ஆசிரியர்: வெங்கடேசன்

அன்புள்ள இது தான் இஸ்லாம் நண்பர்களுக்கு, 

உங்களின் பாரான் மலையிலிருந்து என்ற கட்டுரையை படித்தவுடன் நீங்கள் எந்த நிலையில் மற்ற வேதங்களை அணுகுகிறீர்கள் என்ற சந்தேகம் உண்டானது. 

இது தான் இஸ்லாம் கட்டுரை: பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் 

முன்னுரை: 

உங்களின் பிற மதங்கள் என்ற தலைப்பில் இந்து மதத்தின் கல்கி பகவான் முகமது நபி அவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.அதே போல் இந்த கட்டுரையிலும் பரிசுத்தர் என்பது ஜீப்ரீல் தூதன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். 

இது தான் இஸ்லாம் கட்டுரை: பிற மதங்கள் 

மற்ற மதங்களின் விஷயங்களை ஆராயும் முன் அவர்களின் அடிப்படையான விஷயங்களை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும் 

1. "கல்கி பகவான்" பற்றி உங்கள் கருத்து: 

இந்து மதத்தின் கல்கி பகவான் முழு முதல் கடவுளின் மனித அவதாரமாகும். எத்தனையோ ஒற்றுமைகளை காண்பித்த நீங்கள் ஏன் இந்த விஷயத்தை மறந்து போனீர்கள். இஸ்லாமிலோ, குரான், ஹதீஸ் அகியவற்றில் முகமது நபியவர்களை முழு முதற் கடவுளின் அவதாரமாக எங்கேயாவதும் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது கடைசி நாட்களில் சீரழிந்த உலகத்துக்கு தண்டணை வழங்க ( நீயாயதீர்ப்பு செய்ய) முகமது நபியவர்கள் வந்தார்களா? அப்படியில்லை என்றால் அவர் எப்படி கல்கி பகவானாக ஆக முடியும். நீங்கள் நபிகள் நாயகம் அவர்களை பற்றி சொல்லுவது உலகை அன்பினால் நேர்வழிப்படுத்த வந்தார் என்று பின் எப்படி அவர் உலகம் முழுவதுக்கும் நீயாயாதிபதி ஆக முடியும் 

இந்து மதத்தின் கல்கி பகவான் முழு முதற்கடவுளின் அவதாரம், உலகத்தின் கடைசி நாட்களில் உலகத்தில் அநீதி பெருகிவரும் பொழுது உலகத்துக்கு வந்து அதாவது உலகை நீயாயம் தீர்பதற்காக வருபவர் என்று இந்து மதத்தினர் நம்புகின்றனர். 

இவருக்கும் முகமது நபி அவர்களுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? 

இது பற்றி விவரமாக எழுதுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். கர்த்தருக்கு சித்தமானால் இதை தனி கட்டுரையாக பார்ப்போம். 

2. "பரிசுத்தர்" என்ற வார்த்தையைப் பற்றிய உங்கள் கருத்து தவறானது: 

நீங்கள் தவறாக குறிப்பிட்டு உள்ள மிக முக்கியமான வார்த்தைகளில் இதுவும் ஒன்று. பைபிளில் இந்த பதம் யாருக்கு உபயோகிக்க பட்டுள்ளது என்றே தெரியாமல் இந்த வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு ஏக இறைவனுக்கு இணைவைக்கும் செயலில் இறங்கி உள்ளதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. முதலாவது பைபிளின் பழைய ஏற்பாட்டில் பரிசுத்தர் என்ற வார்த்தை வரும் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

லேவியராகமம் 11:44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர் ; ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக. 

லேவியராகமம் 11:45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக . 

லேவியராகமம் 19:2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர் , ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 

லேவியராகமம் 22:32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன் ; நான் உங்களப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். 

சங்கீதம் 22:3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்

ஏசாயா 6:3 ஒருவரையொருவர் நோக்கி, சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் , பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 

ஏசாயா 10:17 இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, 

ஏசாயா 12:6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார். 3 

ஏசாயா 30:13 இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்த்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப் போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார் . 

ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார் . 

ஏசாயா 41:20 கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், அனைவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள். 

ஏசாயா 49:7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர் , மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர் நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார். 

ஏசாயா 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் எனகிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார், உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். 

எசேக்கியேல் 38:16 நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை எனதேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன். 

எசேக்கியேல் 39:27 நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நாள் பரிசுத்தர் என்று விளங்கு. 

ஓசியா 11:9 என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன். 

ஆபகூக் 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. .

