முஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழுந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?

(ஒரு மனிதரை கண்மூடித்தனமாக பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள்)

முன்னுரை: 

நான் "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? - 101 காரணங்கள்" என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். இஸ்லாமிய நபி முஹம்மதுவின் ஆரோக்கியமற்ற போதனையை ஆதரித்து ஒரு இஸ்லாமியர் பதில் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் முஹம்மதுவின் போதனை எவ்விதத்தில் ஆரோக்கியமற்றது என்பது பற்றியும், அந்த இஸ்லாமியருக்கான பதிலையும் காண்போம். இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள முஸ்லிம்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

கீழ்கண்ட தலைப்புகளில் நாம் இந்தக் கட்டுரையை பிரித்துப் படிப்போம்:

  • "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? 101 காரணங்கள்" ஒரு சுருக்கம்.
  • மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆரோக்கியமற்ற பதில்
  • எலிகள் ஆரோக்கியமானவைகளா? எலிகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? இந்த வியாதிகள் பற்றி அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹி அறிவிக்கவில்லையா?
  • முஹம்மதுவும், நெய்யில் விழுந்த எலியும் – மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு உமரின் பதில்
  • முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

1. "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? 101 காரணங்கள்" ஒரு சுருக்கம்.

இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஏன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள் என்பதைப் பற்றி 101 காரணங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். ஒவ்வொரு காரணத்திற்கும் குர்-ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், இஸ்லாமிய சரித்திர நிரூபனங்கள், பைபிள் வசனங்கள் என்று அனேக ஆதாரங்களை முன்வைத்து எழுதியிருந்தேன். இக்கட்டுரையை பத்து பாகங்களாக பதித்தேன். 

தொடுப்புக்கள்: பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9 மற்றும் பாகம் 10

இந்த தொடர் கட்டுரைகளின் ஆறாவது பாகத்தில் "நெய்யில் எலி விழுந்துவிட்டால், என்ன செய்வது என்ற கேள்விக்கு முஹம்மது அளித்த பதில்" பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தேன்.  நான் முன் வைத்த "கருத்தை"  இங்கு ஒரு முறை படிப்பது இந்த கட்டுரையை சரியாக புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

உமர் எழுதியது:

51. நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி

அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது.  தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது "அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இவரை பின்பற்றினால், கிறிஸ்தவர்களும் எலியை எறிந்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிடவேண்டியது தான். தீர்க்கதரிசிகள் என்றால் அவர்களின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் நாம் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தவறானதாகும். பைபிளில் காணப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் இப்படி முட்டாள் தனமாக பின்பற்றுவதில்லை. [51]

மேற்கண்ட விவரத்திற்கான ஹதீஸ் ஆதாரங்கள்:

[51] ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236

235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.  Volume :1 Book :4

236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.  Volume :1 Book :4

2. மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆரோக்கியமற்ற பதில்

என் கட்டுரையில் 101 காரணங்களை நான் முன்வைத்து இருந்தேன், அவைகளில் ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு, முஹம்மது சொன்ன பதில் சரியானதுதான், அது ஆரோக்கியமானது தான் என்ற முறையில் மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமியர் பதில் அளித்துள்ளார். முஸ்லிம்கள் எப்படியெல்லாம் முஹம்மதுவை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இவரின் இந்த பதில் ஒரு நிரூபனமாகும். இப்போது மிஸ்பா உல் ஹக் அவர்கள் எழுதிய பதிலை படிப்போம். அதன் பிறகு நாம் அவரின் வரிகளில் உள்ள ஆரோக்கியத்தை சிறிது தொட்டுப்பார்ப்போம்.  வாசகர்கள் கவனமாக அவரது வரிகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

//நெய்யில் விழுந்த எலியும் நபியும்...!!

இஸ்லாமிய அவதூறு இணையங்களில் இன்று இஸ்லாத்தை இழிவு படுத்தும் விதமாக பல செய்திகள் பரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இஸ்லாத்தை பிழையென நிரூபிக்க பரப்பப்பட்டிருக்கொண்டிருக்கு ஒரு நபி மொழிதான் "நெய்யில் விழுந்த எலி பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்க,அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்து விட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்-ஸஹீஹ் புகாரி 235&236"

உண்மையில் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை கிஞ்சித்தும் இழிவுபடுத்தவில்லை மாறாய் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என மேலும் மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.

ஏனெனில் எலி ஓர் திண்மம் மேலும் நெய்யும் ஒரு திண்மம் திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.அந்த வகையில் எலியின் எந்த விளைவும் நெய்யில் தாக்க வாய்ப்பில்லை. எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை.

