பைபிள் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்

Take the Bible Challenge

ஆசிரியர்: வாலித்

பல வருடங்களுக்கு முன்பாக, ஒரு நாள் நான் ஒரு இடத்தை கடந்துச் சென்றுக்கொண்டு இருந்தேன், அந்த இடத்தில் ஒரு மேஜை வைக்கப்பட்டு இருந்தது, மற்றும் ஒரு அறிவிப்புப் பலகையில் "பெப்ஸி சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது. அதைக் கண்டவுடன் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அதாவது "நான் ஏன் என் வாழ்நாள் எல்லாம் கோக் குடித்துக்கொண்டு இருக்கவேண்டும்? இன்னும் அந்த கோக்கை நான் விரும்புகிறேனா?" என்ற கேள்விகள் எண்ணத்தில் வந்தது. அந்த மேஜையில் இரண்டு குவளைகள் வைக்கப்பட்டு இருந்தது, ஆனால், அவைகளில் எந்த குவளையில் பெப்ஸி உள்ளது என்ற விவரம் தரப்படவில்லை. இவைகளில் எதில் பெப்ஸி உள்ளது என்பதை அறிய நான் இரண்டு குவளைகளையும் எடுத்து ருசி பார்த்து கண்டுக்கொண்டேன், அதன் பிறகு நான் முடிவு எடுத்தேன். இந்த தெரிவு மிகவும் சுலபமான தெரிவாகும், அதாவது, பெப்ஸியை குடிக்க நான் முடிவு எடுத்தாலும், அல்லது கோக்கை குடிக்க முடிவு எடுத்தாலும், இதனால் என் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆனால், முக்கியமான விவரம் என்னவென்றால், நான் எதனை தெரிந்தெடுக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பாக நான் கட்டாயமாக அந்த குவளைகளில் உள்ள பானத்தை ருசி பார்க்கவேண்டும். ருசி பார்க்காமல் நம்மால் சரியான முடிவு எடுக்கமுடியாது.

இப்படி ருசி பார்த்து ஒப்பிட்டுப்பார்ப்பது மிகவும் சரியான வழியாக உள்ளது. இப்படி ருசி பார்த்து ஒப்பிடவில்லையானால் எது சரியானது என்று எப்படி தெரிந்துக்கொள்ள முடியும்? இதே போலத்தான் பைபிள் மற்றும் குர்‍ஆனின் வார்த்தைகளை ருசி பார்க்காமல் அவைகளில் உண்மையானது எது என்று எப்படி தெரிந்துக் கொள்ளமுடியும்? நாம் அவைகளை அப்படியே விழுங்கக்கூடாது, அதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக மென்று ருசி பார்க்கவேண்டும், பிறகு விழுங்கவேண்டுமா அல்லது துப்பவேண்டுமா என்பதை முடிவு எடுக்கலாம்.

எனக்கு இன்று கூட ஞாபகம் உள்ளது, ஒரு நாள் என் மனதிலே ஒரு மிகப்பெரிய ஆசை வந்தது, அதாவது குர்‍ஆனோடு பைபிளை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆசை தான் அது. ஆகையால், நான் அந்த இரண்டு வேதங்களையும் அடுத்தடுத்து வைத்து இரண்டையும் ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். இந்த ஆய்வு பல மாதங்கள் தொடர்ந்தது. இறைவன் தன்னுடைய சத்தியத்தால் என்னை அதிகமாக நிரப்பினார். மேலும் எது சத்தியம் எனபதை முழுவதும் அறியும் வரை இந்த இரு வேதங்களையும் விஞ்ஞான அளவுகோலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதை நிறுத்தக்கூடாது என்று நான் எனக்குள்ளேயே ஒரு முடிவை எடுத்துக்கொண்டேன். இப்படி உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டுமென்றால், அதற்குள்ள ஒரே வழி "பைபிளின் சவாலை ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்வதாகும்".

இந்த ஆய்வின் மூலம் கிடைத்த அனைத்தையும் நான் பதிவு செய்துள்ளேன். அதனையே இப்போது உங்களோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிறேன். என்னோடு சேர்ந்து, "பைபிளின் சவாலை சந்திக்க" உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

குறிப்பு: இந்த தொடர் கட்டுரைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி எடுங்கள். இந்த கேள்விக்குறிகள் (?) கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகள் அனைத்தும் உங்களை நோக்கிய கேட்கப்பட்டுள்ளது. அவைகளுக்கு பதில்களைக் கொடுக்க முயற்சி எடுங்கள், ஏனென்றால், அப்போது தான் உங்கள் நம்பிக்கை கண்மூடித்தனமாக அல்லாமல், சத்தியத்தில் கட்டப்பட்டு இருக்கும். உங்கள் பதில்களை எனக்கு அனுப்புங்கள், நான் உங்கள் பதில்களுக்காக பொறுமையோடு காத்திருக்கிறேன்.

[முந்தைய அத்தியாயம் செல்ல‌] [பொருள் அட்டவணை செல்ல] [அடுத்த அத்தியாயம் செல்ல]

ஆங்கில மூலம்: Take the Bible Challenge