ஸனா குர்‍ஆன் 9:122-129 வசனங்களோடு முரண்படும் 95% உலக முஸ்லிம்கள் படிக்கும் இன்றைய குர்‍ஆன் வசனங்கள்!

ஸனா குர்ஆன் (Sanaa Manuscript) தற்போதுள்ள மிகப் பழமையான குர்ஆனிய கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றாகும். 1972 ஆம் ஆண்டு யெமன் நாட்டிலிள்ள ஸனா நகரத்தின் பெரிய மசூதியின் மறுசீரமைப்பின் போது சில அரபி கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் இந்த கையெழுத்துப் பிரதியில் இருப்பது "குர்‍ஆன்" என்று அடையாளம் காட்டப்பட்டது. இன்னும் குர்‍ஆன் அல்லாத வேறு பிரதிகளும் கிடைத்தன. இது தோலில் எழுதப்பட்ட இரண்டு அடுக்குகள் கொண்ட எழுத்துக்களாக இருந்தன, அதாவது ஒரு முறை குர்‍ஆன் வசனங்கள் எழுதப்பட்டு, அதன் பிறகு சில காலம் சென்று அவைகளை அழித்து, இன்னொரு முறை எழுதப்பட்டது. அழிக்கப்பட்ட உரையை/எழுத்துக்களை புற ஊதா ஒளி மற்றும் கணினியின் உதவியுடன் படிக்கலாம்.  மேல் உரை பெரும்பாலும் 'உத்மானிய' குர்ஆனுடன் ஒத்துப்போகிறது. அழிக்கப்பட்ட கீழ் உரை குர்‍ஆன் வசனங்கள் இன்றைய குர்‍ஆனோடு பல வகைகளில் வேறுபட்டு காணப்படுகிறது.

இந்த  தோலின் காலக்கட்டம்  ரேடியோகார்பன் என்ற விஞ்ஞான முறையின் கணக்கின் படி, கி.பி. 578 (ஹிஜ்ரிக்கு முன்பு 44 ஆண்டுகள்) மற்றும் கி.பி. 669 (ஹிஜ்ரி 49) ஆகும். மேல் உரை எழுத்துக்களின் காலக்கட்டம், ஏழாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து, எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழ் உரை எழுத்துக்களின் (அழிக்கப்பட்ட வரிகள்) காலக்கட்டம் கி.பி. 632 லிருந்து 669 வரை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸனா குர்‍ஆன் பக்கம் 22ன் ஆய்வு:

மேல் உரை மற்றும் கீழ் உரை இரண்டும் சேர்த்து, மொத்தமாக 38 பக்கங்கள் (Folios) இந்த ஸனா கையெழுத்துப் பிரதிகளில் கிடைத்தன. இவைகளில் பக்கம் 22ஐ இந்த கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். இந்த பக்கம் 22ல், குர்‍ஆனின் 9வது அத்தியாயத்தின் சில வசனங்களும், 19வது அத்தியாயத்தின் சில வசனங்களும் காணப்படுகின்றன. 

இவற்றில், 9:122 - 129 வசனங்களை இன்றுள்ள குர்‍ஆனோடு ஒப்பிடும் போது காணப்படும் வேற்றுமைகளை, வித்தியாசங்களை இப்போது காண்போம்.

ஸனா குர்‍ஆன் பிரதியின் வசன வார்த்தைகளை மூன்றாம் பத்திலும் (Column: Reconstruction, பிரதியின் வசனங்கள்), இன்று நாம் பயன்படுத்தும் 1924 கெய்ரோ குர்‍ஆனின் வசனங்களை, நான்காவது பத்தியிலும் (Column: Standard Text, இன்றைய குர்‍ஆன்) கொடுக்கப்பட்டுள்ளது.  இவ்விரு வசனங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை "குறிப்பு" என்ற பத்தியில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை என்ன‌?

