முருகனை சுப்ரமணியனாக்கிய ஆரியர்கள், இயேசுவை ஈஸாவாக்கிய அரேபியர்கள் - ஓர் சிறிய ஒப்பீடு

(கந்த சஷ்டி கவசம் பற்றிய சர்ச்சை விமர்சனத்துடன்)

பல ஆண்டுகளாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. முருகன் தமிழ்க்கடவுள் என்று தமிழ் அறிஞர்கள் சொல்வதை நான் கேட்டு இருக்கிறேன், ஆனால், வினாயகருக்கு இவர் எப்படி தம்பியானார்? எப்போது தம்பியானார்? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், இந்த "கந்த சஷ்டி கவசம்" பற்றிய கறுப்பர் கூட்டம் வீடியோ வந்த பிறகு, பல தமிழ் அறிஞர்கள் பேசிய வீடியோக்களை பார்த்த பிறகு என் சந்தேகம் தீர்ந்தது.

ஆரியர்கள் முருகனை ஆட்டையப்போட்டு, அவர் பெயரில் பல கட்டுக்கதைகளை உருவாக்கி, அதனை தமிழ் மக்கள் மத்தியில் புகுத்திவிட்டார்கள்.  முருகனுக்கு ஒரு அண்ணனையும் கொடுத்துள்ளார்கள், அவ்வளவு ஏன்! ஒரு அப்பாவையும் (சிவனை),  அம்மாவையும்  கொடுத்து சிறப்பித்து இருந்திருக்கிறார்கள், என்பதை புரிந்துக்கொள்ளமுடிந்தது.

திருவிளையாடல் படம் மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற படங்களை மாற்றுமத அன்பர்களும், இறைநம்பிக்கையில்லாதவர்களும் பார்த்து ரசித்ததை மறுக்கமுடியாது. நாம் இருவர் நமக்கு இருவர் என்று சொல்வது போன்று ஒரு சிறிய குடும்பத்தோடு அழகாக‌ தோன்றும் காட்சிகள் பார்த்து சிறிய வயதில் இரசித்து இருந்திருக்கின்றேன். அந்த கதைகளும் ஆரியர்களின் கைவேளை என்பதை இப்போது தான் புரிகின்றது.

அதனால் இப்போது தமிழ் அறிஞர்கள் முருகனை அவர் குடும்பத்தை விட்டுவேறு பிரிக்க பார்க்கிறார்கள், தமிழ் அறிஞர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்த கீழ்கண்ட வீடியோவில் (இன்னும் பலரது வீடியோவின் படி) முருகன் தமிழ்க்கடவுள், அவரை ஆரியர்கள் திருடி சுப்ரமணி ஆக்கிவிட்டார்கள், அவருக்கு  ஒரு குடும்பத்தை உருவாக்கி, அவருக்கு பூணூல் போட்டு, நல்ல அருமையான தமிழ் நூல்களை திருடி, அவைகளில் கைவைத்து திருத்தி தங்கள் கோட்பாடுகளை உட்புகுத்திவிட்டார்கள் என்று இந்த வீடியோவில் வரும் அம்மையார் கலையரசி நடராஜன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

குறிப்பு: இயேசு ஒரு சித்தர், கடவுள் இல்லை என்று இந்த தாயார் பேசியுள்ளார்கள், இதில் பிரச்சனை ஒன்றுமில்லை, அவர் பைபிளை முக்கியமாக நற்செய்தி நூல்களை படித்துயிருந்திருக்கமாட்டார். எனவே தான் அறிந்த அளவின் படி பேசியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் வெளியிட்ட‌ கந்தசஷ்டி வீடியோ பற்றி என் கருத்து:

திடீரென்று ஒரு நாள் யுடியூப் பார்க்கும் போது, கறுப்பர் கூட்டம் யுடியூப் குழுமத்தின் நிர்வாகியை கைது செய்வது பற்றிய செய்தியை பார்த்தேன்.  சரி எதை இவர் பேசினார் என்று சில வீடியோக்களை பார்க்கும் போது, கந்த சஷ்டி கவசம் பற்றி அடிபட்டது, ஆனால் கறுப்பர் கூட்டத்தின் வீடியோ எனக்கு கிடைக்கவில்லை.

