தேவன் மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்களா?

கேள்வி: 

கிறிஸ்தவர்கள், இயேசு தேவன் என்கிறார்கள். ஆனால், தேவன் அழிவற்றவர். எப்படி அவர் மரிக்க இயலும்? மேலும் மரித்தல் என்றால் உயிர் மற்றும் அனைத்து சக்திகளும் அற்றுப்போதல் என்று அவர்கள் உணரவேண்டும். எனவே இயேசு மரித்தால், வேறொருவர் அவரை உயிரோடு எழுப்ப வேண்டும். ஏனென்றால் அவருக்கு எந்த சக்தியும் மரித்த பிறகு கிடையாது. எனவே அவர் தேவன் இல்லை. 


என் பதில் 

எனக்கு தெரிந்தவரையில் பைபிளில் எந்த இடத்திலும் “தேவன் மரித்தார்” என்று சொல்லப்படவில்லை. அது முரண்பாடானது. தேவனே அனைத்து உயிர்களுக்கும் மூலம். அவரே ஜீவனும் கூட. 

முஹம்மது மரித்தபோது அவருடைய‌ ஆத்துமாவும், ஜீவனும் மரித்து, இல்லாமல் போனதாக‌ நீங்கள் நம்புகிறீர்களா? இல்லை, அவரது உடல் மட்டும் மரித்து அவரது ஆத்துமா பரலோகத்தில் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாக‌ நம்புகிறீர்களா? 

தேவன் மரிக்கவில்லை. ஆனால், அவர் மனிதனாக வந்த சரீரம் மனிதனுக்கான மரணத்தை ஏற்றது. அதுவும் மிகவும் கொடிய வகை மரணம். 

இயேசு மெய்யான மனிதன். வானதூதர்கள் போல் சில காலம் தோன்றி மறையும் உருவம் அல்ல. இயேசு மனிதனாக கருவுற்று, மனிதனாகப் பிறந்து, மனிதனாக அவதரித்த மெய்யான மனிதன். ஒரு மனிதனாக அவர் சிலுவையில் துயரமும், வேதனையும் அடைந்தார். மேலும் உலகின் அனைத்து பாவங்களும், நரக வேதனையும் அவர் மீது அழுத்தி பிதாவாகிய தேவனால் கைவிடப்பட்ட உணர்வையும் தந்தது. ஆனால் இயேசு உண்மையில் கைவிடப்படவில்லை என்பது அவரது உயிர்த்தெழுதலில் தெரிகிறது. அவர் நம் பாவங்களை ஏற்று அதற்கான‌ தண்டனையான "தேவனால் கைவிடப்படுவதை" தாங்கினார். அனைத்துலக பாவத்தையும் அதன் மூலம் வரும் வேதனையையும் ஒருவர் சுமப்பதை எந்த மனிதனும் கற்பனைகூட செய்ய இயலாது, அது அவ்வளவு பயங்கரமானது. ஆனால், தேவனின் இந்த பாவ நிவாரண பலியை விசுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இரட்சிப்பு கிடைக்கும்


நான் ஒரு வழுவும் மனிதன் என்பதை மனதில் கொள்ளவும். என்னுடைய அறிவுக்கு எட்டியவரை நான் பதிலளிக்கிறேன். நான் சொல்வதனைத்தும் சரி என்று நான் கூறவில்லை. நான் திருத்தங்களையும், தெளிவுபடுத்தல்களையும் வரவேற்கிறேன்.


ஆங்கில மூலம்: Do Christians believe that God died? 

இதர கேள்வி பதில்களை படிக்கவும்