கோபால் அல்லாஹ்வின் நபியா? இந்த 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பாரா?
நேற்று ஒரு வீடியோவை நான் யுடியூபில் பார்த்தேன். அதில் கோபால் என்ற பெயரில் ஒருவர் முஸ்லிம்கள் மீது கோபத்தை கொட்டியிருந்ததை பார்த்தேன்.
அந்த வீடியோ இது தான்: https://www.youtube.com/watch?v=qTMrcMnIYdY
(கோபால் நபி (அலை ) அவர்களின் ஆவேச பேச்சு!!!?? காப்பி பேஸ்ட் புத்தகம் குர்ஆன்)
உடனே இன்னொரு வீடியோவை தேடிப்பார்த்தேன், அதுவும் கிடைத்தது. அதாவது இந்த கோபால் என்பவர் எப்படி இஸ்லாமை தழுவினார் என்ற வீடியோவை தேடி அதையும் பார்த்தேன்.
அதன் தொடுப்பு இது தான்: https://www.youtube.com/watch?v=0QOlsA0ujG4
(இஸ்லாத்தை ஏற்ற பாதிரியாருக்கு கலிமா சொல்லிக்கொடுக்கும் பீஜே)
இவர் ஒரு முன்னாள் கிறிஸ்தவர், இவரிடம் நான் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கேள்விகளை கேட்கப்போவதில்லை. இதற்காக வேறு ஒரு நாள் முகூர்த்தம் வைத்துக்கொள்ளலாம்.
இவர் தற்போது தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், மேலும் முஸ்லிம்களை திட்டுகின்றார், முஹம்மதுவை அவன்/இவன் என்று பேசுகின்றார், குர்ஆன் இறைச்செய்தி அல்ல என்றும், முஹம்மதுவையும், குர்ஆனையும் பின்பற்றினால் 'முஸ்லிம்களே நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்' என்கிறார்.
நான் இவரை 21ம் நூற்றாண்டு முஹம்மது போன்று காண்கின்றேன். அதாவது முஹம்மது எப்படி தம்மை நபி என்றுச் சொல்லிக்கொண்டாரோ, அதே பாணியில் இவரும் தன்னை நபி என்றுச் சொல்லியுள்ளார். அல்லாஹ்வின் இறைச்செய்தியைச் சொல்கிறேன் என்று ஒருவர் சொல்வாரானால், அவர் குர்ஆனிலிருந்தோ, ஹதீஸ்களிலிருந்தோ (முஹம்மது கூறியதாக) சொல்லவேண்டும், ஆனால், இவ்விரண்டும் அதாவது குர்ஆனும் முஹம்மதுவும் முஸ்லிம்களை நரகத்திற்கு அனுப்புவார்கள் என்று சொன்னால், இவர் தன்னை இன்னொரு நபி என்று கருதுகின்றார் என்று தானே அர்த்தம்!
எனவே, இஸ்லாம் சம்மந்தப்பட்டு, இவரிடம் சில கேள்விகளை கேட்டு பதில்களை பெறலாம் என்று விரும்புகிறேன்.
எனக்கு என்ன லாபம்? - நோக்கம்?
1) முதலாவதாக, தான் ஏற்றுக்கொண்ட அல்லாஹ்விற்கே இவர் அல்வா கொடுக்க முயலுகின்றார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது. மேலும் இஸ்லாம் பற்றிய சில முரண்பட்ட விவரங்களை இவர் தருகின்றார். இவருக்கு அதனை முதலாவது தெளிவு படுத்தவேண்டும்.
2) இரண்டாவதாக, முஹம்மது தம்முடைய நபித்துவத்தை நிருபிக்க தவறிய அதே பிழைகள் இவரும் செய்துள்ளதாக நான் கருதுகிறேன். முஸ்லிம்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டாலும், முஸ்லிமல்லாதவர்கள் இவரை எப்படி காண்பது என்ற கேள்விக்கு இவர் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார். மனிதனின் நித்தியத்தைப் பற்றி இவர் பேசுவதினால், இவரை உரசிப்பார்த்து இவர் சுத்த தங்கமா? அல்லது தகரமா? என்பதை அறிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஏழாம் நூற்றாண்டிலே ஒரு யூதப்பெண் விஷம் வைக்கப்பட்ட உணவை கொடுத்து முஹம்மதுவின் நபித்துவத்தை சோதித்தாள். இதே போல இவருக்கு செய்யமுடியாதே என்பதால், வெறும் கேள்வி விஷப்பரிட்சை இவருக்கு.
