பாகம் 7 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - ஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ்

[கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்  பாகம் 1, பாகம் 2, பாகம் 3,  பாகம் 4,  பாகம் 5  மற்றும் பாகம் 6 ஐ படிக்க சொடுக்கவும்.]

முன்னுரை: மும்தாஜுக்காக ஷாஜஹான் ஒரு கல்லறையை கட்டினார், அதனை காதலர்கள் சின்னமாக அனேகர் கருதுகின்றனர். தாஜ்மஹாலின் வெளிப்புற அழகும், அதைக் கட்டி தன் காதலை வெளிப்படுத்திய ஷாஜஹானின் உள்ளான காதலும் பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.  

மும்தாஜ் தன் காதலன் ஷாஜஹானுக்காக கல்லறையை  ட்டிய கதையை கேட்டு இருக்கிறீர்களா? இது ஒரு விசித்திரமான கதை, ஏனென்றால், ஷாஜஹான் உயிரோடு இருக்கும் போதே, இந்த மும்தாஜ் அவனுக்காக கல்லறையை கட்டிவிட்டாள். மும்தாஜ் ஏன் கல்லறையை கட்டினாள்? மேலும் படியுங்கள்.

இஸ்லாமிய ஷாஜஹான்களை காதலிக்கும், கிறிஸ்தவ மும்தாஜ்களுக்கு இந்த மும்தாஜ் ஒரு எச்சரிப்பு மணியாக இருக்கட்டும்.  முன்கதை சுருக்கம் இங்கு விளக்கத் தேவையில்லை, நேரடியாக விஷயத்திற்குள் நுழைவோம், கதையின் பின்னணியை நீங்கள் தொடர்ந்து படிக்கும் போது அறிந்துக்கொள்வீர்கள். 


ஷாஜஹானுக்கு கல்லறையை கட்டிய மும்தாஜ்

எஸ்தர்: டாடி, நீங்க சொன்னது போலவே, நான் "அம்மான்"ஐ இன்று மாலை நம் வீட்டிற்கு அழைத்துள்ளேன்.

[இந்த கதையில் வரும் ஷாஜஹானின் பெயர் "அம்மான்"]

மொர்தெகாய்: சரிம்மா. நானும் சரியா ஐந்து மணிக்கு இன்று வீட்டிற்கு வந்துவிடுகிறேன்.

எஸ்தர்: நான் வெளியே தைரியமாக இருக்கிறபடி காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு வகையான பயம் இருக்கு டாடி.

மொர்தெகாய்: நீ கவலை படாதேம்மா, எல்லாம் நல்லபடியாக முடியும்.

எஸ்தர்: அவர் வந்தவுடன், நீங்க தான் முதல்லே பேச்சை ஆரம்பிக்கனும்.

மொர்தெகாய்: சரிம்மா.

[மாலை ஐந்து மணி, எஸ்தர் வீட்டு வாசலில் நின்றபடி காத்துக்கொண்டு இருக்கிறாள். அவளின் தந்தையின் பெயர் "மொர்தெகாய்" ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டு, அம்மானுக்காக  காத்துக்கொண்டு இருக்கிறார். சில நொடிளிலேயே அம்மான் தன் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். எஸ்தர் அவரை தன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு வருகிறார், இனி தொடரும் உரையாடலை படியுங்கள்]

எஸ்தர்: டாடி, இவர் தான் அம்மான். என் நண்பர். ரொம்ப நல்லவர்.

அம்மான்: குட் ஈவனிங் அங்கிள்.  

மொர்தெகாய்: குட் ஈவனிங் அம்மான். எப்படி இருக்கீங்க?

அம்மான்: நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?

மொர்தெகாய்: நானும் நல்லா இருக்கேன் தம்பி.

எஸ்தர்: உங்க இரண்டு பேருக்கும் காபி கொண்டுவரேன். 

டாடி, நீங்க பேசிக்கிட்டு இருங்க.

மொர்தெகாய்: தம்பி, வீட்டில் எல்லாரும் சவுக்கியமாக இருக்காங்களா? உங்க வீட்டிலே எத்தனை பேர் இருக்காங்க?

அம்மான்: அங்கிள் எங்க வீட்டிலே நாங்க ஆறு பேர் இருக்கோம். அப்பா துணிகடை வியாபாரியாக இருக்காரு. அம்மா ஹவுஸ் வைஃப். எனக்கு ஒரு அண்ணனும், இரண்டு அக்காக்களும் இருக்காங்க. எல்லாருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. நான் தான் வீட்டிலே கடைசி.

மொர்தெகாய்: ஓ அப்படியா! நீங்க தான் வீட்டிலே செல்லப்பிள்ளை என்றுச் சொல்லுங்க.

அம்மான்: ஆமாம், நான் தான் வீட்டிலேயே செல்லப்பிள்ளை.

