"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 2
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.
முஹம்மதுவின் வாழ்க்கை - THE LIFE OF MUHAMMAD
"Power tends to corrupt, and absolute power corrupts absolutely." Lord Acton
"சக்தி கெடுக்கும், அதிக சக்தி முழுவதுமாக கெடுக்கும்"
"The measure of a man is what he does with power." Pittacus
"ஒரு மனிதனின் உண்மை முகம், ஆற்றல் அதிகாரம் அவன் கையில் கிடைக்கும் போது எதை செய்தான் என்பதைக் கண்டு தெரிந்துக் கொள்ளலாம்”
கட்டுரையின் பொருளடக்கம் (OVERVIEW):
1. முஹம்மதுவின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கை
2. மக்காவில் ஒரு அஹிம்சாவாதியாக மற்றும் "எச்சரிக்கை" செய்பவராக 13 ஆண்டுகள் (Warner)
3. மதினாவில் ஒரு போர் செய்கின்றவராக 10 ஆண்டுகள் (Warrior)
4. கி.பி. 622/623ம் ஆண்டில் நடைப்பெற்ற "ஹிஜ்ரா" மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்தல். இஸ்லாமிய நாட்காட்டி இந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
மக்கா vs மதினா காலக்கட்டம் = எச்சரிப்பவர் vs சண்டையிடுபவர்
MECCAN VS MEDINAN PERIODS = WARNER VS WARRIOR
முஹம்மது பற்றி நீங்கள் அறியவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், அவர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றவுடன் அவரது "கொள்கைகள்" மாறிவிட்டன. மக்காவில் அவர் அமைதியாக எச்சரிப்பவராக இருந்தார். மதினாவில் அவர் கொடுமையாக சண்டையிடும் போர்வீரராக மாறிவிட்டார்.
முஹம்மதுவின் சூழ்நிலைகள் மாறும் போது, அவரின் வாழ்க்கை மாறியது, அவரது கொள்கைகள் மாறியது, அவரது இஸ்லாம் மாறியது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதுவரை அனுமதிக்கப்படாதது, இனி அனுமதிக்கப்பட்டது உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு முஹம்மதுவின் கட்டளைகள் கீழ்கண்ட விதமாக மாறின.
"இறைத்தூதர் இரண்டாம் அகபாவிற்கு முன்பாக சண்டையிட அல்லது இரத்தம் சிந்த அனுமதிக்கவில்லை. அவர் மனிதர்களை இறைவனிடம் வாருங்கள் என்றும், அவமானங்களை சகித்துக் கொள்ளுங்கள், மற்றவர்களின் அறியாமையை மன்னியுங்கள் என்றும் கட்டளையிட்டார்." Life of Muhammad (LoM), by A. Guillaume, p212
முஹம்மது எச்சரிக்கை செய்பவராக சொன்ன வசனம்:
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)
முஹம்மது போரிடுபவராக சொன்ன வசனம்:
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 9:5)
நபித்துவத்திற்கு முன்பு வரை இருந்த முஹம்மதுவின் வாழ்க்கைப் பின்னணி:
[நபியாக அழைப்பு பெறுவதற்கு முன்பாக முஹம்மது: Tabari vol 6 p44 - 56, LoM p69 - 87]
• முஹம்மது வாழ்ந்த காலம் கி.பி. 570 லிருந்து 633 வரை. அரேபிய தீபகற்ப நிலப்பரப்பில் (ஹிஜஜ் - Hijaz) அவர் வாழ்ந்தார். ஹிஜஜ் இடத்தில் வாழ்ந்த மக்கள் பேகன் என்றுச் சொல்லும் பல தெய்வங்களை வணங்குபவர்களாகவும், சிலர் யூதர்களாகவும் மற்றும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தாளர்களில் சிலர் அரேபிய தீபகற்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பல தெய்வங்களை வணங்குபவர்களாக மட்டுமே இருந்தனர் என்று தவறுதலாக சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் அங்கு யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர்.
• அவரது தந்தை அவர் பிறப்பதற்கு முன்பாக மரித்துவிட்டார், அவரது தாயார் 6 ஆண்டுகளுக்கு பின்பு மரித்தார்கள். அவரது சித்தப்பா அபூ தலிப் அவரை வளர்த்தார்.