இதில் ஒரு இடத்திலாவதும் இந்த பரிசுத்தர் என்ற வார்தை மனிதர்களுக்கோ அல்லது தூதர்களுக்கோ பயன்படுத்தப்படவில்லை. ஏக நாயனான படைப்பாளனையே பரிசுத்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

இதை வார்த்தையை பைபிளின் புதிய ஏற்பாட்டில் பார்த்தால் தேவனையும், அவருடைய வார்த்தையாகிய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவையும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

மாற்கு 1:24 அவன், ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன?எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர்தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். 

லுூக்கா 4:34 அவன், ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக்கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான். 

அப்போஸ்தலருடைய 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 

அப்போஸ்தலருடைய 13:35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. 

1 பேதுரு 1:16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 

வெளிப்படுத்தின 4:8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தவைகள், இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 

வெளிப்படுத்தின 15:4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர் , எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடே "தேவன் மனிதனாக வந்து மனிதர்களின் பாவத்துக்காக மரித்தார்" என்பதே.  எனவே பரிசுத்த வேதாகமம் முழுவதும் பரிசுத்தர் என்று வரும் அனைத்து வார்த்தைகளும் தேவனையே குறிக்கும் வேறு எந்த தூதனையும் குறிக்காது என்பதே. 

3. "பாரான்" வனாந்திரம் "அரேபியாவின் மக்கா" அல்ல 

பரிசுத்த வேதாகமத்தை ஆழ்ந்து வாசிக்கும் போது நாம் இந்த பாரான் வனாந்திரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். பாரான் வனாந்திரம் என்பது மிகப்பெரிய வனாந்திரம். இதன் ஒரு பகுதியே "பெயர்செபா" வனாந்திரமாக இருந்தது. இது காதேஷ் என்றும் அழைக்கப்பட்டது 

ஆதியாகமம்21;13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள் 

ஆதியாகமம்21;20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில் , அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள். 

ஆதியாகமம்21;.33. ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி , சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். 

ஆதியாகமம்22;19. ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்

ஆதியாகமம்: 23;2. கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத் அர்பாவிலே சாராள் மரித்தாள்;

இந்த வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளுவது ஆபிரகாம் வாழ்ந்த கானான் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய வனாந்திரப்பகுதி பாரான். இதன் மற்ற பகுதிகளுக்கு வேறு பெயர்கள் இருந்தன. இதில் முக்கியமான ஒரு பகுதி பெயர்செபா.  இந்த பகுதியில் தான் ஆபிரகாம், சாராள், ஈசாக்கு குடியிருந்தனர். மற்றொரு பகுதியில் ஆகார், மற்றும் இஸ்மாவேல் அலைந்து திரிந்து வந்தனர்.வேதம் தெளிவாக சொல்கிறது இதன் பின் அவர்கள் பாரானின் இன்னொரு பகுதியில் குடியிருக்கும் போது தான் (அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.) என்று வேதம் சொல்கிறது.  இந்த சம்பவத்தை எழுதும் போது இஸ்மவேல் அங்கு இல்லை என்பது அவன் பாரான் வனாந்திரத்தில் குடியிருக்கையில் என்று தெளிவாக எழுதப்பட்டதிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம். 

இந்த பகுதிக்கு பெயர்செபா என்ற பெயரை வைத்ததே ஈசாக்கு தான் 

ஆதியாகமம்26;23 . அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.24. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.25. அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.26. அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.27. அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி, ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.28. அதற்கு அவர்கள், நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம், ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.29. நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.30. அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.31. அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.32. அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.33. அதற்கு சேபா என்று பேரிட்டான் ; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.

இதற்கு பின் ஈசாக்கும் அவன் பிள்ளைகளும் பெயர்செபாவில் வசித்து வந்தார்கள்

ஆதியாகமம் 28:6 

6. ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில், நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,7. யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,8. கானானிய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும்,9. ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.10. யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,11. ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்

ஆதியாகமம்: 36 .6. ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும் தான் கானான் தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான்.7. அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்த படியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது.8. ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.

மேலும் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மோசே மூலம் விடுதலை ஆன இஸ்ரவேல் மக்கள் கானானின் ஒரு பகுதியாகிய பாரானில் மீண்டும் வந்து குடியேறினர் 

எண்ணாகமம்: 13 1. கர்த்தர் மோசேயை நோக்கி,2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்;

13:26. அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 

யோசுவா: 12 ,5. எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாரான் அனைத்தையும் ஆண்டான். 6. அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான் . 

