முஹம்மதுவும் தோராவும்
சுனான் அபூ தாவுத் புத்தகம் 38 (கிதாப் அல் ஹுதுத், நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகள்), எண் 4434 (ஆங்கில எண்):
இப்னு உமர் அறிவித்ததாவது:
ஒரு குறிப்பிட்ட யூத குழுவினர் வந்து அல்லாஹ்வின் தூதரை (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) “குஃப்” என்ற இட்த்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இறைத்தூதரும் அவர்களின் இடத்திற்கு (பள்ளிக்கு) சென்றார்.
அவர்கள் இறைத்தூதரிடம் “அபூல் காசிம் அவர்களே, எங்களைச் சார்ந்த ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு விபச்சாரம் செய்துவிட்டான், எனவே, அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டுமோ அதனை கொடுங்கள் என்று கேட்டார்கள். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) உட்காருவதற்கு ஒரு மென்மையான மெத்தையை அவர்கள் போட்டு இருந்தார்கள், அதன் மீது இறைத்தூதர் உட்கார்ந்தார்கள், மேலும் “தோராவை கொண்டு வாருங்கள்” என்று இறைத்தூதர் கூறினார்கள். அவரிடம் தோரா கொண்டு வரப்பட்ட்து. அப்போது அவர் அந்த மெத்தையிலிருந்து எழுந்தார், மேலும் அந்த மெத்தையின் மீது தோராவை வைத்து, “நான் உன் (தோரா) மீது நம்பிக்கை கொள்கிறேன் மேலும் உன்னை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறினார் (I believed in thee and in Him Who revealed thee).
அதன் பிறகு இறைத்தூதர் அவர்கள், உங்களில் படித்த ஒரு நபரை அழைத்து வாருங்கள் என்று கூறினார். ஒரு படித்த வாலிபர் கொண்டு வரப்பட்டார்.
நஃபியின் மாலிக் என்பவர் அறிவித்த கல்லெரிதல் தண்டனை போன்றதோரு விவரங்களே இந்த அறிவிப்பாளரும் இந்த ஹதீஸோடு அறிவித்தார்.
இந்த ஹதீஸின் படி, முஹம்மதுவின் காலத்தில் தோரா மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருந்தது என்று தெரியவில்லையா?
இந்த ஹதீஸின் படி நாம் கீழ்கண்ட விவரங்களை அறிந்துக்கொள்கிறோம்:
1. முஹம்மது வாழ்ந்த காலத்தில், அதிகார பூர்வமான தோரா பரவலாக பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது. அன்று முஹம்மது அவர்களின் இருந்த பிரதியானது தங்களிடம் இருந்த பிரதிக்கு வேறுபடுகிறது என்றுச் சொல்லி யூதர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உண்மையைச் சொன்னால், இந்த தோரா பிரதியானது யூதர்களின் பிரதியாகவே இருந்திருக்கவேண்டும், ஏனென்றால், முஹம்மதுவோ அல்லது அவரது அரபி சகாக்களோ தோராவை படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். இந்த தோரா தான் இறைவனின் பிழையற்ற வார்த்தை. அல்லாஹ்வின் பிழையற்ற வார்த்தைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை (பார்க்க குர்-ஆன் 10:94).
2. தன்னிடம் கேள்வி கேட்ட போது முஹம்மது பரிசுத்த வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார், இது இக்கால இஸ்லாமியர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் தான் உட்கார்ந்து இருந்த மெத்தையிலிருந்து எழுந்து, அந்த மெத்தையின் மிது தோராவை வைத்தார் என்பதை இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கிறது. முஹம்மது செய்தது போலத் தான் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமும், அல்லாஹ்வின் முந்தைய வேதங்களை கனப்படுத்தவேண்டும்.
3) உங்கள் இறைத்தூதர் முஹம்மது இவ்விதமாக கூறினார்: “நான் உன் (தோரா) மீது நம்பிக்கை கொள்கிறேன் மேலும் உன்னை அனுப்பியவர் மீதும் நம்பிக்கை கொள்கிறேன்” (I believed in thee and in Him Who revealed thee) .
இந்த வார்த்தைகள் நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வார்த்தைகளாக உள்ளது. அதாவது நாம் அனைவரும் பைபிளை விசுவாசிக்கவேண்டும். முஹம்மதுவின் உதாரணத்தை பின்பற்றவேண்டும் என்று நம்புகிற முஸ்லிம்கள் இப்படியே செய்யவேண்டும். இப்போது என்னிடம் “ஆனால், தீமோத்தேயு அவர்களே, இன்று நம்மிடம் அதிகார பூர்வமான தோரா இல்லையே” என்று அறியாமையில் என்னிடம் கேள்விகளை கேட்கவேண்டாம். ஏனென்றால், உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவிற்குக் தெரிந்ததை விட உங்களுக்கு அதிகமாக தெரியுமா? பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு வம்சமாக பாதுகாக்கப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன் கையில் கிடைத்த பரிசுத்த இறை வார்த்தைகள் பற்றி உயர்வாக பேசி உங்கள் முஹம்மது அவர்களே அவைகளை கனப்படுத்தியுள்ளார். அப்படி இருக்கும் போது, அவரை விட சிறந்தவர்களாக நீங்கள் உங்களை கருதுகிறீர்களோ? மேலும் தற்போது நம்மிடமுள்ள பிரதிகள், முஹம்மதுவின் காலத்தில் இருந்த பிரதிகளோடு ஒத்திருப்பதை நாம் அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலமாக அறிந்துக்கொள்ளலாம்.
முந்தைய வேதங்கள் பற்றி குர்-ஆன் கூறும் சாட்சியங்களை, வசனங்களை இந்த பக்கத்தில் காணலாம்: WHAT THE QUR'AN SAYS ABOUT THE BIBLE
ஆங்கில மூலம்: Muhammad and the Torah
பைபிள் பற்றிய இதர கட்டுரைகள்