இஸ்லாமிய அகராதி > ந வார்த்தைகள்

நீல் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong)

முதன் முதலில் நிலவிற்குச் சென்று கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார். இவரைப் பற்றி முஸ்லிம்கள் ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு இருக்கிறார்கள். இவர் நிலவில் இறங்கி நடக்கும் போது, இவருக்கு "அதான் (அஜான்)" ஓசை கேட்டதாம். ("அதான்" என்றால், முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு மசூதிகளிலிருந்து "முஸ்லிம்களை தொழுகைக்கு வரும் படி அழைக்கும் அழைப்பொலி" ஆகும். உங்கள் பகுதியில் மசூதி இருக்குமானால், இந்த சத்தத்தை தினமும் ஐந்து வேளை நீங்கள் கேட்டு இருக்கலாம்.)  இந்த சத்தம் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு  நிலவில் கேட்டதாம், அதன் பிறகு அவர் முஸ்லிமாக மாறிவிட்டாராம். ஆனால், இது உண்மையல்ல இது ஒரு வதந்தியாகும், இது பொய்யாகும், நீல் ஆம்ஸ்ட்ராங் முஸ்லிமாக மாறவில்லை.

இதைப் பற்றி நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களோடு  நடந்த கடிதத் தொடர்புக்களையும், அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையையும் இந்த கட்டுரையில் காணலாம்: How Neil Armstrong "became" a Muslim

இதைப் பற்றி விக்கிபிடியாவில் கீழ்கண்ட விவரங்கள் தரப்பட்டுள்ளது. அதனை ஆங்கிலத்திலும் தமிழிலும் தருகிறோம் (விக்கிபிடியாவில் 2015ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கீழ்கண்ட விவரங்கள் எடுக்கப்பட்டன - http://en.wikipedia.org/wiki/Neil_Armstrong)

Since the early 1980s, Armstrong has been the subject of a hoax saying that he converted to Islam after hearing the adhan, the Muslim call to prayer, while walking on the Moon. The Indonesian singer Suhaemi wrote a song called "Gema Suara Adzan di Bulan" ("The Resonant Sound of the Call to Prayer on the Moon") which described Armstrong's conversion; the song was discussed widely in various Jakarta news outlets in 1983.[134] Other similar hoax stories were seen in Egypt and Malaysia. In March 1983, the U.S. State Department responded by issuing a global message to Muslims saying that Armstrong "has not converted to Islam".[135] However, the hoax was not completely quieted; it surfaced occasionally for the next three decades. A part of the confusion stems from the similarity between Armstrong's American residence in Lebanon, Ohio, and the countryLebanon which has a majority population of Muslims.[135][136]

தமிழாக்கம்:

1980ம் ஆண்டிலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி ஒரு வதந்தி பரவிக்கொண்டு இருக்கிறது. இவர் நிலவில் முதன் முதலில்  இறங்கி நடக்கும் போது, இவருக்கு "அதான் (அஜான்)" ஓசை கேட்டதாம்.  அதாவது இஸ்லாமியர்கள் தொழுகைக்காக அழைப்பு விடும் அந்த ஓசை நிலவில் இவருக்கு கேட்டதாம்.  அதன் பின்னர் இவர் ஒரு இஸ்லாமியராக மாறிவிட்டாராம்.

இந்தோனேசியா நாட்டின்  "ஸுஹைமி" என்ற பாடகர் ஒரு பாடலை இயற்றினார். அந்த பாடலின் பெயர் "நிலவில் ஒலித்த தொழுகை அழைப்புச்சத்தம்" (Gema Suara Adzan di Bulan" என்பதாகும். இது நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பற்றிய வதந்தியை வர்ணிக்கும்  பாடல் ஆகும்.  இதைப் பற்றி ஜகார்த்தா செய்திதாள்கள் 1983களில் அதிகமாக கட்டுரைகளை வெளியிட்டது. இதைப்போலவே, எகிப்து மற்றும் மலேசியாவிலும் வதந்திகள்  பரவின.  

1983ம் ஆண்டு, அமெரிக்க அரசுத்துறை (U.S. State Department) "உலக முஸ்லிம்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அதாவது 'ஆம்ஸ்ட்ராங்' அவர்கள் இஸ்லாமுக்கு மாறவில்லை, இதனை நம்பாதீர்கள்" என்று செய்தியை  வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்குப் பிறகும், இந்த வதந்தி முழுவதுமாக நின்றபாடில்லை, அடுத்த 30 ஆண்டுகள் இந்த வதந்தி பரவிக்கொண்டே இருந்தது. இந்த குழப்பத்திற்கு ஒரு காரணம், ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அமெரிக்க வீட்டு விலாசம் தான்.  இவருடைய விலாசம் அமெரிக்காவில் உள்ள "லெபனான், ஓஹியோ" ஆகும். இந்த விலாசத்தில் இருக்கும் "லெபனான்" என்பதை மக்கள் தவறாக புரிந்துக்கொள்கிறார்கள்.  லெபனான் என்ற பெயரில் ஒரு நாடு உள்ளது மற்றும் அதில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாவார்கள்.