கர்த்தரின் உழியக்காரனாகிய மோசே இஸ்ரவேலின் இரண்டரை கோத்திரங்களுக்கு பாரான் வனாந்திரப்பகுதிகளை பிரித்து சுதந்திரமாக தந்ததில் இருந்து இந்த பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் தேசத்தின் பகுதிதான் என்று நாம் விளங்கிகொள்ளலாம்.

இதற்கு பின்னும் பாரானின் பெயர்செபா இஸ்ரவேல் இராஜாக்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆளுகைக்குள் இருந்தது 

1 நாளாகமம்: 19 1. யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.2. அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி, துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.3. ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.4. யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபா தொடங்கி , எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்..

இந்த பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் தேசத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே இருந்துள்ளது. எனவே இந்த பாரான் வனாந்திரத்துக்கும் பல நூறு மைல் தொலைவில் உள்ள சவுதி அரேபியாவின் ஹிரா குகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதையும் நாம் அறியலாம் 

4. இஸ்மவேல் சந்ததியின் வரலாறு: 

தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன் தான் ஆனால் வாக்குதத்தம் (நன்மரங்)   கூறப்பட்டவன் அல்ல. 

இஸ்மவேல் மரணத்துக்கு பின் அவன் சந்ததி பெயர்செபாவைவிட்டு அதாவது பாரான் வனாந்திரத்தை விட்டு ஆவிலா துவங்கி எகிப்து மட்டும் குடியேறினர்.  இதை கீழே உள்ள வசனத்தின் மூலம் அறியலாம். 

ஆதியாகமம்25;17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.

மேலும் இஸ்மாவேலுக்கேன்று தனி சந்ததி ஏதும் இருந்ததாக தெரியவில்லை(அதாவது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்று சொல்லும் அளவிற்கு ஒரு குறிப்பிட்ட சந்ததி மூலமாக அறியப்படுவது போல, இஸ்மவேலின் சந்ததிகள் இல்லை). ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் கீழே உள்ள வசனங்களை வாசியுங்கள் 

ஆதியாகமம்: 25;13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,14. மிஷ்மா, தூமா, மாசா,15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி

இஸ்மாவேலுக்கு பின் அவன் சந்ததி பற்பல சந்ததியாக பிரிந்து, பல இடங்களில் இன கலப்பு கலாச்சாரத்தால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து போனதை நாம் வேதத்தில் காணலாம். 

முதலில் ஏசா இஸ்மவேலின் மகளை திருமணம செய்கிறான். பின் அவன் ஏதோமியன் என்ற மக்கள் கூட்டத்தின் தகப்பன் ஆகிறான். அங்கும் இஸ்மவேலுக்கு இடமில்லை. 

ஆதியாகமம் 28:9 ,9. ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.

இதன் பின் நாம் இஸ்மவேலரை பார்க்கும் போது அவர்கள் இன்னொரு கூட்டத்தின் பெயரையும் தாங்கியே வருகின்றனர். 

ஆதியாகமம்: 37: 22. அவர்களை நோக்கி, அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.23. யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,24. அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.25. பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.26. அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி, நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?27. அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.28. அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்36. அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

இதற்கு பின் இஸ்மவேலின் சந்ததி தனித்தன்மை இல்லாமல் மீதியானியர் என்ற கலப்பின பெயரோடே தான் வருகிறார்கள்.  யார் இந்த மீதியான்.  இவன் ஆபிரகாமின் இன்னொரு மறுமனையாட்டியின்(கேத்துராளின்)மகன் 

ஆதியாகமம்: 25: 1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.3. யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்4. மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

இந்த மீதியானர்கள் இஸ்மவேலர்களுடன் கலப்பின மக்களே, அதனால் தான் வேதத்தில் மீதியானியர் என்று வருபவர்கள் இஸ்மவேலர்களாகவே அடையாளம் காட்டப்படுகிறார்கள். 

இந்த மீதியானியர்களில் இருந்துதான் மோசே திருமணம் செய்திருந்தார், அதனால் தான் ஆரோனும், மிரியமும் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தனர். இதற்கு பின் நீயாயாதிபதிகள் காலத்தில் இந்த மீதியானியர் இஸ்ரவேல் ஜனத்துக்கு விரோதமாக எழும்பினர்(மோசே கூட ஒரு இஸ்மவேலின் வம்சத்தில் வந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார் சொல்லி, அதற்காக ஒரு கட்டுரையை எழுதாதீர்கள். அதனால், இஸ்லாமுக்கோ, முகமது நபிக்கோ ஒரு பயனுமில்லை. ) 

நியாயாதிபதிகள் 6:2 மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். 

