வாட்ஸப் (WhatsApp) வழிகள் / வலிகள்

ஸ்மார்ட் போன்(Smart Phone) உடையவர்கள், வாட்ஸப் என்ற மொபைள் ஆப் மூலமாக செய்தி பரிமாற்றம் செய்துக் கொள்கிறார்கள். வாட்ஸப் மூலமாக நல்லவைகளும் தீயவைகளும், உண்மைகளும் பொய்களும் ஒரே நேரத்தில் உலகமனைத்துக்கும் பரவுகிறது. சில நல்ல ஆரோக்கியமான விவாதங்களும் வாட்ஸப் குரூப்பில் நடைப்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. வாலிபர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வாட்ஸப்பில் தேவையில்லாத [நல்ல/தீய] வீடியோக்கள் பார்ப்பதிலும், செய்திகளை வாசிப்பதிலும் வீணாக செலவிடுகிறார்கள் என்பதும் ஒரு சோகமான விளைவாகும்.

வாட்ஸப் - வழியா அல்லது வலியா?

நமக்கு ஒரு செய்தி அல்லது வீடியோ வந்தவுடன், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல், உடனே மற்றவர்களுக்கு நாம் ஷேர் செய்கிறோம். உண்மையை பரப்புவதற்கு பதிலாக, பொய்யை நம்மில் அனேகர் அறியாமல் பரப்பிக்கொண்டு இருக்கிறோம். இந்த விவரத்தை நீங்கள் 10 பேருக்கு பரப்பவில்லையென்றால் உங்களுக்கு தீமை உண்டாகும் என்று எச்சரிக்கை செய்யும் வாட்ஸப் செய்திகளும் வருகின்றன. இப்படிப்பட்ட செய்திகளை ஃபார்வோட் செய்யும் கிறிஸ்தவர்களும் இருப்பது வேதனைக்குரியது. இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையை விளக்கும்  பக்கமாக இங்கு பதியப்படும் கட்டுரைகள் உதவும்.

முக்கியமாக, இந்த பக்கத்தில் "இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்" பற்றி பரப்பப்படுகின்ற நல்ல மற்றும் தீய செய்திகளின் உண்மை நிலையை பதிய விரும்புகிறேன்.

  1. வாட்ஸப் வலி: முஹம்மதுவைப் பற்றி அறிந்திருக்கவேண்டிய 10 அற்பு(அபத்)தங்கள்
  2. வாட்ஸப் வலி: பாபர் மசூதி இழப்பு பற்றிய முன்னறிவிப்பு: குர்‍ஆன் 2:77
  3. வாட்ஸப் வலி: தீபாவளி பட்டாசுகளில் குர்‍ஆன் வசன‌ தாள்கள் பயன்படுத்துகிறார்கள், இது கண்டிக்கத்தக்கது! இது நியாயமான கோபமா?
  4. வாட்ஸப் வலி: தென் ஆப்ரிக்க பாஸ்டர் ஒரு லட்ச சபை மக்களோடு இஸ்லாமுக்கு மாறினாரா? - உண்மை என்ன‌?

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்