வசதி படைத்தோருக்கு எலி விழுந்தவுடன் அதை கொட்டி விடு வது பெரிய காரியமல்ல.

அன்றாடம் சாப்பிட வசதி இல்லாதோரையும் கவனித் கொண்டே நபியவர்கள் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் நபியவர்கள் ஏழைகளையும் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இந்த ஹதீதில் கூறியுள்ளார் என்பதை அறிய முடியும்.

எனவே, இஸ்லாமே சத்திய மார்க்கம் 

பிழைபிடிக்க விளைபவர் மூக்குடைந்து வெளியேறுவார் என்பதே உண்மை.//

 

 மூலம்: https://www.facebook.com/photo.php?fbid=280844328750033&set=a.128569687310832.27727.100004734034728&type=1&theater

3. எலிகள் ஆரோக்கியமானவைகளா? எலிகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? இந்த வியாதிகள் பற்றி அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹி அறிவிக்கவில்லையா?

சகோதரர் மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக, எலிகளில் ஆரோக்கியமானவைகளா? அவைகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? அவைகளுக்கு மருந்துகள் உண்டா? போன்ற விவரங்களை சுருக்கமாக காண்போம். அப்போது தன் சகோதரர் மிஸ்பா உல் ஹக் கொடுத்த பதில் எவ்வளவு ஆரோக்கியமற்றதாக இருக்கிறது என்பதையும், முஹம்மதுவின் ஏழாம் நூற்றாண்டு மருத்துவம் அல்லது அல்லாஹ் கொடுத்த வஹி எப்படி அறிவியலுக்கு எதிரானது என்பதையும் அறியமுடியும்.

அ) கொசுக்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக வியாதிகளை பரப்புவது 'எலிகள்' தான்

கொசுக்களுக்கு அடுத்தபடியாக, மனிதர்களுக்கு வியாதிகளை பரப்புவதில் எலிகள் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதனை ஹுமன் சொசைட்டி என்ற தளம் அறிவிக்கிறது. இந்த நிறுவனம் மிருகங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து செயல்படும் தொண்டு நிறுவனமாகும் (இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் இந்த தளம் பற்றிய தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, வாசகர்கள் மேலதிக விவரங்களுக்கு  இந்த தளத்தை பார்வையிடவும்[1]).

ஆகையால், கொசுக்களினால் உண்டாகும் நோய்களைப்போல எலிகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் வருகின்றது. இது மிகவும் ஆபத்தானதாகும். எலிகள் பற்றிய இப்படிப்பட்ட விஷயம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதருக்கு (முஹம்மதுவிற்கு) தெரிய வாய்ப்பு இல்லையென்பது உண்மை தான், ஆனால் அவருக்கு இறைவனாக இருந்த அல்லாஹ்விற்கு தெரிந்திருக்கவேண்டுமே! அற்பமான காரியங்களுக்கெல்லாம் காபிரியேல் தூதனை அனுப்பி முஹம்மதுவிற்கு வெளிப்பாடுகளை அள்ளிவீசிய அல்லாஹ், இந்த ஆரோக்கியமற்ற கருத்தை முஹம்மது சொல்லும்போது, ஏன் அவருக்கு உண்மையைச் சொல்லவில்லை? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.

ஆ) கடைகளில் வாங்கி வீட்டில் வளர்க்கப்படும் எலிகள் மற்றும் சாதாரண எலிகள்

சிலர் எலிகளை கடைகளில் வாங்கி, வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள்.  நம் நாட்டில் எலிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது என்பது குறைவு என்றேச் சொல்லவேண்டும், ஆனால் வெளிநாடுகளில் அனேகர் இப்படி செய்கிறார்கள். இப்படி கடைகளில் வாங்கி வளர்க்கும் எலிகளினாலும் ஆபத்து உண்டு, எனவே, அவைகளுக்கு அவ்வப்போது ஊசிகள் போட்டு, ஆரோக்கியமான சூழலில் வளர்த்தால்,  ஆபத்து குறையலாம், ஆனால் முழுவதுமாக ஆபத்து இல்லை என்றுச் சொல்லமுடியாது [2].  