எஸ்தர்: காபி ரெடி, அம்மான் எடுத்துக்குங்க.  அப்பா நீங்களும் எடுத்துக்குங்க. 

அம்மான்: தாங்க்ஸ் எஸ்தர்

[அம்மான் காபி எடுத்துக்கொண்டார், எல்லாரும் காபி குடிக்கிறார்கள்.]

அம்மான்: அங்கிள், ஏதோ எங்கிட்டே பேசனும் என்று நீங்க விரும்புவதா எஸ்தர் சொன்னாங்க.

மொர்தெகாய்: ஆமாம் தம்பி, நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்ட கொஞ்சம் மனம் திறந்து பேசனும் என்று விரும்புகிறோம்.

அம்மான்: சொல்லுங்க அங்கிள், எதையும் மறைக்காமல் கேளுங்க.

மொர்தெகாய்: தம்பி, நாங்க இப்படி பேசுவோம் என்று மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான், இருந்தாலும், பேசித் தான் ஆகனும். 

கடந்த ஆறு மாதங்களாக, எஸ்தரும் நீங்களும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக எஸ்தர் சொன்னாள். அதைக் கேட்டதும் எனக்கு மனதுக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனாலும், நீங்க ரொம்ப நல்லவர் என்று எஸ்தர் சொன்னாள், எனக்கு மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

எனக்கு போன மாதம் தான் உங்களைப் பற்றிச் சொன்னாள். தாய் இல்லாத பொண்ணு கொஞ்சம் செல்லமாக வளர்த்துவிட்டேன். இவளுக்கு கொஞ்சம் பக்தி அதிகம். வாரம் தவறாம என்னோடு சர்சுக்கு வருவாள். நீங்களும் அதிக பக்தியுள்ளவர்கள் என்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் நீங்கள் தொழுகைக்கு போவீங்க என்றும் சொன்னாள்.

அம்மான்:  ஆமாம், அங்கிள். நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். நான் என் அம்மாவிடம் சொல்லியிருக்கிறேன், நல்ல சமயமாக பார்த்து இந்த மாதத்துக்குள் என் அப்பாவிடமும் சொல்லிவிடலாம் என்று விரும்புகிறேன். அவர் நிச்சயமாக எஸ்தரை தன் மருமகளாக ஏற்றுக்கொள்வார். இன்னும் நான்கு மாதத்துக்குள் நான் சௌதி அரேபியாவிற்கு வேலைக்குப் போகிறேன். அதற்குள் அப்பாவிடம் சொல்லி, எஸ்தரை திருமணம் செய்துக்கொண்டு, அவளையும் சௌதி அரேபியாவிற்கு அழைத்துக்கொண்டு போகலாம் என்று விரும்புகிறேன்.  உங்களிடம் கூட சொல்லச் சொல்லி, நம் திருமணத்திற்கு அனுமதி வாங்கு என்று நான் எஸ்தருக்கு சொல்லியிருந்தேன்.

மொர்தெகாய்: ரொம்ப சந்தோஷம் தம்பி. 

அம்மான்: அங்கிள், நேரடியாக நான் கேட்கிறேன், உங்களுடைய மகளை எனக்கு கொடுக்க உங்களுக்கு விருப்பம் தானே!  நாங்க இருவரும் மற்றவங்க போல அங்கும் இங்கும் ஊர் சுத்தவில்லை, சினிமா பீச்சு என்று எங்கும் சுத்தவில்லை. கம்பனியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம், ஒருவரை ஒருவர் அதிகமாக விரும்புகிறோம்.

மொர்தெகாய்: உங்களுக்கு என் மகளை கொடுக்க எனக்கு பரிபூரண சம்மதம். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்பு, எங்க சர்சு பாஸ்டருக்கு தெரிந்த இன்னொரு பாஸ்டருடைய சபையில் 'சில இஸ்லாமிய வகுப்புக்கள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள்' நடந்தது. நானும் அந்த வகுப்புகளில் பங்கு பெற்றேன். மேலும், அந்த பாஸ்டருடைய மகள் எஸ்தருக்கு தோழியாவாள். அவளிடம் எஸ்தர் "ஒரு கிறிஸ்தவ பெண், ஒரு முஸ்லிமை திருமணம் செய்வது பற்றிய" விவரங்களை சேகரித்து இருக்கிறாள். (படிக்க பாகம் 5)

மேலும், கடந்த ஒரு மாதமாக, நானும் எஸ்தரும் இஸ்லாம் பற்றிய அனேக புத்தகங்கள் வாங்கி படித்துள்ளோம், அனேகரை சந்தித்து, சில முக்கியமான விஷயங்களை அறிந்துக்கொண்டுள்ளோம். இதன் அடிப்படையில் எஸ்தருக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அவைகளை எனக்கு முன்பாக உங்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று எஸ்தர் விரும்புகிறாள்.

