யாஜித் 1 (முதலாம் யாஜித், ஆட்சி காலம் 680-683)
முதலாம் யாஜித் “முஅவியாவின்” மகன் ஆவார். இவர் உம்மயத் வம்சத்தின் வழியில் வந்த இரண்டாவது காலிஃபா ஆவார். இவரது தந்தை மரித்த ஏப்ரில் 7ம் நாள் 680ம் ஆண்டு இவர் கலிஃபாவாக பதவி ஏற்றார். இவரது தந்தை ”முஅவியா” தனக்குப் பிறகு ஆட்சித் தலைவராக தன் மகனாகிய யாஜித் வரவேண்டும் என்று முடிவு செய்தார். இவரைத் தொடர்ந்து, சொந்த குடும்பத்தார்களே, ஆட்சித் தலைவர் பதவி வகிக்கவேண்டும் என்ற ஒரு பழக்கமாக வந்துவிட்டது.
இந்த முதலாம் யாஜித் என்பவரினால் தான் ஹுசைன் மற்றும் அவரது குடும்பம் கர்பலா என்ற இடத்தில் முழுவதுமாக அழிந்துவிட்டது. இவர் நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சி புரிந்த காலத்தில் முஸ்லிம்கள் “கோராசன்” மற்றும் “கவிர்ஜம்” என்ற இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இவர் ஒரு கவிஞரும் கூட. அரபி கஜல் என்ற பாடல்களை பாடும் ஹஃபிஜ் என்பவர், தன்னுடைய ”திவான்” என்ற கவிதையில், முதலாவது மற்றும் கடைசி வரிகளை இந்த யாஜித் என்பவரின் கவிதைகளிலிருந்து எடுத்துள்ளார்.
இவரைப் பற்றி மேலும் படிக்க: