இஸ்லாமிய அகராதி > இ வார்த்தைகள்

இமாம்

முஸ்லிம் தலைவர்; முஸ்லிம்களின் ஆன்மீக தலைவர்; மசூதியில் தொழுகையை நடத்தும் தலைவர்.

ஒரு இஸ்லாமிய ஆன்மீக தலைவர் அரபி மொழியில் புலமை பெற்று இருக்கவேண்டும், முக்கியமாக குறைஷி அரபி மொழி வழக்கத்தை (உச்சரிப்பை) நன்கு கற்றறிந்தவராக இருக்கவேண்டும் (சஹிஹ் புகாரி 6.507)

ஷியா பிரிவில் உள்ள முஸ்லிம்கள் “இன்றும் இமாம்கள் மறைந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று நம்புகிறார்கள். முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அலி (அலி பி. அபி தாபித்) மூலமாக வந்த 12 இமாம்களை ஷியா முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இமாம்கள் பாவமில்லாதவர்கள் என்றும் ஷியாக்கள் நம்புகிறார்கள்.