குர்-ஆனின் அர்த்தமற்ற எழுத்துக்களும், பத்து யூத ஞானிகளும்

The Ten Wise Jews

முஹம்மது யூத அறிஞர்களிடமிருந்து விவரங்களை கற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு பல யூத மற்றும் கிறிஸ்தவ நூல்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. கி.பி. 818ல் மரித்த தியோபன்ஸ்(Theophanes) என்ற கிறிஸ்தவர் மூலமாக ஒரு விவரம் இதைப் பற்றி கிடைத்துள்ளது. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை எழுதிய இப்னு இஷாம் என்பவரை விட பல ஆண்டுகள் முந்தியது இக்கிறிஸ்தவரின் விவரம். இது மட்டுமல்ல, இவ்விவரம் ஹதீஸ்கள் என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய பாரம்பரிய நூல்களைக் காட்டிலும் முந்தியது. ஹதீஸ்கள் முஹம்மதுவின் மரணத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டவைகள் என்பது கவனிக்கத்தக்கது. 

முஸ்லிம் பாரம்பரியங்களின் படி முஹம்மதுவின் காலத்தில் பல யூத ரபிக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர், இவர்களில் இரண்டு நபர்கள் ”அப்துல்லாஹ் இப்னு சலாம்” மற்றும் ”கஅப் அல் அஹ்பர்” என்பவர்கள் ஆவார்கள். இவ்விருவர் தவிர, இன்னும் எட்டு யூதர்களின் பெயர்களை இப்னு இஷாக் சரித்திரம் பட்டியலிடுகிறது. இவர்கள் “இஸ்லாமில் தஞ்சம் புகுந்தனர்” என்றுச் சொல்லிவிட்டு, அதன் பிறகு அவர்கள் “ஏமாற்றுக்காரர்களாக இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு” இருந்தார்கள் என்று இப்னு இஷாக்கின் சரித்திரம் இந்த யூதர்கள் மீது குற்றம் சாட்டுகிறது. இஸ்லாமை அப்போது ஏற்றுக்கொண்ட யூத ரபிக்களின் எண்ணிக்கை 10 என்பதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது, ஏனென்றால், முஹம்மது இந்த எண்ணிக்கையைப் பற்றி கூறியதாக கீழ்கண்ட புகாரி ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது: 

3941. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :4 Book :63

கவனிக்கவும், மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது கூறிய அந்த 10 யூதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏனென்றால், ஒட்டுமொத்த யூத ஜனங்கள் முஹம்மதுவை நம்புவதற்கு இவர்கள் காரணமாக இருப்பார்கள் என்று கூறுவதிலிருந்து, அவர்கள் முக்கியமான அந்தஸ்தில் (ரபிக்களாக, மார்க்க தலைவர்களாக) இருப்பவர்கள் என்பதை அறியலாம்.

குர்-ஆன் யூத ரபிக்கள் என்றுச் சொல்லவில்லையென்றாலும், ஒரு தடயத்தை மேலோட்டமாக சொல்லியுள்ளது, பார்க்க குர்-ஆன் 16:103

16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தியோபன்ஸ் என்பவர் எழுதிய ஆரம்பகால விவரங்களை இப்போது படிப்போம்:

அவர் (முஹம்மது) வந்த ஆரம்ப காலத்தில், பல அறியாமையில் இருந்த யூதர்கள் ”தாங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த மேசியா இவர் தான்” என்று நினைத்துக்கொண்டார்கள். இவர்களில் சிலர் அவரோடு சேர்ந்துக்கொண்டார்கள், இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் இறைவனோடு நேரடியாக பேசிய மோசேயை புறக்கணித்துவிட்டார்கள். அவர்(முஹம்மது) முதலாவது பலியிட்டார், அதுவரை, இந்த பத்து யூதர்கள் அவரோடு இருந்தார்கள். அவர் பலியிட்டு ஒட்டக கறியை சாப்பிடுவதை அந்த யூதர்கள் கண்டு திடுக்கிட்டார்கள். “தாங்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்த மேசியா இவர் அல்ல” என்பதை அப்போது தான் அவர்கள் உணர்ந்தார்கள். ”முழுவதுமாக நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம்” என்று உணர்ந்த அவர்கள், இனி என்ன செய்யவேண்டுமென்று சிந்தித்தார்கள். இஸ்லாமை விட்டுவெளியெறினால் ஆபத்து என்பதை புரிந்துக்கொண்டு, முஹம்மதுவோடு இருந்துவிட்டார்கள், ஆனால் கிறிஸ்தவத்துக்கு எதிராக பல எதிர் கருத்துக்களை அவருக்கு சொல்லிக்கொடுத்தார்கள் (தியோபன்ஸ், 333)

முதலாவதாக, யூத நூல்களில் இந்த விவரம் 9வது அல்லது 10வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளிவந்தது. 

ஆடுகள் வளர்க்கப்படும் பகுதியில் வாழ்ந்த முஹம்மது என்பவரின் கதை இது. அந்த இடத்திற்கு புதிய மலை என்று பெயர். அவர் ஸனாவிற்கும், அதன் பிறகு ஹிஜாஜ் என்ற இடத்திற்கும் சென்றார். சூரியனின் அடையாளம் என்ற பெயர் கொண்ட இடத்தில் (பல்கின் பகுதியில்) வாழுந்த துறவியின் அறிவுரையை அவர் கேட்டார். அவரோடு சேர்ந்த ரபிக்கள் அவருக்கு பல அறிவுரைகளை கொடுத்தார்கள், மேலும் அவர்கள் ஒரு கள்ளப்புத்தகம் உருவாக காரணமாகவும் இருந்தார்கள். குர்-ஆனின் சில அத்தியாயங்களுக்கு தங்கள் பெயர்களையும், அத்தியாயங்களின் ஆரம்பத்தில் சில எழுத்துக்களை யாரும் அறியாதவண்ணம், கீழ்கண்ட சொற்றொடரையும் நுழைத்துவிட்டார்கள்: 

"Thus did the wise men of Israel advise the wicked Alm [or 'illem - referring to Isaiah 56:10]

ஆக, இஸ்ரேலின் ஞானிகள் அந்த கெட்ட ஊமைக்கு  அறிவுரை கொடுத்தார்கள் (பத்து யூத அறிஞர்கள் 402).

(Alm என்ற வார்த்தை ஏசாயா 56:10ல் வரும் ஊமை என்ற எபிரேய வார்த்தையை (illem) குறிப்பதாகும்)

யூத அறிஞர்கள் மேற்கண்ட வாக்கியத்தை பயன்படுத்தி, பல புரியாத எழுத்துக்களை குர்-ஆனில் புகுத்திவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

"Thus did the wise men of Israel advise the wicked Alm"

“ஆக, இஸ்ரேலின் ஞானிகள் அந்த கெட்ட ஊமைக்கு  அறிவுரை கொடுத்தார்கள்”

எபிரேய மொழியின் “kakhah ya'asu (ஆங்கிலம் - Thus did advise)” என்ற சொற்றிடரின் மூல எழுத்துக்கள் khy's  ஆகும், இவ்வெழுத்துக்களை குர்-ஆன் 19:1ல் காணலாம்.

காஃப், ஹா, யா, ஐன், ஸாத்

எபிரேய மொழியின் “hakheme(ஆங்கிலம் - the wise men)” என்ற சொற்றிடரின் எழுத்துக்கள் குர்-ஆன் 41-46 அத்தியாயங்களில் காணலாம்.

ஹா, மீம்

எபிரேய மொழியின் “yisra 'el (ஆங்கிலம் - of Israel)” என்ற சொற்றிடரின் மூல எழுத்துக்கள் ys  குர்-ஆன் 36ல் காணலாம்.

யா, ஸீன்

மேலும், Alm என்பது ஏசாயா 56:10 வரும் ஊமை ['illem] என்ற வார்த்தையை குறிப்பதாக உள்ளது.

ஏசாயா 56:10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான['illem] நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;

இந்த Alm என்ற எழுத்துக்கள் குர்-ஆன் அத்தியாயங்கள் 2, 3, 7, 13 மற்றும் 30-32ல் காணலாம்.

அலிஃப், லாம், மீம்

மூலம்: Seeing Islam as Others Saw It, Robert C. Hoyland, (Princeton NJ: Darwin Press), 1997, pp. 505-508.

இக்கட்டுரைக்கு முஸ்லிம்கல் கொடுத்த பதிலும், நம்முடைய மறுப்பும்க: The Ten Wise Jews and the Fallacy of Distraction

கட்டுரை முற்றிற்று

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Quran/Sources/tenwise.html


குர்‍ஆன் மூலம் பற்றிய இதர கட்டுரைகள்