3) மூன்றாவதாக, இவரிடம் கேள்விகள் கேட்கும் போது, அவைகள் நியாயமானவைகளாக முஸ்லிம்களுக்கு பட்டால் (இவர் கோபால் என்பதால்), அதே கேள்விகளை முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கும் பொருந்தும் என்று எண்ணி், பதில்களைத் தேடி தெளிவு பெறுவார்கள் என்பது என்னுடைய கடைசி நோக்கம்.
இப்போது திரு கோபால் அவர்களுக்கு முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து சில நபித்துவம், இஸ்லாம் பற்றிய கேள்விகள்:
(நபி என்று தன்னை சொல்லிகொண்டவருக்கு, உமர் (ஈஸா குர்ஆன் உமர் - நான் தான்) 'திரு' என்றோ 'அவர்கள்' என்றோ அடைமொழிகள் போட்டு எழுதினால், அடுத்த அந்த 'திருவிற்கு' என்ன நடக்கவிருக்கும், எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படும் என்று இப்போதைக்கு முஸ்லிம்களில் அனேகருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)
திரு கோபால் அவர்கள் சுருக்கமான பதில்களையும் தரலாம் (ஓரிரு வார்த்தைகளால்), அல்லது நீண்ட பதில்களையும் தரலாம்.
1) திரு கோபால் அவர்களே! நீங்கள் சொல்வது இறைச்செய்தி என்றுச் சொல்கிறீர்களே, அப்படியானால் நீங்கள் அல்லாஹ் அனுப்பிய (அ) நியமித்த நபியா (தீர்க்கதரிசியா)?
2) ஆம், நான் அல்லாஹ்வின் நபி தான் என்று நீங்கள் சொல்வதாக இருந்தால், எப்படி உங்கள் நபித்துவத்தை நிருபிப்பீர்கள்?
3) 'நீங்கள் முஹம்மதுவிடம் நபித்துவம் பற்றிய சான்றுகளை கேட்டீர்களா? என்னிடம் மட்டும் ஏன் சான்றுகளை கேட்கிறீர்கள்?' என்று முஸ்லிம்களிடம் கேட்டீர்கள். ஆனால் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள்? நாங்கள் முஹம்மதுவை நபி என்று நம்புவதில்லை, எனவே எங்களுக்கு மட்டும் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
4) நீங்கள் அல்லாஹ்வின் நபி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது? நீங்கள் அல்லாஹ்வின் நபி என்று ஜிப்ரீல் தூதன் சொன்னானா? கனவு கண்டீர்களா? தரிசனம் கண்டீர்களா? எப்படி உங்களுக்குத் தெரியும்?
5) ஒருவேளை மூஸா நபியோடு நேரடியாக அல்லாஹ் பேசியது போல, நீங்களும் அல்லாஹ்வின் மெல்லிய சத்தத்தை கேட்டீர்களா?
6) நீங்கள் நபி என்று உங்களுக்கு எந்த வயதில் தெரிந்தது? அதாவது பிறந்ததிலிருந்து நீங்கள் நபியா? அல்லது இஸ்லாமை ஏற்பதற்கு முன்பு தான் நபியாக மாறினீர்களா? அல்லது இஸ்லாமை தழுவிய பிறகு தான் அல்லாஹ்வின் நபியாக நியமிக்கப்பட்டீர்களா?
7) மூஸாவையும், ஈஸாவையும் அற்புத அடையாளங்களோடு அல்லாஹ் அனுப்பினான் அல்லவா? முஹம்மதுவின் அற்புதம் குர்ஆன் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். உங்களின் அற்புதம் எது? அற்புதங்களா? புத்தகமா? அல்லது வெறும் வாயில் கூழ் காய்ச்சுவதோடு நின்றுவிட்டானா அல்லாஹ்?
