2018 ரமளான் - 7: பர்னபா சுவிசேஷம் – முஹம்மது மதினாவில் கப்பலேறி மக்காவில் இறங்கி ஹஜ் செய்தார்

இது என்ன வேடிக்கை! இது முட்டாள்தனமான கூற்று என்று சொல்லத்தோன்றுகிறதா? 

இப்படிப்பட்ட கூற்றுக்கள் அடங்கிய பர்னபா சுவிசேஷம் தான் தங்கள் இஸ்லாமை தூக்கி நிறுத்தும் என்று  நம்பிக்கொண்டு இருக்கிறார்கள், முஸ்லிம் மௌலவிகள், இமாம்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள்!

முஸ்லிம்கள் எழுதிய பர்னபா சுவிசேஷம் என்ற மோசடி நூலை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.

பர்னபா சுவிசேஷத்தில் காணப்படும் புவியியல் தவறை இப்போது காண்போம்.

ஒருவர் மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதவிரும்பினால், அவர் எந்த நபரின் வரலாறை எழுதுகின்றாரோ, அவரது மேற்பார்ப்பையில் எழுதவேண்டும், அல்லது அவரோடு பல ஆண்டுகள் இருந்து நெருக்கமாக அவரை பார்த்தவராக இருக்கவேண்டும், அல்லது குறைந்த பட்சம், உண்மையை மட்டுமே எழுதவேண்டும் என்ற நோக்கில் ஆய்வு செய்து விருப்பு வெறுப்பின்றி எழுதவேண்டும். இம்மூன்றையுமே, பர்னபா சுவிசேஷத்தை எழுதிய முஸ்லிமிடம் காணமுடிவதில்லை,  அதனால் தான் அவர் எழுதிய புத்தகத்தில் அனேக பிழைகளை காணமுடிகின்றது.

பர்னபா சுவிசேஷம் அத்தியாயம் 20 மற்றும் 21ல், இயேசு நாசரேத்து என்ற பட்டணத்துக்கு படகு பிரயாணம் செய்ததாகவும், அதன் பிறகு நாசரேத்திலிருந்து நேரடியாக கப்பர்நகூம் என்ற ஊருக்கு படகு பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறது.

இதனை இப்போது நாம் படிப்போம் (தேவையான விவரங்களை மட்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது):

Chapter 20 Miracle on the sea wrought by Jesus, and Jesus declares where the prophet is received.

Jesus went to the sea of Galilee, and having embarked in a ship sailed to his city of Nazareth; whereupon there was a great tempest in the sea, insomuch that the ship was nigh unto sinking.

அத்தியாயம் 20: கடலில் இயேசு செய்த அற்புதம் மற்றும் ஒரு தீர்க்கதரிசி எங்கு ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று இயேசு கூறுதல்.

இயேசு கலிலேயா கடலுக்குச் சென்றார், அங்கிருந்து நாசரேத்து என்னும் ஊருக்குச் செல்லும் படகு ஏறினார். அவர் பயணித்த போது, படகு மூழ்கிப்போகும் அளவிற்கு கடலில் பெருங்கொந்தலிப்பு உண்டானது...

இவ்வசனங்களை கூர்ந்து கவனியுங்கள்:

  • இயேசு கலிலேயா கடலுக்குச் சென்றார்
  • அங்கிருந்து நாசரேத்து என்னும் ஊருக்குச் செல்வதற்காக படகில் ஏறிச் சென்றார்.
  • வழியில் கடலில் கொந்தலிப்பு உண்டானது

மேற்கொன்டு படித்தால்,  ”நாங்கள் கடலில் அமிழ்ந்து அழிந்துபோய்விடுவோம் என்று சீடர்கள் கதறும்போது”, இயேசு கடலின் கொந்தளிப்பை அமரச்செய்தார் என்று பர்னபா எழுதுகிறார்.

அடுத்த பத்தியில் இவ்விதமாக கூறப்பட்டுள்ளது:

Having arrived at the city of Nazareth the seamen spread through the city all that Jesus had wrought, . . .  And the scribes and doctors having presented themselves unto him said: 'We have heard how much thou hast wrought in the sea and in Judaea: give us therefore some sign here in thine own country.'

இயேசு நாசரேத்து பட்டணத்தில் நுழைந்த உடன், இயேசு கடலில் எப்படி அற்புதம் செய்தார் என்ற விவரத்தை மாலுமிகள் ஊரெல்லாம் சொல்லிவிட்டார்கள். . . .

இயேசு மறுபடியும், நாசரேத்திலிருந்து கப்பர்நகூம் என்ற ஊருக்குச் சென்றார் என்று அத்தியாயம் 21, தொடங்குகிறது.