ஆனால், நம் வீடுகளில் தானாக வசிக்கும் எலிகளுக்கு இப்படிப்பட்ட தடுப்பு ஊசிகள் போடுவதில்லை, அவைகள் காட்டு எலிகளாக இருக்கின்றன. அவைகள் சாக்கடைகளிலும், இதர ஆரோக்கியமற்ற இடங்களில் சுற்றிக்கொண்டும் இருக்கும். இப்படிப்பட்ட எலிகளினால் மனிதர்களுக்கு அதிக ஆபத்து உண்டு [2]. முஹம்மதுவின் போதனையில் காணப்படும் எலி இப்படிப்பட்ட எலியாகும், கடைகளில் விற்கப்படும் எலிகள் அல்ல.  ஆரோக்கியமற்ற இடங்களில் வாழும் இந்த எலிகளினால், அதிக ஆபத்து வரும், இதனை முஹம்மது அறியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால், சர்வத்தையும் அறிந்த அல்லாஹ்விற்குமா இது தெரியவில்லை? என்பதைத் தான் முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்.

இ) எலிகளினால் உண்டாகும் நோய்கள்

எலிகளின் சிறுநீர், மலம் மற்றும் எலிக்கடியினால் அனேக ஆபத்தான நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலக முழுவதும் அவதிப்படுகின்றார்கள். இவைகளில் சில வியாதிகள் மனிதர்களின் உயிரை குடித்துவிடும்.

கீழ்கண்ட பட்டியல் எலிகளினால் உண்டாக்கும் வியாதிகளின் பெயர்களாகும்:

• Leptospirosis

• Salmonellosis

• Rat-Bite Fever

• Plague 

• Hantavirus

• Bubonic Plague

• Salmonellosis 

மேற்கண்ட நோய்களில் "ஹண்டா வைரஸ்" என்ற நோய் மிகவும் ஆபத்தாது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலம் போன்றவற்றினால் இது உண்டாகிறது. எலிகள் நம்முடைய உணவுகளை சாப்பிடும்போது, அங்கேயே சிறுநீர், மலம் கழித்துவிடுகின்றது. எலிகளின் உடலில் காணப்படும் ரோமங்களூம் ஆபத்தானவையாகும்.  ஐரோப்பிய நாடுகளில் மத்திய காலக்கட்டத்தில் மூன்றில் ஒரு பாக ஜனத்தொகை மக்கள் கருப்பு மரணம் (Black Death) என்ற நோயினால் மரணித்தார்களாம் (பார்க்க விக்கிபீடியா லின்க்). இதைப் பற்றிய மூன்று நிமிட (2.49) யூடியூப் வீடியோவை பாருங்கள்.  

http://www.youtube.com/watch?v=vdI-WxHeGC8

சில வியாதிகளுக்கு மருந்துகளே இல்லை.  

மூலம்: அடிக்குறிப்பில் தரப்பட்ட தொடுப்புக்களை பார்க்கவும் ([3] லிருந்து [13] வரை)

இதுவரை எலிகளினால் வரும் நோய்கள் பற்றி சுருக்கமாக கண்டோம். மேலதிக விரங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கி படிக்கவும்.

இப்படிப்பட்ட வியாதிகள் எலிகளினால் உண்டாகும் என்று பாவம் முஹம்மதுவிற்கு தெரியாது. அதனால், ஏதோ தனக்கு தெரிந்த பதிலைக்  கொடுத்தார். ஆனால், முஹம்மதுவின் ஒவ்வொரு சொல்லையும் வேதவாக்காக கருதும் முஸ்லிம்கள், ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கின்றபடியால், அவர்கள் மீது பரிதாபம் கொள்வதைத் தவிர வேறு என்னத் தான் செய்யமுடியும்? ஒன்று செய்யலாம், அவர்கள் மத்தியிலே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.

4. முஹம்மதுவும், நெய்யில் விழுந்த எலியும் – மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு உமரின் பதில்

இதுவரை படித்த விவரங்களின்படி பார்த்தால், மிஸ்பா உல் ஹக் போன்ற முஸ்லிம்கள் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அறியமுடியும். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நாம், 7ம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணான விவரங்களை அப்படியே நம்புவது என்பது வெட்கத்துக்கு உரியது. மேலும், ஒரு படி மேலே சென்று,  இப்படிப்பட்ட போதனைகளைச் செய்த முஹம்மதுவிற்கு வக்காளத்து வாங்குவதும்,  அவரது எலியும் நெய்யும் என்ற போதனையினால் ஆபத்து வராது என்றுச் சொல்வதும் மனித சமுதாயத்தை முட்டாள்களாக்கும் செயல்களாகும். 

இப்போது மிஸ்பா உல் ஹக் என்பரின் வரிகளுக்கு பதிலைக்காண்போம்.

