ஹலால் (HALAL)
குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் (இஸ்லாமிய) சட்டப்படி ஹலால் என்றால் ”அனுமதிக்கப்பட்டவைகள்” என்று பொருள். அதாவது இஸ்லாமியர்கள் பயன்படுத்தவோ அல்லது உட்கொள்ளவோ அல்லது உடுத்தவோ அனுமதிக்கப்பட்ட பொருட்களை “ஹலால் பொருட்கள்” என்பார்கள். இதே போல, இஸ்லாமில் அனுமதிக்கப்படாதவைகளை “ஹராம்” என்றுச் சொல்வார்கள். இதைப் பற்றி இன்னும் அறிய இஸ்லாமிய அகராதி பக்கத்தில் “பாவம்” என்ற தலைப்பைப் பார்க்கவும்.
ஆனால், ஹலால் பட்டியலில் எவைகள் வருகின்றன, ஹராம் பட்டியலில் எவைகள் வருகின்றன என்பதைக் குறித்து இஸ்லாமிய பிரிவுகளில் ஒருமித்த கருத்து இல்லை. ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு பட்டியலைத் தருவார்கள்.
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். (1 கொரிந்தியர் 10:23-24)