குர்‍ஆன் 30:26: குர்‍ஆன் முரண்பாடு: வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடக்கின்றனவா?

குர்‍ஆனிலிருந்து ஒரு வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்: குர்‍ஆன் 30:26

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கு அடிபணிந்து நடக்கின்றன.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர்.

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் உள்ளவையாவும் அவனுக்கே உரியன! (இவை) ஒவ்வொன்றும் அவனுக்கே கீழ்ப்படிந்து நடக்கின்றன.

பீஜே தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை.

ஆங்கிலத்தில்:

Pickthall:

Unto Him belongeth whosoever is in the heavens and the earth. All are obedient unto Him.

Sahih Intl:

And to Him belongs whoever is in the heavens and earth. All are to Him devoutly obedient.

Yusuf Ali:

To Him belongs every being that is in the heavens and on earth: all are devoutly obedient to Him.

Transliteration (ஒலிப்பெயர்ப்பு):

Walahu man fee alssamawati waalardi kullun lahu qanitoona

இந்த வசனத்தில் அப்படி என்ன முரண்பாடு உள்ளது? என்ற சந்தேகம் வருகின்றதா? இந்த வசனம் பெரும்பான்மையான குர்‍ஆன் வசனங்களுக்கு முரண்படுகின்றது என்றுச் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

குர்‍ஆன் 30:26ன் பொருள்:

இந்த வசனத்தின் படி வானத்தில் உள்ளவைகள் அனைத்தும், அதாவது தேவதூதர்கள்/மலக்குகள்/ஜின்கள் மற்றும் மற்ற கிரகங்கள் அனைத்தும் அவனுக்கு கீழ்படிகின்றன, மேலும் பூமியில் உள்ளவைகள் கூட அவனுக்கு கீழ்படிகின்றன. பூமியில் உள்ளவைகள் என்றால், மரம் செடி கொடி, மலைகள், கடல், நிலத்தில் நீரில் வாழும் மிருகங்கள், கடைசியாக மனிதர்கள் உட்பட அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றன.

குர்‍ஆனின் முரண்பாடு:

உண்மையாகவே வானத்தில் மற்றும் பூமியில் உள்ளவைகள் (உள்ளவர்கள்) அனைத்தும் அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றனவா?

இந்த கேள்விக்கு குர்‍ஆனே "இல்லை, என்று அழுத்தமாக பதில் சொல்கிறது". 

வானத்தில் கீழ்படியாமை: அல்லாஹ்வின் சமூகத்திலேயே கீழ்படியாமை தொடங்கியது.

கீழ்கண்ட அனைத்து வசனங்களிலும் பல முறை அல்லாஹ் தனக்கு சைத்தான்/இப்லீஸ் கீழ்படியவில்லை என்று அங்கலாய்க்கிறான். நீ ஏன் நான் சொன்னபடி செய்யவில்லை என்று கேள்வி கேட்கிறான், அதற்கு 'ஆமாம், நான் உனக்கு கீழ்படிய முடியாது' என்று இப்லீஸ் பதில் சொல்கிறான். கீழ்படியாமல் இருந்தது மட்டுமல்ல, அதன் காரணத்தையும் நச்சென்று கூறியுள்ளான். வானத்தில் அல்லது அல்லாஹ்வின் சமுகத்தில் உள்ள/இருந்த‌ இப்லீஸ்/சைத்தான் அல்லாஹ்விற்கு கீழ்படியவில்லை என்பதற்கு குர்‍ஆனிலிருந்தே சான்றுகள்.

இவ்வசனங்கள் அனைத்தும், குர்‍ஆன் 30:26க்கு முரண்படுகின்றதல்லவா!

குர்‍ஆன் 2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

குர்‍ஆன் 7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

குர்‍ஆன் 7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

குர்‍ஆன் 15:31. இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். 15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான். 15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.

குர்‍ஆன் 17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.

குர்‍ஆன் 18:50. அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக;அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்;அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான் ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

குர்‍ஆன் 20:116. “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.

குர்‍ஆன் 38:74. இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான். 38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான். 38:76. “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.

(அனைத்து வசனங்கள் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து மேற்கோள் காட்டப்படுகின்றன‌)

பூமியில் கீழ்படியாமை: 

மேற்கண்ட வசனங்களின் படி வானத்தில் அல்லஹ்விற்கு கீழ்படியாதவன் (இப்லீஸ்) இருக்கிறான் என்பதைக் காண்டோம். இப்போது நம் கவனத்தை பூமியின் பக்கம் திருப்புவோம்.

மனிதர்கள் தவிர மற்றவைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு கீழ்படிவதாக நாம் கருதிக்கொள்வோம். மனிதர்ள் தனக்கு கீழ்படியவில்லை என்றும், அவர்கள் இதனால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அனேக முறை இப்படிப்பட்டவர்களை தாம் தண்டித்து அழித்துவிட்டதாகவும் அல்லாஹ் குர்‍ஆனில் ஆணித்தரமாகச் சொல்கின்றான்.

கீழ்கண்ட வசனங்கள் அனைத்தும் குர்‍ஆன் 30:26க்கு முரண்படுகின்றதல்லவா?

1) ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார் 

குர்‍ஆன் 20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.

2) அல்லாஹ்வுக்குப் பணியாது மாறு செய்து வரம்புகளை மீறினார்கள்

குர்‍ஆன் 2:61. இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.

3) மாறு செய்தோம் என்று நேரடியாக மக்கள் கூறினார்கள்

குர்‍ஆன் 2:93. தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.

4) மக்களே மாறு செய்யாதீர்கள் என்று கட்டளை

குர்‍ஆன் 2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

5) அல்லாஹ்வின் சான்றுகளை கண்டும் மாறு செய்தார்கள்

குர்‍ஆன் 3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.