அம்மான்: ஓ.. இது தானா விஷயம். அப்பாவும் பொண்ணும் சேர்ந்து இஸ்லாம் பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்து இருக்கீங்களே!?! 

மொர்தெகாய்:  தம்பி, இப்படி கேட்கிறோம் என்று மனசுலே எதையும் வெச்சிக்காதிங்க.

அம்மான்: அங்கிள், அப்படியெல்லாம் எனக்கு உங்கள் மீது கோபமில்லை. எனக்கும் சகோதரிகள் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் செய்தபோது, நாங்களும் ரொம்ப பயந்தோம். மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று தான் எல்லா அப்பாமார்களும் விரும்புவாங்க. 

நீங்க கேளுங்க… கேள்விகளை நீங்க கேட்கிறீங்களா அல்லது எஸ்தர் கேட்பாங்களா?

மொர்தெகாய்: தம்பி, நீங்க ரொம்ப பக்குவமா பேசுறீங்க. 

அம்மான்: என்ன எஸ்தர், ரொம்ப ஆராய்ச்சியெல்லாம் செய்து இருக்கீங்க போலிருக்கு. எனக்கு சொல்லவே இல்லே. நான் சௌதி அரேபியாவிற்கு போவது பற்றி உனக்கு சொன்ன பிறகு உன்னிடத்தில் பேசும் போது கொஞ்சம் மாற்றம் காணப்பட்டது. ஆனால், நீ இஸ்லாம் பற்றி இப்படியெல்லாம் படித்து, விவரங்கள் சேகரித்து இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை.

எஸ்தர்: சாரி அம்மான். நான் என்ன செய்வது? நான் கேள்விப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் என்னை சிந்திக்கச் செய்தது.  நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உனக்கே தெரியும்.

அம்மான்: சரி, விஷயத்துக்கு வருவோம். சொல்லு உனக்கு என்ன சந்தேகம்?

எஸ்தர்: நான் கேட்பது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாக தெரியும், இருந்தாலும் வேறு வழியில்லை. வாழ்க்கை என்பது வெறும் காதல் மட்டுமல்ல, அதையும் தாண்டி, திருமணம், குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்று தொடர்ச்சியாக மரணம் வரை தொடருவது தான் வாழ்க்கை. 

எனவே, சில முக்கியமான விஷயங்களை திருமணத்திற்கு முன்பே பேசி தீர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதினால், இந்த சந்திப்பை வைக்கும்படி நான் டாடியிடம் கட்டாயப்படுத்தி சொன்னேன்.

அம்மான்: [சிரித்துக்கொண்டே] ம்ம்ம்… பெரிய பெரிய விஷயங்களை பக்குவமாய் பேசுகிறாய். சரி உன் கேள்விகளை கேட்கலாம்.

[மொர்தெகாய் மனதுக்குள் 'இரண்டு பேரும் முத்திப்போன கத்திரிக்காய்கள் தான்' என்று சொல்லிக்கொள்கிறார்.]

எஸ்தர்: அம்மான், என்னுடைய முதலாவது கேள்வி என்னவென்றால், நாம் திருமணம் செய்துக்கொண்ட பிறகு, கட்டாயமாக சௌதி அரேபியாவிற்கு போய்த் தான் ஆகவேண்டுமா? அப்படி போனாலும், எத்தனை ஆண்டுகள் அங்கே இருக்கப்போகிறோம்?

அம்மான்: எஸ்தர், இது தான் உன் சந்தேகமா? 

தற்போது செய்கின்ற வேலையை விட பல மடங்கு அதிக சம்பளம் எனக்கு சௌதியில் கிடைக்கிறது. எனவே, நான் அங்கு சென்று வேலை செய்வது தானே புத்திசாலித்தனம், நீயே சொல்லு?

மேலும், எத்தனை ஆண்டுகள் அங்கு நாம் இருப்போம் என்று என்னால் இப்போது சொல்லமுடியாது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாம் இந்தியாவிற்கு வந்து, நம் பெற்றோர்களைப் பார்த்துச் செல்லலாம்.

மொர்தெகாய்: எஸ்தர், நீ என்னைப் பற்றி கவலைப்படவேண்டாம். நான் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து உன்னை சௌதியில் பார்த்துவிட்டுச் செல்வேன்.

எஸ்தர்: ஓகே டாடி. இது பிரச்சனை இல்லை.

அம்மான், சௌதிக்கு சென்றுவிட்ட பிறகு நான் வேலைக்குச் செல்லலாம் இல்லையா? அதாவது சௌதி அரேபியாவில் நானும் வேலைக்கு போவேன்.

அம்மான்: ம்ம்ம்… நான் என்ன நினைக்கிறேன் என்றுச் சொன்னால், நீ சௌதியில் வேலைக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது. எஸ்தர், கல்யாணத்திற்கு பிறகு நீ வேலைக்குப் போவது எனக்கு பிடிக்காது. 

