெரிய பிரச்சனை (தவறு), மூல அரபு குர்‍ஆன்களோடு சரி பார்க்காதது தான்.
 • இப்படி அவர்கள் செய்யாமல் இருந்திருந்தால், நமக்கு எவைகள் சரியான வசனங்கள் என்று அறிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகியிருந்திருக்கும்.
 • இதனால், இன்று மூல குர்‍ஆன்களை ஆய்வு செய்யும் போது, நம் கையில் உள்ள குர்‍ஆனோடு அனேக வசனங்கள் அவைகள் வித்தியாசப்படுகின்றன.

முடிவுரை:

மேலே கண்ட விவரங்களிலிருந்து அறிவது என்னவென்றால்,  இன்று உலக முஸ்லிம்கலில் 95% பேர் பயன்படுத்தும் குர்‍ஆன் கெய்ரோவில் 1924ம் ஆண்டு வெளியிட்ட குர்‍ஆன் ஆகும், அதையே சௌதி அரசும் 1985ம் ஆண்டு முதல்  அதிகாரபூர்வமான குர்‍ஆனாக‌ பிரிண்ட் செய்து இலவசமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறது.  ஆனால், இந்த குர்‍ஆனை தரப்படுத்தும் போது 1924ம் ஆண்டு அல் அஜர் பல்கலைக்கழக முஸ்லிம்கள் அறிஞர்கள், இன்று இஸ்தான்புல் மற்றும் சமர்கண்ட் இடங்களில் வைக்கப்பட்டுள்ள 'மூல அரபு குர்‍ஆன்' கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டு, சரிபார்த்து வெளியிடவில்லை என்பது, வேதனையான மற்றும் ஆச்சரியமான விஷயமாகும்.

இந்த விஷயம் எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்?

இன்று, அந்த மூல அரபு குர்‍ஆன்களோடு, 1924ம் ஆண்டின் குர்‍ஆனை ஒப்பிட்டால், பலப்பல வித்தியாசங்கள், எழுத்து நீக்கங்கள், வார்த்தை நீக்கங்கள் போன்று அனேக வித்தியாசங்கள் காணப்படுகின்றன, இதனை முஸ்லிம் அறிஞர்கள் அறிந்து, நொந்துக்கொள்கிறார்கள்.

ஆனால், நம்முடன் இருக்கும் முஸ்லிம் அறிஞர்கள், நமக்கு இவைகள் தெரியாது என்று நம்பி, "நாம் படிக்கும் குர்‍ஆன் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும், எழுத்துக்குஎழுத்து புள்ளிக்கு புள்ளி, வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியாக இருக்கிறது' மேலும், பழைய மூல அரபு குர்‍ஆன்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள், ஒரே ஒரு வித்தியாசம் கூட இருக்காது என்று பல பொய்களை அள்ளிவீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களை யார் கேள்வி கேட்பது? உண்மையான முஸ்லிம்கள் தான் கேள்வி கேட்கவேண்டும்.

முஸ்லிம்கள் கேட்பார்களா? தங்கள் குர்‍ஆனை சரி செய்துக்கொள்வார்களா? மூல பழைய குர்‍ஆன்கள் நம்மிடம் இருக்கும் போது, அவைகளை பிரிண்ட் செய்து படிப்பார்களா? அல்லது பல தவறுகள் இருக்கின்ற 1924ம் ஆண்டில் குர்‍ஆனை படிப்பார்களா?

சமர்கண்ட், இஸ்தான்புல் குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள் பற்றிய விவரங்களை கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி பார்க்கலாம்:

 1. The “Qur'ān Of ʿUthmān” At Tashkent (Samarqand), Uzbekistan, From 2nd Century Hijra
 2. Samarkand Kufic Quran
 3. Topkapi manuscript
 4. Uthman Quran or Samarkand Kufic Quran (Youtube Video)

தேதி: 30th Oct 2021


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்