இது அற்புதமா? (It's a Miracle)

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

 தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

இஸ்லாமுக்கும் மற்றும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசங்களை அறிந்துக்கொள்ள "இம்மார்க்கங்களில் உள்ள அற்புதங்கள்" கூட நமக்கு ஒரு வகையில் உதவி செய்கின்றன. இந்த மார்க்கங்கள் "அற்புதங்களை" எப்படி காண்கின்றன, முக்கியமாக அற்புதங்களின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன? போன்றவைகளை இப்போது ஆராய்வோம்.


பைபிளில் சொல்லப்பட்டது போல மேலும் கிறிஸ்தவர்கள் கருதுவது போல, இஸ்லாமில் அற்புதங்கள் கருதப்படுவதில்லை. இஸ்லாமில் "குர்-ஆன்" கூட ஒரு அற்புதம் தான். உண்மையில், மக்கள் முஹம்மதுவிடம் அற்புதங்களை செய்து காட்டுங்கள் என்று கேட்டபோது அவர் "அவர்களை குர்-ஆனை படிக்கச் சொன்னார்" (குர்-ஆன் 29:50-51, 17:88-94).  இதனை தெளிவாக்க, இன்னொரு முறை சொல்ல விரும்புவது என்னவென்றால், முஸ்லிம்களின் படி "குர்-ஆன்" ஒரு அற்புதமாகும். மேலும், "அடையாளம்/அற்புதம்" என்ற வார்த்தையின் அரபி வார்த்தை "ஆயத்" என்று உள்ளது.  இதே வார்த்தை தான் குர்-ஆனின் வசனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, குர்-ஆனின் ஒவ்வொரு வசனமும் ஒரு அற்புதமாகும் (ஆயத் ஆகும்). இதனை சமீப காலம் வரை வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத்  கீழ்கண்ட வாறு கூறுகிறார்:

"Again and again when miracles are demanded from the prophet of God by the cynical and frivolous few, he is made to point to the qur`an – message from high – as 'the miracle.' The miracle of miracles! And men of wisdom, people with literary and spiritual insight, who were honest enough to themselves, recognised and accepted al-qur`an as a genuine miracle." [i]

"நம் இறைத்தூதரிடம் அடிக்கடி அற்புதங்கள் பற்றி கேள்வி எழுப்பிய வஞ்சக கூட்டங்களுக்கு, அவர் குர்-ஆனை பதிலாக காட்டினார். இறைவனிடமிருந்து வந்த செய்தி தான் "அற்புதமாகும்". குர்-ஆன் தான் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஞானமுள்ள அறிஞர்கள் மற்றும் நீதி நேர்மையோடு நடந்துக்கொள்ளும் அறிஞர்கள் "குர்-ஆன்" ஒரு உண்மையான அற்புதம் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர்."[i]

அற்புதம் பற்றி முஸ்லிம்களின் மனதில் உள்ளதை புரிந்துக்கொள்ள, ஒரு உதாரணத்தை கூறுகிறேன். அதாவது பைபிளில் உள்ள வசனங்களை நாம் "அற்புதங்கள்" என்று கூறுவோமானால் எப்படி இருக்கும்? அதாவது ஒரு பிரசங்கியார், பிரசங்க பிடத்தில் நின்றுக்கொண்டு பைபிளின் ஒரு புத்தகத்தை மற்றும் அதிகாரத்தை குறிப்பிட்டு, அந்த அதிகாரத்தில் வரும் "முதலாவது அற்புதத்தை படிக்கவும்" என்று கூறினால் எப்படி இருக்கும்? அதாவது முதலாவது வசனத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, முதலாவது அற்புதத்தை படியுங்கள் என்று அவர் சொல்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், முஸ்லிமுக்கு ஒவ்வொரு வசனமும் ஒரு "அற்புதமாகும்". ஆக, முஹம்மது அற்புதங்கள் செய்தார் என்பதை நாம் எப்படி சொல்லமுடியும்? அவர் கொண்டு வந்த குர்-ஆன் தான் அற்புதம். எனவே இஸ்லாமின் அற்புதமாகிய குர்-ஆனை நாம் அற்புதங்களுக்காக அடிப்படையாக கருதலாம்.
குர்-ஆன் தனக்குத் தானே அற்புதமாக இருப்பதினால் (இஸ்லாமியர்கள் இப்படி நம்புவதினால்) நாம் குர்-ஆனின் வசனங்களை முஹம்மதுவின் அற்புதமாக கருத நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். முஹம்மதுவின் அற்புதங்களை நாம் கிறிஸ்துவின் அற்புதங்களோடு ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். நாம் பொதுவாக செய்து வருகின்ற பிரகாரமாக, இப்படி ஒப்பிடும் போது, இவ்விரண்டு மார்க்கங்களின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ள வித்தியாசங்களை காணலாம்.