1) ஸனா குர்‍ஆன் பிரதிகளின் கீழ் உரையில் இருந்த வசனங்கள், உஸ்மான் அவர்கள் "குர்‍ஆனை தரப்படுத்தப்படுவதற்கு" முன்பு எழுதப்பட்ட வரிகள் ஆகும்.

2) கலிஃபா உஸ்மான் அவர்கள், குர்‍ஆனை தரப்படுத்திய பிறகு, மேற்கண்ட குர்‍ஆன் வரிகளை அழித்துவிட்டு உஸ்மான் அவர்கள் அனுப்பிய குர்‍ஆனின் வரிகளை எழுதியுள்ளார்கள் (தோல் சுருள் என்பதால், இப்படி செய்வார்கள், ஏனென்றால் தோல் சுருள்களின் விலை அதிகமாகும்).

3) அந்த கீழ் உரையின் வசனங்களை நாம் மேலே கொடுத்த பட்டியலில் ஒப்பிட்டுள்ளோம்.

4) உஸ்மான் அவர்கள் குர்‍ஆனை தரப்படுத்துவதற்கு முன்பும் (கீழ் உரை), பின்பும் (மேல் உரை) பல வார்த்தைகள் விடப்பட்டுள்ளன, புதிதாகவும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மேற்கண்ட பட்டியலில் காணலாம் (குறிப்பு என்ற பத்தியை காணவும்).

5) பொதுவாக இப்படிப்பட்ட வித்தியாசங்களுக்கு முஸ்லிம்கள் பதில் அளிக்கும் போது, 'அவைகள் வெறும் குறில் நெடில் போன்ற வித்தியாசங்கள் தான், வார்த்தை வித்தியாசங்கள், எழுத்து வித்தியாசங்கள் அல்ல' என்றுச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மேலே கண்ட வித்தியாசங்களை காணும் போது, "குர்‍ஆனில் கூட்டல் மற்றும் கழித்தல் நடத்துள்ளது" என்பதை காணமுடியும்.

6) ஒரு எடுத்துக்காட்டுக்காக, மேலேயுள்ள பட்டியலில், இரண்டாவது வரிசையை எடுத்துக்கொள்ளவும்.

இவ்வசனத்தில், ஸனாவில் ஒரு வார்த்தையும் (உம்மதின்), தற்போதைய குர்‍ஆனில் வேறு வார்த்தையும் (ஃபிர்கதின்) உள்ளது. இவைகள், நெடில் குறில் வித்தியாசங்கள் அல்ல, வார்த்தையே மாறுமட்டுள்ளது. ஒரு பிரிவினர்/கூட்டத்தினர் என்றுச் சொன்னாலும், ஒரு குழுவினர், சமுதாயத்தினர்/உம்மத்தினர் என்றுச் சொன்னாலும், பொருள் மாறுவதில்லை, ஆனால் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இப்போழுது கேள்வி என்னவென்றால், அல்லாஹ் எப்படி இவ்வசனத்தை இறக்கினான்? உம்மதின் என்ற வார்த்தையோடு இறக்கினானா? அல்லது ஃபிர்கதின் என்ற வார்த்தையுடன் இறக்கினானா?

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்கள் வெறும் ஒரு அத்தியாயத்தின் சில வசனங்களை மட்டுமே ஆய்வு செய்யும் போது கிடைத்த, ஒரு வித்தியாசத்துளியாகும். ஸனாவின் அனைத்து பக்கங்களையும், வசனங்களையும் ஆய்வு செய்தால், இன்னும் அனேக வித்தியாசங்கள் கிடைக்கின்றன.

இதன் மூலம் அறிவதென்ன? குர்‍ஆன் ஓசையிலும் பாதுகாக்கப்படவில்லை, எழுத்திலும் பாதுகாக்கப்படவில்லை என்பது தான்.

தேதி: 5th Nov 2021

அடிக்குறிப்புக்கள்:


குர்‍ஆனின் இதர ஆய்வுக் கட்டுரைகள்

குர்‍ஆன் பக்கம்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்