குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்ட பைபிளின் நிகழ்ச்சிகள் 

குர்-ஆனில் காணப்படும் அனேக நிகழ்ச்சிகள், பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளின் மறுபதிவுகளாகும். பைபிளின் கதைகளை குர்-ஆனில் பதிக்கும் போது, சில ஒற்றுமைகளையும், அனேக வேற்றுமைகளையும் காணமுடியும். சில விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது போலவே குர்-ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது, ஆனால், அனேக இடங்களில் அனேக விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது, இன்னும் சில விவரங்கள் பைபிளில் காணப்படுவதற்கு எதிராக மாற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த பக்கங்களில் ”குர்-ஆன் மறுபதிவு செய்துள்ள பைபிளின் நிகழ்ச்சிகளை குர்-ஆன் வசனங்களிலிருந்து காண்போம்”. ஏற்கனவே பைபிளின் நிகழ்ச்சிகளை அறிந்துள்ள ஒரு கிறிஸ்தவருக்கு, இந்த பட்டியல் மிகவும் உபயோகமாக இருக்கும். இவைகளை படிக்கும் போது, பைபிளின் நிகழ்ச்சிகளை குர்-ஆன் எப்படி (மாற்றிச்) சொல்கிறது என்பதை அறிந்துக் கொள்ளமுடியும்.

இந்த கட்டுரையில் பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை மட்டுமே கருத்தில் கொண்டு குர்-ஆனிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளோம். இன்னும் புதிய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய குர்-ஆன் மறுபதிவு வசனங்களை கூடிய சீக்கிரத்தில் கட்டுரையாக வெளியிடுவோம். அவைகளில் யோவான் ஸ்நானகன், மரியாள், இயேசு மற்றும் அவரது சீடர்கள் பற்றிய நிகழ்ச்சிகள் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. 

பழைய ஏற்பாடு

 1. உலக படைப்பு 
 2. ஆதாம்
 3. ஆதாமின் மகன்கள்
 4. நோவா
 5. பாபேல் கோபுரம்
 6. ஆபிரகாம்
 7. யோசேப்பு
 8. மோசே
 9. சவுல்
 10. தாவீது மற்றும் சாலொமோன்
 11. இதர தேவ மனிதர்கள்
 12. தீர்க்கதரிசிகள்

புதிய ஏற்பாடு

 1. சகரியா
 2. யோவான் ஸ்நானகன்
 3. மரியாள்
 4. இயேசு
 5. இயேசுவின் சீடர்கள்

ஆங்கில மூலம்: Biblical Stories in the Qur'an