என் நண்பர் ஒருவரிடம் அது என்ன வீடியோ உங்களிடம் உள்ளதா என்று கேட்டதற்கு "இல்லை" என்று சொல்லிவிட்டார்.  எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது, வேறு யாராவது மறுபடியும் அந்த ஒரிஜினல் வீடியோவை பதிவேற்றம் செய்வார்கள், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அதன் பிறகு நான் எதிர்ப்பாத்தபடி, ஓரிருவர் அதனை யுடியூபில் பதிவெற்றம் செய்திருந்தார்கள்.

கறுப்பர் கூட்டத்தின் வீடியோவைப் பார்த்தேன், அவருக்கு எதிராக பேசி திட்டுபவர்களின் வீடியோவையும் பார்த்தேன். 

இவ்விரண்டு பேர்கள் மீதும் அன்பான‌ கோபம்: 

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் என்பவர், ஒரு சின்ன விஷயத்தை இவ்வளவு பெரியதாக்கிவிட்டது வேதனைக்குரியது. சத்தமில்லாமல் வாழைப்பழத்தில் ஊசி நுழைக்கவேண்டிய இடத்தில், இவர் வெடிகுண்டு வைத்து கொளுத்தியிருக்கிறார். வெடிகுண்டு வைத்தால் சத்தம் வராதா என்ன? வாழைப்பழத்திற்கு ஊசியே அதிகம், அதற்காக வெடிகுண்டு பயன்படுத்துவது அறிவுடமையாகுமா?  இவருடைய வேறு பல வீடியோக்களில் (ஆபாச புராணங்கள்) பல விவரங்களை வெடிகுண்டு போல வெடித்திருக்கிறார், ஆனால், கந்த சஷ்டி கவசத்தில் என்னை பொருத்தமட்டில், அவ்வளவு பெரிய விமர்சனம் வைக்கும் அளவிற்கு ஒன்றுமில்லை. 

நேற்று "கந்த சஷ்டி கவசம்" முழுபாடலை, எழுத்துக்களோடுச் சேர்த்து வீடியோ பார்த்தேன், வரிகளையும் படித்தேன். பாதுகாப்பு வேண்டுமென்றுச் சொல்லி பாடப்பட்ட பாடல் அது, அதற்கு இவ்வளவு  பெரிய விமர்சனத்தை சுரேந்திரன் வைத்திருக்கவேண்டியதில்லை. மேலும், கந்த சஷ்டிகவசம் பற்றி கேள்வி கேட்டே ஆகவேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால், அதனை ஆபாச வார்த்தைகளோடு சேர்த்து கேட்கவேண்டிய அவசியமென்ன?  ஒரு கடவுள் பிரார்த்தனையில் ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளின் பிரயோகம் என்று சிம்பிளாக கேட்டுயிருந்தால் போதுமானது. ஆபாச புராண வீடியோக்களில் பெரிய பெரிய யானைகளை தாக்கிக்கொண்டு இருந்த இவர், திடீரென்று ஏன் ஒரு சேவலுக்கு பின்னால் போகவேண்டும்?

இரண்டாவதாக, அவரை விமர்சித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் பற்றிய கோபம். முருகனைத் தவிர்த்து, ஆபாச புராணங்கள் என்றுச் சொல்லி, மற்ற பெரிய இந்து தெய்வங்களின் கதைகளை, கிழி கிழி என்று கிழிக்கும் போது, கோபம் வராத இவர்களுக்கு, எப்படி திடீரென்று முருகனைத் தொட்டவுடனே வந்தது? தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.

இவர்கள் அவரை பலவாறு விமர்சித்து மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், ஆனால், அவர் மீது வழக்கு போட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பியதால், அவரை “தியாகியாக்கிவிட்டார்கள்”, இதுவும் தேவையில்லாதது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் என்று சொல்வது போன்று, லட்சம் பேர் பார்க்கவேண்டியதை, கோடி பேர் பார்க்க வைத்துவிட்டார்கள் இவர்கள். இவர்களே பெரிய விளம்பரத்தை கொடுத்துவிட்டார்கள்.