மிஸ்பா உல் ஹக் எழுதியது:

//உண்மையில் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை கிஞ்சித்தும் இழிவுபடுத்தவில்லை மாறாய் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என மேலும் மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.//

உமரின் பதில்:

தற்காலத்தில் முஸ்லிம்களுக்கே உரித்தான பஞ்ச் டையலாக் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால்,  "இஸ்லாமிலே அல்லது குர்-ஆனிலே ஏதாவது ஒரு பிழையை / குறையை மக்கள் முன்வைத்தால், அந்தக் குற்றச்சாட்டு தான் இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று ஆணித்தரமாக நிரூபிக்கிறது" என்றுச் சொல்வதாகும். 

இப்படி சொல்லிவிட்டு, ஒரு சப்பைக் கட்டு  பதிலை வாய்கூசாமல் முஸ்லிம்கள் சொல்வார்கள். இதனைத் தான் இந்த சகோதரரும் செய்துள்ளார். பீ ஜைனுல் ஆபீதீன்  போன்ற அறிஞர்கள் முதற்கொண்டு சாதாரண முஸ்லிம்கள் வரை இதே மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

மிஸ்பா உல் ஹக் எழுதியது:

//ஏனெனில் எலி ஓர் திண்மம் மேலும் நெய்யும் ஒரு திண்மம் திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.அந்த வகையில் எலியின் எந்த விளைவும் நெய்யில் தாக்க வாய்ப்பில்லை. எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை.//

உமரின் பதில்:

முதலாவது நான் மிஸ்பா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், இவர் ஒரு முறையாவது "நெய்யை பார்த்து இருக்கிறாரா?" என்பதாகும்.  முஸ்லிம்களின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நாம் கேட்கும்போது, ஒரு அரசியல் கட்சியின் விளக்க கூட்டங்களில் கலந்துக்கொள்வது போல ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, கட்சித்தலைவர்கள் பேசும் போது, அவைகளை கேட்கும் நாம் "உண்மையாகவே இந்த கட்சிக்குத் தான் ஓட்டு போடவேண்டும்" என்று எண்ணத்தோன்றும். அதன் பிறகு "வேறு ஒரு கட்சியின் கூட்டத்தில் பங்குபெற்று அவர்களின் பேச்சுக்களைக் கேட்கும் போது" அவர்கள் சொல்வதும் உண்மை என்று எண்ணத்தோன்றும். அது போல, மிஸ்பா உல் ஹக் அவர்களின் மேற்கண்ட ஒரு பத்தியை முதன் முறையில் படிப்பவர்கள், "ஆம் இவர் சொல்வது உண்மைத்தான்" என்று எண்ணுவார்கள். ஆனால், பல முறை படிக்கும்போது, உண்மை எது? பொய் எது? என்பதையும், ஒரே பத்தியில் அவர் சொன்ன முரண்பாட்டையும் காணமுடியும். மேற்கண்ட அவரது வரிகளை இன்னொரு முறை படித்துக்கொள்ளுங்கள்.

மிஸ்பா நெய்யை பார்த்திருக்கிறாரா?

முதலாவதாக, நெய் ஒரு திண்மம் என்று இவர் சொல்கிறார். இவர் நெய்யை கண்டதுண்டா? என்ற கேள்வி எழுகின்றது. நெய்யை தயாரித்த பிறகு அது ஒரு திரவப்பொருளாக இருக்கும். சமையல் எண்ணையைபோல அது காணப்படும். அதனை நாம் ஒரு பாத்திரத்தில் அல்லது பாட்டில்களில் பாதுகாப்பாக வைத்தால், அறையின் உஷ்ண நிலையைப் பொறுத்து அது மாற்றமடையும்.  உஷ்ண நிலை குறையும் போது, அல்லது குளிர் காலங்களில் அது திடப்பொருளாக (100% திடப்போருளாக அல்ல) மாற்றமடையும். மேலும், இந்த நிலையிலும் அதனை நாம் 100% திடப்பொருள் என்றுச் சொல்லமுடியாது.  நெய் திரவ நிலையில் இருப்பதை மிஸ்பா உல் ஹக் அவர்கள் இதுவரை பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

இரண்டாவதாக,  எலியும் ஒரு திண்மம் (திடப்பொருள்) என்று இவர் சொல்கிறார். முஸ்லிம்கள் எப்படியெல்லாம் நம் காதில் பூ சுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்! இன்னொரு கேள்வியை நான் மிஸ்பா அவர்களிடம் கேட்கவேண்டும் "மிஸ்பா அவர்களே, நீங்கள் ஒரு திடப்பொருளா? அல்லது "திரவமும், திடமும்" உள்ள ஒரு நபரா"?

