இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும் - பாகம் 1: அறிமுகம்

பைபிளின் இறைவனும் குர்‍ஆனின் அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதை  நாம் அனைவரும்  அறிவோம். முஸ்லிம்கள் இதனை அறியமாட்டார்கள், ஒருவேளை அறிந்திருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், இதனை ஏற்றுக்கொள்ளும் நொடியிலிருந்து அவர்கள் முஸ்லிமிலிருந்து  வெளியேறிவிடுவார்கள்.

இது ஒரு புறமிருக்கட்டும். இப்போது நம்முன் இருக்கும் ஆச்சரியம் தரும் விவரம் என்னவென்றால், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின் நல்ல கதாபாத்திரம் (இறைவன்) மட்டுமல்ல,  கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமின்  தீய கதாபாத்திரம் (இப்லீஸ்) கூட‌ வெவ்வேறானவர்கள் என்பது தான். அதாவது பைபிளின் தேவனும், குர்‍ஆனின் அல்லாஹ்வும் எப்படி வெவ்வேறானவர்களோ, அதே போல, பைபிளில் வரும் சாத்தானும், குர்‍ஆனில் வரும் இப்லீஸும் வெவ்வேறானவர்கள்.

இதனை தெரிந்துக்கொள்வதினால் என்ன பயன்?

சரி இருக்கட்டுமே! பைபிள் சொல்லும் சாத்தானும், குர்‍ஆன் சொல்லும் இப்லீஸும் வெவ்வேறானவர்கள் என்றே வைத்துக்கொள்வோம். இதனால் என்ன பயன்? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

இதற்கான  பதில் மிகவும் சுலபமானது. பைபிளின் சாத்தானும், குர்‍ஆனின் இப்லீசும் வெவ்வேறானவர்கள் என்பது எதைக் காட்டுகின்றதென்றால், பைபிளும் குர்‍ஆனும் ஒரே இறைவனிடமிருந்து வரவில்லை என்பதை இது காட்டுகின்றது.

இதன் மூலமாக, "அல்லாஹ்", "யெகோவா தேவன் அல்ல" என்பது இதன் மூலம் இன்னொரு முறை நிருபனமாகும்.  பைபிளின் வழியில் வந்தவர் முஹம்மது அல்ல என்பதும், குர்‍ஆன் ஒரு இறைவேதமில்லை என்பதும் இதன் மூலமாக நிருபிக்கப்படும்.

சாத்தான் வேறு இப்லீஸ் வேறு:

அடுத்தடுத்து வரும் தொடர் கட்டுரைகளில், குர்‍ஆனின் இப்லீஸ் எப்படி பைபிளில் விவரிக்கப்பட்ட சாத்தான் அல்ல என்பதை குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் பைபிளின் துணைக்கொண்டு தெளிவாக்கப்படும்.

இப்லீஸ் பற்றிய விஷயத்தில், குர்‍ஆன் எப்படி குர்‍ஆனோடு மோதுகின்றது, குர்‍ஆனோடு ஹதீஸ்கள் எப்படி மோதுகின்றது என்பதை தகுந்த ஆதாரங்களோடு நிருபிப்போம்.  மேலும், பைபிளோடும், கிறிஸ்தவ இறையியலோடும் எப்படி குர்‍ஆனும், ஹதீஸ்களும் மோதுகின்றன என்பதைப் பற்றியும் விவரமாக காண்போம். 

சாத்தானின் தொடக்கம் முதற்கொண்டு, அவனைப் பற்றி கூறும் அனேக விஷயங்களில் குர்‍ஆன் தவறுகிறது. முஹம்மது இன்னொரு ஒரு படி மேலே சென்று, குர்‍ஆனின் அடிப்படை இறையியல் கோட்பாடுகளுக்கு எதிராக இப்லீஸ் பற்றி போதித்துள்ளார்.

இப்லீஸ் மற்றும் ஜின்களின் முக்கியத்துவமும், முஸ்லிம்களின் பயமும்:

இதுமட்டுமல்ல, இஸ்லாம் இப்லீஸுக்கு காட்டும் முக்கியத்துவத்தினால், முஸ்லிம்கள் எப்படிப்பட்ட தொல்லைகளில் அகப்பட்டுக்கொண்டு அவதிப்படுகிறார்கள் என்பதையும் காண்போம். இஸ்லாம் போதிக்கும் இப்லீஸ் மற்றும் ஜின்கள் பற்றிய தவறான நம்பிக்கைகளிலிருந்து முஸ்லிம்கள் எப்படி விடுபட்டு, ஒரு பயமில்லாத வாழ்க்கையை வாழுவது என்பதைப் பற்றியும் காண்போம்.

சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு சொன்னது, எவ்வளவு உண்மையானது என்பதை என் வாழ்வில் நான் கண்டிருக்கிறேன்.

நானும் ஒரு முஸ்லிம் பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால் இப்லீஸ் மற்றும் ஜின்கள் பற்றிய பயம் என்றால் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். என் சொந்த பந்தங்கள் படும் தொல்லைகளைக் கண்டு, பல முறை நான் துக்கப்பட்டுள்ளேன்.  என்னிடத்தில் பதில் இருந்தும், அவர்கள் அதனை பெற்றுக்கொள்ளாததைக் கண்டு வேதனைப்பட்டு இருக்கிறேன்.

முஸ்லிம்களை துக்கப்படுத்துகின்ற இந்த இப்லீஸ் மற்றும் ஜின்களின் பயத்திலிருந்தும், பிடியிலிருந்தும் அவர்களை விடுதலை செய்வது, இந்த தொடர்களின் நோக்கமாகும்.

அடுத்த தொடரில் சந்திப்போம்.

உமர்

தேதி: 3rd Feb 2019


"இஸ்லாமின் இப்லீஸும் கிறிஸ்தவத்தின் சாத்தானும்" கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்