தமிழர்களுக்கு ஒரு கேள்வி: 

கந்த சஷ்டி கவச பிரச்சனை ஒரு புறமிருக்கட்டும், உங்கள் முருகனை எப்படி சுப்ரமணியத்திடமிருந்து (ஆரியர்களிடமிருந்து) காப்பாற்றப்போகிறீர்கள்?

முருகனை தமிழர்கள் காப்பாற்றிக் கொள்ளட்டும். நம் விஷயத்துக்கு வருவோம்.

இயேசுவை ஈஸாவாக்கிய அரேபியர்கள்

இயேசுவிற்கு 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரியர்கள் தமிழ் கடவுள்களை ஆட்டையைப்போட்டது போன்று ஆரேபியர்கள் 'இயேசுவை' ஆட்டையைப் போடப்பார்த்தார்கள்.

அரேபியாவில் ஒரு புதிய ஆன்மீக தலைவர் உருவானார், இது தான் உலகத்துக்கான வேதம் என்றுச் சொல்லி ஒரு புத்தகத்தை அறிமுகம் செய்தார். அந்த புத்தகத்தில் இயேசுவிற்கு ஒரு புதிய சாயத்தை பூசினார். அவர் இயேசுவை மட்டும் திருடப்பார்க்கவில்லை, பைபிளின் முதல் மனிதன் ஆதாம் முதற்கொண்டு, மோசே, தாவீது, சாலொமோன், யோவான் ஸ்நானகன் என்று தொடர்ந்து வந்து இயேசுவில் வந்து நின்றார்.

அந்த அரேபியர் பைபிளின் இறைவனை எடுத்துக்கொண்டதை கூட மன்னித்துவிடலாம், ஆனால் பைபிளில் வரும் சாத்தானையும் எடுத்து அவனுக்கும் ஒரு புதிய சாயத்தை பூசியதைத் தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

  • ஆரியர்கள் முருகனுக்கு பூணூல் போட்டார்கள், அரேபியர்கள் இயேசுவிற்கு தொப்பி போட்டார்கள்.
  • ஆரியர்கள் முருகனை பிராமணாக்கினார்கள், அரேபியர்கள் இயேசுவை முஸ்லிமாக்கினார்கள்.
  • ஆரியர்கள் முருகனுக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தார்கள், அரேபியர்கள் இயேசுவை தங்கள் நபித்துவ குடும்பத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.

ஆனால், கிறிஸ்தவர்கள் தங்கள் இயேசுவை அரேபியர்களின் பிடியில் முழுவதுமாக சிக்க விடவில்லை. ஆனால் தமிழர்கள் இன்றுவரை முருகனை இழந்து தவிக்கிறார்கள். 

இதற்கு காரணமென்ன? இதற்குஇரண்டு காரணங்களை சொல்லமுடியும். ஒன்று புதிய ஏற்பாடு தன் கோட்பாடுகளில் உறுதியாக உள்ளது. யாரும் இயேசுவை கொள்ளையடித்துக் கொண்டுபோக அது இடம் கொடுக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் இறையியலும், வசனங்களும் எந்த அரேபியராலும் அசைக்கமுடியாத அளவுக்கு உறுதியாக உள்ளது. இரண்டாவதாக, கிறிஸ்தவர்கள் தங்கள் உறுதியிலும், பைபிளை பின்பற்றுவதிலும் உண்மையாக  இருந்தமையால், இயேசுவை யாரும் திருட முடியவில்லை.