எலி என்பது கல் போன்ற ஒரு திடப்பொருள் அல்ல, மேலும் மேலே நாம் கண்டதுப் போல, எலியின் சிறுநீரினால் அனேக வியாதிகள் வருகின்றன.  மிஸ்பா போன்ற இஸ்லாமியர்கள் "இப்படியெல்லாம் எப்படி சிந்திக்கிறார்கள்?" என்று எண்ணத்தோன்றுகிறது.  இவர்களின் இந்த சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தினால்,  உலகத்திற்கு அனேக பில்கேட்ஸ்கள், டாட்டா பிர்ளாக்கள்,  அப்துல் கலாம்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.  

"திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்" இது இவரின் இன்னொரு பஞ்ச் டையலாக். ஆனால், உண்மையென்னவென்றால், (செத்த) எலி ஒரு திடப்பொருளா? நெய் என்பது ஒரு திடப்பொருளா? என்பதாகும். முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் உள்ள சமையல் அறைகளுக்குச் சென்று, நெய்யை ஒருமுறை பார்த்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன். குளிர் சாதப்பெட்டியில் வைத்திருக்கும் நெய்யைக் கண்டு "பார்த்தீர்களா? இது ஒரு திடப்பொருள் என்று யாராவது சொல்ல முயன்றால்", முஹம்மதுவின் காலத்தில் மக்கள் எந்த கம்பனி பிரிட்ஜை (குளிர் சாதனப்பெட்டியை) பயன்படுத்தினார்கள் என்று நமக்குச் சொல்லட்டும். ஒருவேளை, குளிர் சாதனப்பெட்டியிலிருந்து எடுத்த நெய்யாக இருந்தாலும், அல்லது குளிர் காலங்களில் சமையல் அறைகளில் உள்ள நெய் திடமாக இருந்தாலும், செத்த எலியிலிருந்து வெளிப்படும் கிருமிகள் அதில் பரவாது என்று அவர்கள் நிரூபிக்கவேண்டும். 

மிஸ்பாவின் முன்னுக்குப் பின் முரண்பாட்டான விஷயங்கள்:

இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சுக்கள், எழுத்துக்கள் இதர முஸ்லிம்களுக்கு வேத வாக்காக காணப்பட்டாலும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு அவைகள் நகைப்பிற்கு உரியதாக காணப்படுகின்றது.  முதல் சில வரிகளில் மிஸ்பா அவர்கள் "திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்" என்றுச் சொன்னார். ஆனால்,அடுத்த வரியில் அவர் எப்படி முரண்படுகின்றார் என்பதைப் பாருங்கள்:

"எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது"

"எனினும்" என்ற வார்த்தையோடு ஆரம்பித்து, "எலி பட்ட இடத்திலும்,அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கிருமி தாக்கங்கள் ஏற்படவாய்ப்பு உள்ளது" என்கிறார். ஒரே பத்தியில் எப்படி முரண்படுகிறார் என்பதைக் கவனிக்கவும்.  இவரின் இந்த வரிகளினால்,  இவருக்கு சின்ன பிள்ளைகளுக்கு   இருக்கும் பொதுஅறிவு கூட இல்லை என்று நாம் சொல்லலாமா? முதல் வரியில் "தாக்கம் உண்டாகாது" என்றுச் சொல்லிவிட்டு, இரண்டாவது வரியில் "ஆம் கிருமி தாக்கங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது" என்றுச் சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்று பார்த்தீர்களா?  

மிஸ்பா அவர்களுக்கு அடுத்த கேள்வி: "எலிக்கும் நெய்க்கும் இடையே கிருமி தாக்கம் ஏற்படுமா? அல்லது ஏற்படாதா?" நீங்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், "கிருமி தாக்கம் ஏற்படும், ஆனால்… ஏற்படாது" என்றுச் சொல்வது போல இருக்கிறது. முஸ்லிம்களே, நீங்கள் எழுதும் வரிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை காணமுடியாத அளவிற்கு, இதர மக்கள் ஒன்றும் அறியாமையில் உள்ளவர்கள் அல்ல.

கிருமி தாக்கம் எவ்வளவு தூரம்வரை  இருக்கும்?