நியாயாதிபதிகள் 6:7 இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, 

நியாயாதிபதிகள் 6:13 அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி, ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். 

நியாயாதிபதிகள் 8:1 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி, நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள். 

நியாயாதிபதிகள் 8:22 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி, நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரானின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள். 

நியாயாதிபதிகள் 8:28 இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது. 

நியாயாதிபதிகள்: 8 21. அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.22. அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி, நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரானின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.23. அதற்குக் கிதியோன், நான் உங்களை ஆளமாட்டேன்;என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.24. பின்பு கிதியோன் அவர்களை நோக்கி, உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிட்த்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.25. இஸ்ரவேலர், சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.26. பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்த்து.

இந்த மீதியானியர்கள் அதாவது கலப்பின இஸ்மவேலர்கள் அந்தக்காலத்திலேயே இளம் பிறை சந்திரனை போன்ற ஆபரணங்களை அணிபவர்கள். இந்த சந்ததியில் இருந்து வருபவர் எப்படி இஸ்மவேலின் சந்ததியாக முடியும். இஸ்மவேல் இஸ்ரவேலர்களுக்கு நேருங்கிய இனத்தவர்.  அவரை இஸ்ரவேலர்கள் பகைத்ததாகவோ, அல்லது மறந்ததாகவோ வேதத்தில் சொல்லப்படவில்லை. மாறாக யூதா வம்சத்தவர்களே இஸ்மவேல் என்ற பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துள்ளார்கள் என்பதே ஆச்சரியமான விஷயம். 

1 நாளாகமம் 19:11 இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்ரு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

மேலும் ஆசாரிய புத்திரர்கள் கூட இஸ்மாவேல் என்ற பெயர் இடப்பட்டு உள்ளனர், பார்க்க எஸ்றா 10:22.

எஸ்றா 10:22 பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும். 

இஸ்ரவேல் இராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் கூட இஸ்மாவேல் என்ற பெயரை வைத்திருந்தனர் பார்க்க எரேமியா 41:1. 

எரேமியா 41:1 பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும் , அவனுடனே கூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள். 

மேலே கண்ட வசனங்களில் இருந்து இஸ்மவேலை இஸ்ரவேல் மக்கள் அதிகமாக நேசித்து உள்ளார்கள் என்று அறியலாம் 

முடிவுரை 

முதலாவது பரிசுத்தர் என்ற பதம் இறைவனை தவிர யாருக்கும் பைபிளில் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த வார்த்தையை மட்டும் இங்கே இருந்து எடுத்து வேறு கருத்தை தவறாக நுழைக்க பார்க்காதீர்கள். 

பாரான் வனாந்திரம் என்பது இஸ்ரவேல் எல்லைக்கு உட்பட்ட இடமே ஆகும். எனவே இந்த பாரான் வனாந்திரத்துக்கும் முகமது நபிகள் வாழ்ந்த சவுதி அரேபியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கும் இதற்கும் பல நூறு மைல் தூரம் உண்டு. 

இஸ்மவேல் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட முற்பிதா.ஆனால் அவரின் பிள்ளைகள் காலத்தில் பிரிந்த அவரின் சந்ததி பல கலப்பினத்தால் இஸ்மவேலர்கள் என்ற தனித்தன்மையில்லாமல் மீதியானியர்கள் என்ற புனை பெயரோடு இஸ்ரவேலர்களை துன்புறுத்தி வந்துள்ளது வேதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 

வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் ஈசாக்கு தான் ,அவரின் சந்ததியிலேயே மனிதகுல மீட்பர் தோன்றினார். அவரே வாக்கு பண்ணப்பட்ட மேசியா.இறைவனின் வார்த்தையாகிய பரிசுத்தர் . 

அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. இவரே அந்த பரிசுத்தர் உலகின் அனைத்து மதங்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நீயாயாதிபதி. இதைதான் வேதம் சொல்லுகிறது. 

உபாகமம்: 33:2  . . . . . . .  பாரான் மலையிலிருந்து பிரகாசித்து , பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.3. மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில்விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள். 

ஆபகூக் 3;.3. தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார் ; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது 

வெளிப்படுத்தின விஷேசம் 19;11. பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.12. அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே14. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

அன்பு சகோதரர்களே இந்த ஆண்டவரை ஏற்றுக்கொள்ளுங்கள். காலம் சமீபமாய் இருக்கிறது.

மூலம்: http://isakoran.blogspot.in/2007/08/1.html

சகோதரர் வெங்கடேசன் அவர்களின் இதர கட்டுரைகள்