இப்போது நாம் கிறிஸ்து செய்த அற்புதங்களின் பக்கம் நம் கவனைத்தை திருப்புவோம். இயேசுக் கிறிஸ்து

 • ஒரு குருடனுக்கு பார்வையை கொடுத்தார் (யோவான் 9),

 • மரித்த ஒருவரை உயிரோடு எழுப்பினார் (யோவான் 11),

 • திமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார் (மாற்கு 2), மேலும்

 • ஒரு சில ரொட்டிகள் மற்றும் மீன்களைக் கொண்டு சில ஆயிர மக்களின் பசியை தீர்த்தார் (மத்தேயு 14)

இப்போது முஹம்மதுவின் அற்புதமாகிய குர்-ஆனை அலசுவோம். குர்-ஆனின் பக்கங்களை நாம் திருப்பி பார்க்கும் போது, வேறு வகையான அற்புதத்தை அதில் காணமுடியும். முஹம்மதுவின் அற்புதம் இவ்விதமாகச் சொல்கிறது அதாவது,

 • ஒரு முக்கியமான விஷயத்திற்காக பேசிக்கொண்டு இருக்கும் போது, முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டு செல்லவேண்டுமென்றால் அவர்கள் முஹம்மதுவிடம் அனுமதி பெறவேண்டும் (குர்-ஆன் 24:62)

 • முஹம்மதுவின் மனைவிகள் தவறு செய்தால், அவர்களுக்கு இரண்டு மடங்கு தண்டனை கிடைக்கும் (குர்-ஆன் 33:30)

 • முஹம்மது மற்ற முஸ்லிம்களைக் காட்டிலும், அனேக பெண்களை திருமணம் செய்துக்கொள்ள அவருக்கு உரிமை உண்டு (குர்-ஆன் 33:50)

 • முஹம்மது தனது வளர்ப்பு மகனின் மனைவியை (மருமகளை) திருமணம் செய்துகொள்ள அவருக்கு அனுமதி உண்டு (33:37)

 • முஹம்மதுவின் வீட்டிற்கு அவரை காண வருபவர்கள், உணவு அருந்தியவுடன் அவர்கள் முஹம்மதுவை மேலும் தொந்தரவு செய்யாமல் உடனே சென்றுவிடவேண்டும் (குர்-ஆன் 33:53).

 • முஹம்மதுவைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனம் அனுமதிக்கப்படாது (குர்-ஆன் 58:9)

 • கடைசியாக, முஹம்மதுவிடம் பேசும் மக்கள், தங்கள் சத்தத்தை குறைத்து அமைதியான முறையில் பேசவேண்டும் (குர்-ஆன் 49:2)

மேற்கண்ட இரண்டு பேருடைய அற்புதங்களில் உள்ள வித்தியாசமான பாணியை நீங்கள் இப்போது காணமுடியும். இயேசுவின் அனைத்து அற்புதங்களும் மற்ற மக்களுக்கு உதவி செய்வதாகவே இருந்தது. இயேசு ஒரு முறை கூட தன்னுடைய உலக வாழ்விற்கு உதவியாக இருக்கும் படியாக ஒரு போதும் ஒரு அற்புதம் கூட செய்துக்கொள்ளவில்லை. இயேசு எந்த ஒரு சமயத்திலும் தனக்கு பசி எடுக்கின்றது என்பதற்காக "அற்புதம் மூலமாக உணவை கொண்டு வரவில்லை", தனக்கு மகிழ்ச்சி உண்டாகும் படி சொந்த தேவைக்காக அற்புதம் செய்துக்கொள்ளவில்லை.  மேலும் சில காரியங்கள் செய்ய தனக்குதனிப்பட்ட அதிகாரம் உண்டென்றுச் சொல்லி,  சுயத்திற்காக அற்புதங்கள் செய்துக்கொள்ளவில்லை. உண்மையில், இயேசு இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்து தன் சொந்த தேவைகளை வசதிகளை செய்துக்கொள்ள வேண்டும் என்று சாத்தான் அந்த வனாந்திரத்தில் இயேசுவை சோதித்துப் பார்த்தான். (மத்தேயு 4:1-11).  அவ்வளவு ஏன், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேதுருவிடம் ஒரு மீனை பிடித்து, அதில் காணப்படும் இரண்டு நாணயத்தைக் கொண்டு வரிப்பணம் கட்டு என்று சொன்ன போது கூட, அந்த அற்புதம் தன்னுடைய நன்மைக்காக அல்லாமல், மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் இந்த அற்புதம் செய்ததாக கூறுகிறார் (மத்தேயு 17:27).

ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் பக்கம் நாம் கவனைத்தை திருப்பினால், குர்-ஆனில் அவர் கொண்டு வந்த வெளிப்பாட்டு அற்புதங்களில் அனேக அற்புதங்கள் தன்னுடைய உலக வாழ்க்கையில் தனக்கு நன்மை உண்டாகவேண்டும் என்பதற்காகவே இருந்தது. மேலும், முஹம்மதுவின் மனைவிகளில் ஒருவர், கீழ்கண்டவாறு  கூறுகிறார்:

புகாரி ஹதீஸ்: பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5113

உர்வா வின் ஸபைர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன் வந்த பெண்களில் கவ்லா பின்த் ஹகீம்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இது குறித்து) ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:


ஒரு பெண் தம்மைத் தாமே ஓர் ஆணுக்கு கொடையாக வழங்க வெட்கப்படமாட்டாளா? பின்னர் '(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கி வைக்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனம் அருளப்பட்டதுபோது 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் விருப்பத்தைத் தங்களின் இறைவன் விரைவாக பூர்த்தி செய்வதையே காண்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) கூறினேன். [ii]

மேற்கண்ட ஹதீஸை எவ்வளவு கேலியாக முஹம்மதுவின் மனைவி கூறியிருப்பார்கள் என்பதை இன்று அதாவது 1400 ஆண்டுகளுக்கு  பின்பு நம்மால் சரியாக யூகிக்க முடியாது. முஹம்மதுவின் வாழ்க்கையில் வசதிகள் அல்லது அவருடைய மகிழ்ச்சிக்கு துணையாக இந்த குர்-ஆன் வசனம் எவ்வளவு சீக்கிரமாக இறக்கப்பட்டது என்பதை அவரது மனைவியாகிய ஆயிஷா கவனித்துள்ளார். இதனை இன்று நாம் அறிந்துக்கொள்வது கடினமான விஷயமன்று. குர்-ஆனின் அற்புதம் முஹம்மதுவிற்கு இந்த உலக வாழ்க்கையில் வசதிகளை செய்துக்கொடுத்து அவருக்கு உதவியாக இருந்தது. ஆனால், இயேசு செய்த அற்புதங்களோ, மற்ற மக்களுக்கு வசதிகளை செய்துக் கொடுத்து அவர்களுக்கு உதவியாக இருந்தது. சரித்திரத்தில் காணும் இவ்விரண்டு நபர்கள் நேர் எதிர் துருவங்களாக இருப்பதை நாம் காணலாம்.


இயேசு மற்ற மக்களின் நன்மைக்காக அற்புதங்களைச் செய்தார், தன்னுடைய நன்மைக்காக செய்யவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், சில நேரங்களில் இயேசு மற்றவர்களின் நன்மைக்காக செய்த அற்புதங்கள் தனக்கு ஆபத்து உண்டாக்கும்படியாக இருந்தது. கடைசியாக, இயேசுவின் உயிர்த்தெழுந்த அற்புதமானது, மிகவும் கொடுமையான மரணத்தை ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட அற்புதமாக உள்ளது. ஆனால், முஹம்மதுவின் அற்புதங்கள் தன்னுடைய வாழ்க்கையை இலகுவாக்க அல்லது அவரது ஆசைகளை தீர்த்துக்கொள்ள உதவி செய்வதாக அமைந்துள்ளது.


இந்த இரண்டு நபர்களின் அற்புதங்களில் ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம்? இந்த அற்புதங்கள் இவ்விருவர் பற்றி எவைகளை நமக்கு போதிக்கின்றன? ஒருவர் செய்த அற்புதம் நம்முடைய மரியாதையை பெறுவதாக உள்ளது, ஆனால், இன்னொருவரின் அற்புதம் அப்படி மரியாதைக்குரியதாக இல்லை. முஹம்மதுவின் அற்புதங்களைக் காட்டிலும் இயேசுவின் அற்புதங்கள் நன்மதிப்பை பெறுவதாக உள்ளது.


பின் குறிப்புக்கள்:
[i] Quote from Achmed Deedat, reprinted onhttp://www.jannah.org/articles/qurdeed.html, Accessed April 26, 2009
[ii] Sahih Bukhari: Volume 7, Book 62, Number 48


ஆங்கில மூலம்: It's a Miracle

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்