Chapter 21 Jesus healeth a demoniac, and the swine are cast into the sea. Afterwards he healeth the daughter of the Canaanites.

Jesus went up to Capernaum, and as he drew near to the city behold there came out of the tombs one that was possessed of a devil,

அத்தியாயம் 21: இயேசு பிசாசு பிடித்தவனை சுகமாக்குதல், பிசாசுக்கள் பன்றிகளுக்குள் புகுந்து, கடலில் குதித்து மடிந்துப்போதல், ...

இயேசு கப்பர்நகூமுக்குச் சென்றார், அவர் பட்டணத்துக்கு அருகில் வந்தபோது, இதோ, பிசாசு பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வந்துக்கொண்டு இருந்தான்...

நாசரேத்து ஊரில் இயேசுவை கொலை செய்ய யூதர்கள் முயன்றதால் (அத்தியாயம் 20), அவர் மறுபடியும் கப்பல் ஏறி கப்பர்நகூமுக்குச் செல்கிறார் என்று பர்னபா சுவிசேஷம் (அத்தியாயம் 21) சொல்கிறது.

நாசரேத்து ஒரு கடற்கரை பட்டணமா? மதுரை ஒரு கடற்கரை பட்டணமா?

பர்னபா சுவிசேஷம் இயேசு கலிலேயா கடலில் கப்பல் ஏறி, நாசரேத்து என்னும் பட்டணத்துக்குச் சென்றார் என்றுச் சொல்கிறது. இது எப்படி உள்ளதென்றால், சென்னையிலிருந்து கப்பல் ஏறி மதுரைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவர் 1947க்கு முன்பு பயணம் செய்தார் என்று ஒரு சரித்திர ஆய்வாளர் எழுதியது போல உள்ளது.  கப்பலில் பயணம் செய்து யாராவது மதுரை துறைமுகத்தில் இறங்கமுடியுமா?

மெரினா கடற்கரையிலிருந்து கப்பலில் ஏறி யாரும் மதுரையில் கரையிறங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போலத் தான், கலிலேயா கடற்கரையில் கப்பல் ஏறி, நாசரேத்து ஊரில் இறங்க முடியாது என்பது.

நாசரேத்து மலைமீது உள்ள ஒரு  பட்டணமாகும். கலிலேயா கடற்கரைக்கும், நாசரேத்து ஊருக்கும் இடையே 29 மைல்கள்  தூரம் உள்ளது, மேலும் கடற்பயணம் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இதிலிருந்து அறிவதென்ன?

  • பர்னபா சுவிசேஷம் எழுதியவர் ஒரு மோசடி எழுத்தாளர் ஆவார்.
  • அவர் முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாட்டில் வாழ்ந்தவரல்ல.
  • அவர் இயேசுவோடு 3 ஆண்டுகளுக்கு மேலாக ஊர் ஊராக, கிராம கிராமமாகச் சென்று ஊழியம் செய்தவர் அல்ல.
  • அவருக்கு முதல் நூற்றாண்டின், இஸ்ரேல் நிலப்பகுதிகள் பற்றிய புவியியல் அறிவு இல்லை.

முஸ்லிம்கள் சொல்வது போல, இவர்கள் சொல்லும் பர்னபா என்பவர் இயேசுவின் உண்மையான சீடராக இருந்திருந்தால், இப்படிப்பட்ட அடிப்படை தவறுகளைச் செய்யமாட்டார். 

இன்று நீங்கள் கூகுள் மேப்பில் இவ்விரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை தரைவழியாக கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு 49 கிலோ மீட்டர்கள் வருகின்றது.

நாசரேத்து - கப்பர்நகூம் தூரம்

நாசரேத்து, கடல் மட்டத்திலிருந்து 347 மீட்டர் உயரத்தில் உள்ள பட்டணம்:

பொய் சொல்ல ஒரு அளவு உண்டு என்று பொதுவாக சொல்வது உண்டு. பர்னபா சுவிசேஷத்தைப் பார்த்தால், அவர் படுமோசமாக பொய் கூறியுள்ளார். இதை அவர் தெரிந்து செய்யவில்லை, தன் அறியாமையில் செய்துள்ளார், ஏனென்றால், அவர் 14/15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராயிற்றே! முதல் நூற்றாண்டின் இஸ்ரேல் நாடு பற்றி அவருக்கு என்ன தெரியும்? இயேசுவைப் பற்றி அவருக்கு என்னதெரியும்?

