இஸ்லாமிய அகராதி > ஆ வார்த்தைகள்

ஆன்சரிங் இஸ்லாம் தளம் (www.answering-islam.org)

இந்த தளம் உலக இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் சொல்லவும், அவர்கள் முன்வைக்கும் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்களோடு பதில்களையும் மறுப்புக்களையும் கொடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளம் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் தளமாகும். இதில் கட்டுரைகளையும் மறுப்புக்களையும் எழுதும் எழுத்தாளர்களில் சிலர் முன்னாள் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள் மேலும் சில எழுத்தாளர்கள் அரபி மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தளம் பல மொழிகளில் இயங்குகிறது. 

இந்த தளம் கீழ்கண்ட இந்திய மொழிகளிலும் இயங்குகிறது:

  1. ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
  2. ஆன்சரிங் இஸ்லாம் தெலுங்கு
  3. ஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி
  4. ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கிலம்

ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கிலம்: 

இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் மறுப்புக்களாகவும்/கட்டுரைகளாகவும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் கேட்கும் எந்த ஒரு கேள்வியாக இருந்தாலும், அதற்கான பதிலை இந்த தளத்தில் காணலாம். 

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்:

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பிரிவு 2008ம் ஆண்டு, உமர் என்பவரால் துவங்கப்பட்டது. இவர் சென்னையில் பிறந்த முன்னாள் முஸ்லிமாவார். இவரும் இவரோடு சேர்ந்து அனேக தமிழ் கிறிஸ்தவர்களும் ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தின் ஆய்வுக் கட்டுரைகளையும், மறுப்புக்களையும் தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறார்கள். உமர் தன்னுடைய ஈஸா குர்-ஆன் தளத்தில் பதிக்கும் ஆய்வுக்கட்டுரைகளையும், தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுக்கும் மறுப்புக்களையும் இந்த ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பிரிவில் மறுபதிவு செய்கிறார். ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விருப்பமுள்ளவர்கள், எங்களை தொடர்பு கொள்ளவும்.

முஸ்லிம்களுக்கு சுவிசேஷம் சொல்ல ஆர்வமுடன் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இந்த தளத்தில் மலையாளம், கன்னடம் மற்றும் உருது மொழிகளில் இஸ்லாமிய கட்டுரைகளை மொழியாக்கம் செய்து பதிக்க விருப்பமுள்ளவர்கள், எங்களை தொடர்பு கொள்ளவேண்டுகிறோம்