8) அல்லாஹ்வின் தரம் சிறிது சிறிதாக குறைந்துக்கொண்டே வருகிறது. அதாவது ஈஸா வரைக்கும் அற்புதங்களை வாரி வழங்கியவன், முஹம்மது வந்தபோது ஒரு அற்புதமும் செய்யவில்லை. இப்போது உங்களை அனுப்பியுள்ளான், இனி அல்லாஹ்விற்கு என்ன நடக்குமோ, காலம் தான் பதில் சொல்லவேண்டும் (சொல்லும்). இதைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?
9) உங்களை நியமித்தது அல்லாஹ் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ் என்ற பெயரை உங்களுக்கு சொன்னது யார்? குர்ஆனா? வேறு ஏதாவது தூதனா? ஒரு வேளை இப்லீஸ் உங்களிடம் வந்து 'நான் அல்லாஹ் இந்த இறைச்செய்தியை முஸ்லிம்களுக்குச் சொல்' என்று சொல்லியிருந்தால், இதனை எப்படி சரி பார்ப்பீர்கள? உங்களுக்கு வந்த இறைச்செய்தி எந்த மூலத்திலிருந்து (அல்லாஹ் அல்லது இப்லீஸ்) வந்தது என்று எப்படி கண்டுபிடிப்பது? கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஒரு இறைச்செய்தியை, நபியை சோதிப்பது சரிபார்ப்பது என்று நன்றாகத் தெரியும்! முஸ்லிம்களுக்கு தெரியாதே! அதை அவர்கள் 7ம் நூற்றாண்டிலும் செய்யவில்லையே! உங்களுக்காவது தெரியுமா?
10) குர்ஆனையும் முஹம்மதுவையும் பின்பற்றுபவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள் என்று 1400 ஆண்டுகளுக்கு பிறகு வந்து சொல்கிறீர்களே! இத்தனை ஆண்டுகளாக ஏன் அல்லாஹ் சும்மா இருந்துவிட்டான்?
11) முஹம்மதுவின் காலத்திலிருந்து இன்றுவரை கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நரகத்துக்கு செல்வதற்கு காரணம் அல்லாஹ் தான் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன், ஏனென்றால் கோபால் என்ற நபியை அனுப்புவதற்கு இத்தனை நூற்றாண்டுகள் ஏன் அல்லாஹ் தாமதித்தான்?
12) முஹம்மது தொடங்கி இன்றுள்ள இஸ்லாமிய ஆட்சி புரியும் நாடுகளில் ஷரியா சட்டத்தினால் அவதிப்படும், கொடுமைப்படுத்தப்படும் ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கு அல்லாஹ் தான் காரணம். கோபால் நபியை முன்னமே ஏன் அல்லாஹ் அனுப்பவில்லை?
13) குறைந்தபட்சம் முஹம்மதுவிற்கு பதிலாக கோபால் நபியை அல்லாஹ் அனுப்பியிருக்கலாமே! முஹம்மது பற்றிய உங்களுடைய கருத்து என்ன? அவர் நபியா? அல்லது கள்ள நபியா?
14) குர்ஆனையும் முஹம்மதுவையும் பின்பற்றினால் நரகம் தான் செல்வீர்கள் என்று நீங்கள் சொல்வதினால், முஹம்மது ஒரு கள்ள நபி என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது அவர் அல்லாஹ்வின் நபி தான், ஆனால் அவரை தேவையில்லாமல் அல்லாஹ்விற்கு சமமாக உயர்த்தி பிடித்துள்ளார்கள் முஸ்லிம்கள் என்றுச் சொல்கிறீர்களா?
15) ஒருவேளை முஹம்மது அல்லாஹ்வின் நபி என்று நீங்கள் (திரு கோபால் அவர்கள்) ஒப்புக்கொண்டால், அவர் மூலமாக கொடுக்கப்பட்ட குர்ஆன் வேதமில்லாமல் போய்விடுமா?
16) ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள்: குர்ஆன் அல்லாஹ்வின் இறைவேதமா? இல்லையா? (ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்லவேண்டும்)
17) ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள்: முஹம்மது ஒரு நபியா? அல்லது பொய் நபியா? (ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்லவேண்டும்)
18) ஒரு வார்த்தையில் பதில் சொல்லுங்கள்: கோபால் ஒரு நல்ல நபியா அல்லது கள்ள நபியா? (ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே சொல்லவேண்டும்)
19) நீங்கள் ஷஹதத் (இஸ்லாமிய விசுவாச அறிக்கை, கலிமா, ஷஹாதா) சொல்லி முஸ்லிமான நாளுக்கு முன்பிலிருந்தே நபியா? அப்படியானால் அன்று ஷஹதத்தில் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னது என்னவானது? பொய் தானே! வஞ்சகம் தானே! (பிஜேவே எல்லாருக்கும் அல்வா கொடுப்பார், நீங்கள் அவருக்கே அல்வா கொடுத்திட்டீங்களே கோபாலு... கோபாலு...)
20) ஷஹதத் சொன்ன நாள் அன்று அல்லது அதற்கு முன்பு உங்களுக்கு இறைச்செய்தி வராமல், அதன் பிறகு வந்திருந்தால், ஏன் இப்படி செய்தாய் என்று அல்லாஹ்விடம் கேட்டு இருக்கிறீர்களா?
21) ஒரு கள்ள நபி (முஹம்மது) மீது ஷஹதத் சொல்ல, ஒரு உண்மையான நபி(கோபால்)யை நியமிப்பது என்பது அல்லாஹ்விற்கே இது அடுக்குமா? அடுத்த முறை உங்களுக்கு வஹி வரும் போது இந்த கேள்வியை கேட்பீர்களா அல்லாஹ்விடம்?
22) கேட்க மறந்துவிட்டேன், வஹி என்றதும் ஞாபகத்திற்கு வந்தது. உங்களுக்கு அல்லாஹ்வின் வஹி, இறைச்செய்தி அடுத்த 23 ஆண்டுகள் தொடருமா?
23) உங்களுக்கு ஒரு வேதம் அல்லாஹ் கொடுத்திருப்பானே அல்லது கொடுப்பானே! அதனை, ஒரே முறை இறக்கப்போகின்றானா? அல்லது கொஞ்ம் கொஞ்சமாக உங்கள் வசதிக்காக தேவைப்படும் போது இறக்குவானா?
24) கோபாலுக்கு இறக்கப்போகும் இறைச்செய்தி எப்படி இருக்கும்? குர்ஆன் போல தொடர்ச்சி இல்லாமல் பின்னணி நிகழ்ச்சிகளின் விவரங்கள் இல்லாமல் இருக்குமா? அல்லது பைபிளைப்போல தொடர்ச்சியாக இருக்குமா?
25) முஹம்மதுவின் சொல்லும் செயலும் முஸ்லிம்களுக்கு 'சுன்னா (Sunnah)' ஆனது போல, கோபாலின் சொல்லும் செயலும் சுன்னா(Sunnah) ஆகுமா? (கோபாலின் சுன்னா யாருக்கு? என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும், அதை இப்போதைக்கு நோண்ட வேண்டாம்).
26) முக்கியமான கேள்வி, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? திருமணம் பற்றி உங்கள் கருத்து (சாரி அல்லாஹ்வின் கருத்து) என்ன? இறைச்செய்தியின் ஆரம்பத்திலேயே இதைப் பற்றி சொல்லிவிட்டால், கோபாலை நம்பலாமா இல்லையா? என்று முடிவு எடுக்க தற்கால முஸ்லிம்களுக்கு சௌகரியமாக இருக்கும். ஏன் இந்த கேள்வி என்றால், ஆரம்பத்தில் ஒரு மனைவியோடு 15 ஆண்டுகள் வாழுவீர்கள், அப்போது கோபாலின் தோழர்கள் கூட ஒரு மனைவியோடு வாழவேண்டும். அதன் பிறகு நான்கு என்று வஹி இறங்கும், பிறகு அடிமைகளை வைத்துக்கொள்வது பற்றி வஹி இறங்கும். திருமணம் பற்றி ஆரம்பத்திலேயே ஒரு சரியான தெளிவு இருந்தால், முஸ்லிம்களுக்கு வசதியாக இருக்கும்.