• அவர் இப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கும் போது, சிரியாவிற்கு வியாபாரத்திற்காக சென்றார், அங்கு கிறிஸ்தவ சந்நியாசிகளை சந்தித்து, மதம் சம்மந்தப்பட்ட அனேக விஷயங்களை அவர்களுடன் விவாதித்தார்.
• அவர் ஒரு சிறந்த வியாபாரியாக இருந்தார். வியாபாரம் செய்து நல்ல செல்வ செழிப்புடன் இருந்த கதீஜாவை திருமணம் செய்துக்கொண்டார். அவரது வாழ்க்கை அமைதியாக நன்றாக சென்றுக்கொண்டு இருந்தது, மற்றும் அவர் ஒரு நாகரீகமுள்ள மனிதனாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மகள்களும் மகன்களும் இருந்தார்கள், ஆனால் அவரது எல்லா ஆண் பிள்ளைகளும் குழந்தை பருவத்திலேயே மரித்துவிட்டனர்.
முக்கிய அம்சம்: முஹம்மதுவின் பண்புகள் (VISTA: MUHAMMAD'S QUALITIES)
"There are depths in man that go to the lowest hell, and heights that reach the highest heaven ..." Carlyle.
"மனிதனில் உள்ள குணங்கள், சில நேரங்களில் நரகத்தைப் போன்ற ஆழத்திற்கும் செல்லும் சில நேரங்களில் வானத்தைப் போன்ற அதிக உயரத்திற்கும் செல்லும்"
"The test of every religious, political, or educational system is the man which it forms." Amiel.
"மதம், அரசியல் மற்றும் கல்வி அமைப்புக்களின் தரத்தை பரிசோதிக்கவேண்டுமானால், அதை உருவாக்கியவர்களின் குணத்தை பரிசோதித்துப் பாருங்கள், தெரிந்துக் கொள்வீர்கள்.”
ஒரு மனிதனில் எந்த பண்புகளை நீங்கள் பாராட்ட விரும்புவீர்கள்?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
முஹம்மது நல்ல மற்றும் தீய பண்புகள் கொண்ட மனிதராக இருந்தார். அவர் முழுவதுமாக தீயவராக இல்லை அதே போல அவர் முழுவதும் நல்ல மனிதராக இல்லை. அவர் ஒரு சராசரி மனிதர் மற்றும் மனிதர்கள் செய்யும் தவறுகளை தானும் செய்பவர். அவரை பிசாசு என்று தீர்த்துவிடாதீர்கள். அவர் எப்போதும் தீயவராகவே வாழ்ந்தார் என்றுச் சொல்லாதீர்கள். அவரைப் பற்றிய நம்முடைய மதீப்பீடுகளில் நாம் நேர்மையானவர்களாக இருப்போம்.
முஹம்மதுவின் நற்பண்புகள்:
• அவர் வலிமை மிக்கவராகவும், உறுதிகொண்டவராகவும் இருந்தார்.
• அவர் தன் செய்தியை பொறுமையோடும், தொடர்ச்சியாகவும் அறிவித்தார்.
• தனனை பின்பற்றுபவர்களின் சுக துக்கங்களில், பசியில் பங்கு கொண்டார்.
• அவர் கொடுமையான துன்புறுத்தல்களை சகித்தார்.
• சிறிய வெற்றி கிடைத்தாலும் அதற்காக அதிகமாக உழைத்தார்.
• மரணம் வரும் நேரத்திலும் பின் வாங்காமல் போராடினார்.
• தன்னை பின் பற்றுபவர்களின் மத்தியில் தாழ்மையானவராகவும், நீதியுள்ளவராகவும் நடந்துக்கொண்டார்.
• அவரது சகாக்கள் அவர் மீது அதிக அன்பு கொண்டு, அவருக்கு அதிகமாக கீழ்படிந்தார்கள். • அவரது சில சகாக்கள் கொடுமைபடுத்தப்பட்டார்கள், சிலர் மரித்தும் போனார்கள்.
• அவரது சகாக்கள் அவருக்காக உயிரையும் கொடுத்தார்கள்.
இந்த பண்புகள் ஒரு பலவீனமாக மனிதனின் பண்புகள் அல்லவே!