எஸ்தர்: என்ன அம்மான், தலையிலெ குண்டு துக்கிப்போடுறே? நானும் வேலைக்குப்போனால் தானே இன்னும் கொஞ்சம் பணம் சேரும். நம்முடைய பொருளாதார நிலை கூட உயரும்?

அம்மான்: என் ஒருவனுடைய சம்பளத்தை வைத்தே நாம் நல்ல வாழ்க்கை வாழலாம் எஸ்தர், புரிஞ்சுக்கோ.

எஸ்தர்: திருமணத்திற்கு பிறகு நான் வேலைக்குப் போகலாம், எந்த பிரச்சனையும் இல்லை என்று நீயே ஒருமுறை சொல்லியிருக்கிறாய்! இப்போது ஏன் மாற்றிச் சொல்கிறாய்.

அம்மான்: அப்போது எனக்கு சௌதி அரேபியாவிற்கு செல்லும் பிளான் இல்லாமல் இருந்தது. இந்தியாவில் நாம் இருந்தால், இப்போதும் சொல்கிறேன், நீ வேலைக்குப் போகலாம். ஆனால், நாம் சௌதிக்கு சென்றுவிட்டால், சௌதியில் பெண்கள் வேலைக்குச் செல்வது சரியல்ல. என் அப்பா அம்மாவும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சௌதியில் பெண்களுக்கு பாதுகாப்பு அவ்வளவு இல்லை.  உனக்கு எந்த செலவாக இருந்தாலும் சரி, அதனை நான் செலவு செய்வேன், நீ எதற்கும் பயப்படாதே!

மொர்தெகாய்: என்னம்மா எஸ்தர், நீ வேலைக்கு போகாமல், வீட்டிலேயே இராணி மாதிரி சந்தோஷமாக வாழு, சரியா? அம்மான் உன்னை நல்லபடியாக பார்த்துக்கொள்வார்.

எஸ்தர்: ம்ம்ம்ம்… சரி, உன் விருப்பம் அம்மான். அப்படியே ஆகட்டும். 

அம்மான்: அடுத்தது என்ன? உன் சந்தேகங்கள் தீர்ந்ததா?

எஸ்தர்: இல்லை அம்மான், என் கேள்விகள் முடியவில்லை, இன்னும் இருக்கு. 

இப்போது நான் கேட்பது மிகவும் முக்கியமான கேள்வி. 

அம்மான், ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களை செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாம் சொல்கிறது என்று நான் கேள்விபட்டுள்ளேன், இது உண்மையா?

அம்மான்: ஆம், இது உண்மை தான். இஸ்லாமில் ஒரு முஸ்லிம் நான்கு திருமணங்களை செய்துக்கொள்ளலாம்.

எஸ்தர்: அப்படியானால், ஒரு முஸ்லிம் இரண்டாம், மூன்றாம் திருமணம் செய்யும் போது, அவன் முதல் மனைவியின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லையா?

அம்மான்:  இல்லை, அனுமதிபெறத் தேவையில்லை.  

எஸ்தர்,  உனக்கு ஏன் இதைப்பற்றியெல்லாம் கேள்வி எழுகிறது? இதற்கும் நமக்கும் என்ன சம்மந்தம் சொல்லு?

எஸ்தர்: சம்மந்தம் இருக்கு அம்மான். நான் இப்படி கேட்கிறேன் என்று கோபம் கொள்ளவேண்டாம். இஸ்லாம் அனுமதி அளிப்பது போல, நீ எதிர் காலத்தில் இரண்டாவது, மூன்றாவது நான்காவது திருமணம் செய்துக்கொள்வாயா?

மொர்தெகாய்: என்னம்மா! இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாய்? நீ வேறு எதையோ கேட்பதாக நான் நினைத்தேனே!

எஸ்தர்: டாடி, இது என் வாழ்க்கை. காதலுக்கு கண்ணில்லை என்றுச் சொல்வார்கள். ஆனால், என்னைக் கேட்டால், காதலுக்கு பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காது, சிந்திக்கின்ற அறிவு இருக்கவேண்டும். 

அம்மான்: பாரு எஸ்தர், நீ தான் என் மனைவி, நான் உன்னையே உயிரினும் மேலாக நேசிக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே. உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பமாட்டேன் சரியா? இப்போது சந்தோஷமா?

எஸ்தர்: ரொம்ப சந்தோஷம் அம்மான். ஆனால், என் கேள்விக்கு  முழுமையான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதே கேள்வி மறுபடியும் வருகிறது. நாம் சௌதியில் வாழப்போவதினால், ஒருவேளை நீ இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு, திடீரென்று ஒரு பெண்ணை கொண்டு வந்து என் முன் நிறுத்தினால், நான் அந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும்?