ஆனால், தமிழர்கள் ஏன் தங்கள் முருகனை ஆரியர்களிடம் விட்டுக்கொடுத்துவிட்டார்கள்? முருகனைப் பற்றிய நூல்கள் எவை? அவைகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது? முருகனுக்கு பூணூல் போட்டார்கள் என்பதற்கு சான்றுகள் உண்டா? எப்போது முருகனுக்கு ஒரு குடும்பத்தை ஆரியர்கள் கொடுத்தார்கள் போன்றவற்றை ஆய்வு செய்வார்களா தமிழர்கள்?  ஏதோ சுரேந்திரனின் புண்ணியத்தாலும், மேலும் அவரை விமர்சித்து பிரச்சனையை  ஊதி பெரியதாக்கிய‌வர்களின் தவறினாலும், இப்போது தான் தமிழர்களுக்கு கொஞ்சம் தெளிவு உண்டாகியுள்ளது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு படித்த தமிழ் மக்கள் தங்கள் பழைய நூல்களை தூசி தட்டி எடுத்து, மேலும் பல உண்மைகளை கொண்டு வந்தால், தமிழ்நாட்டுக்கு நன்மை உண்டாகும்.

முடிவுரை:

ஒரு யுடியூப் சானலை முடக்கிவிட்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. சுரேந்திரனை விட்டால், இன்னும் அனேகர் இப்படி விமர்சிப்பவர்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள். மகான்கள், சுவாமிகள், போதகர்கள், தலைவர்கள் எதை சொன்னாலும், கண்முடித்தனமாக பின்பற்றிக்கொண்டு மக்கள் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதற்கு இது 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமோ அல்லது அதற்கு முந்தைய  காலமோ அல்ல.

இது இன்டர்னெட் காலம், மொபைள் வந்துவிட்ட பிறகு மக்களின் கருத்துக்களுக்கும், விமர்சனங்களுக்கும் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எனவே, இலட்சக்கணக்கான விமர்சனங்கள் வரும், ஆயிரக்கணக்கானவர்கள் இந்து மதம், இஸ்லாம் கிறிஸ்தவம் போன்றவற்றுக்கு எதிராக பேசுவார்கள் எழுதுவார்கள், நீங்கள் நம்பும் கோட்பாடுகளில் உண்மை இருந்தால், அது நிச்சயம் ஜெயிக்கும். பொய்களுக்கு இனி உலகில் இடமில்லை. எங்கள் முன்னோர்கள் பின்பற்றியதை எப்படி விடமுடியும் என்று யாரும் கேட்கமுடியாது? நம் முன்னோர்கள் பின்பற்றியது உண்மையாக இருந்தால், அது நிலைத்து நிற்கும், அதில் மூடபழக்கங்களும், சமுதாய கேடுகளும் இருந்தால், அது சீக்கிரமாக உதிர்ந்துவிடும் நேரம் வந்துவிட்டது.

சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட்(Survival of the fittest) என்பார்கள், யாரிடம் உண்மையும் நியாயமும் இருக்கின்றதோ அது நிச்சயமாக ஜெயிக்கும். சத்யமேவ ஜெயதே.

குறிப்பு:

ஆரியர்கள் தங்கள் வைதீகத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்ததைப் பற்றி பேசும் நீ (கிறிஸ்தவன்), வெளியிலிருந்து வந்த இயேசுவை தமிழ் நாட்டில் அறிமுகம் செய்வது பற்றி எதையும் பேசமாட்டாயா? என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா? தாராளமாக பேசலாம். கிறிஸ்தவம் தமிழ் நாட்டுக்குள் வந்த பிறகு என்ன நடந்தது? இந்தியாவிற்குள் வந்த பிறகு கிறிஸ்தவம் என்ன செய்தது? இந்திய சாமிகள் தெய்வங்கள் செய்ய முடியாததை இயேசு ஏதாவது இந்தியாவிற்குச் செய்துள்ளார? மக்களின் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை கிறிஸ்தவம் செய்தது என்ன? தமிழ் மொழிக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த தொண்டு என்ன? போன்றவற்றையும் நாம் தாராளமாக விவாதிக்கலாம்.

இதைப் பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தை பார்க்கவும், சிறிது தெளிவு வரும். 

முருகனும் சுப்ரமணியனும் வேறு வேறா? என்ற 50 நிமிட விவாதம்  பாண்டே மற்றும் சுகிசிவம்

  • முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam - https://www.youtube.com/watch?v=RmJ7OUEiRT0

தேதி: 31st July, 2020


இந்திய ஆன்மீகம் பற்றிய இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகளின் பக்கம்