குர்ஆனின் அழகான வசனங்கள்:
குர்ஆனில் அனேக நல்ல கட்டளைகள் உள்ளன, அதாவது பசியுள்ளவர்களுக்கு உணவளியுங்கள், உன் சக முஸ்லீமுக்கு உதவி செய்யுங்கள் மற்றும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் போன்றவைகளாகும்.
குர்ஆன் 2:177
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
குர்ஆன் 91:1-10
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
முடிவுரை: முஹம்மது பற்றி நீங்கள் மதிப்பீடு செய்யும் போது, அவரில் நல்ல மற்றும் தீய குணங்கள் இரண்டும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நபித்துவ அழைப்பு "முஹம்மதுவின் குகை அனுபவம்" கி.பி. 610
[முஹம்மதுவிற்கு அழைப்பு: Tabari vol6 p60 - 80, various Hadith, LoM p109 - 114]
In morals, what begins in fear usually ends in wickedness; in religion, what begins in fear usually ends in fanaticism. Fear, either as a principle or a motive is the beginning of all evil. Mrs. Jameson.
நற்பண்புகள் பயத்தோடு ஆரம்பிக்கப்பட்டால் அது முடிவில் தீய பண்பாக மாறிவிடும். ஒரு மதம் பயத்தோடு ஆரம்பித்தால், அது வன்முறையிலும் வெறுப்பிலும் முடிவடையும். "பயம்" என்பது ஒரு கோட்பாடாக இருந்தாலும் சரி, அல்லது நோக்கமாக இருந்தாலும் சரி, அது தான் எல்லா தீமைக்கும் ஆரம்பமாக இருக்கின்றது.
முஹம்மது அருகாமையில் இருந்த மலை குகையில் அடிக்கடி சென்று தியானம் செய்தார். ஒரு "ஆவி" அவருக்கு முன் தோன்றியது, அது அவரை அலைகழித்து பிழிந்துவிட்டது, மற்றும் "வாசிக்கும் படி" அவருக்கு கட்டளையிட்டது! இது அவரை பயத்திற்குள்ளாக்கியது. பின்பு இதே ஆவி அவரிடம் "தான் காபிரியேல் தூதன்" என்றுச் சொன்னது.
அவர் கூறினார் "படி!", நான் கூறினேன் "நான் படிக்கமுடியாது." அவர் என்னை வலுவாக பிடித்து அழுத்தினார், நான் மரித்துவிடுவேன் என்று எனக்கு தோன்றியது. பிறகு என்னை விட்டுவிட்டார், மறுபடியும் என்னை நோக்கி "படி!" என்றார். நான் "எதை படிக்கவேண்டும்?" என்று நான் கூறினேன். இப்படி சொல்லி, நான் அவரிடமிருந்து மீண்டேன், மறுபடியும் அவர் என்னை அப்படியே அழுத்துவாரோ என்று பயந்தேன்.
குர்ஆன் சூரா 96:1 லிருந்து 5 வரையுள்ள வசனங்கள் தான் குர்ஆனில் முதலாவது சொல்லப்பட்ட வசனங்களாகும்.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (குர்ஆன் 96:5)
முஹம்மது பயத்துடன் அவ்விடத்தை விட்டு ஓடினார். வீட்டிற்கு விரைவாகச் சென்று தனனை மறைத்துக்கொண்டார், தனக்கு பேய் பிடித்துவிட்டதென்றும் அல்லது தான் பையித்தியமாக மாறிவிடுவார் என்றும் நினைத்து பயந்துவிட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனேக முறை தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி எடுத்தார்.
"எனக்கு வேதனையாக இருந்தது, எனக்கு பிசாசு பிடித்துவிட்டது என்று குவாரிஷ்கள் [மக்கா மக்கள்] ஒரு போதும் எனக்கு இப்படி சொல்லக்கூடாது, ஆகையால், நான் ஒரு உயர்ந்த மலையில் ஏறி அங்கிருந்து குதித்து மரித்துவிடுகிறேன் அப்போது தான் எனக்கு நிம்மதி என்று நான் நினைத்தேன்". Muhammad, LoM p106.