உன்னுடைய இந்த இரண்டாவது திருமணம் செல்லாது என்றுச் சொல்லி, உன் மீது வழக்கு தொடர எனக்கு அனுமதி உண்டா? அல்லது உன்னை விட்டு விட்டு, என் பெற்றோர்களிடம் வந்துவிடவேண்டுமா? அல்லது ஒரு முஸ்லிமுக்கு வாழ்கை பட்டதினால், இது தான் என் தலைவிதி என்றுச் சொல்லி என்னை நானே நொந்துகொண்டு ஒரு நடைப்பிணம் போல வாழ வேண்டுமா?

அம்மான்: ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய், என் மனது வேதனை அடைகிறது.

எஸ்தர்: அம்மான். நான் என்ன செய்யட்டும்? எனக்குச் சொல்லு?

அம்மான்: உன்னை சரியாக யாரோ குழப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எஸ்தர்: அம்மான், இது குழப்பமல்ல, இது நிஜம். அனேகரின் வாழ்க்கையில் நடக்கும் நிஜம். எனக்கு உன் பதிலைச் சொல்லு?

அம்மான்: என் மீது வழக்கு தொடர உனக்கு இஸ்லாமிய சட்டத்தில் அனுமதி இல்லை. மேலும் சௌதியில் நாம் வாழும் போது, என் அனுமதி இன்றி நீ வெளியே செல்லமுடியாது, உன் பெற்றோர்களை பார்க்க இந்தியா வரமுடியாது. எல்லாவற்றுக்கும் என் அனுமதி வேண்டும். 

நீ நினைக்கிற மாதிரி நடக்காது, என்னை நம்பு எஸ்தர், நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்.

எஸ்தர்:  உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு அம்மான், நீ இப்படியெல்லாம் செய்யமாட்டாய். ஆனால், காலம் இப்படியே இருக்கப்போவதில்லை. சௌதியில் மற்றவர்களின் செய்கைகளைக் கண்டு ஒருவேளை நீ மாறிவிட்டால் எப்போது என் நிலை என்ன?

[அம்மானின் முகநாடி சிறிது மாறியது, கோபமாக அவர் பேச ஆரம்பிக்கிறார்]

அம்மான்: சரி எஸ்தர் இதற்கு பதில் சொல்லு, ஒரு வேளை நீ ஒரு கிறிஸ்தவனையே திருமணம் செய்துக்கொண்டாலும், அவன் இரண்டாவது மனைவியை அல்லது வைப்பாட்டியை வைத்துக்கொள்ளமாட்டன் என்று என்ன நிச்சயம்? அப்போது நீ என்ன செய்வாய்?

எஸ்தர்: நல்ல கேள்வி கேட்டாய் அம்மான். ஒரு கிறிஸ்தவனையோ, இந்துவையோ ஒரு பெண் திருமணம் செய்துக்கொண்டால், அவன் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளும் போது, அல்லது வைப்பாட்டியை வைத்துக்கொள்ளும் போது, சட்டப்படி அவன் மீது வழக்கு தொடர ஒரு பெண்ணுக்கு அதாவது முதல் மனைவிக்கு இந்தியாவில் உரிமை உண்டு. ஆனால், இதே உரிமையை இஸ்லாம் பறித்துக்கொண்டு, எங்களை நடு ரோட்டில் அநாதையாக விட்டுவிடுகிறதே! இதற்கு என்ன பதில்?

கிறிஸ்தவ சமுதாயத்தில், இந்து சமுதாயத்தில் ஒருவன் பகிரங்கமாக இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டால், அவனை சட்டம் தண்டிக்கும், சமுதாயம் அவனை கேவலமாக பார்க்கும். ஆனால், இஸ்லாமிய சட்டமே ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள்வரை அனுமதி அளிக்கும் போது, அந்த முதல் மனைவியின் நிலை எப்படி இருக்கும்? அவள் மனது என்ன பாடு படும்? 

என் மனைவி எனக்கு மட்டுமே மனைவியாக இருக்கவேண்டும் என்று ஒரு ஆண் விரும்புவது நியாயம் என்றுச் சொன்னால், என் புருஷன் எனக்கு மட்டுமே புருஷனாக இருக்கவேண்டும் என்று ஏன் பெண்கள் கருதுவது குற்றமாக இஸ்லாமுக்கு தெரிகின்றது?

அம்மான்: நீ வரம்பு மீறி பேசுகிறாய்.

எஸ்தர்: மன்னிக்கனும் அம்மான், என் வாழ்க்கையின் வரம்பு எதுவென்று நான் தெரிந்துக்கொள்ளவேண்டாமா?

நான் இரண்டாவது திருமணத்தைச் செய்யமாட்டேன் என்று எனக்கு உறுதி மொழி கொடு! 