குர்‍ஆன் 3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

6) மாறு செய்பவனுக்கு தண்டனை

குர்‍ஆன் 4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.

குர்‍ஆன் 4:42. அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.

குர்‍ஆன் 7:135. அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.

குர்‍ஆன் 16:112. மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.

குர்‍ஆன் 19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

குர்‍ஆன் 24:63. (முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

குர்‍ஆன் 29:66. அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.

குர்‍ஆன் 65:8. எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.

குர்‍ஆன் 69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

குர்‍ஆன் 73:16. எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.

7) வரம்பு மீறி மாறு செய்தவர்கள் நபிகளால் சபிக்கப்பட்டவர்கள்

குர்‍ஆன் 5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.

8) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்தவர்கள்

குர்‍ஆன் 9:77. எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

9) ஆது கூட்டத்தினர் மாறு செய்தார்கள், அவர்களுக்கு கேடு தான்

குர்‍ஆன் 11:59. (நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.

குர்‍ஆன் 11:60. எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக “ஆது” கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான “ஆது” கூட்டத்தாருக்கு கேடுதான்.

10) மாறு செய்தால் வேதனையுண்டு என்ற எச்சரிக்கை

குர்‍ஆன் 14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

11) யார் மாறு செய்தாலும், அல்லாஹ்விற்கு நஷ்டமில்லை

குர்‍ஆன் 14:8. மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.

12) வானத்திலும் அல்லாஹ்விற்கு மாறு செய்ய ஷைத்தான் உள்ளான் என்று பூமியில் உள்ளவனின் எச்சரிக்கை

குர்‍ஆன் 19:44. “என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.

13) மாறு செய்பவர்கள் பாவிகள்

குர்‍ஆன் 24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

14) மாறு செய்பவர்கள் பகிரங்க வழிகேட்டில் உள்ளவர்கள்

குர்‍ஆன் 33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

15) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்

குர்‍ஆன் 42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

குர்‍ஆன் 82:6. மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

இதுவரை பார்த்த வசனங்கள் அனைத்தும், உலகில் உள்ள மனிதர்கள் தங்கள் சுய விருப்பத்தின் படி, அல்லாஹ்விற்கு கீழ்படிவார்கள், அதே போன்று கீழ்படியாமலும் போவார்கள் என்பதைத் தான் காட்டுகின்றது. இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுத்தான், இன்னும் கொடுப்பான் என்று கூறுகின்றன.

ஆனால், குர்‍ஆன் 30:26ஐ படிக்கும் போது, பூமியிலுள்ள அனைத்தும், அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றன என்றுச் சொல்வது, மேற்கண்ட அனைத்து வசனங்களுக்கும் முரண்படும் ஒன்றாகும்.

பூமியில் மனிதன் தவிர மற்றவைகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு கீழ்படிகின்றன என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வானத்தில் இப்லீஸ் தவிர மற்றவர்கள் கீழ்படிகிறார்கள் என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட வசனத்தில்(குர்‍ஆன் 30:26) உள்ளது போன்று சொல்லமுடியாது.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

குர்‍ஆன் 30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர்.

இந்த முரண்பாட்டுக்கு யாராவது பதில் சொல்லமுடியுமா?

குறிப்பு: சில முஸ்லிம்களின் பதில்:

சிலர் இப்படி சொல்லக்கூடும், குர்‍ஆன் 30:26 சொல்வது "கீழ்படிவது (Obedience)" பற்றியல்ல, "அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள்(under Control) அனைவரும் இருப்பது பற்றியாகும்". 

இது தவறான வாதமாகும், குர்‍ஆன் 30:26ஐ அனைவரும் "கீழ்படிகிறார்கள்" என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள். இறைவனின் கட்டுப்பாட்டுக்குள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இறைவனின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே செல்லமுடியாது. ஆனால், கீழ்படிவது என்று வரும் போது, அது தனி மனிதனின் சுய விருப்பமாகும்.  

அரபி மூல வார்த்தை கானிதூன:

குர்‍ஆன் 30:26ம் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள, அரபி வார்த்தை "கானிதூன" என்பதாகும், இதன் பொருள் "கீழ்படிவதாகும்".  இவ்வார்த்தை வரும் அனைத்து குர்‍ஆன் வசனங்களிலும், "இது கீழ்படிவது" என்பது பற்றியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வார்த்தை வரும் குர்‍ஆன் வசனங்களை குர்‍ஆன் கார்பஸ் தளத்திலிருந்து கீழ்கண்ட விவரங்களை தருகிறோம்.

Verb (form I) - to be obedient    
(3:43:2) uq'nutī Be obedient يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ
(33:31:2) yaqnut is obedient وَمَنْ يَقْنُتْ مِنْكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مَرَّتَيْنِ

  

Active participle    
(2:116:14) qānitūna (are) humbly obedient سُبْحَانَهُ بَلْ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ
(2:238:8) qānitīna devoutly obedient وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
(3:17:3) wal-qānitīna and the obedient الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
(16:120:5) qānitan obedient إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ حَنِيفًا وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ
(30:26:8) qānitūna (are) obedient وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ
(33:35:6) wal-qānitīna and the obedient men وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ
(39:9:3) qānitun (is) devoutly obedient أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ
(66:12:17) l-qānitīna the devoutly obedient وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

  

Active participle    
(1) Noun    
(4:34:16) qānitātun (are) obedient فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ
(33:35:7) wal-qānitāti and the obedient women وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ
     
(2) Adjective    
(66:5:12) qānitātin obedient عَسَىٰ رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ مُسْلِمَاتٍ مُؤْمِنَاتٍ قَانِتَاتٍ

Source : Quran Corpus

தேதி: 24th Sep 2021


உமரின் குர்-ஆன் ஆய்வுக் கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்