இறைத்தூதருக்கு சில காலம் வெளிப்பாடு வருவது நின்று போனது, அவர் மிகவும் வேதனையுற்றார். அவர் மலைகளின் உச்சிக்கு செல்ல ஆரம்பித்தார், அங்கிருந்து விழுந்து மரித்துவிட முடிவு செய்தார்; ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் அப்படி மலையின் உச்சிக்கு செல்லும் போதெல்லாம், காபிரியேல் தூதன் அவருக்கு காணப்பட்டு, அவரிடம் "நீ இறைவனின் நபியாக இருக்கிறாய்" என்றுச் சொல்வார். அதன் பிறகு இறைத்தூதர் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு சாந்தமடைந்து திரும்பி வந்துவிடுவார். Tabari’s History, Vol 6, p76
அனேக மக்கள் முஹம்மதுவிற்கு பிசாசு பிடித்துவிட்டது அல்லது பைத்தியம் பிடித்துவிட்டது என்று எண்ணினார்கள் (LoM, p121, 130). முஹம்மதுவிற்கு இப்படி பிசாசு பிடித்துவிட்டது அல்லது அவர் பைத்தியமாகி விட்டார் என்று மக்கள் சொன்னார்கள் என்று குர்ஆன் சொல்கிறது.
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. (குர்ஆன் 81:22-25)
இஸ்லாமை தோற்றுவித்தவரைப் பற்றி அறிந்துக்கொள்ள இது தான் முதலாவது துப்பு ஆகும். அது முஹம்மதுவின் மனச்சொற்விற்கும் தற்கொலை மனப்பான்மைக்கும் காரணமாக இருந்தது. இந்த மனச்சொற்வு அவருக்கு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் "மன நோய்" என்றுச் சொல்வார்கள்.
உண்மையான தேவன் தன் மக்களை சந்திக்கும் போது, இப்படி தற்கொலை மனப்பான்மை இருக்காது, அதற்கு எதிரான நிலையை உண்டாக்கும். ஆனால், சாத்தான்/பிசாசு ஒருவரை சந்திக்கும் போது முஹம்மது சந்தித்த அனுபவத்தை தரும். உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை கவனிக்கவும்:
1) பன்றிக் கூட்டம் மலை மிது எறி, அங்கிருந்து குதித்து மாண்டது.
2) பிசாசு பிடித்திருந்த ஒரு வாலிபன் வெருப்பில் தன்னை தள்ளி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுத்தான்.
இவைகளை குறித்து அறிய படிக்கவும்: மத்தேயு 8:30-33, 17:14-18
மேலும் நாம் முஹம்மதுவின் இஸ்லாமிய அனுபத்திற்கு முன்பு அவருக்கு இருந்த மத நம்பிக்கையைப் பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். அவருக்கு இறைவன் யார் என்றுத் தெரியாது. அவருக்கு இருந்த இறை நம்பிக்கை மிகவும் பலவீனமாக இருந்தது. உண்மையான இறைவனோடு ஒரு நல்ல உறவுமுறை அவருக்கு இருந்ததா? அல்லது ஒரு உண்மையான இறைவனை அவர் நம்பினாரா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனிடம் உதவிக்காக வேண்டியிருப்பார். ஆனால், அதற்கு பதிலாக முஹம்மது தற்கொலை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வேதனையடைந்தார்.
முஹம்மதுவின் இந்த ஆரம்பகால அனுபவம் இவ்வளவு தான் என்று நினைத்துவிடாதீர்கள், அவரை அலைகழித்த அந்த சக்தி அவருக்கு துன்பத்தை வருவித்து, அவருக்கு அதிக வலியை உண்டாக்கியது.
சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)
1) பைபிள் சொல்லப்பட்ட எந்த நபராவது, அதாவது தேவனை சந்தித்த எந்த நபராவது, இப்படி மன உலைச்சலுக்கு ஆலாகி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுத்துள்ளாரா?
2) ஒரு நபரை பிசாசு பிடித்து இருந்தால், அந்த நபர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத பட்சத்தில், அந்த நபர் எப்படி நடந்துக்கொள்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
3) தொடர்ச்சியான மன உலைச்சலுக்கும், தற்கொலை முயற்சிக்கும் உண்மையான இறைவன் காரணமாக இருக்கமுடியுமா?
4) இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார் மற்றும் அவனை வென்றார். பிசாசை சந்தித்த மனிதன் எப்படி நடந்துக்கொள்வான்?
பாகம் 2 முற்றிற்று
ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR
"கிறிஸ்தவர்களுக்காக" பக்கத்தை காண்க