இஸ்லாமிய அகராதி > ஷ வார்த்தைகள்

ஷிர்க் (SHIRK)

இஸ்லாமின் படி, "மன்னிக்கப்படாத பாவத்தை/குற்றத்தை" ஷிர்க் என்பார்கள். உதாரணத்திற்கு, அல்லாஹ்விற்கு இணை வைப்பது (அல்லாஹ்விற்கு இணையாக இன்னொருவரை கருதுவது) ஷிர்க் ஆகும். 

  • குர்-ஆன் 4:48, 137 மற்றும் 47:34ன் படி இணைவைப்பவர்கள் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படமாட்டார்கள்.

இயேசுவை இறைவனென்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றபடியால், குர்-ஆன் அவர்களை “இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்கள் (காஃபிரூன்) என்றும், இணைவைப்பவர்கள் (முஷ்ரிகூன்) என்றும்” குற்றம் சாட்டுகிறது. 

குர்-ஆன் 9:30 - 33

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)

ஷிர்க் பற்றிய விவரங்கள் அடங்கிய சில கட்டுரைகள்:

ஆங்கிலக் கட்டுரைகள்:

தமிழ் கட்டுரைகள்: