2018 ரமளான் - 2: பர்னபா சுவிசேஷத்தை ஏன் முஸ்லிம்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்?

முந்தைய கட்டுரை: பர்னபா சுவிசேஷம் - ஓர் அறிமுகம் (14ம் நூற்றாண்டு முஸ்லிமின் ஒரு மிகப்பெரிய மோசடி ஆவணம்)

முந்தையை கட்டுரையில், பர்னபா சுவிசேஷம் பற்றிய அறிமுகத்தைக் கண்டோம்.  இக்கட்டுரையில் முஸ்லிம்கள் ஏன் இந்த சுவிசேஷத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான காரணத்தைக் காண்போம்.

இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் சிலருக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இஸ்லாம் பற்றிய ஒரு சுருக்கத்தை இங்கு தருகிறேன்.

இஸ்லாம் என்ற மதம் 7ம் நூற்றாண்டில் அரேபியாவில் உள்ள மக்கா என்ற நகரில் முஹம்மது என்பவரால் உருவாக்கப்பட்டது. முஹம்மது கி.பி. 570ல் பிறக்கிறார். கி.பி. 610ல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு, அல்லாஹ் என்ற இறைவன் தனக்கு வசனங்களை இறக்குகிறார் என்று அறிவிக்கிறார். அதன் பிறகு 23 ஆண்டுகள் உயிரோடு இருந்து, கி.பி 632ம் ஆண்டு மரித்துவிடுகிறார். இந்த 23 ஆண்டுகள் முஹம்மதுவிற்கு அல்லாஹ் வெளிப்படுத்திய வசனங்களை குர்-ஆன் என்ற பெயரில் முஸ்லிம்கள் வைத்திருக்கிறார்கள். குர்-ஆனை முஸ்லிம்கள் வேதமாக கருதுகிறார்கள்.

பைபிளின் தேவன் தன்னை தீர்க்கதரிசியாக தெரிந்தெடுத்தார் என்று முஹம்மது  சொன்னார், மேலும் பைபிளின் படி வந்த தீர்க்கதரிசிகளில் தாம் கடைசியாக வந்தவர் என்றும் கூறிக்கொண்டார். பைபிளில் காணப்படும் அனேக நிகழ்ச்சிகளை குர்-ஆனில் மறுபதிவு செய்தார், சிலவற்றை மாற்றி பதிவு செய்தார். இப்படி அவர் மாற்றிச் சொன்ன விவரங்களில் முக்கியமானது இயேசுவைப் பற்றி அவர் குர்-ஆனில் சேர்த்த விவரங்களாகும். பைபிளுக்கு எதிராக அனேக விவரங்களை அவர் குர்-ஆனில் சேர்த்துவிட்டார்.

முக்கியமாக,

  • இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே ஆவார். அவர் தேவ குமாரன் இல்லை என்று உண்மைக்கு புறம்பான விவரங்களை குர்-ஆனில் சேர்த்தார்.  (குர்-ஆன் 4:171).
  • இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக அல்லாஹ் அவரை உயிரோடு தன்னிடத்தில் எடுத்துக்கொண்டார். எனவே சிலுவையில் மரித்தது இயேசு அல்ல, எனவே, இயேசு உயிர்த்தெழவுமில்லை என்றும் குர்-ஆனில் சேர்த்துவிட்டார்.  (குர்-ஆன் 3:55, 4:157).
  • தனக்கு பிறகு ஒரு தீர்க்கதரிசி வருவார் என்றும் அவரது பெயர் ’அஹ்மத் (முஹம்மது)’ என்றும் இயேசு சொன்னதாக முஹம்மது குர்-ஆனில் பதித்துவிட்டார் (குர்-ஆன் 61:6).

மேற்கண்ட விவரங்களை முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சிகளை, 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் மாற்றிச் சொல்கிறது. முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீடர்களைக் கொண்டும், அந்த சீடர்களை கண்களால் கண்ட சாட்சிகளைக் கொண்டும் பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள் தான் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) நமக்கு இயேசுவின் உண்மைச் சரித்திரத்தைச் சொல்கின்றன. 

முஸ்லிம்கள் சந்தித்த அமிலச் சோதனை:

பரிசுத்த வேதாகமம் இயேசுவைப் பற்றி ஒருவகையாகச் சொல்கிறது, குர்-ஆன் இன்னொரு வகையாகச் சொல்கிறது. இதனை எப்படி விளங்கிக்கொள்வது? 

• பைபிள் சொல்வது உண்மை என்று முஸ்லிம்கள் கூறினால், ’தங்கள் குர்-ஆன் சொல்வது பொய்’ என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கும். முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அங்கீகரிப்பதாக அமைந்துவிடும். இது ஒரு மிகப்பெரிய தர்மசங்கடத்தில் முஸ்லிம்களை தள்ளுகிறது.

• எனவே, இதிலிருந்து விடுபட முஸ்லிம்கள் கண்டுபிடித்த ஒரு வழி ’பைபிள் திருத்தப்பட்டுவிட்டது’ என்ற பொய்யான குற்றச்சாட்டாகும். 7ம் நூற்றாண்டுவரை பைபிள் சரியாகத்தான் இருந்தது, ஆனால், அதன் பிறகு கிறிஸ்தவர்களும்  யூதர்களும் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் வைக்கிறார்கள், இதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்களால் இன்று வரை முன்வைக்கமுடியவில்லை. 

• இப்படிப்பட்ட நிலையில் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்த புத்தகம் தான் ‘பர்னபா சுவிசேஷம்’. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட பைபிளின் புத்தகங்களில் இல்லாத அனேக விஷயங்கள் இந்த பர்னபா சுவிசேஷத்தில் உள்ளது. முக்கியமாக, குர்-ஆனில் இயேசுவைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அவைகள் பெரும்பான்மையாக இந்த புத்தகத்திலும் காணப்படுகின்றது. அதாவது இயேசு தம்மை தேவகுமாரன் இல்லை என்றுச் சொன்னதாகவும், தனக்கு பிற்பாடு அஹ்மத் (முஹம்மது) என்ற தீர்க்கதரிசி வருவார் என்று இயேசு சொன்னதாகவும், இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்பாக தேவன் இயேசுவை தன்னிடம் எடுத்துக்கொண்டதாகவும் இந்த பர்னபா சுவிசேஷம் என்ற புத்தகத்தில் காணப்படுகின்றது.

• இப்படிப்பட்ட புத்தகத்தைத் தான் முஸ்லிம்கள் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர். தங்களுக்கு சாதகமாக இந்த புத்தகம் பேசுவதினால், அந்த புத்தகத்தைப் பற்றிய எந்த ஒரு ஆய்வும் செய்யாமல், ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வின் முடிவை அங்கீகரிக்காமல், பைபிளை கண்மூடித்தனமாக குற்றப்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்தால், பர்னபா சுவிசேஷத்தை இவர்கள் பிரிண்ட் செய்து விற்பனைச் செய்கிறார்கள். அனேக முஸ்லிம்கள் இதனை உதாரணம் காட்டி, புதிய ஏற்பாட்டை குற்றப்படுத்துகிறார்கள். 

இத்தொடர்கள் எழுதுவதின் நோக்கங்களில் ஒன்று, பர்னபா சுவிசேஷத்தின் பின்னணியை, அதன் நம்பகத்தன்மையை ஆதாரங்களோடு தமிழ் பேசும் உலகிற்கு எடுத்துரைப்பதாகும். புத்தியுள்ள எந்த ஒரு முஸ்லிமும், ‘பர்னபா சுவிசேஷம், ஒரு மோசடியான புத்தகம்’ என்பதை அறியும் தருவாயில், அதனை பயன்படுத்துவதை விட்டுவிடுவான். இது மட்டுமல்ல, இஸ்லாமுக்கு கல்லறைக் கட்டும் பணியை இதே பர்னபா சுவிசேஷம் செவ்வனே செய்துள்ளது, இதனை அறிய தொடர்ந்து அடுத்தடுத்த கட்டுரைகளை படியுங்கள்.

ஏன் முஸ்லிம்கள் இந்த பர்னபா சுவிசேஷத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்ற காரணத்தை இதுவரைக் கண்டோம். அடுத்த அத்தியாயத்தில், பர்னபா சுவிசேஷத்தின் நம்பகத்தன்மையை அலசுவோம்.


பர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்