இஸ்லாமிய அகராதி > க வார்த்தைகள்

கதிஜா பிந்த் குவைலித்

இந்த பெண்மணி குவைலித் என்பவரின் மகளாவார்கள்.  இவர் முஹம்மதுவின் முதல் மனைவியாவார்கள். இவர் ஒரு செல்வ செழிப்புள்ளவர்களாகவும், முஹம்மதுவிற்கு வேலை கொடுத்த எஜமாட்டியாகவும் இருந்தார்கள். இவரிடம் வேலை செய்த முஹம்மது சிரியாவிற்குச் சென்று வெற்றிகரமாக வியாபாரத்தை முடித்து வந்தார். அப்போது கதிஜா அவர்கள் தம் வேலைக்காரியாக இருந்த நஃபீசா என்பவளிடம் ”தன்னை முஹம்மது திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்கிறாரா?” என்று கேட்டு வரும் படி செய்தி அனுப்பினார்கள். கதிஜா அவர்களை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது சம்மதம் தெரிவித்தார்கள்.  இவர்களுக்கு திருமணம் நடந்த போது கதிஜா அவர்களுக்கு வயது 40 மற்றும் முஹம்மது வயது 25 ஆக இருந்தது. இவ்விருவருக்கு பிறந்தவர் தான் ஃபாதிமா என்பவர். இவர் அலி என்பவரின் மனைவியாவார்கள். இஸ்லாமின் நான்காவது தலைவராக (கலிஃபாவாக) அலி ஆட்சி புரிந்தவர் இந்த அலி தான்.  கதிஜாவை திருமணம் புரிந்தபடியினால், குறைஷி மக்களின் மத்தியில் முஹம்மதுவிற்கு நல்ல பெயரும் புகழும் கிடைத்தது.  முஹம்மது ஆன்மீகத்தில் அதிக விருப்பம் காட்ட அவருக்கு அதிக நேரமும் இந்த சமத்தில் அவருக்கு கிடைத்தது. கதிஜா அவர்கள் உயிரோடு வாழ்ந்த காலம் வரை முஹம்மது வேறு எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்துக்கொள்ளாமல், அவருக்கு நம்பிக்கையாக வாழ்ந்தார். 

கதிஜா அவர்களும் காபிரியேல் தூதனை வித்தியாசமான முறையில் சோதித்துப் பார்த்தார்கள், அதனை படிக்க இங்கு சொடுக்கவும்

கதிஜாவின் வாழ்க்கை நமக்கு எதனை காட்டுகின்றது? இஸ்லாமுக்கு முன்பாக, பெண்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் கையில் வைத்துக்கொண்டு நன்கு வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள் என்பதையும், ஆண்களைக் கூட அவர்கள் வேலைக்கு அமர்த்திக்கொண்டு நன்கு வியாபாரம் புரியும் பெண்களாக இருந்தார்கள் என்றும்  தெரிகின்றது. அது மட்டுமல்ல, ஆண்களை தாங்கள் திருமணம் செய்ய விரும்பினால், அதனை தைரியமாக வெளியே தெரிவிக்கக்கூடிய அளவிற்கு தைரியமுடையவர்களாக இருந்தார்கள் என்பதும் இதன் மூலம் அறியலாம். ஆனால், இஸ்லாம் வந்த பிறகு, இஸ்லாமிய பெண்களுக்கு இந்த உரிமைகள் பறிக்கப்பட்டுப் போயின என்பது கசப்பான  உண்மையாகும்.

மூலம்