அம்மான்: எஸ்தர் உனக்கு உலக அறிவு குறைவு, நீ பேசுகிறது என்னவென்று உனக்கே தெரியவில்லை.

எஸ்தர்: எனக்கு உலக அறிவு குறைவாக இருக்கலாம், ஆனால், இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளது. எனக்கே புருஷனாக இருக்க உங்களால் வாக்கு கொடுக்கமுடியுமா? கிறிஸ்தவத்திலே திருமணம் நடக்கும் போது, "நான் உனக்கே கணவனாக கடைசிவரை வாழுவேன்" என்று ஆண் வாக்கு கொடுக்கிறான். எதிர் காலத்தில் அவன் அப்படி செய்வானோ இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால், திருமண நாள் அன்று தன் மனைவியிடம் இப்படி கணவன் சொல்வது, அந்த பெண்ணுக்கு எவ்வளவு நிம்மதியாக  இருக்கும் தெரியுமா?  அந்த நிம்மதி, இஸ்லாமிலே எங்கே? தன் கணவன் விரும்பினால், இன்னும் மூன்று பேரை கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என்ற பயம் வாழ்நாளெல்லாம் அந்த பெண்ணை வாட்டிக்கொண்டேஇருக்குமே!

அம்மான்: சரி, உன் வழிக்கே வருகிறேன். ஒரு பேச்சுக்காக இன்று பொய்யாக உன்னிடம் வாக்கு கொடுத்துவிட்டு, எதிர் காலத்தில் உண்மையாகவே இரண்டாவது திருமணம் செய்தால் உன்னால் என்ன செய்யமுடியும் சொல்லு"?  

எஸ்தர்: ஓஹோ.. இப்படி கூட ஆண்களாகிய நீங்கள் செய்வீர்களோ!  அப்படியானால், வெறும் வாய் வழியாக வரும் வாக்கு எனக்குத் தேவையில்லை. எழுத்து மூலமாக எழுதி கொடுங்கள், "எஸ்தரின் கணவனாக இருக்கின்ற அம்மான் என்கின்ற நான், இரண்டாவது திருமணமே செய்துக்கொள்ளமாட்டேன், அப்படி செய்துக்கொண்டால், என் மீது வழக்கு தொடர எஸ்தருக்கு உரிமை உள்ளது" என்று எழுதிக்கொடுங்கள்.

அம்மான்: என்ன நீ? இப்படியெல்லாம் பேசுகிறாய். இது கொஞ்சமும் நல்லா இல்லை.

எஸ்தர்: அம்மான், நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழுவது கடினம். இந்த அக்கரையினால் தான் நான் இப்படி கேட்கிறேன். நீ எனக்கு முழுவதுமாக வாழ்வின் துணையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புவது தவறா?

மொர்தெகாய்: என்னம்மா எஸ்தர் இப்படியெல்லாம் கேட்கிறாய்?

எஸ்தர்: டாடி, இது மிகவும் முக்கிமான விஷயம். ஒரு ஆண் தன் முதல் மனைவிக்கு சொந்தமான அன்பை இன்னொருத்தியிடம் பகிர்ந்துக் கொள்வது அநியாயம். அதுவும் இஸ்லாமில் இன்னொருத்தி இல்லை, இன்னும் மூன்று பேர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. 

தன் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று வாழ்நாளெல்லாம் எண்ணி எண்ணி ஒரு பெண்ணால் வாழமுடியாது. 

டாடி, அம்மான் என்ன சொன்னார் என்பதை  பாருங்கள், வாக்கு கொடுத்தாலும், அதை நிறைவேற்றுவார் என்பதில் என்ன நிச்சயம் என்று கேட்கிறார். அதனால் தான் எழுதிக்கொடுங்கள் என்று கேட்கிறேன்.

அம்மான்: எஸ்தர், நீ சொன்னது போல, எழுதி கொடுக்கமுடியாது. கணவன் மனைவிக்கு இடையில் இப்படிப்பட்ட ஒப்பந்தம் போடுவது என்பது சரியாக தோன்றுகிறதா? 

எஸ்தர்: உண்மை தான், கணவன் மனைவி இடையில் இருக்கவேண்டியது அன்பு தானே தவிர ஒப்பந்தம் அல்ல. 

அம்மான்: எனக்கு நம் திருமண வாழ்க்கைப் பற்றி அக்கரையில்லையா? உன்னை அநாதையாக விட்டுவிடுவேனா? 

எஸ்தர்: அம்மான், உன் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. நீ ஒரு ஆண், திருமணத்திற்கு பிறகு உன்னை விட, நான் தான் அதிகம் பாதிக்கப்படுவேன். 

அம்மான்: எஸ்தர், இப்படியெல்லாம் நடக்காது? நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்.

எஸ்தர்: சரி, நான் நம்புகிறேன். ஒரு ஆணுக்கு இஸ்லாம் நான்கு மனைவிகளை அனுமதிக்கிறதே, இதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

அம்மான்: எஸ்தர், நீ தனிப்பட்ட வாழ்க்கைக்கும், மதத்திற்கும் முடிச்சு போடுகிறாய்? உன்னை நான் சந்தோஷமாக பார்த்துக்கொள்வேன்.

எஸ்தர்: இஸ்லாமிலே, தனிப்பட்ட சுய வாழ்க்கை என்று ஒன்று உண்டா அம்மான்? பெண்களாகிய எங்களை வேலைக்கும் அனுப்பாமல், எங்களுடைய  ஒவ்வொரு தேவைக்கும் வீட்டில் சம்பாதிக்கும் ஆணின் முகத்தையே நாங்கள் பார்த்து இருக்கவேண்டும். மேலும், ஆண்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ, நீதி கேட்கவோ எங்களுக்கு இஸ்லாமிலே உரிமை இல்லாத போது, எப்படி எங்களால் சந்தோஷமாக வாழமுடியும். 

அம்மான், ஒரு உண்மையான முஸ்லிமுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உண்டா? அவனது எல்லா நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது இஸ்லாமில்லையா? 

சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்வது நியாயமா? அநியாயமா?

அம்மான்: பாரு எஸ்தார், என்னால் இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. நான் இஸ்லாமை விமர்சிக்கமாட்டேன். அல்லாஹ்வின் கட்டளைகளில் பிழை இருக்காது. 

எஸ்தர்: அப்படியானால், ஒரு இஸ்லாமிய ஆண், தன் முதல் மனைவியின் அனுமதியின்றி, மேலும் மூன்று பெண்களை திருமணம் செய்துக்கொள்வது நியாயம் தான் என்றுச் சொல்கிறீர்கள்? அப்படித் தானே?

அம்மான்: ஆம், அப்படித்தான். ஆனால், நான் உனக்கு வாக்கு கொடுக்கிறேன், உன்னைத் தவிர இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன். 

எஸ்தர்: உங்களுடைய சகோதரியின் கணவர், இன்னும் மூன்று பெண்களை திருமணம் செய்துக்கொண்டால், நீங்கள் வேதனை அடையாமல் இருப்பீர்களா?

அம்மான்: என் சகோதரியின் கணவர் அப்படி செய்யமாட்டார், எனக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதால் எல்லா முஸ்லிம்களும் அப்படி செய்வதில்லை. 

போதும் எஸ்தர் போதும்.  இஸ்லாம் பற்றிய விஷயத்தில் நீ இனி தலையிடாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.  உன்னுடைய கேள்விகள் மூலமாக நீ என்னை உயிரோடு கல்லறையில் வைக்கிறாய்! நான் அதிகமாக வேதனை அடைந்துள்ளேன்.

எஸ்தர்: அம்மான், கோபம் கொள்ளாதே, இப்படியெல்லாம் கேட்கிறேன் என்றுச் சொல்லி என்னை தப்பாக நினைத்துக்கொள்ளாதே. நான் என்ன செய்வேன் சொல்லு? சௌதியில் நாம் செட்டில் ஆகிவிடலாம் என்றுச் சொல்கிறாய். இஸ்லாமிய நாடுகள் பற்றி நான் ஓரளவிற்கு அறிந்துள்ளேன். இஸ்லாமிய நாடுகளில், முஸ்லிம் குடும்பங்களில் பெண்களின் நிலை பரிதாபமானதே. 

நான் உன்னை உயிரோடு கல்லறையில் வைக்கவில்லை, என்னுடைய கல்லறையை நானே மரணத்திற்கு முன்பாக கட்டிக்கொள்கிறேனோ என்ற பயத்தினால் தான் நான் இப்படி கேள்விகளை கேட்கிறேன்.

மொர்தெகாய்: அம்மா எஸ்தர், அவர் தான் உனக்கு வாக்கு கொடுத்தார் அல்லவா? இனி என்ன கவலை உனக்கு.

அம்மான்: அங்கிள், நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டது போல, எஸ்தர் புரிஞ்சுக்கவில்லை. 

எஸ்தர்: அப்படியெல்லாம் சொல்லாதே அம்மான். நான் உன் மேலே அதிகமாக அன்பு வெச்சிருக்கிறேன். 

அம்மான்: சரி போகட்டும், உன் சந்தேகங்கள் தீர்ந்ததா அல்லது இன்னும் இருக்கா?

எஸ்தர்: இன்னும் இருக்கு அம்மான். நீ இன்னும் என் கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே. ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொள்வது சரி என்றுச் சொல்கிறாய். நாளைக்கு அந்த சரியான வேலையை நீ செய்யமாட்டாய் என்று என்ன நிச்சயம்? என் மதம் அனுமதிக்குது, நான் செய்கிறேன் என்று நீ சொன்னால் நான் என்ன செய்வேன்?

