அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை
2008ம் ஆண்டு, மும்பை மாநகரத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் இன்று அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பின்பு காலை 7:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.
அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர், அனேகர் காயப்பட்டனர். அனேகர் பெற்றோர்களை இழந்த அனாதைகள் ஆனார்கள், சிலர் விதவைகள் ஆனார்கள், வேறு சிலர் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களானார்கள். இவர்களின் எதிர் கால கனவுகள் மண்ணோடு மண்ணாக மறைந்துவிட்டது. இந்த செயல்களை புரிந்தவர்களில் ஒருவன் உயிரோடு இருந்தான் (அஜ்மல் கசாப்), இவனால் துன்பத்துக்கு ஆளானவர்கள் இவனுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? தங்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? என்று காத்திருந்தனர். நீதி தூங்கிவிட்டதா? அல்லது செத்துவிட்டதா? ஏன் நீதிமன்றங்கள் தாமதிக்கின்றன என்று புலம்பினார்கள்.
அஜ்மல் கசாப்புக்காக கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இவனுக்கு கருணை காட்டக்கூடாது என்று மக்கள் விரும்பினர்.
நீதி தூங்குவதில்லை:
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வண்ணமாக, இந்திய மண்ணில் நீதி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வண்ணமாக, நம் ஜனாதிபதி இந்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை, கசாப்பிற்கு கருணை மன்னிப்பு அளிக்கவில்லை. இதன் பயனாக இன்று காலை 7:30 மணிக்கு கசாப் தூக்கில் இடப்பட்டார். இவரது உடலை தரும்படி இதுவரை யாரும் கேட்கவில்லை, முக்கியமாக பாகிஸ்தானும் கேட்கவில்லை என்று இன்று காலைச் செய்தி தெரிவிக்கிறது.
கடைசியில் அசத்தியம் அழிந்தது, சத்தியம் ஜெயித்தது.
நீதி தாமதித்தாலும், சரியான தண்டனையை கசாப்பிற்கு கொடுத்தது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தனர்.
சிறப்புத் தொழுகை:
உலக மகா தீவிரவாதியாம் பின்லாடனின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாமியர்கள் அவனுக்காக சிறப்பு தொழுகை நடத்தினர். இந்தியாவில் நடந்த கோர தீவிரவாத செயலில் ஈடுபட்ட இந்த கசாப்பிற்காக முஸ்லிம்கள் (முக்கியமாக தமிழ் முஸ்லிம்கள்) சிறப்பு தொழுகை நடத்துவார்களா? அல்லது இந்திய மண்ணில் தீவிரவாத செயலை அரங்கேற்றியவன் யாராக இருந்தாலும் சரி அவன் ஒரு முஸ்லிமல்ல என்றுச் சொல்லி, கசாப்பின் செயலை கண்டித்து, அவனுக்கு கிடைத்த தண்டனையை ஆதரித்து தமிழ் முஸ்லிம்கள் செயல்படுவார்களா? தமிழ் முஸ்லிம்கள் தங்கள் இணைய தளங்களிலும், வார, மாத பத்திரிக்கைகளிலும் கசாப்பிற்கு கிடைத்த தண்டனை சரியானது தான் என்றுச் சொல்லி அறிக்கைவிடுவார்களா? இப்படி செய்து தாங்கள் எக்காலத்திலும் தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்ததில்லை, இனியும் இருக்கமாட்டோம் என்பதை நிருபிப்பார்களா?
கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள்:
ஏதோ பின் லாடன் மரித்துவிட்டார், சத்தாம் உசேன் மரித்துவிட்டார், கசாப்பை நாம் தொலைத்துவிட்டோம் என்று யாரும் அதிக மகிழ்ச்சி அடையமுடியாது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் உலகில் இருக்கும் வரை (எந்த நாடுகள் என்று நான் சொல்லத்தேவையில்லை), இன்னும் அனேக லாடன்கள், சத்தாம் உசேன்கள், அஜ்மல் கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள், அவர்களை அந்நாடுகள் மற்ற நாடுகள் மீது ஏவிக்கொண்டே இருக்கும். ஆனால், நமக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை என்னவென்றால், இறைவன் இன்னும் இறந்துவிடவில்லை, இந்தியாவில் நீதி இன்னும் நிர்மூலமாகவில்லை என்பதாகும். தாமதித்தலும், நீதி தன் கடமையைச் செய்யும், இறைவன் பொறுமையாக இருந்து மக்களுக்கு நீதி செய்வான் என்பதாகும்.
எனவே, இந்தியாவில் நீதி தன் கடமையை செய்தமைக்காக, இந்த தண்டனை கசாப்பிற்கு கிடைக்க உழைத்த அனைத்து அரசாங்க ஊழியர்களுக்காக நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளவேண்டும்.
துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல்…
ஒரு சராசரி இந்தியன் என்ற முறையில் நான் மேற்கண்ட விவரங்களை எழுதினேன். ஆனால், ஒரு கிறிஸ்தவனாக இருந்து பார்க்கும் போது, இந்த கசாப் மனந்திருந்தி இறைவனிடம் தான் செய்த பாவ செயலுக்கு மன்னிப்பை பெற்று இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது. அனேகரின் மரணத்திற்கு காரணமான ஒரு மனிதன் மரித்தான், அவனுக்கு சரியான தண்டனை கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஒரு புறமிருக்க, உண்மையான இறைவனை அறியாது ஒரு உயிர் மரித்துவிட்டதே என்ற வேதனை உள்ளத்தை அதிகமாக வாதிக்கிறது.
துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல், அவனின் மனந்திரும்புதலையே அவர் விரும்புகிறார்.
இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்ட தண்டனையின் மூலமாக, இந்திய மண்ணில் தன் கைவரிசையை யார் காட்டினாலும் சரி, அதை அரசு சகித்துக்கொள்ளமுடியாது என்பது நிருபணமாகியுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களும், அதனை ஆதரிப்பவர்களையும் இந்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.
இப்படிக்கு