இஸ்லாமிய அகராதி > த வார்த்தைகள்

தபரி (Tabari)

அபூ ஜபர் முஹம்மத் இப்னு ஜரீர் அத்தபரி  என்பது இவரது முழு பெயராகும்.  இவர் கி.பி. 839ம் ஈரானிலுள்ள அமோல், தபரிஸ்தானில் பிறந்தார்.  இவர் ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் கி.பி. 923ம் ஆண்டு காலமானார். இவர் ஒரு முக்கியமான இஸ்லாமிய அறிஞராவார். இவர் இஸ்லாமின் ஆரம்ப கால விவரங்களை பல அறிஞர்களிடமிருந்து சேகரித்து தொகுத்தார்.

இவருக்கு பிறகு வந்த இஸ்லாமிய அறிஞர்கள்  தபரியின் இந்த தொகுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.  இவரது தொகுப்பிலிருந்து தான், அல்பிரட் குல்லேம் (Alfred Guillaume)  இப்னு இஷாக்கின் "முகம்மதுவின் சரிதையிலிருந்து" தொலைந்து விட்ட பகுதிகளை மீட்டு எடுத்தார். இப்னு ஹிஷாம் தம்முடைய சரிதையில் அவ்விவரங்களை வேண்டுமென்றே நீக்கி இருந்தார்.

இஸ்லாமின் சுன்னி பிரிவு முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு  தபரியின் தொகுப்பு ஒரு முக்கியமான மூலமாக இருந்துள்ளது. இவரைப் பற்றி சில விவரங்களை இந்த தொடுப்பில் காணலாம் (Britannica Online, wikipedia)

முக்கிய குறிப்பு: தபரி என்று பெயர் பெற்ற இன்னொருவர் இருக்கிறார், அவரோடு மேலே குறிப்பிட்ட தபரியை சம்மந்தப்படுத்தி குழப்பிக்கொள்ளவேண்டாம்.

இவரது பெயர் "அலி பி. இரப்பான் தபரி, (Ali b. Rabban at-Tabari) ஆகும், இவர் கி.பி. 855ம் ஆண்டு காலமானார். இவர் "Firdaws al-Hikma (கி.பி. 850)" மற்றும் "The Book of Religion and Empire" என்ற புத்தகங்களையும், இதர  நூல்களையும் எழுதியுள்ளார்.  இவர் கிறிஸ்தவ பின்னணியைக் கொண்டவர், இவர் இஸ்லாமை தழுவியிருந்தார். மேலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இவர் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.