27) கிறிஸ்தவன் முறையில் ஒரு கேள்வி. உங்கள் பேச்சில் பைபிள் இறைவேதம் தான், அதில் சில மாற்றங்கள் மட்டும்செய்தார்கள் என்றுச் சொன்னீர்களே! அது என்ன மாற்றம் என்று சொல்லமுடியுமா? யார் செய்தார்கள்? முஹம்மதுவிற்கு முன்பா? பின்பா? என்று சொல்லமுடியுமா? ஒரு இறைநபி என்றுச் சொன்னால், ஒரு தெளிவு வேண்டுமல்லவா! ஏதோ காற்றில் சிலப்பம் அடிப்பதினால் என்ன லாபம் சொல்லுங்கள்?
28) முஹம்மதுவின் பெயர் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இதே போல கோபால் என்ற பெயரையும் பைபிளில் காணமுடியுமா? கோபால் என்பது ஒரு இந்து தெய்வத்தின் பெயரல்லவா? இதே பெயரில் முன்னறிவிக்கப்பட்டு இருக்குமா? அல்லது உங்களுக்கு வேறு பெயர் ஏதாவது உண்டா?
29) இது ஒரு முக்கியமான கேள்வி, அடுத்த 1 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகளில் உங்கள் மூலமாக (அல்லது உங்களுக்கு) நடக்கவிருக்கும் விவரங்களை இறைச்செய்திகளாக, முன்னறிவிப்புக்களாக சொல்லமுடியுமா? ஏனென்றால், இவைகள் உங்கள் நபித்துவத்துக்கு நிருபங்களாக அப்போது மக்கள் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
30) நீங்கள் இஸ்லாமிய ஈஸாவைப்போன்று ஆன்மீகத் தலைவரா? அல்லது முஹம்மதுவைப் போன்று ஆன்மீக மற்றும் நாட்டுத்தலைவருமா? சுருக்கமாகச் சொல்வதானால், எதிர்ப்பவர்களிடம் சண்டை போடுவீர்களா?
31) நீங்கள் அல்லாஹ்வின் இறைச்செய்தியாளராக மாறிய பிறகு குர்ஆனை படிக்கின்றீர்களா? மேலும் [முந்தைய] முந்தைய வேதங்களை (பைபிளை) படிக்கின்றீர்களா?
32) நபியா? தோழரா? பிரதரா? உங்களை நாங்கள் எப்படி அழைப்பது? (இவ்வளவு எழுதிவிட்டு, இப்போதா! இந்த கேள்வியை கேட்கிறாய்! என்று கேட்காதீர்கள்?)
33) ஐந்து வேளை தொழுகின்ற முஸ்லிம்களே என் முன்னே வந்து விவாதம் செய்யுங்கள் என்று சவால் விட்டீர்களே! முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழவேண்டும் என்று எங்கே படித்தீர்கள்? குர்ஆனிலா ஹதீஸ்களிலா? ஐந்து என்பது சரியான தொழுகை எண்ணிக்கையென்று நீங்கள் நம்புகிறீர்களா?
34) ஒருவேளை உங்கள் இறைச்செய்தியை நம்பும் முஸ்லிம் என்ன செய்யவேண்டும்? மறுபடியும் ஷஹதத்தை மாற்றிச் சொல்லவேண்டுமா? 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, கோபால் அல்லாஹ்வின் இறைத்தூதர்' என்று சொல்லவேண்டுமா? உங்கள் கருத்து என்ன?
35) எனக்கு இன்னொரு சந்தேகமும் கேள்வியும் உள்ளது. ஒரு வேளை, விளையாட்டுக்காக இஸ்லாமைத்தழுவி, முஸ்லிமைப்போல சில நாட்கள் நடித்து, மறுபடியும் கிறிஸ்தவராக மாறுகின்ற பிளான் ஏதாவது உண்டா என்ன? வேண்டாம் சாமி, மறுபடியும் வரவேண்டாம், கிறிஸ்தவர்கள் தாங்கமாட்டார்கள்.
36) கதை இப்படியாக இருக்குமோ! முஸ்லிம்களுக்கு அவர்களின் தவறை புரியவைப்பதற்கு, முஸ்லிமைப்போல நடித்து அவர்களுக்கு சத்தியத்தைச் சொல்ல முயலுகின்றீர்களா? இது உண்மையானால், இது ரொம்ப தவறு, இயேசுவே இதனை அங்கீகரிக்கமாட்டார்.
37) இஸ்லாமின் புனித நகரங்களாகிய மக்காவும், மதினாவும் உண்மையாகவே அல்லாஹ்வின் புனித நகரங்களா? அல்லாஹ்வின் இறைச்செய்தியாக கேட்டுச் சொல்லமுடியுமா? ஆம் என்பது உங்கள் பதிலானால், எப்படி என்றுச் சொல்லுங்கள். இல்லை என்பது உங்கள் பதிலானால் ஏன் என்று விளக்குங்கள், பிளீஸ்.
38) அல்லாஹ் அனுப்பிய நபி நான் என்று முஹம்மதுவின் காலத்திலும், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு என்ன ஆனது என்று ஒரு முறை கூகுள் செய்து பார்க்கமுடியுமா கோபால் அவர்களே! (முஹம்மதுவிற்கு பிறகு தான் ஒரு இஸ்லாமிய நபி என்றுச் சொன்னவன் நல்லா வாழ்ந்ததாக. . . உயிரோடு விட்டுவைக்கப்பட்டதாக . . .).
39) உண்மையான இறைச்செய்தியாளராகிய நபிக்கு கூகுள் தேவையில்லை, அல்லாஹ்வே சொல்லிவிடுவானே!
40)உங்கள் பிளான் என்ன? அல்லாஹ் கொடுத்த கொடுத்துக்கொண்டு இருக்கின்ற கொடுக்கப்போகின்ற இறைச்செய்தியை மக்களிடம் எப்படி கொண்டுச் செல்லப்போகிறீர்கள்? வெறும் வீடியோக்கள் மூலமாக பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற தளங்களை பயன்படுத்தி பரப்பப்போகின்றீர்களா? அல்லது வேறு ஏதாவது திட்டமிருக்கின்றதா?
இந்த கேள்விகளை எப்படியாவது திரு கோபால் அவர்களிடம் சேர்க்கும் படி முக்கியமாக முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கண்டிப்பாக நீங்கள் சேர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும், அதே கையோடு, இந்த கேள்விகளில் பலவற்றிற்கு உங்கள் இறைத்தூதர் முஹம்மது அவர்கள் என்ன பதில் சொல்வார் என்று சிந்தித்துப் பார்ப்பீர்களா?
திரு கோபால் அவர்களே, இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைக் கொடுத்தால், அடுத்த கட்ட கேள்விகளாக கிறிஸ்தவம் பற்றி கேட்கலாம் என்று விரும்புகிறேன். ஏனென்றால், பைபிளையும் உங்கள் அல்லாஹ் தானே இறக்கினான், எனவே, அடுத்த கட்ட கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறீர்கள்.
கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன், உங்கள் உயிருக்கு ஆபத்து வாசல்படியில் காத்துக்கொண்டு இருக்கிறது. சில முஸ்லிம்களிடமிருந்து உங்களை காக்கும் படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்களைப் பற்றி நான் ஏற்கனவே கீழ்கண்ட கட்டுரைகளில் முன்னறிவித்துள்ளேன், கொஞ்சம் அந்த தொடுப்பை சொடுக்க படித்து தான் பாருங்களேன், திரு கோபால்.
நாளைக்கு ஒருவன் வருவான், தன்னை நபி என்றுச் சொல்லுவான், ஒரு புதிய மதத்தை உருவாக்குவான், எல்லா இஸ்லாமியர்களும் தன் மார்க்கத்திற்கு வரவேண்டும் என்று கூறுவான், மாறவில்லையானால் மரண தண்டனை என்பான். அவனை பின்பற்ற ஒரு கூட்ட மக்களை சேர்த்துக்கொள்வான், பலவீனமாக மக்களை தாக்குவான், இதனை தன் இறைவன் செய்யும் படிச் சொன்னார் என்பான். இந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்? இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவரிடம் தன் நபித்துவத்திற்கு அத்தாட்சி என்னவென்று கேட்பார்களா? ( மூலம் )
மேலும் இதனையும் படியுங்கள், திரு கோபால் அவர்கள் என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாரோ, அதை ஒரு உதாரணத்தோடு கூறியுள்ளேன்: முதலில் வந்தது எது? பைபிளா அல்லது குர்ஆனா?