இஸ்லாமிய அகராதி > த வார்த்தைகள்

தமிழ் கிறிஸ்டியன்ஸ் அபாலஜிடிக்ஸ் நெட்வர்க் (TCAN - iemtindia.com)

தமிழ் நாட்டின் கொயம்பத்தூர் பட்டணத்தைச் சார்ந்த சகோதரர் வெங்கடேஷன் அவர்களால், இந்த தளம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைக்கும் கிறிஸ்தவம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்கள் சொல்வதும், அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு சுவிசேஷம் சொல்வதும் தான் இந்த தளத்தின் நோக்கம் என்று iemtindia தளத்தின் ”தொடர்புக்கு” என்ற பக்கம் கூறுகின்றது, அதனை கீழே படிக்கலாம்:

”கிறிஸ்துக்குள் அன்பான சகோதர சகோதரிகளே  நித்திய ஜீவனை சுதந்தரிக்க ஒரே வழியான ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் வளரவும் ,இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்தை குறித்து வைக்கும் வாதங்களுக்கும்,கேள்விகளுக்கும் நம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் இருந்து அவர்களுக்கு பதிலளிக்கவும் அதே வேளையில் அவர்களுக்கு விளங்குவதற்காக சில நேரங்களில்  அவர்கள் நம்பும் குர்ஆன் ,ஹதீஸ்களின் அடிப்படையிலும் விளக்கம் அளிப்பது நம்முடைய அடிப்படை கொள்கையாகும்.

இதன் மூலம் விசுவாசத்தில் பெலவீனமான நமது சகோதரர்களும் வேத அறிவில் வளரவும்  நமது ஊழியம் உதவியாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.நம்முடைய சகோதர சகோதரிகள் நம்முடைய விசுவாசத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது எங்களின் இதயவாஞ்சையாகும் .நம்முடைய வேதம்மும் அதையே போதிக்கிறது.நம்முடைய அப்போஸ்தலர்கள் மூலம் ஆண்டவராகிய தேவன் நம்மிடம் அதனையே விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

1 பேதுரு 3:15  கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

மேலும் உலகில் 130 கோடிக்கு அதிகமாக உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மெய்யான இரட்சகரும் மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் வாஞ்சையும் விருப்பமும் இதயத்தின் ஏக்கமுமாகும்.” மூலம்: http://iemtindia.com/?page_id=1073 

தளத்தின் தொடுப்பு: http://iemtindia.com/

குறிப்பு: இந்த பக்கத்தில் இன்னும் சில விவரங்கள்/தொடுப்புக்கள் சேர்க்கப்பட இருக்கிறது. தொடர்ந்து வந்து பாருங்கள்.