கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா?
அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
Are Christian Dyed or Baptized?
சூரா 2:138 கீழ்கண்டவாறு கூறுகின்றது:
"(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம் (ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்" (எனக் கூறுவீர்களாக) - (முஹம்மது ஜான் மொழியாக்கம்)
(Our religion is) the Baptism of Allah: And who can baptize better than Allah? And it is He Whom we worship. (Yusuf Ali)
(Receive) the baptism of Allah, and who is better than Allah in baptising? and Him do we serve. (Shakir)
Say, "Belief in God and following the guidance of Islam are God's means of purification for us. Islam is the baptism of God. No one is a better baptizer than He and we Muslims worship Him." (Sarwar)
இந்த வசனத்தில் ஞானஸ்நானத்திற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை "சிப்காஹ் - sibghah " என்பதாகும், இதை எழுத்தின் படி (literal translation) மொழியாக்கம் செய்தால் இதன் பொருள் "வர்ணம் - dye" என்பதாகும். அல் ஜலாலைன் மற்றும் அல் பைஜாவி விரிவுரையாளர்கள் இந்த வார்த்தை "ஞானஸ்நானத்தை" குறிக்கும் என்று கூறுகிறார்கள்.
அல் பைஜாவி கீழ்கண்டவாறு கூறுகிறார்:
"நஸ்ரேயர்கள் (கிறிஸ்தவர்கள்) தங்கள் பிள்ளைகளை மஞ்சல் தண்ணீரில் மூழ்க வைப்பார்கள், இதை அவர்கள் "அல் மமுதியா - al-Ma'mudiyah” என்று அழைக்கிறார்கள். இப்படி செய்வதினால், அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு கிறிஸ்தவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறுகிறார்கள். (Tafsiru'l-Baizawi)
தமிழில் பீஜே அவர்களின் மொழியாக்கமும், ஆங்கிலத்தில் இதர இரண்டு மொழியாக்கங்களும் இந்த பொருளை தருகின்ற விதமாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
'(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை 38 (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்' (என்று கூறுங்கள்!) - (பிஜே மொழியாக்கம்)
(We take our) colour from Allah, and who is better than Allah at colouring. We are His worshippers. (Pickthall)
(Our religion) takes its hue from Allah. And who can give a better hue than Allah. And it is He Whom we worship. (Yusuf Ali, Saudi corrected version)
மத்தேயு சுவிசேஷம் 21:24-26ம் வசனங்களில், பிரதான ஆசாரியர்கள் மற்றும் தேவாலய பொறுப்பாளிகள் இயேசுவை சோதிக்க வந்தார்கள். அந்த நேரத்தில் இயேசு அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், அதே கேள்வியை நாம் இப்போது இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புகிறோம்.
இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,
Jesus replied, "I will also ask you one question. If you answer me, I will tell you by what authority I am doing these things. John's baptism—where did it come from? Was it from heaven, or from men?" They discussed it among themselves and said, "If we say, 'From heaven,' he will ask, 'Then why didn't you believe him?' But if we say, 'From men'—we are afraid of the people, for they all hold that John was a prophet."
அதாவது, இறைவன் தன் தீர்க்கதரிசியாகிய (நபியாகிய) யோவான் மூலமாக, 'ஞானஸ்நானத்தை' கட்டளையிட்டு இருக்கும் போது, இஸ்லாமியர்கள் ஏன் இறைவனின் இந்த இறைக்கட்டளையை பின்பற்றுவதில்லை?
இறைவன் கட்டளையிடாமல் தானாகவே யோவான் ஸ்நானகன் இட்டுக்கட்டி இந்த ஞானஸ்நானத்தை கொடுத்து இருந்தால், ஏன் இஸ்லாமியர்கள் இன்னும் யோவான் ஸ்நானகனை 'நபி' என்று மரியாதையாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்?
ஆங்கில மூலம்: Are Christian Dyed or Baptized?