அம்மான்: !?! ம்ம்ம். . .  எஸ்தர், என் மதம் எனக்கு முக்கியம். அதை மற்றவர்கள் விமர்சிப்பதை என்னால் அனுமதிக்கமுடியாது. 

எஸ்தர்: மதம் எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வாயா?

அம்மான்: ஆம் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். இனி எந்த கேள்வியையும் என்னிடம் கேட்கவேண்டாம்.

[இந்த பதிலினால் எஸ்தர் நொந்துப்போய் விட்டாள், விரக்தியாக...மௌனமாக இருந்துவிட்டாள்]

அம்மான்:  சரி நாளைக்கு வருகிறேன். மீதமுள்ளதை அப்போது பேசிக்கொள்வோம். 

நான் வீட்டுக்கு கிளம்புறேன். குட் நைட் அங்கிள், நாளைக்கு பார்க்கலாம்.

[அம்மான் எழுந்துச் செல்கிறார்… அவர் பின்னாலேயே எஸ்தர் மௌனமாக  செல்கிறார். எஸ்தர் தன்னை சுதாரித்துக்கொள்கிறாள்.]

எஸ்தர்: அம்மான், என் மிது கோபம் இல்லையே!

அம்மான்: அதெல்லாம் ஒன்னுமில்லை. மனசை குழப்பிக்கொள்ளாமே, நிம்மதியா தூங்கு. நாளைக்கு பார்ப்போம். 

[அம்மானை வாசல்வரை வந்து வழி அனுப்பிவிட்டு, எஸ்தர் உள்ளே வருகிறாள்]

மொர்தெகாய்: என்னம்மா நீ, இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாய்? அவருக்கு கோபம் வந்து சென்றுவிட்டால் என்ன செய்வே சொல்லு?

எஸ்தர்: எந்த சந்தேகத்தையும், கல்யாணத்துக்கு முன்பு தீர்த்துக்கொள்வது தான் சரியானது. கல்யாணம் ஆகிவிட்டால், அதன் பிறகு எதனையும் நாம் திரும்பிப் பெறமுடியாது. இன்னும் எனக்கு அனேக கேள்விகள் இருக்கு. நாளைக்கு கேட்பேன், நான் சும்மா விடமாட்டேன். எனக்கு 100 சதவிகிதம் நம்பிக்கை வரும்வரை என் கேள்விகள் தொடரும் டாடி. 

மொர்தெகாய்: ஒருவேளை உன்னுடைய கேள்விகள் அவரை துக்கப்படுத்தி, நான் உன்னை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று அவர் சொல்லிவிட்டால் என்ன செய்வாய்?

எஸ்தர்: உண்மையாக நீங்க சொன்னது போல நடந்தாலும் ரொம்ப நல்லது, ஏனென்றால், நான் அவரை காதலிக்கிறேன் என்பதால், முட்டாள் தனமான முடிவுகளை நான் எடுக்கமாட்டேன். எங்கள் இருவரின் நட்பு இப்போது தான் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளது, மேலும் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எல்லா சந்தேகங்களையும் நான் இப்போது கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அவரது நிலையில் எனக்கு திருப்தி இல்லை என்று நான் கண்டுபிடித்தால், நானே அவரது காதலை முறித்துவிடுவேன்.  

டாடி, நான் முட்டாள் இல்லை. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நல்லதை மட்டும் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று நாம் பைபிளில் படிக்கிறோம். அதை செயல்முறைப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பு இது. 

பார்க்கலாம் டாடி, என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு சிறிய தவறு, ஒரு  முஸ்லிமை காதலித்தது. அந்த சிறிய தவறு பெரிய தவறாக மாறாமல் இருக்கத்தான் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. எது எப்படியோ, கர்த்தரின் கிருபையால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு சென்றுவிட்டால் நல்லது. 


இதோடு "கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின்  - பாகம் 7"  முடிவு பெறுகிறது. அடுத்த பாகத்தில் எஸ்தர் கேட்கும் இதர கேள்விகளுக்கு எப்படி "அம்மான்" பதில்களைச் சொல்கிறார் என்பதை பார்ப்போம்.  

 

  • எஸ்தரும் அம்மானும் திருமணம் செய்துக் கொள்வார்களா? 
  • அம்மான் கோபம் கொண்டு, தன் காதலை முறித்துக்கொள்வாரா? 
  • அல்லது எஸ்தர் அம்மானை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிடுவார்களா?

இவைகளை அறிந்துக்கொள்ள அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கவேண்டும்.

குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் வரும் நபர்களின் பெயர்கள் ஏன் மொர்தெகாய், எஸ்தர், அம்மான் என்று வைத்துள்ளேன்? சிந்தித்துப் பாருங்கள். 

மூலம்: http://isakoran.blogspot.in/2013/06/7.html

கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் கட்டுரைகள்