மிஸ்பா அவர்கள் மேலும் சில வரிகளை இப்படியாக கூறுகிறார்:

//"எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை"//

கிருமி தாக்கம் இருந்தால், அது எவ்வளவு தூரம் இருக்கும்? எலியைச் சுற்றி ஒரு சென்டிமீட்டர் தூரம் வரை கிருமி தாக்கம் இருக்குமா? அல்லது இரண்டு சென்டிமீட்டர்? மூன்று சென்டிமீட்டர் வரை கிருமி தாக்கம் இருக்குமா? ஏன் அந்த கிருமி தாக்கம் முழு பாத்திரத்தில் உள்ள நெய் முழுவதையும் தாக்கமுடியாது? இதற்கு முஹம்மதுவும் பதில் தரவில்லை, மிஸ்பா அவர்களும் பதில் தரவில்லை.  இதுமட்டுமல்ல, இன்னும் முஹம்மதுவின் போதனை என்ன பாடு படப்போகிறது என்பதை இப்போது காண்போம்.

நெய்யில் செத்த எலி வீழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?

மிஸ்பா அவர்கள் சொல்கிறார்: "எலியைச் சுற்றியுள்ள நெய்யை எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிட்டால் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாதாம்". எவ்வளவு தூரம் கிருமியின் தாக்கம் இருக்கும் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. அடுத்தபடியாக முக்கியமான கேள்வி என்னவென்றால், 

நெய்யில் எலி விழும் போது உயிரோடு இருந்ததா? அல்லது 

ஏற்கனவே செத்துபோய் இருந்த எலி நெய்யில் விழுந்ததா?

இதில் எதனை நாம் தெரிந்தெடுத்தாலும், முஹம்மது ஒரு கள்ள நபி என்பது, அதன் மூலம் நிரூபனமாகிவிடும். 

அ) நெய்யில் எலி விழும்போது உயிரோடு இருந்தது: 

ஒருவேளை முஸ்லிம்கள் இந்த பதிலைக்கொடுத்தால், உயிரோடு இருக்கும் எலி எப்படி நெய்யில் விழுந்து மரிக்கமுடியும்? சகோதரர் மிஸ்பா அவர்களின் விளக்கத்தின் படி , நெய் ஒரு திண்மமாயிற்றே, இதில் உயிரோடு இருக்கும் எலி விழுந்தால் எப்படி மரிக்கும்? திடப்பொருளாக இருக்கும் நெய்யிலிருந்து சிறிய முயற்சியின் மூலம் எலி தப்பித்துச் செல்லுமே! ஒருவேளை நெய் சூடாக பாத்திரத்தில் இருக்கும் போது, எலி விழுந்தால், அது மரித்துவிடும், மட்டுமல்ல, நன்றாக பொறிக்கப்பட்ட சிக்கன் போல, (கபாப் போல) மாறிவிடும். இதுமட்டுமல்ல பாத்திரம் முழுவதிலும் இருக்கும் நெய்யில் எலியானது விழுந்த சில வினாடிகள் துள்ளும், தப்பிக்க முயலும், கடைசியாக மரித்துவிடும். இந்த நிலையில், பாத்திரம் முழுவதிலும் உள்ள நெய் கெட்டுவிடும், அதாவது ஆரோக்கியமற்றதாகிவிடும். எலியின் ரோமங்கள் நெய் முழுவதிலும் தெரித்துவிடும். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், எலியின் சிறுநீர், மலம் என்றுச்சொல்லி,  வயிற்றிலிருக்கும் அனேக விஷயங்கள் நெய்யில் பரவ ஆரம்பித்துவிடும். இந்த நிலையில், பாத்திரம் முழுவதிலும் இருக்கும் நெய் ஆபத்தானதாகி விடும். எலியைச் சுற்றியுள்ள நெய்யை எடுத்துவிட்டாலும், மீதமுள்ள நெய் கூட ஆரோக்கியமற்றதே.  இதுமட்டுமா, நெய்யில் எலி விழுந்து செத்ததை உடனே பார்க்காமல், பல மணி நேரத்திற்கு பிறகு பார்த்தால், முழு நெய்யும் எலியின் விஷக் கிருமிகளினால் கெட்டுவிடும். இப்போது அந்த பாத்திரத்தில் உள்ள செத்த எலியையும், அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.  முஸ்லிம்களே உங்களுக்கு புரிகின்றதா? 

ஆக, முஸ்லிம்களின் முதல் தெரிவு, முஹம்மதுவைக் காப்பாற்றவில்லை, அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச் சொல்கிறது. 

