இவர்களில் யார் உண்மையான இயேசு?

(WHO IS THE REAL JESUS?)

உலகில் இயேசு பற்றி பல கதைகள் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன.

அவைகளில் சிலவற்றை இங்கு சுருக்கமாக தருகிறேன். கடைசியாக, இயேசுவின் உண்மையான சரித்திரம் எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் தருகிறேன்.

1. ஜப்பானில் இயேசு:

இயேசு ஜப்பான் தேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டாராம். அங்கு ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் வெள்ளைப்பூண்டுகளை பயிரிட்டு வாழ்ந்தாராம். அங்கு மியுகோ (Miyuko) என்ற பெண்ணை திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளைப் பெற்று தம்முடைய 106வது வயதில் மரணமடைந்தாராம். எருசலேமில் சிலுவையில் மரித்தவர் இயேசுவின் சகோதரர் இசுகிரி (Isukiri) என்பவராம். இன்றும், ஜப்பான் வடக்கு பகுதியில் ஷிங்கோ (Shingo) என்ற இடத்தில் இயேசுவின் கல்லறையைக் காணலாம் என்று ஜப்பானில் இயேசு பற்றிய கதைகள் உலா வருகின்றன.

2. இந்தியாவில் இயேசு:

இந்தியாவிலும், இமயமலையிலும் நேபாளத்திலும் இயேசு பல ரிஷிகளிடம் பலவற்றைக் கற்றார் என்ற இன்னொரு கதை இந்தியாவில் உண்டு.

3. எகிப்தில் இயேசு:

இயேசு எகிப்திற்கு சென்றுவிட்டார் என்றும், அங்கு தம்முடைய முதிர் வயதுவரை வாழ்ந்து கடைசியாக மரித்தார் என்றும் ஒரு கதை உண்டு.

4. காஷ்மீரில் (இந்தியா) இயேசு:

இயேசு காஷ்மீர் பகுதிக்குச் சென்றார். அந்த காலத்தில் ஷாலிவாஹன்(Shalivahan) அரசன் காஷ்மீரை ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார். அவரை இயேசு சிரிநகரில் சந்தித்தார். அந்த அரசன் இயேசுவிடம் நீர் யார்? உம் பெயர் என்ன? என்று கேட்டபோது, என் பெயர் "யுசாஸபத் (Yusashaphat)” என்று இயேசு பதில் அளித்தாராம்.

5. திபேத்தில் இயேசு:

மஹாயான புத்தமதத்திலும் இயேசு வருகிறார். இயேசு திபேத்தில் 'போதிசத்வா அவலோகிதேஸ்வராவாக இருந்தராம். அவரது கைகள் மற்றும் கால்களில் ஒரு சிறிய துவாரம் போன்ற காயம் இருந்ததாம். இந்த காயங்கள் அவரை சிலுவையில் அறையப்பட்டபோது உண்டானவைகள். இந்த காயங்களை புத்த பிட்சுக்கள், 'புத்தரின் வாழ்க்கை சக்கரங்கள்' இவைகள் என்று சொல்கிறார்கள்.

6. ரோம கட்டுக்கதையில் இயேசு:

ரோமர்களின் கதைகளிலும் இயேசு வருகின்றார். இயேசு சிலுவையிலிருந்து தப்பித்துவிட்டாராம், அதன் பிறகு அவர் "அப்பொல்லோனியஸ் (டைனா ஊரிலிருந்து வந்தவர்)" என்ற பெயரில் தலைமறைவாக வாழ்ந்தாராம்.

7. செவ்விந்தியர்களின் இயேசு:

அமெரிக்க இந்தியர்களிடம் (செவ்விந்தியர்கள்) கூட ஒரு கதை உள்ளது. அதாவது இந்த செவ்விந்தியர்களின் இனக்குழுவில் 'மிகப்பெரிய சுகமளிப்பவர் (Pale Great Healer)' என்ற பட்டப்பெயரோடு ஒருவர் அவர்கள் மத்தியில் வாழ்ந்தாராம்.

8. இஸ்லாமில் இயேசு:

இயேசுவின் சிலுவைக்கு 600 ஆண்டுகள் கழித்து, பல ஆயிர மைல்களுக்கு அப்பால் உள்ள அரேபியா தீபகர்ப்பத்தில் 7ம் நூற்றாண்டில், ஒரு கதை உலா வந்தது. அந்த கதையின் படி, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது (அ) சிலுவைக்கு முன்பு,  யாரோ ஒரு நபர் இயேசுவைப்போல முகம் மாற்றப்பட்டு, இயேசுவின் இடத்தில் அமர்த்திவிட்டார்களாம். ஆகையால், இயேசுவிற்கு பதிலாக, அந்த முகவரி இல்லாத நபர் சிலுவையில் மரித்தானாம். இந்த கதை 7ம் நூற்றாண்டில் தோன்றிய மதத்தின் வேதமாகிய குர்‍ஆனில் காணப்படுகின்றது.

இயேசுவைப் பற்றி இன்னும் அனேக கதைகள் உலகில் உலாவுகின்றன. ஆனால், அவைகள் எல்லாம் பொய்யான கட்டுக்கதைகளாகும்.

இயேசுவின் உண்மையான வாழ்க்கை வரலாறை தெரிந்துக்கொள்ள, அவரோடு வாழ்ந்த அவரது உள்வட்ட சீடர்கள் எழுதிய சரித்திரங்களை படிக்கவேண்டும். இவர்கள் தான் இயேசுவோடு வாழ்ந்தவர்கள்: மத்தேயு, யோவான், பேதுரு மற்றும் இதர சீடர்கள்.

உண்மையான இயேசுவை நீங்கள் அறிய விரும்பினால், அவரது வாழ்க்கை வரலாறை பைபிளில் படிக்கலாம்.

இயேசுவின் சீடர் பேதுருவின், எழுத்தாளராகிய மாற்கு கீழ்கண்ட விதமாக இயேசுவின் வாழ்க்கை வரலாறை தொடங்குகிறார்.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1)

இயேசுவின் சரித்திரத்தை படிக்க சொடுக்கவும்: http://www.tamil-bible.com/lookup.php?Book=Mark&Chapter=1

மூலம: http://www.faithbrowser.com/who-is-the-real-jesus/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்