நாசரேத்து என்ற பட்டணம் கடல் மட்டத்திலிருந்து 347 மீட்டார்கள் உயரத்தில் அமைந்துள்ள ஒரு பட்டணமாகும். இந்த பட்டணத்தை இயேசு எப்படி கப்பலில் சென்று இருக்கமுடியும்?

en.wikipedia.org/wiki/Nazareth (347 m (1,138 ft))

கடல் மட்டத்திலிருந்து நாசரேத்து ஊரின் உயரத்தை கவனித்தால், இந்த மோசடி முஸ்லிம் சென்னையிலிருந்து கப்பலில் ஏறி, ஊட்டி போன்ற ஊர்களுக்குச் செல்லமுடியும் என்றுச் சொல்வது போல உள்ளது.

இயேசுவின் அடிச்சுவடு (Jesus Trail - jesustrail.com)

நாசரேத்திலிருந்து கப்பர்நகூமுக்கு இயேசு சென்ற வழியில் ஒரு பயணம்:

இன்று இஸ்ரேலுக்கு உல்லாச‌ பயணம் செல்பவர்களை கவர்வதற்காக, ஜீசஸ்டிரைல் என்ற ஒரு வசதி செய்து தரப்படுகின்றது. அதாவது இயேசு வாழ்ந்த காலத்தில் பல முறை அவர் நாசரேத்திலிருந்து கப்பர்நகூமுக்கு சீடர்களோடு சென்றுள்ளார் (பர்னபா சுவிசேஷம் சொல்வதுபோல கப்பலில் அல்ல, நடந்துசென்றுள்ளார்). அவர் சென்ற வழி ”இப்படியாக இருக்கக்கூடும் என்று கணக்கிட்டு” ஒரு பயண திட்டத்தை தயாரித்து கொடுத்துள்ளார்கள். 

கீழ்கண்ட படத்தைப் பார்க்கவும்:

jesustrail.com/images/POI-web.jpg

நாசரேத்து பட்டணத்திலிருந்து கால்நடையாக பயணிகள் செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டு, ஆங்காங்கே தங்கி இளைப்பாறி மறுபடியும் பயணத்தை தொடர்ந்து, கடைசியாக கப்பர்நகூமுக்குச் சென்று அடையும் படி 'சாலைகள், சோலைகள்' அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.

இந்த படத்தில், கடல்மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் நாசரேத்து உள்ளது என்பதை காட்டியுள்ளார்கள்.

jesustrail.com/images/JT-Elevation_profile.jpg

மதினாவிலிருந்து மக்காவிற்கு கப்பல் பயணம்? யார் தயாரா இருக்கிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்பு, சௌதி அரேபியாவில் அகழ்வாராச்சியாளர்களுக்கு ஒரு தோல் சுருள் கிடைத்தது. முஹம்மது வாழ்ந்த 7ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று அது கருதப்படுகின்றது. முஹம்மது மரித்த பிறகு, அவரது நெருங்கிய தோழராக இருந்த ‘அபூ பக்கர்’ அவர்களால் எழுதப்பட்ட நூல் அது. அந்த நூலில், ‘முஹம்மது மதினாவில் கப்பல் ஏறி, மக்காவில் இறங்கி ஹஜ் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது’.

மேற்கண்ட பத்தியை படித்தால், உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? சிரிப்பு கலந்த கோபம் வரவில்லையா? உங்களுக்கு இஸ்லாம் உருவான நிலப்பரப்பு பற்றிய அறிவு இருந்தால், நிச்சயம் கோபம் வரும். அந்த ஆவணத்தை எழுதியவர் ‘அபூ பக்கர்’ அல்ல என்று அடித்துச் சொல்வீர்கள்? எனென்றால், மதினாவிற்கும் மக்காவிற்கும் இடையே நேரடியாக கடற்பயணம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை. எனவே, அந்த ஆவணம் அபூ பக்கரின் பெயரைக் கொண்டு இருந்தாலும், அது ஒரு மோசடி ஆவணம் என்பதை இப்படிப்பட்ட விவரங்களை அது உள்ளடக்கி இருப்பதினால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இதே நிலையில் தான் பர்னபா சுவிசேஷமும் உள்ளது.

இவ்வளவு தெளிவாக விவரித்துச் சொல்லிய பிறகும், ‘ஏன் முடியாது, மதினாவிலிருந்து மக்காவிற்கு கப்பற்பயணம் செய்யமுடியும்’ என்று உங்களில் யாராவது நினைத்தால்! உங்களை உங்கள் அல்லாஹ்வினாலும் காப்பாற்றமுடியாது! என்பதை மனதில் பதித்துக் கொள்ளவும்.

முதலில் பர்னபாவின் இறையியல் பிழைகளைப் பார்த்தோம், இக்கட்டுரையில் புவியியல் பிழையைப் பார்த்தோம். அடுத்தபடியாக, ஒரு சரித்திர பிழையைப் பார்ப்போம்.