ஆ) செத்த எலி தான் நெய்யில் விழுந்தது:

ஒருவேளை செத்த எலி தான் நெய்யில் விழுந்தது என்று முஸ்லிம்கள் கூறினால், அதிலும் பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், செத்த எலியிலிருந்து தீய நச்சு வாயுக்கள் வெளிப்படும். எலி செத்து எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி ஆனதோ தெரியாது, எனவே, அந்த எலியிலிருந்து வெளியே வரும் துர்நாற்றம், செத்துப்போன செல்கள் என்று அனேக நச்சு வாயுங்கள் நெய்யை கெடுத்துவிடும், அதை ஆரோக்கியமற்றதாக்கி விடும். 

எலி செத்துவிட்டபிறகு நெய்யில் விழுந்திருந்தாலும் ஆபத்து, நெய்யில் விழுந்து செத்தாலும் ஆபத்து தான். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதன், தனக்கு தெரிந்த "பொதுஅறிவைப்" பயன்படுத்திச் சொன்ன விஷயத்தை ஒரு மார்க்கத்தின் வழிகாட்டியாக நினைப்பது, மடமையாகும். முஹம்மது சொன்னார் என்பதற்காக அனைத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகாது. 

முஹம்மது கூறிய அந்த ஹதீஸினால் அனேக பிரச்சனைகள் எழுகின்றன. அவர் மேலதிக விவரங்களைச் சொல்லாமல், மொட்டையாகச் சொன்னதை, இந்த 21ம் நூற்றாண்டிலும் நாங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவோம் என்றுச் சொல்லும் மார்க்கம் எப்படி உலக மார்க்கமாக இருக்கமுடியும்? அதனைக் கொண்டுவந்தவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?

இ) ஒரு பானை நெய்யிற்காக, ஒரு பரம்பரையை அழிக்கமுடியுமா?

திரு மிஸ்பா அவர்கள், ஏழைகளைக் கருத்தில் கொண்டு முஹம்மது இப்படிச் சொன்னார் என்ற கருத்தை முன்வைக்கிறார். அதனை படியுங்கள்:

//வசதி படைத்தோருக்கு எலி விழுந்தவுடன் அதை கொட்டி விடு வது பெரிய காரியமல்ல.

அன்றாடம் சாப்பிட வசதி இல்லாதோரையும் கவனித் கொண்டே நபியவர்கள் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் நபியவர்கள் ஏழைகளையும் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இந்த ஹதீதில் கூறியுள்ளார் என்பதை அறிய முடியும்.//

ஒரு பானை நெய்யிற்காக, பல உயிர்களை பலியிடமுடியுமா? இது விஞ்ஞானமா? வாசகர்களே சிந்தியுங்கள். 

பத்து ரூபாய் வீணாகிவிடுமே என்பதற்காக, ஆரோக்கியமற்ற நெய்யை சாப்பிடச்சொல்வது சரியானதா? ஒருவேளை சோறு சாப்பிடவில்லையானால் பரவாயில்லை, அடுத்தவேளை உழைத்துச் சாப்பிடுவான். அதை விட்டுவிட்டு, அவனை ஒரே அடியாக சாகும்படி அறிவுரை கூறுவது வஹியா? இது தான் தீர்ப்பா? ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதுவரை அனேக கேள்விகளை நான் வைத்துள்ளேன், இப்படிபட்ட கேள்விகள் பாமர மக்களுக்கு வராது, நாகரீகமற்ற சமுதாயத்தில் வாழும் மக்களுக்கும், படிப்பறிவற்ற மக்களுக்கும் அறிவுரைச் சொல்லும் போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூடவா முஹம்மதுவிற்கு இல்லாமல் போனது? மிஸ்பா அவர்களே, மக்களை முட்டாள்களாக்கியது போதும், இனியும் உங்கள் பொய்கள் செல்லுபடியாகாது. 

5. முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.

தவளை தன் வாயால் கெடும் என்றுச் சொல்வார்கள், அதுபோல முஸ்லிம்கள் தங்கள் வாயினால் இஸ்லாமின் உண்மை நிலையை மக்கள் அறியும்படி செய்கிறார்கள். முஹம்மது ஒரு கள்ள நபி என்று ஏன் கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள் என்ற தலைப்பில் முன்வைத்த 101 தலைப்புகளில் ஒரு தலைப்பை தொட்டதாலேயே இவ்வளவு பெரிய விளக்கம் அளிக்கவேண்டி வந்தது. இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காண்கிறது.  இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளை மக்கள் முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? 

பீஜே அவர்களும் பொய்யென்று அவர் கருதும்  ஹதீஸ்களும்:

ஒரு வேளை இந்த கட்டுரையை படித்துவிட்டு, பீஜே அவர்கள், மேற்கண்ட ஹதீஸ் என்பது ஒரு பொய்யான ஹதீஸ் ஆகும். இது விஞ்ஞானத்தோடு மோதுகிறது என்ற காரணம் காட்டி, அதனை வருங்காலங்களில் மறுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.  இப்படி அவர் செய்வாரானால், அவரிடம் நாம் சொல்வது என்னவென்றால், இன்னும் அனேக ஹதீஸ்களை மறுக்க நீங்கள் உங்களை தயாராக்கிக்கொள்ளுங்கள் என்பதாகும். 

ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள்:

ஓ கிறிஸ்தவர்களே! எச்சரிக்கையாக இருங்கள், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வரும் என்று இயேசு எச்சரித்த கள்ளத் தீர்க்கதரிசி முஹம்மது ஆவார். பிதாவையும் குமாரனையும் சிலுவையையும், உயிர்த்தெழுதலையும் மறுதலிப்பவனே பொய்யன், அவனே கள்ள உபதேசக்காரன் ஆவான். முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு காரணம் நமக்குத் தேவையில்லை. 

முஸ்லிம்களே, சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள்:

ஓ முஸ்லிம்களே, சிந்தியுங்கள். இது சின்ன விஷயம் தானே, வெறும் எலி பற்றிய விஷயம் தானே என்று நினைக்கவேண்டாம். முஹம்மதுவின் மீது வைக்கும் நம்பிக்கை, உங்கள் நித்திய வாழ்வை நிர்ணயிக்கும் என்பதை மறவாதீர்கள். முஹம்மது உண்மை நபியாக இருந்தால், பிரச்சனை இல்லை.  அவர் கள்ள நபியாக இருந்தால், உங்கள் நித்தியத்தை எங்கே கழிக்கவேண்டி வரும் என்பது உங்களுக்கு இப்போதே புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யிலிருந்து ஒரு செத்த எலியை வெளியே எடுத்துப்போட்டு இருக்கிறேன். அது எப்போது செத்தது? அது எப்படி நெய்யில் விழுந்தது? செத்த எலியினால் உண்டாகும் நோய்கள் என்ன? துர்நாற்றங்கள் ஆரோக்கியமானதா? போன்ற கேள்விகளைக் கேட்டு, பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த பத்தியில் நான் எதனை நெய் என்றுச் சொல்கிறேன், எதனை எலி என்றுச் சொல்கிறேன், எதனை உங்கள் வீடு என்றுச் சொல்கிறேன் என்பதை இப்போதே நீங்கள் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என்றும், அறிவுடமையாக சிந்தித்து செயல்படுவீர்கள் என்றும் நம்புகிறேன். 

எந்த ஒரு இஸ்லாமியராவது, இதற்கு பதிலைக் கொடுத்தால், இன்னும் அதிக விவரங்களை ஆழமாக எழுத தயாராக இருக்கிறேன். 

இப்படிக்கு, 

உங்கள் சகோதரன் உமர்

அடிக்குறிப்புக்கள்

The Humane Society of the United States is the nation's largest and most effective animal protection organization. We help animals by advocating for better laws to protect animals; conducting campaigns to reform industries; providing animal rescue and emergency response; investigating cases of animal cruelty; and caring for animals through oursanctuaries and wildlife rehabilitation centers, emergency shelters and clinics

Wild Rats vs. Domestic Rats

Although they both can carry many types of diseases that are transmitted to humans, wild rats present a greater danger since their environment is not controlled. Domestic rats purchased from a responsible source, who monitors their rats closely and tests for diseases, pose less of a threat than those from an unknown source or in the wild. Either way, it's important to be aware of the potential risk of diseases carried by rats, since the the Humane Society of the United States notes that, aside from mosquitoes, rats carry more diseases that can be transmitted to humans than almost any other living thing.

[4] http://www.pestworld.org/news-and-views/pest-articles/articles/health-threats-posed-by-rodents/

One of the most historically dangerous rat-borne diseases is the bubonic plague, also called "Black Plague," and its variants. Transfer occurs when fleas from the rats bite human beings. Fleas transported on rats are considered responsible for this plague during the Middle Ages, which killed millions. From the transmission of bubonic plague to typhus and hantavirus, rat infestations can prove harmful to human health.

Rats also are a potential source of allergens. Their droppings, dander and shed hair can cause people to sneeze and experience other allergic reactions.

[13] Hantavirus - http://en.wikipedia.org/wiki/Hantavirus

மூலம்: http://isakoran.blogspot.in/2014/04/blog-post.html

உமரின் இதர கட்டுரைகள்